Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூலை 6th, 2007

Paavannan’s Book Review of Haruki Murakami’s Translated works in Tamil by Vamsi Books

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

சுதந்திரமும் சுதந்திரம் துரத்தலும் – பாவண்ணன் :: புத்தக விமர்சனம் – கவிதை அனுபவம்
01.07.07
குமுதம் தீராநதி

கடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வமுடன் இயங்கிவரும் இளைஞர்கள் ஜி. குப்புசாமி, ராஜகோபால், செழியன் ஆகியோர். இம்மூவருடைய மொழிபெயர்ப்பில் ஆறு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவை அனைத்தும் ஹாருகி முரகாமி என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதியவை. ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் மூன்று வெவ்வேறு தொகுப்புகளிலிருந்து இக்கதைகளைத் தேர்தெடுத்திருக்கிறார்கள் இவர்கள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு எடுத்துரைப்பு முறையைக் கொண்டதாக விளங்குகிறது. முற்றிலும் யதார்த்த முறையில் தொடங்கி முற்றிலும் புனைவுகளும் கற்பனைகளும் மிகுந்த உலகுக்குத் தளமாற்றம் கொள்ளும் கதைகளும் இருக்கின்றன. யதார்த்தத் தளத்துக்கும் கற்பனைத் தளத்துக்கும் மாறிமாறி பயணிக்கிற கதைகளும் உண்டு. எந்தவிதமான விசேஷ முயற்சிகளும் இல்லாமல் இரண்டுவகையான உலகங்களும் ஒன்றோடொன்று பொருத்தமாக இணைந்து கச்சிதமாகப் பிரிகின்றன. இதுவே இக்கதைகளின் முக்கியச் சிறப்பு. சிறுகதைகளின் பல்வேறு சாத்தியப் பாடுகளை எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் நிறைந்த தமிழ்ச்சூழலில் இக்கதைகளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைக்கக்கூடும்.

முரகாமியை ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளராக அறிமுகப்படுத்துகிறார் தொகுப்புக்கு முன்னுரை வழங்கியிருக்கும் சுகுமாரன். கலாச்சாரத்துக் குறைவுக்கு இலக்கான ஜப்பானிய உலகமும் வாழ்வும் இவருடைய கதைகளில் சித்திரிக்கப்படுவதாகவும் மரபுசார்ந்த ஒழுக்கங்களிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபடும் முயற்சிகளில் இறங்குபவர்களாகவும் அதனால் எழக்கூடிய புதிய சங்கடங்களால் திணறுகிறவர்களாகவும் முரகாமியின் கதைமாந்தர்கள் இருப்பதாகவும் கூடுதலான தகவலைப் பகிர்ந்துகொள்கிறார் சுகுமாரன். தொகுதியைப் படித்துமுடித்து கதைகளை மனத்துக்குள் அசைபோட்டுப் பார்க்கும்போது, முரகாமியின் கதைகளை உரசிப் பார்க்கும் உரைகல்லாக இந்த வாசகம் எவ்வளவு துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சுகுமாரன்மீது ஒருவித பாராட்டுணர்வு எழுகிறது.

ஆறு கதைகளில் முக்கியமான சிறுகதைகளாக, ‘குடும்ப விவகாரம்’ கதையைச் சொல்லவேண்டும். இக்கதையில் இடம் பெறும் அண்ணன், தங்கை இருவரும் முக்கியமான கதைப்பாத்திரங்கள். பிறந்த ஊரிலிருந்து தொலைவான நகரத்தில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்கியிருக்கிறார்கள் அவர்கள். ஆளுக்கொரு சமயத்தில் வெளியே வேலைக்குச் சென்று திரும்பி, வார இறுதியில் மட்டும் பார்த்துப் பேசிக் கொள்கிறார்கள். இருவருக்குமிடையே உள்ள நெருக்கத்தையும், விலகலையும், ஆதங்கத்தையும், அன்பையும், நுட்பமாக விவரித்த படிச் செல்கிறது கதை

கல்விச் சுதந்திரம், வேலைச் சுதந்திரம், பாலியல் சுதந்திரம் என எல்லா வகையான சுதந்திரங்களிலும் திளைக்கிறவர்கள் முழுச் சுதந்திரமடைந்தவர்களாகவும் ஆனந்தமானவர்களாகவும்தானே இருக்கவேண்டும் என்பது நம் எண்ணம். கட்டற்ற விடுதலை என்பது இந்தப் புள்ளியை நோக்கி மானுட குலத்தை அழைத்துச் செல்லும் ஒன்றாகவே இருக்கும் என்பது நம் நம்பிக்கை. நம் எண்ணத்துக்கும், நம்பிக்கைக்கும் மாறாக, இந்தச் சுதந்திரங்கள் எதுவுமே மனித மனத்தின் ஆழத்தில் உறங்கும் இச்சையுணர்வையோ அல்லது வெறுப்புணர்ச்சியையோ துளியும் மாற்றவில்லை என்பதை நாம உணரும் வகையில் கதையைக் கட்டியமைக்கிறார் முரகாமி.

இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணியாற்றுகிறான் அண்ணன். இதுவரை உத்தேசமாக இருபத்தியாறு பெண்களோடு தான் உறங்கியிருப்பதாகக் கணக்குச் சொல்கிறவன். தாயாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, மணந்துகொள்ள தங்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி, மனதில் பட்டதை சுதந்திரமாக முன் வைக்கத் தயங்காதவன். அவன் தங்கையும் பாலியல் சுதந்திரம் உள்ளவள். இதுவரை இரண்டு பேருடன் உறங்கியிருப்பதாகச் சொல்பவள். தனக்காக சில வேலைகளைத் தன் அண்ணன் செய்ய வேண்டும் என்று கோருபவள். அவளுக்குப் பதினெட்டு வயதாகிறது. அவள் யாரோடு உறங்கினால் என்ன என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தாலும் தங்கை தன் மனதுக்குப் பிடித்த இளைஞனொருவனைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் விருப்பத்தை முன் மொழிந்ததும் அக்கணத்திலிருந்து அந்த அண்ணனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஏதோ ஒரு பிடிப்பின்மையும் வெறுப்புணர்வும் அவனை வாட்டுகின்றன. புதிய இளைஞனைப் பற்றி ஏதேதோ மாற்று அபிப்பிராயங்கள் சொல்லத் தொடங்குகிறான். அவனது பேச்சுமுறை, பழகும் விதம் என ஏதோ ஒரு குறையைக் கண்டு அறிவிப்பவனாக இருக்கிறான். அவன் வசிக்கும் வீடு சொந்த வீடா, வாடகைவீடா என்று கேட்டறிந்து தாய்க்குத் தகவல் அளிப்பதுகூட அவனுக்குச் சலிப்பான செயலாகத் தோன்றுகிறது.

திடீரென இச்சலிப்பும் வெறுப்பும் ஏன் அவன் மனதில் எழ வேண்டும்? ‘‘அவள் யாரோடு வேண்டுமானாலும் உறங்கிவிட்டு வரட்டுமே, அதைப்பற்றிக் கவலையில்லை’’ என்ற எண்ணம் கொண்டவன் அவன். கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டாம் என கிண்டல் செய்யும் அளவுக்கு அவளுடைய சுதந்திரத்தை மதிப்பவன். அப்படிப்பட்டவனை தங்கையின் திருமணத் தேர்வு ஏன் மனக் குலைவை நிகழ்த்த வேண்டும்? தங்கையென்னும் உடைமையுணர்வை உதற இயலாத தவிப்புதான் காரணம். விருந்துக்கு அழைக்கப்பட்ட எதிர்காலக் கணவனுடன் அந்த வீட்டில் தான் எவ்விதமான உறவிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த அறையில் அந்த இடத்தில் அதைத் தன்னால் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள் தங்கை. அவளுக்கு ஏன் அப்படிப்பட்ட உணர்வு எழுகிறது? உடலளவில் அங்கே இல்லாத சகோதரனை உணர்வுரீதியாகவும், எண்ணரீதியாகவும் அங்கே இருப்பதாகவோ, கண்காணிப்பதாகவோ அவளை உணரவைப்பது எது? அண்ணனென்னும் உடைமையுணர்வை முற்றிலும் உதற முடியாத சங்கடம்தான் காரணம். குடும்ப அமைப்பின் வழியாக அந்த உடைமையுணர்வு காலம்காலமாக கட்டிக்காக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு கணத்தில் சட்டென அதைத் துறக்க முடிவதில்லை. துறக்க முடியாத அந்தச் சங்கடத்தை முன்வைப்பதாலேயே அது குடும்ப விவகாரமாக மாறுகிறது. இளைஞர்களுக்கு நவீன ஜப்பான் வழங்கியிருக்கிற சுதந்திரங்களுக்கும் அவர்களுடைய மன ஆழத்தில் இன்னும் உறுத்திக் கொண்டிருக்கும் புள்ளிக்கும் உள்ள முரணை அல்லது உறவைத் தொட்டுக் காட்டிவிட்டு மீள்கிறது கதை. ஒன்றாக பீர் அருந்தி தத்தம் மனபாரங்களைப் பேசி இறக்கி வைத்து எடையற்றவர்களாக மாறிய பிறகு அண்ணனும், தங்கையும் தத்தம் அறையை நோக்கித் திரும்பிவிடுவதைப் போல உலகமும் பழைய படி சுதந்திரத்தின் விளிம்புக்கு வந்துவிடுகிறது.

‘ஷினாகவா குரங்கு’ என்னும் இன்னொரு சிறுகதையும் தொகுப்பின் முக்கியக் கதை. நடப்பியல் சொல் முறையிலும் புனைவாக்கச் சொல்முறையிலும் மாறி மாறி முன்வைக்கப்படுகிறது கதை. எல்லாவற்றையும் பசுமையாக நினைவில் வைத்திருக்கும் ஒருத்தியால் தனது சொந்தப் பெயரை நினைவில் வைத்திருக்க முடியாமல் அடிக்கடி மறந்து போகிறது. எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். அது மிகப் பெரிய பிரச்னையாக வாழ்வில் உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஆலோசனை மையத்தை நாடிச் செல்கிறாள் அவள். இப்படி ஒரு பக்கம். ‘‘ஒரு பெயர் என்னைக் கவர்ந்துவிட்டால் அது எனக்குக் கிடைக்க வேண்டும்’’ என்னும் எண்ணத்துடன் நடமாடும் குரங்கு இன்னொரு பக்கம். ஒரு பக்கம் யதார்த்தம். இன்னொரு பக்கம் புனைவு. இரண்டு இழைகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓட மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கதையை நெய்து கோண்டு போகிறார் முரகாமி. சுதந்திரத்தின் படிமமாக குரங்கு சித்திரிக்கப்பட்டிருப்பது யோசிக்கத்தக்கது. பல தளங்களைத் தாண்டி வாசகர்கள் தம் எண்ணங்களை விரிவாக்கிக் கொள்ள வழிவகுக்கும் புள்ளி இது. ஒரு பெயருக்காக தேடி அலையும் முயற்சிகளில் அந்தக் குரங்கின் சுதந்திரம் நேசமாக உருமாறுகிறது. நேசத்தின் வலிமையை தன் அனுபவத்தை முன் வைத்தே அது புரிந்து கொள்கிறது.

சுதந்திரத்தைப் பற்றியும் சுதந்திரம் துறத்தலைப் பற்றியும் பல்வேறு கோணங்களின் கதைச் சூழல்களையும் மாந்தர்களையும் உருவாக்கிச் செல்லும் முரகாமி ‘‘நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது’’ என்னும் சிறுகதையில் எண்ணங்களைச் சுதந்திரமாக முன் வைக்க இயலாத ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

கட்டற்ற சுதந்திரங்களை ஆண்களும், பெண்களும் துய்க்கிற நவநாகரிகமான டோக்கியோவில் நாகரிகமான ஒரு தெருவில் ஓர் இளம் பெண்ணும் ஓர் இளைஞனும் ஒருவரையருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் இன்னொருவரைப் பார்த்ததுமே தனக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவராக இருவருமே உணர்கிறார்கள். பொருத்தத்தைச் சுட்டிக் காட்டுகிற இரசாயன மாற்றம் இருவருடைய உடல்களிலும் நிகழ்கிறது. ஆனாலும், இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமலும், ஒரே ஒரு பார்வையைக் கூட பகிர்ந்து கொள்ளாமலும் கடந்து சென்று விடுகிறார்கள். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு அதேபோல நிகழ்கிறது. அப்போது அதே தீவிரப் பொருத்த உணர்வு. அதே அளவு இரசாயன மாற்றம். என்ன காரணத்தால் பகிர்ந்து கொள்ளாமலும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே பொருத்தமானவர்களுடன் கூட சேர்ந்து செல்லக் கூடிய சூழல் நிறைந்த ஊரில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தம் என்று உணர்ந்தும் இந்தப் பாராமை வாழ்வில் ஏன் நிகழ்கிறது? விடுவிக்கப்பட முடியாத இப்புதிருக்கு என்ன காரணம்? எல்லையற்ற சுதந்திரங்களாலும் கூட அப்புதிரின் விளிம்பைத் தொட முடியாமல் போவது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் மானுட குலம் இது போன்ற எண்ணற்ற புதிர்களால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை, நாம் துய்க்கிற எல்லாச் சுதந்திரங்களும் நம்முடைய நினைவாற்றலும், திறமைகளும் மானுட குலம் புதிர்களால் நிறைந்தது என்னும் எளிய உண்மையை உணர்வதற்காகத்தான் போலும்.

