Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Dec 14 – LTTE, Eezham, Batticaloa, Sri Lanka – News & Updates: BBC Tamil

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2007

வட இலங்கையில் அடைமழையிலும் விடாத மோதல்கள்

 

இலங்கையின் வடக்கே கொட்டும் மழைக்கு மத்தியிலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்களில் 30 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத்தகவல் மையம் தெரிவித்திருக்கிறது.

மன்னார் அடம்பன், பரப்புக்கடந்தான், குறிசுட்டகுளம் மற்றும் மணலாறு பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சண்டையில் இரண்டு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இந்த மோதல்களின்போது இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் ஏழு படையினர் காயமடைந்த தாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த மோதல்கள் மற்றும் இழப்புகள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதேவேளை, மன்னார் உயிலங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோதல் ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 12 இராணுவத்தினர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மன்னாரில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கிளிநொச்சிக்குத் தெற்கே பூனகரி பிரதேசத்தை நோக்கி யாழ் குடாநாட்டில் இருந்து இராணுவத்தினர் நடத்திவரும் எறிகணை மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் காரணமாக இப்பகுதியில் உள்ள 29 பாடசாலைகளில் 14 பாடசாலைகள் இடம்பெயர்ந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பாடசாலைகள் ஜெயபுரம், செம்மண்குன்று, முட்கொம்பன் பகுதிகளில் உள்ள வேறு பாடசாலைகளில் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இதனால் இந்தப் பாடசாலைகளில் இட நெருக்கடியும் வசதியீனமும் ஏற்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தற்போதைய மாரிகால பருவ மழை காரணமாக இட நெருக்கடியோடு இந்த மாணவர்கள் மேலும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: