Tamil TV Programmes – Diwali Specials in Sun, Kalainjar, Makkal, SS Music, Jeya and Vijay Televisions
Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2007
சின்னத்திரையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
தீபாவளியை முன்னிட்டு நேயர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என எல்லா டி.வி. சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள், வழக்கம்போல சினிமா நடிகர், நடிகைகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கக் கூடிய விதத்தில் ஒளிபரப்பாகவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் சில…
எஸ்.எஸ்.மியூசிக்
- காலை 10.30 மணிக்கு பாவனா,
- பிற்பகல் 1 மணிக்கு ப்ரியாமணி,
- மாலை 5 மணிக்கு சந்தியா,
- மாலை 6.45 மணிக்கு நதியா
ஆகியோரின் பேட்டிகள் ஒளிபரப்பாகின்றன. எஸ்.எஸ்.மியூசிக் தொகுப்பாளர்கள் சிவகாசியில் நேரடியாகப் பங்கேற்ற கலகலப்பான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
விஜய் டி.வி.
பட்டிமன்றம்:
“குடும்ப வாழ்வில் மனநிறைவு பெற்றவர்கள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா?’ என்ற தலைப்பில் லியோனி தலைமையில் பட்டிமன்றம். காலை 8 மணி.
சூர்யா-ஏ.ஆர்.முருகதாஸ்:
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட சூர்யாவும் “தீனா’, “ரமணா’, “கஜினி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýம் சிறப்பு காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். சூர்யா, முதல்முறையாக தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி மனம்திறக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ், ஹிந்தி “கஜினி’ பற்றியும் அமீர்கான் பற்றியும் பேசுகிறார். காலை 9 மணி.
விஜய்:
கம்மாவான் பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் விஜய் தீபாவளி கொண்டாடும் நிகழ்ச்சி “நாயகன்’ என்ற தலைப்பில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கலக்கல் காமெடி:
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து திரையுலகுக்கு அறிமுகமாகி மலையாளத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயராம் பங்குபெறும் சிறப்பு கலக்கப்போவது சாம்பியன்ஸ் நிகழ்ச்சி. காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஜெயராமும் மிமிக்ரி செய்து கலக்குகிறார்.
இவை தவிர்த்து
- பகல் 12 மணிக்கு சிம்புவின் “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’,
- மதியம் 1 மணிக்கு தனுஷின் “நான் பொல்லாதவன்’,
- மதியம் 2 மணிக்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்ற பாலிவுட் சினிமா விழா,
- மாலை 5 மணிக்கு புதிய படங்களின் சிறப்புக் கண்ணோட்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன.
சன் டி.வி.
நதியாவின் வணக்கம் தமிழகம்:
க்ளாமரை நம்பாமல் நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாகத் திகழ்ந்த நதியா பங்கேற்கும் “வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
கில்லி:
தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த சூப்பர் ஹிட் படம் “கில்லி’ மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பாவனா:
இலங்கை அகதிக்கும் தமிழ்நாட்டுப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து உருவான “ராமேஸ்வரம்’ படத்தைப் பற்றி ஜீவா, பாவனா ஆகியோரின் பேட்டி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இவை தவிர்த்து காலை 10 மணிக்கு சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், காலை 11 மணிக்கு மற்ற டி.வி.க்களில் ஒளிபரப்பாகும் படங்களைப் பொருத்து ஒரு “திடீர்’ புதுப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
கலைஞர் டி.வி.
ஷோபனா:
காலை 6 மணிக்கு ஷோபானாவின் கர்நாடக இசை நிகழ்ச்சியுடன் தீபாவளி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்குகிறது கலைஞர் டி.வி.
சத்யராஜ்:
சத்யராஜின் கலகலப்பான பேட்டி. இதில் சத்யராஜ் இதுவரை சொல்லாத பல விஷயங்களைப் பற்றி மனம்திறக்கிறார். காலை 7 மணி.
- காலை 9.30 மணிக்கு நடிகர் விஜய்,
- 10 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,
- மதியம் 2 மணிக்கு விக்ரம்,
- 2.30 மணிக்கு தனுஷ்,
- 3 மணிக்கு வடிவேலு ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பாகிறது.
- இதற்கிடையில் பகல் 10.30 மணிக்கு ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்த “ஈ’ படம் ஒளிபரப்பாகிறது.
- மாலை 4 மணிக்கு முதல்வர் கருணாநிதி, கமல், ரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்கும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவும் நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகளோடு ஒளிபரப்பாகிறது.
- இரவு 10.30 மணிக்கு பிரகாஷ்ராஜ்-த்ரிஷா ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
ஜெயா டி.வி.