(நூறு சதவிகித பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது. ஜப்பானியச் சிறுகதைகள்,

மூலம்_ஹாருகி முரகாமி.

மொழி பெயர்ப்பு: ஜி. குப்புசாமி, ராஜகோபால், செழியன்,

வம்சி வெளியீடு, 19, டி.எம். சாரேன், திருவண்ணாமலை. விலை ரூ.80)

Posted in Books, Chezhian, Chezhiyan, Kuppusami, Literature, Muragami, Murakamy, Murkami, Paavanan, Paavannan, Pavannan, Rajagopal, Reviews, Sezhian, Sezhiyan, Story, Translation, Works, Writer | Leave a Comment »

Cultural Anthropology series – A Marx in Kumudham Theeranathy: Sociology & Sanjay Subramanian

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

சஞ்சய் சுப்ரமணியத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்களும் இணைப்புண்ட வரலாறுகளும்’ :: அ மார்க்ஸ்
01.07.07
குமுதம் தீராநதி

வேறெந்த அறிவுத்துறையையும் போல வரலாற்றுத்துறையை மட்டும் அதன் துறை சார்ந்த கல்வியாளர்களிடம் விட்டுவிட்டு நாம் வாளாவிருக்க இயலாது. இதன் பொருள் நாம் அதில் மூக்கை நுழைக்க வேண்டுமென்பதல்ல. ஆனால், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற அறிதலும் பிரக்ஞையும் சமூகப் பிரச்சினைகளில் அக்கறையுள்ளவர்களுக்குத் தேவை. காலம், இடம் என்கிற இரு அம்சங்களிலும் வேறெப்போதைக் காட்டிலும், வேறெங்கைக் காட்டிலும் இன்று, இங்கு இது முக்கியமாவதை விரிவாக விளக்க வேண்டியதில்லை.

சென்ற நூற்றாண்டின் நடுப் பகுதியில் மார்க்சீய அணுகல் முறை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. ஆசிய உற்பத்தி முறை குறித்த விவாதங்கள், சோழர்கால மற்றும் முகலாயர் கால நிலவுடைமை பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. சென்ற நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் ‘அடித்தள மக்கள் ஆய்வுகள்’ (Subaltern Studies), ‘பின் காலனிய ஆய்வுகள் (Post Colonial Studies) ஆகியன மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தன. இவை இரண்டும் இந்திய வரலாற்றாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு Segmentary State’ என்கிற மாதிரியைப் பயன்படுத்தி சோழ, விஜயநகரப் பேரரசுகளை ஆய்வு செய்த பர்ட்டன் ஸ்டெய்னின் புகழ்பெற்ற நூலையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

அடித்தள மற்றும் பின் காலனிய ஆய்வுகள் இன்று ஒரு தேக்கத்தை எட்டியுள்ளதை யாரும் உணர இயலும். இந்தப் பின்னணியில், இன்று உலக அளவில் முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவராக அறியப்படும் சஞ்சய் சுப்ரமண்யத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்கள்’ (Contained Conflicts) மற்றும் ‘இணைப்புண்ட வரலாறுகள்’ (Connected Histories) ஆகியன, நாம் அவசியம் பரிச்சயப்படுத்திக் கொள்ளத்தக்கவையாக உள்ளன.

சீனம் மற்றும் மத்திய ஆசியாவின் வரலாறுகளை எழுதிய ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் ஃப்ளெட்சரின் ஒருங்கிணைக்கப்பட்ட வரலாறு

(Integrative History) என்கிற கருத்தாக்கத்திலிருந்து தனது இணைப்புண்ட வரலாறு எழுதியலை உருவாக்கியுள்ளார் சஞ்சய். ‘Early Modern Period’ எனப்படும் நவீனத்துவத்தின் தொடக்க காலத்திய (அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னதான மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள், இந்திய வரலாறு இவரது ஆய்வுப் பொருள். ‘இந்தியா’, ‘இந்தியக் கலாச்சாரம்’, ‘முகலாயப் பேரரசு’ என்கிற நெகிழ்ச்சியற்ற இறுக்கமான கருத்தாக்கங்களின் அடிப்படையில் அன்றைய உலக நிகழ்வுகளிலிருந்து பிரித்துத் தனியே இக்கால கட்டத்தின் வரலாற்றை எழுதுவது சாத்தியமில்லை. இத்தகைய எழுதுமுறையே பல்வேறு அபத்தமான இருமை எதிர்வுகளுக்கும் (எ.டு: கீழைத்தேயம் x மேலைத்தேயம்), அச்சுப் பதிவுகளுக்கும் (Stereo Types எ.டு. கீழைத்தேய எதேச்சாதிகாரம், மாற்றமற்ற மரபு வழிப்பட்ட இந்தியா, கிராம சமுதாயம், Homo Hiirarchicus, மேலைத் தேயத்தின் கொடையாக நவீனத்துவத்தின் வடுகை) இட்டுச் சென்றன.

‘பிராந்திய ஆய்வுகள் area studies) மற்றும் ‘கலாச்சார ஆய்வுகள்’ என்கிற பிரசித்தமான பல்கலைக்கழக ஆய்வு நெறிகள் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவா. தேசங்கள், கலாச்சாரங்கள் என்பதெல்லாம் இணைக்க இயலாத பாழ்களால் பிரிக்கப்பட்டவை அல்ல. ஏதோ நவீனமான தொழில் நுட்பங்களும், தொடர்புச் சாதனங்களும்தான் இந்தப் பிளவை அழித்தொழிப்பதாக நாம் கருத வேண்டியதில்லை. நுண் நிகழ்வுகளை, தொடர்புடைய உலகளாவிய செயற்பாடுகளுடன் இணைத்து ஒரு அகன்ற திரையில் நாம் வரலாற்றைத் தீட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ‘‘இந்தியாவின் வரலாற்றை இந்தியாவுக்கு வெளியே செல்லாமல் நம்மால் புரிந்து கொள்ளவோ விளக்கவோ இயலாது’’ என்கிற அஷிம் தாஸ் குப்தாவின் கருத்தைச் சுட்டிக் காட்டுவார் சஞ்சய். இதன் பொருள், எல்லோரும் கடந்து செல்ல வேண்டுமென்பதல்ல. மாறாகப் பிற வரலாறுகள், சமூக மாற்றத் திசை வழிகள் (societal trajectoria) குறித்த ஒரு திறப்பு வரலாற்றாசிரியனுக்குத் தேவை. வங்கத்தின் வரலாற்றை குஜராத்துடன் இணைத்துப் புரிந்து கொள்வதைக் காட்டிலும், பர்மியக் கடற்கரையுடனும் தாய்லாந்துடனும் பிணைத்துப் பார்ப்பது சில கணங்களில் அவசியமாக இருக்கலாம். முகலாயர்களின் வரலாற்றை ஐபீரியாவின் இந்திய ஆளுகை (Estat de India), ஆட்டோமான் மற்றும் சஃபாவித் பேரரசுகள், தக்காண சுல்தான்களின் ஆட்சி ஆகியவற்றிலிருந்து தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது.

வழக்கமான காலப்பாகுபாடு (periodization), தேச எல்லை ஆகிய எல்லாவற்றையுமே நாம் ஒதுக்கித் தள்ளுதல் தவிர்க்க இயலாததாகிறது. இந்தியாவுக்கான தனித்துவமான வரையறைகளை வற்புறுத்துவது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமாக இராது. இத்தகைய தனித்துவங்களை அதிகபட்சமாக வற்புறுத்திய பாஷம் (இந்தியா என்கிற வியப்பு’) போன்றோரின் கட்டமைப்புகள் வேதப் பொற்கால அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு வேண்டுமானால் உதவலாம். நமது ‘இந்திய வரலாற்றுப் பேராயத்தை (Indian History Congress) எடுத்துக் கொள்ளுங்கள். ‘மத்திய காலம்’ என்றே வரையறையில் 1757 வரை அது அடக்குவதை என்ன சொல்வது? பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின் இங்கு உருவான கடல்வழித் தொடர்புகள் ஆட்சிமுறையிலும், கருத்தியலிலும், பார்வைக் கோணங்களிலும் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படிப் புறந்தள்ளுவது? வேறுபட்ட பல மனிதர்கள் (பாதிரிகள், தூதுவர்கள், வணிகர்கள், படைத் தலைவர்கள், ஆளுநர்கள் மருத்துவர்கள், வரலாற்றுப் பதிவாளர்கள் பயணிகள்…), வணிகப் பொருட்கள், கருத்தியல்கள், ஆயுதங்கள், மொழிகள் எழுதுமுறைகள் இவற்றின் இடையறாத பயணங்களுக்கு வாய்ப்பளித்த ஒரு ‘குறுக்குச் சாலை’யாக இந்தியா மாறவில்லையா? ‘நவீனம்’ அல்லது ‘தொடக்க நவீனம்’ முதலான கருத்தாக்கங்களில் எவ்வளவுதான் பிரச்சினை இருந்த போதிலும், ‘மத்திய காலம்’ ‘முஸ்லிம் இந்தியா’ என்பவற்றைக் காட்டிலும் உலகளாவிய சில மாற்றங்களுடன் இவை தொடர்புடையதாக அமைவது கவனிக்கத் தக்கது.

‘இந்தியா’, ‘இந்து’ என்கிற வரையறைகளும் பிரச்சினைக்குரியவைதான். ‘அல்_ஹிந்த்’ என்கிற இடைக்கால அராபியச் சொல்லிலிருந்து உருவானது அது. ‘சிந்து’ என்கிற முந்தைய, மேலும் குறுகிய வரையறையிலிருந்து இந்த அல்_ஹிந்த் உருவாகியது. அராபியத் தகவல் களஞ்சிய ஆசிரியர்கள் மற்றும் புவியியலாளர்களின் எழுத்துக்களில் இவ் வரையறை பல வகைப்பட்டதாக அமைகிறது. எல்லோரும் இந்தோ கங்கைச் சமவெளியை (பஞ்சாப் முதல் வங்கம் வரை) உள்ளடக்குகின்றனர். ஆனால் தென்னிந்தியத் தீபகற்பகம் உள்ளடக்கப்படுத்துவதில் தெளிவில்லை. ‘ஹிந்த்’. ‘ஹிந்துஸ்தான்’ என்பன பல நேரங்களில் தக்காணத்தையும் நர்மதைக்குத் தென் பகுதிகளையும் உள்ளடக்குவதில்லை. இன்னொரு பக்கம் ‘ஹிந்த்’ என்பதற்குள் தென் ஆசியா முழுவதையும் (கம்போடியா, தாய்லாந்து), ஏன் ஏமன் (தெற்கு அரேபியா) வரைக்கும் உள்ளடக்கும் போக்கும் இருந்தது. அராபிய நூற்களில் மூன்று புவியியற் பகுதிகள் காணக் கிடைக்கின்றன. (ஹிந்தி, சின் (சீனா), அஜம் (பெர்சிய மொழிப் பகுதி). இவற்றின் எல்லைகள் எப்போதும் ஒன்றே போல வரையறுக்கப்பட்டதில்லை. சில நேரங்களில் ‘அஜம்’ காணாமற் போய் விடுகிறது.

பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ‘அக்பர் அங் சின் வால் ஹிந்த்’ எனும் அரபுப் பிரதி அராபியர், சீன அரசு, ரூம் அரசு, காதுகளைத் துளையிட்டுக் கொள்ளும் வழக்கமுடையவர்களின் பல்லஹா_ராய் அரசு ஆகியவற்றைக் குறிக்கிறது. பல்லஹா ராயின் ஆட்சியிலுள்ள, ‘ஹிந்த்’தின் சமூக அமைப்பைச் சொல்ல வரும்போது, ‘‘இங்கே புலவர்களும், மருத்துவர்களும் குடும்பங்களுக்குரியவர்களாக உள்ளனர். அக் குடும்பங்களே அத் தொழில்களைச் செய்ய முடியும்’’ என்கிறது. ‘ஹ¨தூத் அல் அலம்’ என்கிற பெர்சியப் பிரதி (10ம் நூ.) ‘‘ஹிந்துஸ்தான் முழுவதும் மத சட்டவிரோதமானதாகவும், முறை தவறிய பாலுறவு (adultary) சட்டபூர்வமானதாகவும் உள்ளது… எல்லோரும் சிலை வணக்கத்தை ஏற்பவர்கள். தங்கம், வெள்ளியில் செய்யப்பட்ட ஏராளமான சிலைகள் பிராமணர்கள் மற்றும் சாமியார்களால் பாதுகாப்பில் உள்ளன… ஒரே ஒரு நகரத்திலாவது தலைவன் சாகும்போது அவனுக்குக் கீழே உள்ள கீழ்மக்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்’’ என்று பதிவு செய்கிறது. இந்நூல் வரையறுக்கும் ‘ஹிந்த்’ லாகூர், முல்தான், காஷ்மீர், கன்னோஜ் பகுதிகளை மட்டுமின்றி காமரூபம் (அஸ்ஸாம்), சம்பா, கேமர் (கம்போடியா), ஃபன்சூர் (சுமத்ரா) ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது.

