Central African Republic: Law and Order Collapsing as Civilians Flee Violence and Killings
Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007
மத்திய ஆப்ரிக்க குடியரசு குறித்து அம்னெஸ்டி கவலை
![]() |
![]() |
மத்திய ஆப்ரிக்க குடியரசில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து குலைந்துவிடும் நிலையின் விளிம்பில் உள்ளது என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
அங்கு, பிரான்ஸ் நாட்டின் 700 துருப்புகளின் ஆதரவு இருந்தாலும் அரசின் அதிகாரம் தலைநகர் பாங்குயில் மட்டும்தான் செல்லுபடியாகிற நிலையில் உள்ளது.
அந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் அண்டை நாடுகளான சாட், சூடான் மற்றும் காமெரூன் ஆகியவற்றுக்கு வெளியேறிச் சென்றுள்ளார்கள் என அண்மையில் அங்கிருந்து திரும்பியுள்ள ஒரு ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
கிளர்ச்சியாளர்கள், கொள்ளையர்கள் மற்றும் அரசுத் துருப்புக்களால் தாக்கப்பட்டதாலேயே தாம் அங்கிருந்து வெளியேறியாதாக அவர் கூறுகிறார்.
அங்கு அரச துருப்புக்களால் பொதுமக்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அந்நாட்டின் அதிபரின் சார்பில் பேசவல்ல அதிகாரி புறந்தள்ளியுள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டு கேலிக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்துள்ளது.
2003 ஆம் ஆண்டு இராணுவத்தின் முன்னாள் தளபதி ஃபிரான்சுவா பொழியே அதிரடியாக ஆட்சியைப் பிடித்த பிறகு, அங்கு நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.
bsubra said
ஐவரி கோஸ்ட் பிரதமர் சென்ற விமானம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது
ஐவரி கோஸ்ட்டின் பிரதமரை ஏற்றி சென்ற விமானம், கிளர்ச்சியாளர்களின் வலுவாக இருக்கின்ற போக்கே பிரதேசத்தில் தரையிறங்கிய போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் பிரதமர் சோரோ தப்பிவிட்டார்.
ஐ.நா அமைதிக் காக்கும் படையினரின் பாதுகாப்பில் இருக்கும் விமான நிலையக் கட்டிடத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது போல தென்படுகிறது.
தங்களுடைய தலைவரான சோரோ, தங்களுடைய பரம எதிரியான அதிபர் லாரண்ட் கிபாகோவின் கீழ் பிரதமராக பணிபுரிவது முன்னாள் கிளர்ச்சியாளர்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஐவரி கோஸ்ட்டில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.