Leena Manimekalai: Chennai Loyola College & Thupatta Police
Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007
துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்
லீனா மணிமேகலை
அறிவும் ஆற்றலும் கொண்ட பெண் இந்த சமூகத்தில் தனிமனிதராக மதிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு “இல்லை’ என்று சொல்லவேண்டிய இடத்தில்தான் நாம் இப்போதும் இருக்கிறோம்.
பெண்ணின் இருப்பு வெறும் உடலாகவே கணக்கிடப்படுகிறது. இந்திய – குறிப்பாக – தமிழ்ச் சமூகத்தின் கலாசார நடவடிக்கை என்பது பெண்ணுடல் மீதான கண்காணிப்பாகவும் விசாரணையாகவுமே குறுகிக் கிடக்கிறது.
சமூகம், முதலில் தனது அதிகார இயந்திரங்களான மதத்தையும் சாதியையும் கொண்டு பெண்ணின் விருப்பங்களையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. அடுத்ததாக கற்பு / தாய்மை போன்ற கற்பிதங்களால் பெண்ணின் காதல் / காமம் ஆகிய உணர்வுகளைக் கட்டமைக்கிறது.
தொடர்ச்சியாக குடும்பம், உழைக்குமிடம் தவிர்த்த பெண்ணின் வெளியையும் மறுதலிக்கிறது. இந்த வரையறையிலிருந்து விலகி தனித்த அடையாளத்துடன் ஒரு பெண் தனக்கென பாதையை வகுத்துக்கொள்ள முற்படும்போது அது குருட்டுச்சந்தாகவே முடிகிறது என்பதுதான் கசப்பான உண்மை.
சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர், “கனாக்களம் – 2007′ என்கிற கருத்தரங்கின் கலந்துரையாடலில் “சினிமாவும் சமூகமும்’ என்னும் தலைப்பில் என்னைப் பேச அழைத்திருந்தனர். காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அழைப்பிதழைக் காட்டினேன்.
“உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் ஜீன்ஸýம் குர்தாவும் அணிந்திருக்கிறீர்கள் – துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது; நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.
கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள், “சிறிது நேரம் பொறுங்கள், நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில் ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து “இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்டபோது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.
“”சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில், சுதந்திரமான சினிமாவை நேசித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.
அழைப்பிதழில் இடம்பெற்றிருந்த மற்ற பேச்சாளர்களான பாலுமகேந்திரா, பாமரன், ஞாநி, வசந்தபாலன், எஸ். ராமகிருஷ்ணன், லெனின், அஜயன்பாலா ஆகியோர் ஆண்களாக இருந்ததால், அவர்களுக்குத் துப்பட்டா பிரச்னை இருந்திருக்காது என்று சிந்தனை ஓடியது.
கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாசாரத்தைத் துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது. பதினெட்டு வயதில் தங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் ஓட்டுரிமை பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்குத் தங்களுக்கான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுப்பதையே பல தளங்களில் நான் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.
எழுத்தும் சினிமாவுமாக விடுதலையைப் பற்றிய சிந்தனையையும் படைப்புகளையும் மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும் என்னை, நிகழ்ச்சிக்கு விருந்தினராக அழைத்து, துப்பட்டாவைக் கொடுத்து, என் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்ட லயோலா கல்லூரி எனக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?
ஒவ்வோர் ஆண்டும் தரத்தின் அடிப்படையிலான சர்வேக்களில், இந்தியாவின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசையில் ஐந்து முதல் பத்தாம் இடத்திற்குள் ஸ்டார் தகுதியில் இடம்பிடிக்கும் லயோலா கல்லூரி, தனி மனித உரிமைக்குத் தரும் மரியாதையில் எந்த இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறது?
பல கல்லூரிகளில் நடைமுறையிலிருக்கும் பெண்களுக்கான உடை பற்றிய கோட்பாடுகளின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள், மாணவிகளின் உடை விஷயத்தால் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்-படிப்பிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் கல்லூரி மேலாண்மை மாணவிகளின் உடைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்களாம். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்குத் துப்பட்டா கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது; ஜீன்ஸிற்குத் தடா போட்டிருக்கிறது என்று கேள்வி.
இதை விசாரித்துக் கொண்டிருக்கும்போது எனது தோழரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஓவியா ஒரு வரலாற்று நிகழ்ச்சியை நினைவுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன் நமது நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி, கல்லூரியில் அனுமதி கேட்டபோது மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் “ஒரு பெண் கல்லூரிக்கு வருவதா, எங்கள் பிள்ளைகள் கெட்டுப்போவார்கள் – நாங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்னார்களாம். அதைக் கேள்விப்பட்டு கலக்கமுற்ற தாளாளர், அன்றைய அரசுப் பிரதிநிதியான வெள்ளைக்கார கவர்னரிடம் முறையிட்டாராம்.