இப்படி நிறையச் சொல்லலாம். சமஸ்கிருத வரலாற்றைக் குதூகலமாக எழுதும் ஷெல்டன் பொல்லாக் சமஸ்கிருதமொழி ஆளுகையின் எல்லைக்குள் கம்போடியா, சம்பா வரை கொண்டு செல்வதும் குறிப்பிடத் தக்கது. ‘அகண்ட இந்தியா’ கோட்பாட்டாளர்கள் இவை குறித்து மகிழ்ச்சி சொள்ளத் தேவையில்லை. மேற்கண்ட வரையறைகளில் தென்னிந்தியா உள்ளடக்கப்படாதது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் 16_ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆட்டோமன் வரலாற்றுப் பதியரான (Chronicler) செய்ஃபி செலபி ‘ஹிந்த்’ மன்னர்களைப் பட்டியலிடும்போது, மொகலாயப் பேரரசர் ஜலாலுதீன், அக்பரை விட்டுவிடுவதும் தக்காண அரசர்களில் தொடங்கி ‘பெகு’ (பர்மா), ‘செரன்தீப’ (ஸ்ரீலங்கா) அரசர்களையும் ‘அசோஹ்’ சுல்தான்களையும் (இந்தோனேஷியா) உள்ளடக்குவதும் அகண்ட பாரதக்காரர்களுக்கு எந்த அளவு உவப்பளிக்கும் என்பது தெரியவில்லை.

வெளியிலிருந்து பார்த்தவர்கள் இருக்கட்டும், உள்ளிருந்தவர்கள் எந்த அளவிற்கு ‘ஹிந்த்’ என்கிற வரையறையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்? யார் ‘உள்நாட்டவர்’? யார் ‘அந்நியர்’? 13,14,15 நூற்றாண்டுகளில் இந்திய வரம்பு குறித்த கருத்துக்கள் புறவயமான வரையறைகளாகத்தான் இருந்தனவேயழிய உள்ளிருந்து உரிமை கோரப்பட்டவையாக இல்லை என்கிறார் சஞ்சய்.

‘‘நாகரிகம்’’ என்கிற கருத்தாக்கம் (இந்திய நாகரிகம், ஐரோப்பிய நாகரிகம்,) இத்தகைய பரந்துபட்ட அளவிலான இணைப்புண்ட வரலாறு எழுதியலுக்குப் பெருந்தடையாக உள்ளது. அச்சுப் பதிவான இக் கட்டமைப்புகளை உருவாக்கியவர்கள் தென்கிழக்கு ஆசியா (கம்போடியா, இந்தோனேசியா, ஜாவா, சுமத்திரா முதலான இந்தியப் பெருங்கடற் தீவுகள்)வுக்கு இந்தத் தகுதியை வழங்கியதில்லை. தொடக்கத்தில் இந்திய நாகரிகம், பின்னாளில் இஸ்லாமிய நாகரிகம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே தென்கிழக்கு ஆசியா கருதப்பட்டது. ஆனால் பிரம்பணான், போரோபோதூர் ஆகியவற்றின் மகத்தான கலை வெளிப்பாடுகள் தென்னிந்தியாவில் கோயிற் கலை உருவாக்கத்திற்கு முன்னதாகவே தோன்றியவை என்பதை யாரும் சிந்திப்பதில்லை.

பல்வேறு கலாச்சாரங்கள் பயணிக்கும் குறுக்குச் சாலையாக இந்தியா அமைந்ததை ஏற்காததன் விளைவுதான், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி முதலானோர் விஜயநகரப் பேரரசை தக்காண சுல்தான்கள், டில்லி முகலாயர்கள் ஆகியோரின் கலாச்சார அரசியல் விரிவாக்கத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்ட வீரமிக்க இந்துப் பேரரசாக உருவகிப்பது. பர்ட்டன் ஸ்டெய்ன், பிலிப் வாகோனர் முதலான இன்றைய விஜயநகர வரலாற்றாசிரியர்கள் இந்தக் கருத்துப் பிழையை வெளிப்படுத்துகின்றனர். விஜயநகரக் கலை வடிவங்கள் மட்டுமின்றி, பாசனமுறை, இராணுவ மற்றும் நிதி நிர்வாகம், பெயர் சூட்டிக் கொள்ளும் முறை வரை புறவயச் செல்வாக்குகளுக்கு ஆட்பட்டவையாகவே இருந்தன. வட இந்தியா, தக்காணம், ஹ¨ர்முஸ், பெர்சிய வளைகுடா ஆகிய பகுதியிலிருந்து விஜய நகரத்தின் மீது இத் தாக்கங்கள் அமைந்தன. ‘இந்து விஜயநகரம்’ ‘முஸ்லிம் எதிரிகள்’ என்கிற கட்டமைவு ரொம்பச் சிக்கலானது. போர்த்துக்கீசியத் தலையீட்டைக் கணக்கில் கொள்ளாது இதைப் புரிந்து கொள்ள இயலாது. பிரிட்டிஷ் வருகைக்கு முந்திய போர்த்துக்கீசிய ஆசியாவில் போர்த்துக்கீசியர்களுக்கும் முகலாயர்களுக்குமிடையிலான ஒத்துழைப்பு அல்லது உறவு என்பது ஒருவரை ஒருவர் பல்வேறு தந்திரங்கள், ஒப்பந்தங்கள், நடைமுறைகளினூடாக மடக்கிப் போடுகிற முயற்சியாகவே இருந்தது? நேரடியான போர்கள் இல்லை என்பதற்காக உள்ளடக்கப்பட்ட மோதல்களை நாம் புறக்கணித்துவிட இயலாது.

1572_3 ஆண்டுகளில் அக்பர் குஜராத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோது, கோவா மற்றும் டையூவில் உறுதியாகக் கால் பதித்திருந்த போர்த்துக்கீசியர் துணுக்குற்றனர். அக்பரது ஆளுநரின் ஆட்சியில் குஜராத் இருந்த போதும் சூரத்திலும் கம்பயாத்திலும் போர்த்துக்கீசியர் சுதந்திரமாக வணிகம் செய்யவும் டையூ துறைமுகத்திற்கு வந்து சேரும் கப்பல்களிடம் சுங்கம் வசூலிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். பதிலாக, செங்கடல் வழியாக சூரத்திலிருந்து செல்லும் ‘ஹஜ்’ யாத்ரீகர்களுக்கு கடலாதிக்கத்தில் வலுவாக இருந்த போர்த்துக்கீசியர் பாதுகாப்பு அளித்தனர். இந்தப் பாதுகாப்பிற்காக முகலாயர்கள் ஏராளமான இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. அக்பரின் அத்தை (சித்தி?) குல்பதன் பேகம் 1575_ல் ஹஜ் யாத்திரை செல்வதற்குத் திட்டமிட்டபோது சுமார் ஓராண்டுக் காலம் சூரத்திலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, டாமனுக்கு அருகிலுள்ள புல்சார் என்னும் பிரதேசத்தை விட்டுக் கொடுத்த பின்னரே 1576 அக்டோபரில் அவர் கப்பலேற அனுமதிக்கப்பட்டார். ஆட்டோமன் பேரரசுக்கும் முகலாயர்களுக்குமிருந்த பகையை போர்த்துக்கீசியர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஹஜ் பயணிகளின் கடற்பயணப் பாதுகாப்பிற்கு போர்த்துக்கீசியர்களையே அவர்கள் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. ஆட்டோமன்கள் தம்மை ‘கலீஃபா’ என்கிற உயர் அந்தஸ்துடையவர்களாக உரிமை கோரியதை எதிர்த்தே அக்பர் ‘தீன் இலாஹி’ என்கிற புதிய மரபை (லீமீtக்ஷீணீறீஷீஜ் sமீஸீt) உருவாக்கித் தன்னை ஒரு ‘மெனஸா’ நிலையில் ‘பாத்ஷா_இ_இஸ்லாம்’ ஆக அறிவித்துக் கொண்டார். இதனால் சன்னி முஸ்லிம்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

பதேபூர் சிக்ரியில் சேசு சபைப் பிரிவை ஏற்படுத்த அனுமதி அளிக்க நேர்ந்தது எனக் கதை நீள்கிறது.

இத்தகைய ‘உள்ளடக்கப்பட்ட மோதல்’ என்கிற பின்னணியில்தான் விஜய நகரப் பேரரசின் முஸ்லிம் எதிர்ப்பைப் பார்க்க வேண்டும். முகலாயர்களுக்கு (மோர்கள்) எதிரான மாற்று வம்ச (ரீமீஸீtவீநீ) அரசு ஒன்றை போர்த்துக்கீசியர் ஊக்குவித்தனர். இந்த அரசியல் நோக்கத்தின்பாற்பட்டதே விஜயநகரத்தின் எதிர்ப்பு. இந்து ஙீ முஸ்லிம்; சிலுவை ஙீ பிறை என்கிற இருமை எதிர்வுகளெல்லாம் எந்த அளவிற்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமானவை என்பது கேள்விக்குறியே. கிறிஸ்தவ வணிக நலன்களுக்கு இடையேயும் முஸ்லிம் அரசுகளுக்கு இடையேயும் இருந்த வேறுபாடுகள் கிறிஸ்தவ ஙீ முஸ்லிம் வேறுபாடுகளைக் காட்டிலும் கூர்மையாக இருந்த தருணங்கள் உண்டு.

பேரரசுகளின் விரிவாக்கம், காலனிய நடவடிக்கைகள், தேசிய உருவாக்கம் ஆகியன குறித்த இறுக்கமான ஒற்றை மாதிரிகளுக்கும் இணைப்புண்ட வரலாற்றில் இடமில்லை. ஐரோப்பாவை மையமாகவும் (Center), இந்தியா முதலானவற்றை விளிம்பாகவும் (Periphery) கொண்டு உருவாக்கப்படும் ‘உலக அமைப்புக் கொள்கை’ (World System Theroy்)யும் கூட பிரச்சினைக்குரியதே. இத்தகைய அணுகல் முறையில் மூன்று விதப் பிழைகள் சாத்தியமாகின்றன என்கிறார் சஞ்சய்.

1. கால வழு: ஒரே காலகட்டத்தில் பேரரசுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இருந்த உறவும், பேரரசுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இருந்த உறவும் வேறுபட்டவையாக இருந்தன. 15_ம் நூற்றாண்டின் முற்பகுதியில், லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஹேப்ஸ்பர்க் பேரரசிற்குப் பெரிய அளவில் கப்பம் சென்றது. விலை உயர்ந்த உலோகங்கள் கொண்டு செல்லப்பட்டதோடு கட்டாய உழைப்பு, அடிமைச் சேவகம் ஆகிய வடிவங்களில் உபரியும் கொள்ளை கொண்டு செல்லப்பட்டது. எனினும் இவை அனைத்தும் மையத்தை வளப்படுத்த மட்டுமே பயன்பட்டதாகவும் கருத வேண்டியதில்லை. பணவீக்கத்திற்கும் ஏற்றத்தாழ்வான பொருளாதார அமைப்பிற்கும் இவை காரணமாயின. இதே நேரத்தில், ஐபீரிய மையத்திற்கும் (போர்த்துக்கீசிய & ஸ்பெய்ன்) ஆகிய நாடுகளுக்குமான கேப் (‘நன்னம்பிக்கை முனை’) வழியிலான வணிகம் இத்தகைய சுரண்டல் தன்மை உடையதாக இல்லை. மையத்திலிருந்து தங்கம், வெள்ளி இறக்குமதியாகி, ஈடாக மிளகு, இன்டிகோ முதலான பொருட்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டன. முதற்கட்டத்தில் பெரிய அளவு உபரி கொள்ளையிடப்பட்டதில்லை.

2. இட வழு.: ஒரே இடத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பேரரசு மையத்திற்கும் வெளியிலுள்ள நாடுகளுக்குமான உறவு ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஆசிய நாடுகளுக்கும் ஐபீரியப் பேரரசிற்குமிடையே தொடக்க நவீன காலத்தில் (1450_1750) இருந்த உறவு பெரிய அளவில் சுரண்டல் அடிப்படையில் இல்லை என்றோம். ஆனால், பின்னால் உருவான பிரிட்டன்/பிரான்சுப் பேரரசுகளுக்கும் இந்தியாவிற்குமான உறவு அப்படியானதல்ல. முந்தைய கட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் (புதிய ஸ்பெய்ன் மற்றும் பெரு முதலியன) இருந்த கொடுமையான சுரண்டல் உறவுக்குச் சமமானது இது. எனவே ஒரு இடத்தில் நிலவிய ஏகாதிபத்திய உறவையும் நாம் ஒரே மாதிரிப் பார்க்க வேண்டியதில்லை.

