இலங்கைத் திரைப்பட விழா
சென்னையில் வரும் ஆக.8 முதல் 10 வரை மூன்று நாள்களுக்கு இலங்கை திரைப்பட விழா நடைபெறுகிறது. இலங்கை தூதரகமும் சர்வதேச திரைப்பட திறனாய்வுக் கழகமும் (ஐசிஏஎப்) இணைந்து நடத்தும் இவ்விழா தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் ஆக. 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
இலங்கை தூதரக அதிகாரி பி.எம்.அம்சா, ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன், ஐசிஏஎப் தலைவர் எஸ்.கண்ணன், “பருத்தி வீரன்’ கார்த்தி, நடிகை அனுஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்று பரவலான வரவேற்பைப் பெற்ற
- “ஷவர் ஆஃப் கோல்டு’,
- “த விண்டு’,
- “ஃபேன்ஸி ரெய்ன்ஸ்’,
- “சைலன்ட் ஹானர்’,
- “ஃபயர் அண்டு வாட்டர்’ போன்ற படங்கள் திரையிடப்படுகின்றன.