வெள்ளைத்துரை அதற்கு, “பரவாயில்லை, அந்தப் பெண் மட்டும் படித்தால் போதும், மாணவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்’ என்றாராம். அந்த வெள்ளைத்துரைக்குப் பாவம் நமது கலாசாரம் தெரியவில்லை. தவறு செய்துவிட்டார்! சுதந்திர இந்தியாவின் கல்லூரி நிறுவனர்கள் அந்தத் தவறைச் செய்வார்களா என்ன? அப்புறம் தமிழ்க் கலாசாரம், பண்பாடெல்லாம் என்னாவது?
பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளுக்குப் புலனடக்கம் கற்றுத்தரச் சொல்லியனுப்பாமல், மாணவிகளுக்கு உடைக் கோட்பாடுகளைப் பிறப்பிக்கிறார்கள். நிச்சயம் மாணவர்கள் அணியும் உடையில் நமது மாணவிகள் மனக்கிலேசம் அடைய மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், சிரிப்பையும் சிறுநீரையும்கூட சிறுவயதிலிருந்து அடக்கப் பழகியிருக்கும் நமது பெண்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?
எது எப்படியோ, துப்பட்டாவை எடுத்துவந்து என்னை அணிந்துகொள்ளச் சொன்ன மாணவியின் முகம் என்னைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? “உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும்?
குடும்பம், கல்வி நிறுவனம், சமூகம் என எல்லா அமைப்புகளும் பெண்ணின் உடலை மனதைக் கண்காணிக்கும் காவல் நிலையங்களாகச் செயல்படுவதால் நட்டமடைவது பெண் மட்டுமல்ல, மொத்த சமூகமும்தான்.
அரசோ, ஆணையோ, நிறுவனமோ, ஏன் தனிமனிதனோ, உறவோ, வாழ்க்கைத் துணையோ, சினேகிதனோகூட எதன் பெயராலோ அதிகாரத்தைச் செலுத்தும்போது அதை ஏன் என்று கேள்வி கேட்க முடியாத பூஞ்சைக்காளான்களாக நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு கல்வி அவசியமே இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம்.
பெண் விடுதலை உடையில் இல்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைவிட உண்மை ஆண் ஆதிக்கம் என்பது பெண்களின் உடை விஷயத்தில் இருக்கிறது என்பதுதான்.
பிரச்னை “துப்பட்டா’ அல்ல. பெண்களை துப்பட்டா போடச் சொல்லும் ஆண்களின் மனோபாவம். பாமரன்களும், அஜயன்பாலாக்களும், வசந்தபாலன்களும், ஞாநிகளும் இந்தச் சம்பவத்தை சட்டை செய்யாததிலிருந்தே அவர்களது சமூகத்தில் எப்படிப்பட்ட சிந்தனை நிலவுகிறது என்பது தெரிகிறது. இதுதான் பெருவாரியான ஆண்களின் மனநிலை என்பதே உண்மை.
கல்விக்கூடங்களும் சரி, தங்கள் வகுப்பறைகளை மூடிவிட்டு துப்பட்டா கடைகள் நடத்தலாம். கலாசாரத்தையும் காத்துக் கொள்ளலாம். வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். வேறென்ன செய்வது?
(கட்டுரையாளர்: கவிஞர், திரைப்பட இயக்குநர்)
ரவிசங்கர் said
நல்ல கட்டுரை..இந்த மாதிரி கட்டுரைகளை எங்க பிடிக்கிறீங்க ?
bsubra said
ரவி,
தினமணியின் தலையங்கப் பக்கங்கள்: Welcome to Dinamani.com
விக்னேஷ் said
இவ்வளவு பேசும் கட்டுரையாளர், அந்த அரங்கிற்க்கு சென்று, இப்பிரச்சனையை பற்றி பேசி முடிவுக்கு கொன்டு வந்திருக்கலாம். நிச்சயம் இவருது சிந்தனைக்கு ஆதரவு கிடைத்து இருக்கும்
bsubra said
பேச வந்த தலைப்பை விட்டுவிட்டு வேறு எதையோ பேசுகிறார் என்று குற்றம் எழுந்திருக்கும்.
