Nissan In Vehicle Venture With Ashok Leyland – Small truck alliance
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007
நிஸானுடன் இணைகிறது அசோக் லேலண்ட்
29 ஆகஸ்ட் 2007
18:52 IST
இலகு ரக வாகனங்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்ய அசோக் லேலண்ட் நிறுவனமும், ஜப்பானின் நிஸான் மோட்டார்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் அமைக்கப்படும் இலகு ரக வாகன தயாரிப்பு ஆலையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படும் என்றும், அசோக் லேலண்ட் மற்றும் நிஸான் நிறுவனங்களின் பெயர்களில் இவை விற்பனை செய்யப்படும் என்றும் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
வாகன தயாரிப்பில் நிஸான் நிறுவனம் சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், இந்த ஒப்பந்தம் மூலம் அசோக் லேலண்ட் நிறுவனமும் இலகு ரக வாகனத்துறையில் சிறந்த இடத்தை அடைய முடியும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷேசாயி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்