‘Viduthalai’ & ‘Unmai’ Editor Ki Veeramani – Sivakasi Maniyam
Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008
உலகில் சிந்தனையாளர்கள், பெரிதும் பேசப்பட்ட வர்கள் பலரும் பத்திரிகைகள் தொடங்கி தங்கள் கொள்கைகளை, எண்ணங்களை அவற்றில் எழுதியதுண்டு. ஆனால், அவர்களால் தொடங்கப்பட்ட இதழ்கள் அவர்களின் மறைவுக்குப் பின் நிலைத்து நிற்காமல் காணாமற்போன கதையைத் தான் வரலாறுகள் உணர்த்துகின்றன.
யார் யார் என்னென்ன இதழ்களைத் தொடங்கி அவர்களுக்குப் பின் அவ்விதழ்கள் தொடராமல் போனது என்ற விவரம் சிலவற்றைப் பார்ப்போம்:
- கார்ல் மார்க்ஸ் – ரைன்லேண்ட் கெஜட்
- லெனின் – பிரோலி டேரியட் (பாட்டாளி)
- மாஜினி – யங் இத்தாலி
- இட்லர் – வால்கிஷர்
- முசோலினி – இல்-பாப்லோ- டீ- இடாவியா
- காந்தி – யங் இந்தியா, அரிஜன்
- நேதாஜி – பங்களா கதாகோட்சே இந்துராஷ்டிரா
- பாரதி – இந்தியா
- பண்டித மணி – அயோத்திதாசர் – (ஒரு பைசா) தமிழன்
- திரு.வி.க., – நவசக்தி
- ம.பொ.சி. – செங்கோல்
- ராஜாஜி – சுய ராஜ்யா
- வடுவூர் – துரைச்சாமி (அய்யங்கார்) – மனோரஞ்சனி
- வை.மு. கோதை நாயகி – ஜகன்மோகனி
- அறிஞர் அண்ணா – திராவிட நாடு, நம் நாடு, காஞ்சி
- எம்.ஜி.ஆர். – அண்ணா
சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் இன்னும் நீளும். தந்தை பெரியார் குடியரசு, பகுத்தறிவு போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தியபோது ஒரு சந்தர்ப்பத்தில், அவர் காலத்திலேயே அவை நின்று போயின. அடுத்து அவர் தொடங்கிய விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய மூன்றும் இன்றுவரை, இடைவிடாது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், இந்த வெற்றிக்கு ஆசிரியர் அவர்களின் உழைப்பும், விடா முயற்சியும் அல்லாமல் வேறென்ன? பெரியாருக்குப்பின் ஆசிரியர் அவர்களாலேயே தொடங்கப்பட்ட பெரியார் பிஞ்சு இதழும், இளைய தலைமுறையைத் தயாரிக்கும் இனிய இதழாக திங்கள்தோறும் மலர்ந்து வருகிறது.
விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு இவை அத்தனைக்கும் ஆசிரியர் நம் ஆசிரியரே என்பது சிறப்பினும் சிறப்பு. ஆசிரியர் பெருமைக்குக் கட்டியம் கூற இப்பணி ஒன்று போதாதா?
-சிவகாசி மணியம்
மறுமொழியொன்றை இடுங்கள்