VOC Chidhambaram Pillai’s Son – Reminiscences from the History: Dinamani Kathir
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007
நினைவலைகள்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் வ.உ.சி.சுப்பிரமணியம். இவர் தொழிலாளர் நல ஆய்வாளராகப் பணியாற்றினார். அப்போது ஒரு மளிகைக் கடைக்காரர் விதிமுறைப்படி நடந்துகொள்ளவில்லை. பலமுறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. கடைசிமுறை எச்சரிக்கையாக, “”இனி விதிமுறைப்படி நடந்துகொள்ளாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று கடுமையாக எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மளிகைக் கடைக்காரர் காவல்நிலையத்தில் வ.உ.சி.சுப்பிரமணியம் லஞ்சம் கேட்பதாகப் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி சுப்பிரமணியத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் நிதானமாகவும் பொறுமையாகவும் பதிலளித்தார் சுப்பிரமணியம். ஒருகட்டத்தில் சொந்தவூர் பற்றி பேசுகிறபோது, “”தூத்துக்குடியைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம்” என்று பதலளித்தார். அதைக்கேட்ட காவல் அதிகாரி, “”அது வ.உ.சிதம்பரனார் பிறந்த ஊராயிற்றே” என்றிருக்கிறார். அப்போதுதான் சுப்பிரமணியம், “”வ.உ.சியின் மகன்தான் நான்” என்று சொல்லியிருக்கிறார். பதறிப்போன அதிகாரி, சுப்பிரமணியத்திடம் தவறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டு “போலீஸ் சல்யூட்’ அடித்து அனுப்பிவைத்திருக்கிறார்.
This entry was posted on ஒக்ரோபர் 1, 2007 இல் 2:54 முப and is filed under Arrest, Chidhambaram, Dinamani, Famous, Freedom, History, Humbleness, Humility, Incidents, Independence, Influence, Police, Ship, Son, VOC. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
ரவிசங்கர் said
இது போல இன்னும் துணுக்குகள் இருந்தால் போடவும்..நீங்கள் தருகிற குறிச்சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பதால் தொடர்புடைய இடுகைகளை wordpressல் பார்க்கையில் எல்லா மொழி இடுகைகளும் கலந்து பயனில்லாமல் போய் விடுகின்றன.. தமிழில் மட்டும் குறிச்சொல் தருவது SEOவுக்கு உகந்தது இல்லை என்று நீங்கள் நினைத்தால் கூடுதலாகவாவது தமிழ்க் குறிச்சொற்கள் தரலாம்..தலைப்புகளும் ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்..தற்போதைய நிலையில் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்கள் உங்கள் இடுகைத் தலைப்புகளை மட்டும் பார்த்து வாசிக்க முடிவெடுக்க இயலாதே?
(இதற்கு முந்தைய மறுமொழி நான் இட்டதே..தவறுதலாக வேறு பயனர் கணக்கில் இட்டு விட்டேன்..அதை நீக்கி விடுங்கள்.)
bsubra said
ஹ்ம்ம்ம்…
—கூடுதலாகவாவது தமிழ்க் குறிச்சொற்கள் தரலாம்.—
இனி ஆரம்பிக்கிறேன் 🙂
ரவிசங்கர் said
http://wordpress.com/blog/2007/10/08/category-to-tag-converter/
பார்த்தீர்களா? உங்களுக்குப் பயன்படும்
bsubra said
பார்த்தேன்.. இன்னும் விளையாட ஆரம்பிக்கலை