Feb 7 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 9, 2008
வட இலங்கையில் தீவிரமடையும் மோதல்கள்
![]() |
![]() |
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் இராணுவ முன்னரங்க பகுதியில் இன்று காலை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கையின் போது சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பதுங்கு குழி வரிசையொன்றை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தச் சண்டையில் இராணுவத் தரப்பில் 2 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 5 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.
வெலிஓயா சம்பத்நுவர கிராமப்பகுதியில் விடுதலைப் புலிகள் இன்று பகல் 12.50 மணியளவில் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு சிவிலியன் உட்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இதுகுறித்து இராணுவ தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இராணுவத்தினர் தாங்கள் கைப்பற்றிய பிரதேசத்தில் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருவதாகவும், இந்தத் தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, மன்னார் பாலைக்குழியில் இருந்து அடம்பன் பகுதியை நோக்கி இராணுவத்தினர் இன்று காலை மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி, தமது எதிர்த்தாக்குதலில் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இராணுவத்தினருடன் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய மோதல்கள் மாலை 6 மணிவரையில் கடுமையாக இடம்பெற்றதாகவும், அதில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும், இராணுவத்தினரிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் கைப்பற்றபட்டிருதுப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்