பின் காலனியக் கோட்பாட்டாளர்கள் இங்குதான் பிரச்சினைக்குள்ளாகின்றனர். பின் காலனியம் என்கிற வரையறையை, இந்தியாவையும் லத்தீன் அமெரிக்காவையும் ஒன்றே போல இவர்கள் உள்ளடக்குகின்றனர். லத்தீன் அமெரிக்காவில் பின் காலனியம் என்பது 19_ம் நுற்றாண்டின் பிற்பகுதி. இந்தியாவிற்கு இது பொருந்தாது. இங்கே அது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய நிகழ்வுகளையே குறிக்கும் எல்லாப் பேரரசுகளும் காலனியப் பேரரசுகளல்ல, எல்லாம் ஒரே மாதிரியான பொருளாதார, கலாச்சார தர்க்கத்திற்குள் அடங்கா. காலனிகளுக்கும் பேரரசுகளுக்கும் இடையிலுள்ள பொருளாதாரச் சுரண்டல் ஒன்றே இவற்றுக்கிடையிலான மொத்த உறவுகளையும் குறித்து விடாது. பல்வேறு வகைப்பட்ட உள் சுரண்டல்கள், மோதல்கள் ஆகியவற்றிற்கு மேற்குறிப்பிட்ட வரையறை இடமளிக்காது. இதன் பொருள் ஏகாதிபத்தியம், விளிம்புகளிலிருந்து மையங்களை நோக்கி உபரி செல்லுதல் முதலான கருத்தாக்கங்களைக் கைவிட வேண்டுமென்பதல்ல. மிகுந்த எச்சரிக்கையுடன் இவற்றைக் கையாள வேண்டும் என்பதே.

3. ஐபீரியப் பேரரசும், பிரிட்டிஷ் பேரரசும் வேறு வேறு; அல்லது ஐபீரியப் பேரரசின் முதற்கட்டமும் அடுத்தடுத்த கட்டங்களும் வேறு வேறு என்கிற ரீதியில் இதற்கு விளக்கமளித்துவிட முடியாது. அய்ரோப்பாவை மையமாகக் கொள்ளும் பின் காலனிய அணுகல் முறை ‘நவீனத்துவம்’ குறித்த அருதப் பழசான ஒரு விளக்கத்தை அளிக்கிறது. நவீனத்துவம் என்பது ஐரோப்பாவின் ஏகபோகம். இங்கிருந்தே விளிம்புகளுக்கு நவீனத்துவமும் அதன் அரசியல் வெளிப்பாடான தேசிய அரசும் ஏற்றுமதியாகிறது என்கிறது பின் காலனிய அணுகல்முறை. ஆனால் தேசிய உருவாக்கம் நான்கு வழிகளில் ஏற்படுகிறது.

1. அருகருகே உள்ள அரசமைவுகள் ஒருங்கிணைந்து தேசம் உருவாதல் (19_ம் நூ. இத்தாலி, ஜெர்மனி).

2.பெரிய அரசுகள் உடைந்து, இன, மொழி அடிப்படையில் தேசங்கள் உருவாதல் (அயர்லாந்து, மலேசியா முதலியவை இனம் என்பதைத் தேச உருவாக்கத்தின் சாராம்சமான காரணியாகக் கருத வேண்டாம் என எச்சரிக்கிறார் சஞ்சய்)

3. தேச அரசே ஒரு ஏகாதிபத்திய மையமாக உருவாதல் (பிரிட்டன், ஸ்பெய்ன், போர்த்துகல், நெதர்லான்ட்) 4. தேச அரசு பேரரசுப் பண்புடன் தொடர்தல் (சோவியத் யூனியன், சீனா, இந்தியா _ பேரரசுப் பண்பு என்பது அளவில் பெரிதாகவும் பல்வேறு மொழி, இன அடையாளங்களையும் உள்ளடக்குவதாகவும், ஓரளவிற்கு காப்புத் தன்மை உடையதாகவும் அமைவது).

சுருக்கமாகச் சொல்வதானால் தொடக்க நவீன காலத்திற்குமான ஒற்றை ஏகாதிபத்திய மாதிரி எதுவும் கிடையாது. தேச அரசு உருவாக்கத்திற்கான வழிகளும் ஒற்றைத் தன்மையானதல்ல.

ஒரே நிகழ்வு குறித்த ஐரோப்பிய வரலாற்றுப் பதிவுகளும் அராபிய, பெர்சிய மற்றும் உள்ளூர் வரலாற்றுப் பதிவுகளும் வேறுபட்டு நிற்கும் தன்மைகள் சுவாரசியமானவை. இவை ஒவ்வொன்றும் தத்தம் பக்கத்து அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாகச் சுருக்கிப் பார்த்துவிட இயலாது. நிகழ்வுகளைப் பொருத்து இப் பிரதிகளின் நிலைபாடுகள் வேறுபடுகின்றன. சில நிகழ்வுகளில் ஐரோப்பியப் பதிவுகள் நம்பிக்கைக்குரியனவாகவும், சில நேரங்களில் உள்ளூர்ப் பதிவுகள் கூடுதலாக உண்மையைப் பேசுபவையாகவுமுள்ளன. ஏகாதிபத்திய விரிவாக்கக் கொடுமைகளை அதிக அளவு பட்டியலிடும் ஐரோப்பியப் பிரதிகளுமுண்டு. பேரரசின் கருணையைப் பதிவு செய்யும் உள்ளூர்ப் பிரதிகளும் உண்டு. நவீனமான பிரதியியல் அணுகல் முறைகள், ஒப்பீடு, இதர சான்றுகள் மற்றும் நிகழ்வுகளுடன் தொடர்புறுத்திப் பார்த்தல் ஆகியவற்றின் மூலமாகவே ஒரு சுமாரான வரலாற்றுச் சித்திரத்தை நாம் வரைய முடியும். அப்படியும் கூட வரலாற்றின் சில பக்கங்களை நாம் நிரப்ப முடியாமலே போகலாம். சில கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமலேயே முடியலாம். அதை ஏற்றுக் கொள்ளும் தைரியமும் நேர்மையும் ஒரு வரலாற்றாசிரியனுக்குத் தேவை.

ஆக, தேசத்திலிருந்து வரலாற்றைத் தப்புவிப்பது நமது உடனடிக் கடமையாகிறது.

விட்டுப் போனவை: 1. சஞ்சய் தனது நூலுக்கு மகுடமாக ஏற்கும் எஸ்ரா பவுண்டின் எட்டாவது கேன்டோ:

குங் சொன்னான், ‘‘வாங் பொறுத்துக் கொள்ளக் கூடிய ஆட்சியைத் தந்தான். அவனது காலத்தில் அரசு நன்றாகக் காக்கப்பட்டிருந்தது.

எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் வரலாற்றாசிரியர்கள் தமது எழுத்துக்களில் நிரப்பப்படாத பகுதிகளை விட்டுச் சென்றனர். நான் என்ன சொல்கிறேன் என்றால் அவர்களுக்குத் தெரியாதவற்றை நிரப்பாமல் சென்றனர். ஆனால், அந்தக் காலம் இப்போது மறைந்து வருவதாகத் தோன்றுகிறது. ஒரு நாள் வரலாற்றாசிரியர்கள் தமது எழுத்துக்களில் நிரப்பப்படாத பகுதிகளை விட்டுச் சென்றனர். ஆனால் அந்தக் காலம் இப்போது மறைந்து வருவதாகத் தோன்றுகிறது.’’

2. சஞ்சய் சுப்ரமண்யத்தின் இரு நூற்கள் Explonations in connected History (i) Tagus to the Ganger (ii) Mughals and .…. ஆக்ஸ்போர்டு வெளியீடுகளாகக் கிடைக்கின்றன.றீ

Posted in A Marx, adultery, Analysis, Anthropology, Cultural, Culture, Genetic, Kumudam, Kumudham, Marx, Op-Ed, Periphery, Sanjai, Sanjay, Sociology, Subramanian, Theeranadhi, Theeranadhy, Theeranathi, Theeranathy, World System Theory | Leave a Comment »

Madurai Vaidyanatha Iyer – Temple entry anniversary of dalits

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

வரலாறு படைத்த ஆலயப் பிரவேசம்!

வி.கே. ஸ்தாணுநாதன்

நம் நாட்டின் வரலாற்றில் – குறிப்பாக, தமிழக வரலாற்று ஏடுகளில் ஜூலை மாதம் 8-ஆம் நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரபல காந்தியவாதியான அமரர் எ. வைத்தியநாத அய்யர் துணிவுடன் ஹரிஜன சகோதரர்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த ஆலயப் பிரவேசம் காலம்காலமாக ஹரிஜன சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமையை வழங்க வழிவகுத்தது.

தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.

பல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாள்களில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. 1937ம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.

உயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார். 1939-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

அய்யரின் துணிச்சலான இச் செயலைப் பாராட்டிய அண்ணல் காந்தியடிகள் 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:

“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.’

ஆலயப் பிரவேசத்திற்குப் பின் சிலர் ஏற்படுத்திய தடங்கல்கள் காரணமாக அன்றாட ஆலய வழிபாடு நடைபெறுவதில் சில சிக்கல்கள் தோன்றின. இவற்றைத் தீர்த்து அன்றாட வழிபாடு சுமுகமாக நடைபெற அய்யர் அயராது பாடுபட வேண்டி இருந்தது. ஆலயப் பிரவேசம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அன்றைய முதல்வராக விளங்கிய ராஜாஜி விரைந்து செயல்பட்டு ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தை ஆளுநர் மூலம் பிறப்பிக்க வழிவகுத்தார். இதன் காரணமாக வழக்கு தள்ளுபடி ஆனது. பின்னர் இந்த அவசரச் சட்டம் முறையான சட்டமாக சட்டசபையில் நிறைவேறியது.

வைத்தியநாத அய்யர் துணிவுடன் செய்த ஆலயப் பிரவேசமே பின்னர் சட்டமாக உருவெடுத்து ஹரிஜனங்கள் ஆண்டவனின் சன்னதிக்குத் தங்கு தடையின்றி செல்ல வழிவகுத்தது.

1939-ம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கு காங்கிரஸ் அமைச்சரவைகள் ஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதத்தில் ராஜிநாமா செய்தன. அய்யர் அன்று மட்டும் ஆலயப் பிரவேசத்தைத் துணிவுடன் செய்திராவிடில் ஹரிஜனங்கள், அனைவருடனும் சரிசமமாக ஆலயத்திற்குள் நுழைந்து ஆண்டவனை வழிபடுவது என்பது பல ஆண்டுகள் தள்ளியே நடந்திருக்கும். ஏனெனில் 1939க்கு பின்னர் பொதுமக்கள் கருத்தின் மூலம் உருவான அரசு மீண்டும் 1946-ம் ஆண்டுதான் பதவியேற்றது.

ஹரிஜன ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தால்தான் ஆலயங்களுக்குள் வழிபாடு செய்யச் செல்வது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். தாமும் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை வழிபட எண்ணிணார். எனினும் இரண்டாம் உலகப் போர், “வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போன்றவைகளால் அந்த எண்ணம் தள்ளிப்போயிற்று. 1946-ஆம் ஆண்டு சென்னையில் தக்கர் பாபா வித்யாலயா புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தபோது, இதற்காகவே மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 8-ஆம் நாள் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியின் முக்கியமான நாளாகும். இந்நாளில் அமரர் வைத்தியநாத அய்யருக்கும் அவருக்கு உறுதுணையாக விளங்கி இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் சிரம் தாழ்த்தி கரம் குவித்து அஞ்சலி செய்வோம்!

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தக்கர் பாபா வித்யாலயா, சென்னை.)

———————————————————————————————————

மீனாட்சி அம்மன் கோயிலில்- 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்


மதுரை, ஜூலை 8: ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைக்குப் போராடும் நேரத்தில் நமது நாட்டில் இருந்த சமூக அவலமான தீண்டாமையை எதிர்த்துப் போரிடும் உன்னதப் பணியில் முத்தாய்ப்பாக நடத்தப்பட்டதுதான் அரிஜன ஆலயப் பிரவேசம்.

காந்தியடிகளின் அறிவுரையை ஏற்று செயல்படுத்துவதில் மதுரையில் அவரின் மறுபதிப்பாகத் திகழ்ந்தவர் வைத்தியநாத ஐயர். இளம் வயது முதல் சாதிப் பாகுபாடுகளை வெறுத்தவர்.

கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்ற சமூகக் கொடுமையைப் போக்க அவரது தலைமையில் 8.7.1939-ம் தேதி காலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் நடக்கும் என அவர் அறிவித்தார்.

இதற்கு ஒருசாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம் என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து திட்டமிட்டபடி பூஜை பொருள்களுடன் அரிஜன சேவா சங்கத் தலைவர் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் சிலர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான ஆர்.எஸ்.நாயுடு அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதி சென்று வழிபட்டனர். இதையடுத்து கோயிலிலிருந்து வெளியே வந்து அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது என அறிவித்தனர்.

இந்த நிலையில், சட்டத்தை மீறி ஆலயப் பிரவேசம் செய்ததாக சிலர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, ஆளுநர் மூலம் ஓர் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு பிறப்பிக்கச் செய்து ஆலயப் பிரவேசத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக்கினார். இதனால் ஆலயப் பிரவேசம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஆலயப் பிரவேசம் நடந்து ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 8) 68 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வரலாறும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை.

