Why CBI lost against Shibu Soren? Political equations may change in Jharkhand
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2007
சிபுசோரன் விடுதலை: மரபணு சோதனை தோல்விக்கு காரணம் என்ன?- சி.பி.ஐ. விளக்கம்
புதுடெல்லி, ஆக. 24-
ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சாகட்சி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சிபுசோரன் தனது நேர்முக உதவியாளர் சசிநாத்ஷாவை கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் அவருக்கு செசன்சு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்சா மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சிபுசோரன் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் “சசிநாத்ஷாவின் உடல் என்று கூறப்பட்டு பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சடலம் சசிநாத்சிங்ஷாவினுடையது என்பது மரபணு சோதனை மூலம் நிரூபிக்கப்படவில்லை” என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
எனவே சிபுசோரன் விடுதலைக்கு முக்கியக் காரணமாக இருந்த மரபணு சோதனை தோல்விக்கு காரணம் என்னப என்பது குறித்து இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்ட சி.பி.ஐ. அதிகாரிகளில் சிலர் கொடுத்த விளக்கம் வருமாறு:-
“இந்த வழக்கில் சிபுசோரன் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு சி.பி.ஐ. பெரும்பாலும் விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி அந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கொலை செய்யப்பட்ட சசி நாத்ஷாவின் தாய் பிரியம்வதாதேவி மரபணு சோதனைக்கு ஒத்துழைப்புத் தரவில்லை. பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சசிநாத்ஷாவின் எலும்புத் துண்டுகளையும், அவரது தாயின் ரத்தத்தையும் மரபணு சோதனை மூலம் ஒப்பிட்டு கொலை செய்யப்பட்டது சசிநாத்ஷாதான் என்பதை நிரூ`பிக்க வேண்டியிருந்தது.
இதற்காக நாங்கள் பிரியம்வதாதேவியை அணுகி ரத்த சாம்பிள்களை வழங்க கேட்டோம். ஆனால் அவர் ரத்தம் கொடுப்பதற்கு மறுத்து விட்டார். எனவே வேறு வழியில்லாமல் சசிநாத்ஷாவின் சகோதரர் ரத்தத்தை வைத்து மரபணு சோதனை நடத்த வேண்டியிருந்தது.
எனவே அது தோல்வியடைந்துள்ளது. மரபணு சோதனையை மேற்கொண்ட டாக்டர் ராவ் ஏற்கனவே இருமுறை மரபணு சோதனை நடத்துவதற்கு தேவையான பொருத்தமான சாம்பிள்கள் இல்லை” என தனது திருப்தியின்மையை தெரிவித்தார்.
இவ்வாறு அந்த சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்