இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் முகமாலை பிரதேச இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 27 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
மன்னார் நரிக்குளம் முன்னரங்கப் பகுதியில் வெள்ளியன்று இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இதன்போது 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதோடு, விடுதலைப் புலிகளின் 5 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.
மன்னார் பெரியதம்பனை பகுதியில் இடம்பெற்ற மோதல்களைடுத்து படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் சில சடலஙகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவத்தினர், இவற்றை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.