Posted in Aiyangaar, Aiyankaar, Aiyer, Anniversary, Archakar, backward, Brahmin, Caste, Civil, Community, Dalit, Deity, Evils, Forward, Freedom, Gandhi, Gita, Harijan, Hinduism, Hindutva, HR, Independence, isolation, Iyangaar, Iyangar, Iyankaar, Iyer, Keeripatti, Madurai, Mahatma, Manu, Meenakshi, Oppression, Papparappatti, Pooja, Rajaji, Religion, Reservation, rights, SC, Society, ST, Temple, Tolerance, Untouchability, vaidhiyanatha aiyer, vaidhiyanatha iyer, vaidhyanatha aiyer, vaidhyanatha iyer, vaidiyanatha aiyer, vaidyanatha aiyer, vaidyanatha iyer, Vaithyanatha Aiyar, Veda, Vedas, Vedha, Worship | 2 Comments »

Desiya Murpokku Dravida Kazhagam & Vijaikanth – Biosketch

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தது ஏன்?- வெளிவராத `பிளாஷ்பேக்’ தகவல்கள்

நிருபர்கள் “நீங்கள் அரசியலுக்கு வரப்போகிறீர்களா?” என்று பரபரப்புக்காக விஜயகாந்த்திடம் 1996-ல் ஒரு கேள்வி கேட்டார்கள்.

“நான் ஏன் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும். காலம் அழைத்தால் வந்து விட்டு போகிறேன்” என்று கேசுவலாக பதில் சொன்னார் விஜயகாந்த்.

இதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக நிருபர்கள் இந்தக் கேள்வியை சுமார் 100 முறை கேட்டு விட்டார்கள்.

இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசியலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாகி விட்டது.

ஆறு கோடி ஜனங்களும், அனைத்துக் கட்சி தலைவர்களும், உளவுத் துறையும் தே.மு.தி.க. வளர்ச்சி மீது ஒரு கண் வைத்தபடியே இருக்கிறார்கள்.

விஜயகாந்த்தின் அரசியல் `என்ட்ரி’க்கும், அவரது `பிளாஷ் பேக்’ வாழ்விற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது.

விஜயகாந்த்தின் தந்தை அழகர் சாமிக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம்.

அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிகளுக்கு 2 மகன், 2 மகள்கள். முதலாமவர் விஜயலட்சுமி, அடுத்தவர் நாகராஜ், மூன்றாவது விஜயராஜ், அதற்கடுத்தவர் திருமலாதேவி.

மேற்கண்ட விஜயராஜிற்கு டைரக்டர் எம்.ஏ. காஜா வைத்த பெயர் தான் “விஜயகாந்த்”.

கடைக்குட்டி பெண்ணான திருமலாதேவி பிறந்த 20-வது நாளில் தாயார் ஆண்டாள் இறந்து விட, உற்றார் -உறவின ரின் கட்டாயத்தின் பேரில் அழகர்சாமிக்கு ருக்மணியம் மாள் என்பவருடன் 2-வது திரு மணம் நடந்தது. இவர்க ளுக்கு 7 குழந்தைகள்.

இவர்கள் அனைவருமே மதுரை மேலமாசி வீதியில் சவுராஷ்டிரா செக்கடி சந்தில் உள்ள ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்தார்கள்.

சிறு வயது விஜயகாந்த் மிகவும் சேஷ்டைக்காரர். எப்பொழுதும் தன்னைச்சுற்றி 10 பேருடன் உலா வரும் விஜய காந்த் படித்தது 10-ம் வகுப்பு வரை தான்.

இதையே அவர் மதுரை புனித ஜோசப் பள்ளி, தெப்பக் குளத்தில் உள்ள ஆர்.சி. ரோசரி சர்ச் பள்ளி, மதுரை ரெயில் நிலையம் அருகில் உள்ள “மெஜுரா காலேஜ் ஆப் ஸ்கூல்”, தேவ கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, நாடார் வித்யாசாலை உயர் நிலைப் பள்ளி, விக்கிரமசிங்க புரம் செயின்ட் மேரீஸ் பள்ளி ஆகிய 6 இடங்களில் படித்து கரை சேர்ந் திருக்கிறார்.

சிறிய `புரஜக்டர்’ ஒன்றை வீட்டில் வைத்துக் கொண்டு அக்கம், பக்கத்து சிறுவர்களிடம் `நாலணா’ டிக்கெட் வாங்கி `மகாதேவி’ படத்தை ஓட்டுவதில் தான் ஆர்வம் இருந்ததே தவிர விஜயகாந்த்திற்கு படிப்பில் துளியும் அக்கறை இல்லை.

பள்ளிக்கூடத்தை `கட்’ அடித்து விட்டு நண்பர்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர்.நடித்த உலகம் சுற்றும் வாலிபனை இரண்டே நாளில் ஐந்து முறை பார்த்திருக்கிறார்.

அப்பாவின் ரைஸ்மில்லில் அரிசி திருடி விற்று காசாக்கி வடை, பிஸ்கெட், புரோட்டா என்று விளாசியிருக்கிறார்.

செத்த பாம்பை வாத்தி யாரின் இருக்கையில் வைத்து அவரை `ஓ’ வென அலற வைத்திருக்கிறார்.

நள்ளிரவு தெருக்கூத்தை பார்க்கப் போய் நடனம் ஆடுபவர் மீது `நல்லா இருடா’ என்று முட்டை-தக்காளியை வீசியிருக்கிறார்.

இதற்கெல்லாம் விஜய காந்தின் முக்கிய கூட்டாளியாக இருந்தவர் இப்போதைய இப்ராகிம் ராவுத்தர் தான்! எந்தச் சேஷ்டை செய்தாலும் இருவரும் இணை பிரியாமல் செய்வது தான் வழக்கம்.

இப்ராகிம் ராவுத் தரின் வீடு மதுரை வெத்தலைப் பேட்டையில் இருந்தது. அவரது தந்தை வெத்தலை கமிஷன் மண்டி வைத்திருந்தார்.

இது பற்றி விஜயகாந்த் சொல்கிறார்.

“அப்பவெல்லாம் படிப்பு பத்தியோ, எதிர்காலம் பத்தியோ நாங்க சிந்திக்க மாட்டோம். எம்.ஜி.ஆர். படம் பார்க்கணும்ங்கிறதத் தவிர வேற எதுவும் தெரியாது. என் பள்ளி வாழ்க்கையில நான் இங்கிலீசையும், சயின்சையும் படிச்சதே இல்லை. நாம் தான் சரியா படிக்கலை.

படிச்சு முன்னேற விரும்பு ஏழை மாணவர்களுக்காவது உதவணும். அவங்க படிச்சு பட்டம் வாங்கினா….நானே படிச்சு வாங்குன மாதிரிங்கிற எண்ணத்தில தான் என்னால முடிஞ்ச அளவு படிப்புக்கு உதவுகிறேன்” என்கிறார் அவர்.

தாயில்லாத பிள்ளை என் பதால் விஜயகாந்த் செய்யும் இந்தச் சேஷ்டைகளை கண்டு கொள்ளாமலேயே வளர்த்து வந்தார் அழகர்சாமி.

இளம் வயது விஜயகாந்த் திற்கு இரண்டு முறை காதல் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போதெல்லாம் விஜய காந்த் கூட்டாளிகள் ஒன்றாகச் சந்திப்பது இப் போதைய தே.மு.தி.க. பொதுச் செயலாளரான ராமு வசந்த னின் வீடு இருக்கும் மதுரை மேல ஆவணி வீதியில் தான்!

இங்குள்ள சேனாஸ் பிலிம்ஸ் என்ற சினிமா கம்பெனி அருகே தான் அரட்டைக்கச்சேரி நடக்கும்.

இந்த தெருவில் உள்ள ஒரு வீட்டு ஜன்னலில் தற்செயலாக தெரிந்த ஒரு பெண்ணை `சைட்’ அடித்து, ஜாடை காட்டி, ஒருவரை ஒருவர் காதலிக் கவும் ஆரம்பித்தனர்.

இந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிந்து முடிவில் அந்தப் பெண்ணின் வீட்டார் வீட்டைக்காலி செய்து விட்டே போய் விட்டனர்.

இதன் பிறகு அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்து, அவருக்கு பின்னாடியே அலைந்து திரிந்து கடைசியில் “காதலிச்சு திருமணம் செஞ்சா என் தங்கச்சி வாழ்க்கை பாதிக்கும்” என்று அவள் டாட்டா காட்டி விட்டு போனது, விஜயகாந்த் சினிமா நட்சத்திரமான பிறகு அவளே தேடி வந்ததெல்லாம் ஒரு குறும்படக் கதை.

இப்படியெல்லாம் சேஷ்டை கள் செய்து கொண்டிருந்த விஜயகாந்த்தை “நீ படிச்சு, கிழிச்சது போதும் இனிமே ரைஸ் மில்லை கவனி” என்று அழகர்சாமி பிரம்பால் அடித்து பின்னி எடுத்த இந்த இடத்தில் “இடைவேளை” விட்டு, விஜயகாந் தின் அதிரடி ஆக்ஷன் இனி

தொடர்கிறது.விஜயகாந்த்தின் ரைஸ்மில் வாழ்க்கை காலை 6 மணிக்கு எழுந்து, இரவு 8 மணி வரை அரிசி விற்பது, விலை நிர்ணயம் செய்வது, மூட்டைகளை மாற்றுவது, நெல்லைக் கிண்டுவது, வெளியே சென்று பணம் வசூலிப்பது என வேலை `டைட்’ ஆகிவிட்டது. இதே சமயத் தில் இப்ராகிம் ராவுத்தரும் வெத்தலை கமிஷன் மண்டியை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

விஜயகாந்த்தை சமூக பார்வை பார்க்க வைத்தது இந்த ரைஸ்மில் தான்!

இங்கு வேலை பார்த்த பெண்களுக்கிடையே மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற வேறுபாடு இருப்பது விஜயகாந்த்திற்கு தெரிய வந்தது.

இதனைக் களைவதற்கு விஜயகாந்த் ஒரு யுக்தியை கையாண்டார். கீழ் ஜாதியினர் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரச் செய்து சாப்பிடலானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல் ஜாதி பெண்களிடம் சமாதானமாக பேசி அதுவரை தனித்தனியாக இருந்த தண்ணீர் பானையை ஒன்றாக்கினார். அனைவருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடலானார்கள்.

இதே கால கட்டத்தில் தான் சினிமா ரசிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் களமிறங் கியதும்!

மதுரை மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது விஜயகாந்த்தின் தந்தை காங்கிரஸ் கட்சியின் வேட்பா ளராக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.

விஜயகாந்த்தும், அவரது அண்ணன் நாகராஜும் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள் என்பதால் தந்தையை எதிர்த்து தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். சுவர்களில் எழுதுவது, கட்சி கொடியுடன் சைக்கிளில் வலம் வருவது, கலைக்குழுவுக்கு ஏற்பாடு செய்வது, மீட்டிங் நடத்தியது என கடைசியில் விஜயகாந்த்தின் அப்பா 100 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

இது பற்றி விஜயகாந்த் கூறும் போது “தேர்தல் முடிவு எங்க அணிக்கு வெற்றியாக இருந்தாலும் அப்பா தோத்ததும் என்னவோ போல்

இருந்தது.அடுத்த தேர்தல்ல அவருக்கு ஆதரவாக இறங்கி அப்பாவை ஜெயிக்க வைச்சுட்டோம்” என்கிறார்.

விஜயகாந்த் சினிமாவுக்கு வருவதற்கும் `ஆட்டுக்கார அலமேலு’ படத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

விஜயகாந்த் கோஷ்டியினர் அரட்டை அடிக்கும் இடத்திற்கு அருகே உள்ள சேனாஸ் பிலிம்ஸ் உரிமையாளர் முகம்மது மர்சூக் `ஆட்டுக்கார அலமேலு’ படத்தை வாங்கியிருந்தார். அவருக்கு போட்டியாக அதே படம் தெலுங்கில் வெளிவந்த “பொட்டேல் பொன்னம்மா”ங்கிற படத்தை மற்றொரு வினியோகஸ்தர் ரிலீஸ் செய்திருந்தார்.

இதனால் ஆட்டுக்கார அலமேலு படத்தை வெற்றி பெறச் செய்ய விஜயகாந்த்திடம் யோசனை கேட்டார் முகம்மது மர்சூக்.

“இந்த இரண்டு படத்திலேயும் நடிச்சது ஒரே ஆடு தான். அந்த ஆடு சோழவந்தான் பக்கத்துல இருக்கிற மட்டப்பாறையில தான் இருக்கு. ஆட்டுக்காரன் நம்ம நண்பன் தான். அந்த ஆட்டை அழைத்து வந்து நம்ம படம் ஓடுற தியேட்டர்களில் நிக்க வைச்சு இடைவேளை சமயத்துல சாகசங்கள் செய்ய வைக்கலாம்” என்று ஆலோசனை சொன்னார் விஜயகாந்த்.

அதன்படியே விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் அந்த ஆட்டை பிடித்து வந்து டேப் ரெக்கார்டரை `ஆப்’ பண்றது, `ஆன்’ பண்றது என்று செய்து காட்டி மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தார்கள்.

இதனால் விஜயகாந்த்தை மிகவும் பிடித்துப் போன முகமதுமர்சூக் டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகம் செய்து வைத்து “இவன் என் தம்பி மாதிரி. உங்க படத்துல ஒரு நல்ல ரோல் தரணும்” என்று கேட்டுக் கொண்டார்.

