ஸ்ரீநம்பெருமாள் பிரவேசிக்கும் பரமபதவாசல்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (டிச.20) அதிகாலை ஸ்ரீநம்பெருமாள்பிரவேசிக்கவுள்ள பரமபதவாசல்.
முத்து அலங்காரத்தில் ஸ்ரீநம்பெருமாள்…
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமை முத்து அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் ஸ்ரீநம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு
திருச்சி, டிச. 20: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்க நாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வில், வியாழக்கிழமை அதி காலை பரமபதவாசல் திறக்கப் பட்டது. பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசித் திருவி ழாவில் பரமபதவாசல் திறப் புக்காக ஸ்ரீநம்பெருமாள் பச் சைப் பட்டு, ரத்தின அங்கி, பச் சைக்கிளிமாலை, பாண்டியன் கொண்டையுடன் வியாழக்கி ழமை அதிகாலை 4.15 மணிக்கு கருவறையிலிருந்து புறப்பட்டு, ஜயவிஜயா வாசல் வழியாக சந்தனு மண்டபத் தைக் கடந்தார்.
அங்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், ஸ்தலத்தார், மணியக்காரர்க ளுக்கு மரியாதை செய்யப் பட்ட பின்னர் மேலப்படி வழி யாக நீலக்கண்ணாடி பகுதிக் குச் சென்று பின்னர் ராஜம கேந்திரன் திருச்சுற்றை ஸ்ரீநம் பெருமாள் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இச் சுற்று வழியாக பிரதட்சணம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரம் என்றழைக்கப்படும் குலசேக ரன் சுற்று வந்தார். பின்னர், தங்கக்கொடி மரம், துரைப்பி ரதட்சணம் வழியாக விரஜா நதி மண்டபத்தை நம்பெரு மாள் சென்றடைந்தார்.
விரஜாநதி மண்டபத்தில் அரைமணி நேரம் சந்தியா வந்தனம் செய்த பிறகு, காலை 5.25 மணிக்கு திறக் கப்பட்ட பரமபதவாசலில் பிரவேசித்தார். அங்கிருந்து சந்திரபுஷ்கரணி, மணல் வெளி, தவுட்ரவாசல் வழியா கத் திருக்கொட்டகையை அடைந்தார் ஸ்ரீநம்பெரு மாள்.
திருக்கொட்டகையில் மரி யாதை அளித்த பின்னர் ஆஸ்தான மண்டபம் என்ற ழைக்கப்படும் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி னார். பக்தர்களுக்கு ரத்தின அங்கியுடன் நம்பெருமாள் இரவு வரை பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
ஸ்ரீநம்பெருமாள் கருவ றையிலிருந்து புறப்பட்ட பிறகு, பெரியபெருமாளுக்கு முத்தங்கி சாத்தப்பட்டு பக்தர் கள் சேவை செய்ய அனுமதிக் கப்பட்டனர்.