நந்தாவின் சமையல்: பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா ஜெயராஜ் நடிகர் நந்தாவுடன் இணைந்து விதவிதமான இனிப்புகளைச் செய்யும் நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
- மாலை 6 மணிக்கு ஜீவன்,
- 6.30 மணிக்கு பிரசன்னா,
- இரவு 7 மணிக்கு ப்ரியாமணி,
- 8.30 மணிக்கு “உன்னாலே உன்னாலே’ விநய் ஆகியோரின் பேட்டியும்
- இரவு 11 மணிக்கு மாதவன், ஷாம், த்ரிஷா நடித்த “லேசா லேசா’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.
மக்கள் டி.வி.
கவிதை:
கவிஞர்கள்
- ஈரோடு தமிழன்பன்,
- இன்குலாப்,
- அறிவுமதி,
- ஜெயபாஸ்கரன்,
- மு.மேத்தா,
- பச்சையப்பன்,
- நா.முத்துக்குமார்,
- யுகபாரதி,
- கபிலன்,
- இளம்பிறை,
- வெண்ணிலா
ஆகியோரின் புதுமையான கருத்துகளைத் தாங்கிய கவிதை நிகழ்ச்சி காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஆழிக்கொண்டாட்டம்:
நாள்தோறும் கடலில் வாழ்க்கையைக் கண்டெடுக்கும் மீனவர்கள் கடலுக்குள் குதித்து வீர தீர விளையாட்டுகளும் கடலுக்குள்ளேயே வெடி கொளுத்திக் கொண்டாடும் சாகச விளையாட்டு நிகழ்ச்சிகளும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகின்றன.
ஆத்தாடி உறியடி:
மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி. வடம் இழுத்தல், உறியடித்தல் என்று மண்ணின் விளையாட்டுகளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மக்கள் நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தீபா”வலி’:
தீபாவளித் திருநாளைக் கொண்டாடாத கிராமங்களைப் பற்றிய நெகிழ வைக்கும் நிகழ்ச்சி. அந்த கிராமங்களுக்கே சென்று அதற்கான காரணங்களை அறியும் வரலாற்றுப் பதிவு. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இவை தவிர்த்து
- பகல் 1.30 மணிக்கு சத்குரு ஜகி வாசுதேவின் பேட்டி,
- மாலை 4.30 மணிக்கு மரபு விளையாட்டுகளைப் பற்றிய “காசிக்கு போறேன் நானும் வாறேன்’,
- மாலை 5.30 மணிக்கு மலேசியத் தமிழர்களின் “மலேசிய மத்தாப்பூக்கள்’,
- இரவு 8 மணிக்கு ஈரானிய திரைப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
bsubra said
கலைஞர் டிவி மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்
தமிழ்த் தொலைக்காட்சிகளிலேயே கலைஞர் டிவிதான் மிக மோசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கடுமையாக கூறியுள்ளார்.
ராமதாஸ் பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சினிமாவையும் அது தொடர்பான எந்த நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாமல் ஒரு தொலைக் காட்சியை நடத்த முடியாது என்ற கருத்தை, மக்கள் தொலைக்காட்சி முறியடித்து வெற்றி பெற்றிருக்கிறது.
சினிமா ரசிகர்களை அதிகம் கொண்ட தமிழகத்தில், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி சிறிதும் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகளை அளித்து வருவதாக தொலைக்காட்சி பார்க்கும் நேயர்களே ஒப்பு கொள்ளும் வகையில் அந்த டிவி செயல்பட்டு வருகிறது.
மக்கள் தொலைக்காட்சி தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் மற்ற நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மலேசியாவில் சன் டிவிக்கு அடுத்தபடியாக மக்கள் தொலைக்காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் சினிமாவையும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளையும் பார்த்து வெறுப்படைந்த மக்கள் மாற்று நிகழ்ச்சிகளுக்காக ஏங்கினார்கள். தொலைக்காட்சி பார்வையாளர்களில் 40 சதவிகிதம் பேர் இத்தகைய நிகழ்ச்சிகளை விரும்புவதால் காணப்பட்ட வெற்றிடத்தை நிறைவு செய்ய எண்ணியே மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அந்த வெற்றிடம் தற்போது நிரப்பப்பட்டு விட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் பெயரில் ஒரு தொலைக்காட்சி வெளிவரப்போவதாக நான் முதன் முதலில் கேள்விபட்ட போது, மக்கள் தொலைக்காட்சியை போன்றே அந்த டிவியும் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் மற்ற டிவிகளை போலவே கலைஞர் டிவியும் குப்பைகளைத் தான் ஒளிபரப்புகிறது. இன்னும் சொல்லப்போனால் மற்ற டிவிக்களை விட மிக மோசமான நிகழ்ச்சிகளை அது ஒளிபரப்புகிறது என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.