101 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு “என் கேள்விக்கு என்ன பதில்ப” படத்தில் வில்லனாக 3 நாள் மட்டுமே நடித்தார். உள்பிரச்சினைகளால் விஜயகாந்த் மாற்றம் செய்யப்பட்டு சிலோன் மனோகர் நடித்து அந்தப்படம் வெளிவந்தது.

இதன் பிறகு சினிமாவில் நடிக்க விஜயகாந்த் நீண்ட நாள் போராட்டம் நடத்தியிருக்கிறார். இதே கட்டத்தில் தான் சத்யராஜும் பட வாய்ப்புகள்தேடி அலைந்தது. எனவேசினிமாவுக்கு முன்பே இருவரும் அலைந்து திரிந்ததில் நன்றாக அறிமுகம் ஆனவர்கள்.

முகமது மர்சூக் மீண்டும் விஜயாந்த்தை டைரக்டர் எம்.ஏ.காஜாவிடம் அறிமுகம் செய்து வைத்து `இனிக்கும் இளமை’ படத்தில் நடிக்க வைத்தார். இதன் பிறகு தூரத்து இடி முழக்கத்தில் கதாநாயகன் ஆனார்.

இருந்த போதிலும் தொடர்ந்து வந்த பல படங்கள் தோல்விக்குள்ளாகி விஜயகாந்த் முடங்கிப்போனார்.

ஒரு சாப்பாடு வாங்கி இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்த்தும் சாப்பிட்டது மட்டுமல்ல, பல நாட்கள் வெறும் தண்ணீரைக் குடித்தே பொழுதைக் கழித்ததும் இந்த கால கட்டத்தில் தான்.

18 படங்கள் தோல்வியாகி ஏராளமான வினியோகஸ்தர்கள் “விஜயகாந்த்தை வைத்து படம் எடுத்தால் ஓடாது” என்று முன்னுதாரணங்கள் சொன்ன போதிலும், வடசுரான் கம்பைன்ஸ் பட அதிபர் சிதம்பரம் துணிச்சலுடன் தயாரித்து, விஜயகாந்த்த நடித்து, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” படம் 100 நாட்களையும் தாண்டி ஓடியது. விஜயகாந்த் பக்கம் அனைவரின் பார்வையும்

திரும்பியது.திரைப்படக் கல்லூரி மாணவர்களான ஆபாவாணனும், அரவிந்தராஜும் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய `ஊமை விழிகள்’ படம் ஒரு பிரமாண்ட திருப்பு முனை. தொடர்ந்து செந்தூரப்பூவே, கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, மாநகரக்காவல், சின்னக் கவுண்டர் என அனைத்துமே 100 நாள் படமாக அமைந்தன.

சுந்தர்ராஜனின் திருப்பு முனை இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாளை தொடர்ந்து அம்மன் கோயில் கிழக்காலே, பூந்தோட்டக்காவல்காரன், நினைவே ஒரு சங்கீதம், வானத்தை போல ஆகிய படங்கள் பெண் ரசிகர்களையும் கவர்ந்தன.

வல்லரசு, ரமணா படங்கள் மிகப்பெரிய ஆக்ஷன் படங்களாக அமைந்தன. விஜயகாந்த் சொல்கிறார்.

என் வாழ்க்கையில் நிறைய வெற்றி, தோல்விகளை சந்தித்து விட்டேன். என் ரசிகர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவங்க தான். ஆனா கடுமையான உழைப்பாளிகள். அவங்களுக்கு வாழ்க்கை மேல ஒரு நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் வகையிலான கதைகளைத்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். லட்சக்கணக்கான எனது ரசிகர்கள் மூலமா நாட்டுக்கு நல்லது செய்ய முடியும் என்கிற உத்வேகம் தான் என்னைத் தானாகவே அரசியலுக்கு இழுத்து வந்து விட்டது. எனக்கு தெரிந்தது கடின உழைப்பு ஒன்று மட்டும் தான்” என்கிறார்.

“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமாப”-ஊமை விழி கள்.

`ஆராய்ச்சி செய்து பார்த்த விஜயகாந்த்’

விஜயகாந்த்தின் விக்ரம சிங்கபுரம் செயின்ட் மேரிஸ் பள்ளி வகுப்பு டீச்சரான “ஸ்டான்லிஜாண்” சொல் கிறார்.

விஜயராஜா படு சேஷ் டைக்கார மாணவன். சினிமாவில் அவன்செய்யும் காமெடி மாரியே பள்ளி வாழ்க்கையிலும் செய்திருக் கிறான்.

ஒரு முறை நாங்கள் எல்லாம் உலகத்தமிழ் மாநாட்டை பார்ப்பதற்காக சென்னைக்கு `டூர்’ புறப்பட்டோம். ரெயில் பயணம் செய்த போது விஜய ராஜா யாருக்கும் தெரியாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி விட்டான்.டி.டி.ஆர். இத னைக் கண்டு பிடித்து அவனி டமிருந்து ரூ. 50 அபராதமாக வசூலித்தார்.

நான் “ஏண்டா இப்படி செய்தாய்” என்று கேட்டேன்.

“நீங்க தானே சார் எதையும் ஆராய்ஞ்சு பார்த்து உண்மைய தெரிஞ்சுக்கிடணும்”னீங்க என்றான். கோபம் மறந்து அனைவரும் சிரித்து விட்டோம் என்றார்.

—————————————————————————————————————————————————-

தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்தின் அரசி யல் பிரவேசம் என்பது திடீரென்று ஏற்பட்ட விபத்தல்ல. மிகவும் கவனமாக ஆரம்பம் முதலே திட்டமிட்டு நகர்த்தப்பட்ட விஷயம். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாகத் தனது ரசிகர் மன்றங்களை அவர் அமைத்ததே, வருங்காலத்தில் தனது ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சிக் கிளைகளாகச் செயல்பட வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்ததால்தான். அதுவே இப்போது அவரது அரசியல் பிரவேசத்துக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருக்கிறது.

அரசியலுக்கு எந்தத் தமிழ் நடிகருக்கும் இல்லாத பெருமை நடிகர் விஜய காந்துக்கு உண்டு. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி கணேசன், ஜெயல லிதா என அனைவருமே ஏதாவது பலமான அரசியல் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுதான் வளர முடிந்தது. தனக்கென ஓர் அமைப்பை ஏற்ப டுத்தி, அந்த அமைப்பை அரசியல் கட்சியாக்கி, எந்தவோர் அரசியல் கட்சி யின் நிழலும் தன்மீது படாமல், தேர்தலில் நின்று வெற்றியும் பெற்ற முதல் தமிழ் நடிகர் – அரசியல்வாதி விஜயகாந்த் மட்டுமே!

சந்தித்த முதல் தேர்தலிலேயே எட்டு சதவிகித வாக்குகள். தனக்கு சம்பந் தமே இல்லாத விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. தமிழகத் தில் இருக்கும் பஞ்சாயத்து வார்டுகள் வரை பரவிக் கிடக்கும் பலமான கட்சிக் கிளைகள். திமுக மற்றும் அதிமுகவுக்கு ஒரு மாற்று ஏற்படாதா என்று ஏங்கும் வாக்காளர்களைக் கவரும் வகையில் தனித்துப் போராடும் துணிவு. இவை தான் நடிகர் – அரசியல்வாதி விஜயகாந்தின் பலங்கள்.

தத்துவ ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தன்னைக் கட்டிப் போட்டுக் கொள்ளாத, அதேசமயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விழையும் விஜயகாந்தின் வேகம் அவரது சொற்களில் தெரிகிறது. தனித்துப் போராடி வெற்றிபெற முடி யும் என்ற தன்னம்பிக்கை, அவரது செயல்பாடுகளில் காணப்படுகிறது. நடிக ராகவோ, அரசியல் தலைவராகவோ அல்லாமல், மிகச் சாதாரணமாக அவர் பேட்டி அளிக்கும் பாணியில் அவரது தனித்தன்மை வெளிப்படுகிறது.

—————————————————————————————————————————————————-

நீங்கள் நடிகராக இருந்ததற்கும் இப்போது அரசியல் தலைவ ராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக் கிறீர்கள்?

சினிமா நிச்சயமாக எனக்குள் இருக்கும் அந்த நியாயமான சமூக சிந்தனைக்கு வடிகாலாக அமைந்தது. பல சமூகப் பிரச் னைகளை, சராசரி மனிதனின் இடர்பாடுகளைக் கதாபாத்தி ரங்கள் மூலம் என்னால் மக்கள் மன்றத்துக்குப் படம்பிடித்துக் காட்ட முடிந்தது. ஆனால், ஓர் அரசியல்வாதியாக இப்போது எந்தக் கதாபாத்திரத்திற்குள்ளும் ஒளிந்து கொள்ளாமல், நான் நானாகவே பொதுமேடையில் சமுதாயப் பிரச்னைகளை எழுப்ப முடிகிறது.
அவ்வளவுதான்.

நீங்கள் நடிகராக இருந்து பார்த்த அரசியலுக்கும் அரசியல்வாதியாகப் பார்க் கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம் தெரிகிறது?

நான் அரசியல்வாதியாக மாறிய பிறகு தெரிந்து கொண்ட முதல் விஷயம், ஜன நாயக நாட்டின் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூட முடியவில்லை என்பதே.

திருவள்ளுவரைப் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும், அரசியல் நாகரிகம் பற்றி யும் அடிக்கொருதரம் பேசும் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில், மாற்றுக் கட்சி யினர் பேனர் வைப்பதற்குக் கூட பிரச்னைகள் தரப்படுகின்றன என்றால் எந்த அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங் கள்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இணையாகத் தமிழகத்தில் போஸ்டர்களும் கொடிக்கம்பங்களும் அமைத்திருக்கும் ஒரே கட்சி தேமுதிகதான் போலிருக்கிறதே!

ஐம்பது வருடக் கட்சியும், முப்பத்தைந்து வருடக் கட்சியும் இப் படியொரு கலாசாரத்தை நிலைநிறுத்தி விட்டார்கள். அதை என் னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். இதை மாற்ற வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்தக் கட்சிகளின் மீதிருக்கும் பொதுமக்களின் வெறுப்பு, இளைஞர்க ளின் கோபம் தேமுதிகவுக்கு ஆதரவாகத் திரும்பி இருக்கிறது. நீங் கள் பார்க்கும் ஒவ்வொரு தேமுதிக கொடியும், தேமுதிக பேனரும் திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வைத்த ஒன்று என்றுதான் கருத வேண்டும். அதனால்தான் அந்த இளைஞர்களின் ஆர்வத்தை நான் குலைக்க முற்படவில்லை.

தனியாக நின்று நீங்கள் பெறும் இந்த வாக்குகள் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை படைத்தவை அல்லவே என்பதுதான் கேள்வி.

தொடங்கிய ஒரு வருடத்தில் தேர்தலைச் சந்தித்து இவ்வளவு வாக்குகள் பெற முடியும் என்றால், தனியாகவே போட்டியிட்டு மக் களின் ஏகோபித்த ஆதரவை நாங்கள் நிச்சயம் பெற முடியும். தாக் குப் பிடிக்கும் தைரியமும், பொறுமையும் எங்களுக்கு இருக்கிறது.
எங்களது இளைஞர் படைக்கு இருக்கிறது. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக் கும் கட்சி என்பதால் நிச்சயம் தனித்து நின்று எங்களால் வெற்றி பெற முடியும்.

நமது நாடாளுமன்ற ஜனநாயக முறையில், மற்றவர்கள் கூட்டணி அமைத் துப் போட்டியிடும்போது, நீங்கள் தனித்து நின்றால், வெற்றியடைய முடியாது என்று மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் இருந்து விடுவார்களே?

தோற்கும் கட்சிக்கு எப்படி வாக்களிப்பார்கள்? இவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று மக் கள் நினைத்தால், அப்போது கூட்டணியா, தனியாகப் போட்டியா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் எனும்போது, அவர் கள் எங்களைத் தேர்ந்தெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதனால் நாங்கள் தனியாக நிற்பதைத்தான் விரும்புகிறோம்.

ஒத்த கருத்துடைய சக்திகளை நீங்கள் ஏன் அணி திரட்டக் கூடாது?

ஒத்த கருத்து கொள்ளை அடிப்பதில்தான் இருக்கிறது. ஆட்சியையும் அதிகாரத் தையும் கைபற்றித் தங்கள் உற்றார் உறவினர்களைப் பலப்படுத்திக் கொள்வதில் ஒத்த கருத்து இருக்கிறது. தேர்தலில் இடங்களைப் பகிர்ந்து கொண்டு, வெற்றி பெறுவதற்கும், ஆட்சி அமைத்து மக்களின் வரிப் பணத்தில் தங்களைப் பலப்படுத் திக் கொள்ளவும் கூட்டணி அமைவதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடி யும்?

திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளின் ஊழலையும், அராஜகத்தையும், மக்கள் விரோதப் போக்கையையும் எதிர்க்கும் தேமுதிக, அந்தக் கட்சிகளுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கூட்டணி அமைப்பார்கள். மக்கள் தேமுதிகவை இந்தக் கூட்டணிகளுக்கு மாற்றாக நினைக் கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்க விரும்புகிறேன்.