ரவிசங்கர் said
விக்னேசு சொல்வது போல் மேடையில் போய் ஒரு வரியில் இந்தக் காரணத்தைச் சொல்லி விட்டு வெளிநடப்பு செய்திருந்தால் அரங்கில் இருந்தவர்களுக்கு நல்லா சூடு வைச்ச மாதிரி இருந்திருக்கும். வாசலோடு போனவர் எதற்காகப் போனார் எத்தனை பேருக்குத் தெரியும்..
bsubra said
உலகின் புதிய கடவுள்: 358.துப்பட்டா�
Manidhan said
When there is a code of conduct at a college, why should she want top break it. If she wants to fuck somebody in the signal in the name of women rights, would the society allow.
Venky said
If you are going for any meeting or organisation if there is a dress code and if you want to attend you have to follow it.
When a restaurant has a dress code why not education istitute.
If a men go without a shirt or sleve less or in jeans also they will stop them .
But that college principal is also not talking like permeier istitute head. If you are inviting somebody you are supposed to inform them about the dress code. S
Venky said
If you are going for any meeting or organisation if there is a dress code and if you want to attend you have to follow it.
When a restaurant has a dress code why not education istitute.
If a men go without a shirt or sleve less or in jeans also they will stop them .
But that college principal is also not talking like premier istitute head. If you are inviting somebody you are supposed to inform them about the dress code. He is telling he is not conducting the fashion parade there. You stupid dont know even fashion parade got dress code based on what it is for. It is not the right way to treat the guest who is invited by you.
anamikan said
Is she opposing dress code per se or dress code for women only.I think the dress code is for both men and women.
If any of the male speaker(s) had gone
in bermudas or shorts or just jeans and sleevless shirts they too would
have met the same problem. She should have focussed on dress code per se as
this is not a discrimination against
a woman per se.
எப்படிப்பட்ட கோழைப் பூச்சிகளாக மாணவ சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? “உனக்குச் சுதந்திரம் வழங்க மறுக்கும் சமூகத்திடம் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாதே’ என்று ஊக்குவிக்காத கல்வியால் பெண்ணுக்கு என்ன பயன் இருக்க முடியும்?
Today the students may obey and that
does not mean that they are oblivious
of the reality. They may rebel tomorrow in their own way.For them
education may be more important than
rebelling against dress codes. Finally
today dress code is widely in vogue
in services and industries, including
media. Do you see any news reader
wearing dhoti or half pant?. Students too know that when they join industry they have less freedom in terms of dress.In software firms is it possible to go to work wearing a silk
saree, with lots of jewels and flowers
in hair as one would go to a wedding
reception.
Rajesh said
Hi,
What she has done is correct, there is nothing wrong on that
vignathkumar said
leelnas thuppata oppositin work is small step in tamil atmospher for tamil womens democrasy. there are lots mlae domination should be oppose in tamil society for tamil women democrasy.
pant shirt ,jeans t shirt is not for men alone.
if colege men likes thuppatha they should wear it first.
leena could have asked the men to wear thuppatha.
subramaniam said
what i’ll say will surprise you for life
vignathkumar said
some people says dress code is common to men and women. do men are forced to wear tuptha by college management ?
if leena ask the college management men to wear thupatha will they accept?
leena is not a doney to bear compulsiory thupatha.
if men compels women to wear sary or thuppatha as theose men to wear these sary or thuppatha.
prabhu ramakrishnan said
Loyola college management wont imply apply these rules for foreigners be because they will lose funds from abroad and will gain bad name globally. once i went to a pub in shorts they dint allow me but i saw a foreigner wearing shorts and boozing in. i got vexed and went to tasmac.
சரவண குமார் said
லயோலா கல்லூரி தனது கொள்கையை வற்புறுத்தியுள்ளது.. அதை பிடிக்காத லீனா வெளியேறி விட்டார்.. அவ்வளவே..
சில கோயில்களில் ஆண்கள் மேலாடை அணிய கூடாது.. பெண்களும் பாரம்பரிய உடையை தவிர வேறு எதுவும் அணியக்கூடாது. அதற்காக “ஆடையில் இருக்கிறதா பக்தி” என்று பதிவு போட தேவையில்லை. உங்களுக்கு பிடிக்க வில்லையென்றால் அந்த கோயிலுக்கு செல்லாதீர்கள்.
உங்களுக்கு நல்லபடியாக தோன்றும் உடைகள் மற்றவர்களுக்கும் நல்லபடியாக தான் இருக்க வேண்டும் என்பது இல்லை.. ஒரு வேளை நமீதாவோ ரம்பாவோ ஒரு கல்லூரியின் விழாவுக்கு “மானாட மயிலாட” உடையை உடுத்தி வந்து கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தால்?அல்லது யாராவது ஒரு கோவணம் அணிந்த சாமியார் விழாவுக்கு வந்து கல்லூரி நிர்வாகம் மறுத்து விட்டால்? அதை எதிர்த்தும் பதிவு போடுவீர்களா?