Picket spots created for Games: 3 ‘Protest Pens’ Planned for Beijing Parks – Olympic protest zones
Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2008
ஒலிம்பிக்கின் போது ஆர்பாட்டங்களுக்கென தனியான பூங்காக்கள்
![]() |
![]() |
சீன பூங்கா ஒன்று |
சீனாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது சட்டபூர்வமான போராட்டங்களை மூன்று பொதுப் பூங்காக்களில் நடத்த அனுமதியளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கான போராட்டக்காரர்களின் விருப்பம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமன்பாட்டை காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரியான லியூ ஷாவூ தெரிவித்துள்ளார்.
போட்டிகளின் போது போராட்டங்களை அனுமதிக்க வேண்டிய தேவையை சீன அதிகாரிகள் அங்கீகரிக்கும் ஒரு நகர்வே இது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
எனினும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
சாதனைச் செம்மல் சீனா & தியாக ஜோதி ஒலிம்பிக்ஸ் « Snap Judgment said
[…] புகுந்ததால், பெய்ஜிங் நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு கடும் […]