தேமுதிகவின் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைதான் என்ன?

பொதுவுடைமை, முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். அதுவும், விரைவில் வந்தடைய வேண்டும். அதற்கு, அந்தந் தப் பிரச்னைக்குத் தகுந்தவாறு, எது பயன்படுமோ அந்த வழியைப் பின்பற்றுவது தான் சரி என்று நினைப்பவன் நான். இதுதான் கொள்கை என்று கண்களுக்குக் கடி வாளம் போட்டுக் கொள்ள நான் விரும்பவில்லை. பிரச்னையைப் பொருத்துத் தீர்வு அமைய வேண்டும். அதுதான், இந்தியாவுக்கும் பொருந்தும் என்பது எனது கருத்து.

அணுசக்தி ஒப்பந்தம் விஷயத்தில் உங்களது நிலைப்பாடு, மத்திய அரசுக்கு சாதகமாக இருப்பதுபோலத் தோன்றுகிறதே?

நான் முன்பு சொன்னதுபோல, தமிழகத்தின் மின் தேவைக்கு இப்போதைக்கு அணுசக்தியை விட்டால் வழியில்லை என்கிற நிலைமை. நீர் மின்சக்திக்கும், அனல் மின்சக்திக்கும் அதிக வாய்ப்பில்லை என்பதால், தமிழகம் அணுமின்சக்தி மூலம்தான் தனது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்தியாவுக்கு அணுசக்தி தேவையா என்று எனக்குத் தெரியாது. தமிழகத்துக்குத் தேவை. அத னால் அதை நான் ஆதரிக்கிறேன்.

சில விஷயங்களில் மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கிறீர்கள். சிலவற் றில் எதிர்க்கிறீர்கள். அதிமுகவை எதிர்க்கிறீர்களா, ஆதரிக்கிறீர்களா என்று தெரி யவில்லை. ஏனிந்தத் தெளிவற்ற தன்மை?

மனதுக்கு எது நியாயமோ அதை நான் பேசுகிறேன். நண்பன் என்பதற்காகக் குற்றத்தை மறைக்கவும், எதிரி என்பதற்காக நல்லதைப் பாராட்டாமல் இருக்கவும் எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி அதிமுக தலைவி ஜெயலலிதா என்னவெல் லாமோ சொன்னார்கள். அதற்காக, அவர்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரும்போது நான் பேசாமல் இருப்பது எப்படி நியாயமாகும்? அத னால் எதிர்த்தேன்.

முதல்வரின் மகள் செல்வியின் வீடு தாக்கப்பட்டபோது அதைக் கண்டித்தேன். என்னைப் பொருத்தவரை, மனசாட்சிதான் எனது கொள்கை, வழிகாட்டி எல்லாமே!

நீங்கள் திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை எதிர்ப்பதில்லை என்று தோன்றுகிறதே?

வெறும் தோற்றம்தான். இப்போது, அதிமுக ஆட்சியில் இல்லை. திமுகதான் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியாளர்களின் குறையைத்தானே நான் சுட்டிக்காட்ட முடியும்? எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதில் என்ன பயன்?

அதிமுக செய்யாத எதையும் திமுக செய்துவிடவில்லை என்பதால், திமு கவை மட்டும் நீங்கள் குறை சொல்வது எப்படி நியாயம்?

அதற்குத்தான் மக்கள் அதிமுகவைத் தண்டித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி விட்டார்களே? எதற்கெடுத்தாலும், அவர்கள் ஆட்சியில் நடந்ததே என்று சொல்வதற்கு இவர்கள் ஏன் ஆட்சியில் அமர வேண்டும்? ஐம்பது வருட அரசியல் அனுபவம் இருந்து என்ன பிரயோஜனம்? அதிமுக ஆட்சியில் உள் ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை என்று குறைகூறிய திமுக என்ன செய்திருக்க வேண்டும்? முறையாக நகராட்சித் தேர்தலை நடத்தினார்களா? மக் களை வாக்களிக்க அனுமதித்தார்களா?

ஜெயலலிதாவையும், அதிமுகவையும் குற்றம் சொல்ல கலைஞருக்கும் திமுகவுக்கும் அருகதை கிடையாது. மக்களின் பார்வையில் இரண்டுமே ஒன்றுதான்.

இந்த அரசியல் கலாசாரத்தைக் குறுகிய காலகட்டத்தில் மாற்றிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?

அதற்காக, மாற்றாமல் விட்டுவிடுவதா? இதுதான் தலையெழுத்து என்று சகித் துக் கொள்வதா? படித்தவர்கள் இப்படிப் பேசலாமா? சமுதாயம் தடம்புரள்வதை நாம் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பது சரியா? அதனால்தான், தேமுதிகவை மக்கள் ஆதரிக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றாகக் கருதுகிறார்கள்.

மாற்று, மாற்று என்று சொல்கிறீர்கள். ஆனால், கரை வேட்டி கட்டுவதிலி ருந்து, உங்களை “கேப்டன்’ என்று அழைப்பது வரை, திமுக – அதிமுக கலாசா ரத்தைத்தான் தேமுதிக பின்பற்றுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி உங்க ளால் ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரத்தை இங்கே கொண்டு வந்துவிட முடி யும்?

கேப்டன் என்று என்னை அழைக்க வேண்டும் என்று நான் சொல்லவுமில்லை, வற்புறுத்தவுமில்லை. அவர்கள் என்மீது இருக்கும் அன்பாலும், மரியாதையாலும் அப்படி அழைக்கும்போது அதை நான் எப்படி தடுக்க முடியும்? கேப்டன் என் றால் என்ன அர்த்தம்? தலைமை தாங்கி நடத்துபவர் என்று பொருள். கட்சியின் தலைவனான என்னைத் “தலைவா’ என்று அழைப்பதற்குப் பதிலாகக் “கேப்டன்’ என்று அழைக்கிறார்கள். பத்திரிகை ஆசிரியரான உங்களை உங்களது உதவி ஆசி ரியர்களும், நிருபர்களும் எப்படிப் பெயரைச் சொல்லி அழைப்பதில்லையோ, அதுபோலத்தான் இதுவும்.

கேப்டன் என்று அழைப்பது சரி; ஆனால், அந்தக் கட்சிகளின் செயல்பாடுக ளுக்கும் தேமுதிகவின் செயல்பாடுகளுக்கும் வித்தியாசமே இல்லையே?

ஏன் இல்லை? நாங்கள் அவர்களைப் போல அராஜகக் கும்பலல்ல. ஊழல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவர்களல்ல. மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற ஒரே ஒரு குறிக்கோளுடன் அரசியலுக்கு வந்தவர்கள். இது வித்தியாசமில்லையா? கருணாநிதியும் சரி, எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இப்படிச் சொல் லித்தான் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால், ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர் கள் மாறிவிட்டார்கள்.

நீங்கள் மட்டும் மாற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?

தயவுசெய்து இந்த வரிசையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைச் சேர்க்காதீர் கள். அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்றுவரை அவர்தான் முதல்வராக இருந் திருப்பார். தேமுதிகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பதற்கு முக்கியமான கார ணம், அவரைப் போல தங்களது உணர்வுகளைப் புரிந்தவனாக நானும் இருப் பேன் என்று தமிழக மக்கள் நம்புவதால்தான். இவர்களிடம் ஆட்சியைக் கொடுத் துப் பார்த்துவிட்டு நாம் ஏமாந்தோம். என்னிடம் ஆட்சியைத் தந்தபிறகு நான் மாறுகிறேனா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமே தவிர இப்போதே நீங் கள் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்?

சொல்லுங்கள், ஆட்சியில் அமர்ந்தால் உங்களால் என்னதான் செய்துவிட முடியும்? லஞ்சத்தை ஒழித்துவிட முடியுமா, வறுமையைப் போக்கிவிட முடி யுமா?

முடியும். ஏன் முடியாது? இவர்கள் ஒரு தொழிற்சாலை கொண்டு வரும்போதே, அதில் தங்களது குடும்பத்துக்கு எத்தனை ஷேர் என்று கணக்குப் பார்க்கிறார்கள். ஒரு திட்டம் போடும்போது, அதில் தங்க ளுக்கு எவ்வளவு பங்கு என்று கணக்குப் போடுகிறார்கள். நமது இந் தியக் குடிமகனின் தேவைகள் ஏசி அறையும், மோட்டார் வாகான மும் அல்ல. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், செய்யத் தொழில், ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படை வசதிகள்தான். அதைக்கூட நம்மால் செய்து தர முடியா மல் போனதற்குக் காரணம், நமது ஆட்சியாளர்கள் அதில் அக்கறை செலுத்தாததுதான். எங்களிடம் ஒருமுறை ஆட்சியை ஒப்படைத்துப் பாருங்கள். அதற்குப் பிறகு இந்த சுயநலக் கும்பல்கள் அரசியலை விட்டே ஒதுங்கி விடுவார்கள்.

வெளியில் இருந்து பேசுவது எளிது. சினிமா வசனமல்ல, நிர்வா கம் என்பது. திறமையான நிர்வாகிகளான கருணாநிதியாலும், ஜெயலலிதாவாலும் முடியாததை உங்களால் செய்ய முடியும் என்று எப்படி நம்புவது?

1967-ல் முதல்வர் கலைஞர் அமைச்சரானபோதும், 1991-ல் அதி முக தலைவி ஜெயலலிதா முதல்வரானபோதும் அவர்களுக்கு அனு பவம் இருந்ததா என்ன? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என் கிற நல்லெண்ணம் இருந்தால் நிச்சயமாக நல்லது செய்ய முடியும். அதைக் காமரா ஜரும், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் செய்து காட்டினார்கள். என்னாலும் செய்து காட்ட முடியும்.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி விட்டது என்று முதல்வர் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?

“நமக்கு நாமே’ என்று திட்டமிட்டுச் செயல்படும் இந்த ஆட்சியைப் பற்றி மக் கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, முதல்வர் கலைஞர் என்ன சொல்கிறார் என்பதல்ல முக்கியம். அவரே அவருக்கு நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் கொடுத்துக் கொள்வது கேலிக்கூத்தாகத்தான் எனக்குத் தெரிகிறது.

உருப்படியாக இந்த அரசு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை. இரண்டு ரூபாய் அரிசி என்று சொல்லி, அவர்களது கட்சிக்காரர்கள் வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்தி சம்பாதிக்க வழிகோலிய தும், இலவச தொலைக்காட்சி என்கிற பெயரில், கட்சி உறுப்பினர்க….

Posted in ADMK, Biosketch, DMDK, DMK, Faces, Madurai, MGR, people, Politics, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | 2 Comments »

North vs South India – Regional development: Growth Indices & Indicators

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

பலே தென்னிந்தியா!

“”வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்றது அந்தக் காலம். “”வடக்கு வாடுகிறது, தெற்கு ஓடுகிறது” என்பதே இந்தக் காலம்.

இந்தியத் தொழிலகங்களின் இணையம் (சி.ஐ.ஐ.) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் காணப்படும் பொருளாதார, சமூக அளவீடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் கல்வி, வருமானம், நபர்வாரி மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பது புலனாகிறது. அத்துடன் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாநிலங்களில், வட இந்திய மாநிலங்களைவிடக் குறைவாக இருக்கிறது.

கல்வி, சுகாதாரம், தொழில், விவசாயம் ஆகியவற்றில் பாரம்பரியமாகவே தென் மாநிலங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து வருகின்றன. அதிலும் அரசு நிர்வாகம் என்பது தென் மாநிலங்களில் வட இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகவே இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத் தொழில்களில் அடுத்த தலைமுறைத் தொழில்களை ஊக்குவிக்கவும், சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற இரண்டாவது நிலை நகரங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்லவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வேளாண் தொழிலிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களிலும் முதலீட்டை ஊக்குவிக்க ஆந்திரம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகமும் கேரளமும் தங்கள் மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள தொழில்களை வலுப்படுத்துவதுடன் சுகாதாரம் சார்ந்த சுற்றுலாவை வலுப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. புதுச்சேரியும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சிறு தொழில்களை வளப்படுத்தவும் முதலீடுகளுக்கு ஊக்குவிப்பை அளிக்கிறது.

மோட்டார்வாகனத் தொழிற்சாலைகள், கணினிசார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தல்-தின்பண்ட தயாரிப்பு ஆலைகள், மருந்து-மாத்திரை தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கு ஈர்த்துவிட வேண்டும் என்ற ஆரோக்கியமான போட்டி தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிடையே தீவிரம் அடைந்திருக்கிறது.

இதையொட்டியே விமான நிலைய விரிவாக்கம், துறைமுக மேம்பாடு, மேம்பாலங்கள், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகள், புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கென்று பெற இவை போட்டிபோடுகின்றன.

மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப்-ஹரியாணா-புதுதில்லி ஆகிய பாரம்பரியமான வளர்ச்சிப் பிரதேசங்களும் தொழில் முதலீட்டுக்கான பந்தயத்தில் பின்தங்க விரும்பாமல் அந்நிய நேரடி முதலீட்டையும் உள்நாட்டு முதலீடுகளையும் சலுகைகளையும், வரிவிலக்குகளையும் அளித்து ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) அதன் தென்னிந்தியக் கிளை மூலம், தென்னிந்தியாவிலேயே இதுவரை தொழில் வளர்ச்சியில் அதிகம் வளர்ச்சி காணாத பகுதிகளுக்கு முக்கியத்துவம் தர தனித்திட்டம் வகுத்து வருகிறது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், வடக்கு கேரளம், ஆந்திரத்தின் அனந்தப்பூர்-சித்தூர்-கடப்பை மண்டலம், கர்நாடகத்தின் வடக்குப் பகுதி ஆகியவற்றுக்கு ஏற்ற தொழில்பிரிவுகளையும் முதலீட்டு வசதிகளையும் அடையாளம் காணும் பணியைத் தென் மண்டல இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தொடங்கியிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள் மட்டும் அல்லாமல், சம்பந்தப்பட்ட பகுதியின் தொழில்-வர்த்தக சபைகளும், தன்னார்வக் குழுக்களும் உதவிக்கரம் நீட்டினால் தொழில்வளம் என்பது சமச்சீராகப் பரவி வளத்தை ஏற்படுத்தும்.

எப்போதும் இல்லாத வகையில் தென் மாநிலங்களுக்கு அரசியல் ரீதியாகவும் இப்போது அதிக முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் வரலாறு நம்மை வாழ்த்தும்.

Posted in Agriculture, Auto, Commerce, Compensation, Consumer, Customer, Development, Economy, Econpmy, Education, Employment, family, Finance, GDP, Globalization, Govt, Growth, Income, Index, Indicators, Industry, Infrtastructure, Jobs, Malls, Motor, North, Power, Ranks, Region, Roads, South, States, Statistics, Statz, Tour, Tourism, Tourist, Transport, Zones | Leave a Comment »

Waste Management – Power generation from Garbage

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

நகர்ப்புற திடக்கழிவுகளிலிருந்து எரிசக்தி!

என். விட்டல்

அரசியல்வாதிகளுக்கும் காந்தியவாதிகளுக்கும் கிராமப்புறங்கள் புனிதமானவை. கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று உணர்ந்ததால், இந்தியாவின் எதிர்காலத்தையே கிராம ராஜ்யத்தின் வலுவோடு வளப்படுத்த காந்திஜி கனவுகண்டார்.

பெரும்பாலான வாக்காளர்கள் இன்னமும் கிராமங்களில்தான் வாழ்கின்றனர் என்பதால் நமது அரசியல்வாதிகளுக்கும் கிராமப்புறம் புனிதமானதாகத் திகழ்கிறது.

எது எப்படியிருந்தாலும் இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. நாளுக்குநாள் நகர்மயமாதல் அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு நகரங்களில்தான் என்பதால் நம் நாட்டின் 40 சதவிகித மக்கள் நகரங்களில்தான் இப்போது வசிக்கின்றனர். எல்லா ஊர்களிலும் பெரு நகரங்களிலும் சேரிப்பகுதிகள் வளர்ந்து கொண்டே வருவது இதற்கு நல்ல ஆதாரம்.

நகர்ப்புற வசதிகளைக் கிராமங்களிலேயே ஏற்படுத்தினால், நகர்ப்புறமயத்தைத் தடுக்கலாம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் பி.வி. இந்திரேசனும் எப்போதிருந்தோ கூறி வருகின்றனர். இருந்தாலும், இந்தியா மேலும் மேலும் நகர்மயமாவதைத் தடுக்க முடியாது. நகர்ப்புறப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றைத் திறமையாக, ஒழுங்காக நிர்வகிப்பது எப்படி என்று ஆலோசிப்பதே இப்போதைய தேவை.

நகரப்பகுதிகளுக்கு மிகவும் சவாலான பணியாக இருப்பது, குப்பைகளை எப்படி அகற்றுவது அல்லது பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதுதான். நகரங்களில் சேரும் குப்பைகளின் அளவும், தரமும் நகரவளர்ச்சியோடு நேரடியாகத் தொடர்பு உடையது என்பது வேடிக்கையானது! இந்தியாவில் நகர்ப்புறங்களில் ஒரு நாளில் ஒரு நபருக்கு 400 கிராம் வீதம் குப்பைகள் சேருவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் நபர் வாரி குப்பை அளவு தலா ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை இருக்கிறது. இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவாகும்.

இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் வீதம் குப்பை சேருகிறது. இதில் பெரிய நகரங்களின் பங்கு 60 சதவிகிதத்துக்கும் மேல். அதாவது 40 சதவிகித மக்கள்தொகை 60 சதவிகித குப்பைகளைக் கொட்டுகின்றனர்.

குப்பைகளை அகற்றுவதும், அவற்றைப் பயனுள்ளதாக மாற்றுவதும் நகர நிர்வாகங்களுக்குச் சவால் விடும் வேலையாகும். பொதுவாக நகர்ப்பகுதிகளில் குப்பைகளை அகற்றினால் அவற்றைத் திறந்த வெளியில் எங்காவது பள்ளம் பார்த்து கொட்டி நிரப்புவதே நடைமுறையாக இருக்கிறது.

இப்படி குப்பைகளைத் திறந்தவெளிப் பள்ளங்களில் கொட்டி நிரப்பிய பிறகு அடுத்த சுகாதார பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. அவற்றைப் பெருச்சாளிகளும் பன்றிகளும் தோண்டி துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குப்பைகளிலிருந்து வடியும் கழிவுநீர் நிலத்தில் ஊறி, நிலத்தடி நீர்மட்டத்தையும் தரைக்கடியில் உள்ள நீரோட்டத்தையும் பாழ்படுத்துகிறது. அதுமட்டும் அல்ல, “”குப்பையை எங்கள் பகுதியில் கொட்டாதே!” என்று ஆங்காங்கே போர்க்குரல்கள் எழுகின்றன. எங்கு பணக்காரர்கள் இல்லையோ, எங்கு செல்வாக்கானவர்கள் இல்லையோ அந்த இடம் பார்த்து குப்பைகளைக் கொட்டிவிடுகின்றனர் உள்ளாட்சிமன்ற அதிகாரிகள்.

குப்பைகளை அகற்றுவதற்கு 3 வழிகள் உள்ளன.

1. குப்பைகளை எரிப்பது. அதன்மூலம் 90 சதவிகித குப்பைகளைக் குறைத்துவிடலாம்.

2. மண்புழுக்கள் போன்றவை மூலம் குப்பைகளை மக்கவைத்து எருவாக மாற்றுவது.

3. குப்பைகளைத் தொட்டியில் போட்டு, வெளிச்சமும், காற்றும் படாமல் மறைத்து அதிலிருந்து மீத்தேன் வாயுவைத் தயாரிப்பது.

இதே குப்பை மலைபோலக் குவிந்தால் இந்த மூன்று முறையில் ஏதாவது ஒன்றை கடைப்பிடிப்பது கூட கடினமான பணிதான்.

இப்படி குப்பைகளைப் பரத்தி கொட்டவும் பிறகு வேறு வடிவத்துக்கு மாற்றவும் நிறைய நிலப்பகுதியும் ஆள்பலமும் தேவை. அவை உள்ளாட்சி மன்றங்களிடம் இல்லை. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, வேறு வடிவத்துக்கு மாற்றவும் எரிபொருளாகப் பயன்படுத்தவும் முன்னுரிமை தரவேண்டும்.

மேலை நாடுகளில் குளிர்காலத்தின்போது வீடுகளை கதகதப்பாக வைத்திருக்க எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த எரிபொருளை உள்ளாட்சி மன்ற நிர்வாகம் குப்பைகளிலிருந்து தயாரித்து குழாய் வழியாக எல்லா வீடுகளுக்கும் அனுப்புகிறது. இதனால் குப்பையும் பயனுள்ள பொருளாகிறது, எரிபொருள் செலவும் மிச்சப்படுகிறது. பெட்ரோல், டீசல் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் செலவும் கணிசமாக மிச்சப்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் 5 கோடி டன் எடையுள்ள குப்பைகளை, 400 சிறு ஆலைகள் மூலம் எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் இந்த வழியையே பின்பற்றுகின்றனர். அமெரிக்காவில் உள்ள இத்தகைய 100 ஆலைகள் 2,800 மெகா வாட் மின்சாரத்தைத் தயாரிக்கின்றன. இதனால் 104 கோடி காலன் எரிபொருள் மிச்சப்படுகிறது. 2002-ல் அமெரிக்காவின் 15 மாநிலங்கள், இத்தகைய எரிசக்தி ஆலைகளுக்கு 85 சதவிகித குப்பைகளை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குப்பையை எரிபொருளாக மாற்றுவது இரண்டு நிலைகளைக் கொண்டது. முதல் பகுதி கழிவுகளிலிருந்து எரிபொருளைத் தயாரிப்பது. கரி உருண்டைகளைப் போல சிறு கழிவு உருண்டைகளைத் தயாரிப்பது முதல் கட்டம். நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு இந்த கரி உருண்டைகள் மிகவும் பயன்படும்.

உதாரணத்துக்கு ஹைதராபாதில் ஒரு டன் நிலக்கரியின் விலை ரூ.1,800. குப்பையிலிருந்து பெறப்படும் கரி உருண்டையின் விலை ரூ.1,000. இதை ஹைதராபாத் பகுதி தொழிற்சாலைகளும் ஏழைகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த உருண்டைகளைத் தயாரிக்கும் ஆலைகள் டன்னுக்கு ரூ.200 கூடுதலாக விலை வைத்தாலும் வாங்குகிறவர்களுக்கு அது குறைந்த விலைதான். கரி உருண்டையைத் தயார் செய்யும் ஆலைக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சி வாரியம் என்ற உயர் அமைப்பு ஆந்திரத்தின் ஹைதராபாத், விஜயவாடா ஆகிய இரு நகரங்களில் சோதனை அடிப்படையில் இத்தகைய கரி உருண்டைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆலையை நிறுவியது. இரண்டின் உற்பத்தித்திறன் தலா 6 மெகாவாட். இதில் ஹைதராபாத் ஆலை 50 சதவிகிதம் திறனுடனும், விஜயவாடா ஆலை 80 சதவிகிதம் திறனுடனும் செயல்படுகின்றன. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கரி உருண்டைகளைத் தயாரிப்பது, மின்சாரத்தைத் தயாரிப்பதைவிட லாபகரமானது.

இதேபோன்ற ஆலைகளை நாடு முழுவதும் நிறுவி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாண்டு கரி உருண்டைகளைத் தயாரித்தால் 20 டன் எடையுள்ள கரி உருண்டைகளைப் பெறலாம். இது ஒவ்வொன்றும் 10 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பைத் தரும். இந்த ஆலைக்கு மிகக்குறைந்த நிலப்பரப்பு இருந்தால் போதும். இதனால், சுகாதாரம் சீர்கெடுவதும் தடுக்கப்படும்.

50 டன் எடையுள்ள குப்பைகளை அன்றாடம் கையாளும் திறன் உள்ள எரிபொருள் தயாரிப்பு ஆலையை நிறுவ ரூ.80 லட்சம் செலவாகும். கரி உருண்டைகளை டன் ரூ.1,000 என்று விற்கலாம். இந்த ஆலை மழைக்காலத்தில் செயல்படாது. எனவே ஆண்டில் 10 மாதங்கள்தான் இதில் உற்பத்தி இருக்கும். அன்றாடம் 20 டன் கரி உருண்டைகளைத் தயாரிக்க முடியும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் இதில் வருமானம் கிடைக்கும்.

இந்த ஆலையின் வடிவமைப்பு, இயங்கு திறன் ஆகியவற்றை மேலும் சீரமைத்து, ஆலைக்கான பாகங்களை நல்ல தரத்தில் தயாரித்து நாடு முழுவதும் வழங்கினால் இதன் உற்பத்தித்திறன் பலமடங்கு அதிகரிக்கும். அடுத்து இந்த ஆலையை நிறுவ வங்கிகளைத் தேர்வு செய்து அல்லது நிதியங்களை நியமித்து அவற்றின் மூலம் முதலீடு செய்யலாம்.

மாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும் இதில் தீவிர அக்கறை காட்டி, அன்றாடம் 50 டன் குப்பைகளைக் கையாளும் எரிபொருள் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். குப்பைகள் கிடைப்பதைப் பொருத்து இந்தத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். காலவரம்பு நிர்ணயித்து இதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் நிர்வாகத்துடன் ஊழியர்களும் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் அதே வழிமுறையைக் கையாண்டால் இந்த ஆலைகளால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கும். நகர்ப்புற திட்டமிடலில் தொடர்புள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்துவது நல்ல பொருளாதார பலன்களைத் தரும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத்துறை முன்னாள் ஆணையர்.)

Posted in Alternate, Andhra, AP, APJ, Bhogi, Bogi, Burn, City, Coal, Disposal, Electricity, Employment, energy, Factory, Fuel, Gandhi, Garbage, Gas, Hyderabad, Jobs, Kalam, Mahathma, Mahatma, Management, Megawatt, Methane, Metro, Municipality, MW, Pongal, Poor, Power, Recycle, Rich, Rural, Sprawl, Suburban, Trash, Vijayawada, Villages, Waste, Water | 6 Comments »