மலேசியாவில் 5 தமிழர்களின் விடுதலைக்கான மனு நிராகரிப்பு
Posted by Snapjudge மேல் மே 15, 2008
![]() |
![]() |
ஹிண்டிராப் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் |
மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 5 தமிழர்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை மலேசிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இவர்களின் கைது குறித்த முன்னைய நீதி ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்து உரிமைகளுக்கான செயலணிக்குழுவின் (ஹிண்டிராப்) உறுப்பினர்களான இவர்களது கைது சட்டபூர்வமானது என்று அறிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறும் ஹிண்டிராப் அமைப்பின் தலைவரான வேதமூர்த்தி அவர்கள், இந்த மனு குறித்து மற்றுமொரு மறு ஆய்வு மனுவைத் தாம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மறுமொழியொன்றை இடுங்கள்