Arts club for Mentally disabled in Chennai – Rasa
Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007
மனவளர்ச்சி குன்றியோரின் கலைக் குழு: “ரஸா’ அமைப்பு உருவாக்குகிறது
மனவளர்ச்சி குன்றியோரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும், அந்தத் திறமையின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்ட உதவும் விதத்திலும் “சிறப்பு கலைக் குழு’வை சென்னையைச் சேர்ந்த “ரஸா‘ (ரமணா சூன்ருத்யா ஆலயா) அமைப்பு உருவாக்குகிறது.
இதற்காக 14 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய 15 பேரை வரும் 21-ம் தேதி கலைத்திறன் தேர்வுகளை நடத்தி, தேர்ந்தெடுக்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் -இயக்குநர் டாக்டர் அம்பிகா காமேஷ்வர் தெரிவித்தார். 1989 அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கலைத்திறனை வளர்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.
“ரஸா‘ நடத்தும் சிறப்புப் பள்ளியில் மன வளர்ச்சி குன்றிய 100 பேர் தற்போது பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இசை, நாட்டியம், நாடகம், முக பாவங்களுடன் கதை சொல்லுதல் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், முழுக்க முழுக்க மன வளர்ச்சி குன்றியோரை மட்டுமே கொண்ட கலைக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது “ரஸô’வின் நோக்கம்.
கலைக் குழுவில் இடம்பெறத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இலவச பயிற்சி தரப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு “ரஸா, 1/1 அபிராமபுரம் முதல் தெரு, சென்னை -600 018′ என்கிற முகவரியிலோ, 2499 7607, 6528 1970 என்கிற தொலைபேசிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்