Madurai West Assembly by-poll: By-election details, campaign strategies, developments
Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007
ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?
மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.
மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.
மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.
ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.
வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.
அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.
bsubra said
மேற்கு தொகுதியில் காங்., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட 4 கட்சிகள் மீது வழக்கு: தேர்தல் விதிமுறையை மீறி கொடி, தோரணம் கட்டியதால்
மதுரை, ஜுன். 14-
மதுரை மேற்கு தொகுதியில் வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் களத்தில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு. தி.க., பாரதீய ஜனதா, புதிய தமிழகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 28 பேர் போட்டியிடுகிறார்கள்.
கட்சி வேட்பாளர் களும், சுயேட்சை வேட்பாளர் களும் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்து வருவதால் மேற்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.
மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசார விளம் பர போஸ்டர்கள், ஒட்டவோ, தோரணங்கள் அமைக்கவோ கூடாது என தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.
இதை கண்காணிக்க 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். ஏற்கனவே இத்தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டு இருப்பதால் `பளீச்’ என காணப்படுகிறது.
கட்சிகள் மீது வழக்கு
இந்த நிலையில் மேற்கு தொகுதியில் உள்ள 24,25 ஆகிய வார்டுகளில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தேர்தல் விதிமுறை களை மீறி கட்சி கொடிகளும், தோரணங்களும் கட்டி இருந்ததாக அக்கட்சிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதே போல் 23-வது வார்டில் பாரதீய ஜனதா கட்சியினர் கொடி, கட்டி தோரணம் அமைத்து இருந்ததாகவும் அக்கட்சி மீது வழக்குப்பதிவு செய்துள்ளத னர்.
வேட்பாளர்கள் மீது வழக்கு
இதற்கிடையே வேட்பு மனு தாக்கலின் போது விதிமுறையை மீறி ஊர்வல மாக சென்றதாக தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்துகுமரன் உள்பட 350 பேர் மீதும், இதே போல் தேர்தல் அதிகாரி அறைக்குள் விதிமுறையை மீறி நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான பேர்களை அழைத்து சென்ற தாக அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜு உள்பட 50 பேர் மீதும், இதே போல் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் உள்பட 30 பேர் மீதும் மதிச்சி யம், தல்லாகுளம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
bsubra said
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல்: கலெக்டர்- போலீஸ் கமிஷனர் இடமாற்றம் ஏன்?- பரபரப்பு தகவல்கள்
மதுரை, ஜுன் 14-
மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் 4 அதிகாரிகளை ஒரே நேரத்தில் அதிரடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்கள் 6 பேரும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்த தவறி விட்டதாக தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
எனவே புதிய கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் தேர்தல் அதிகாரி உள்பட 6 பேரும் இன்று அல்லது நாளை நியமிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கலெக்டர் உள்பட 6 அதி காரிகளின் அதிரடி இடமாற்றத்துக்குரிய காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன.
மதுரை மேற்கு தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது அதில் ஏராளமான குளறுபடிகள் இருந்தன. இதனை சரிபார்க்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் இருந்து மதுரை மாநகராட்சி கமிஷனரை விடுவித்து உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த பொறுப்பு மதுரை ஆர்.டி.ஓ. நாராயணமூர்த்தியிடம் வழங்கப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியலை தீவிரமாக சரி பார்க்கும்படி மாவட்ட கலெக்டர் ஜவகருக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதையடுத்து கலெக்டர் ஜவகர் கோரிப்பாளையம், செல்லூர் பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர்கள் பட்டியலை ஆய்வு செய்தார். இதையடுத்து இறுதிபட்டியல் 2 வார தாமதத்துடன் வெளியிடப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் மதுரை மத்திய தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது போலீஸ் அதிகாரிகள் சிலர் பாரபட்சமாக நடந்ததாக புகார் எழுந்தது. அவர்கள் அப்போது இடமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் மீண்டும் அதே பணியிடம் வழங்கப்பட்டது.
அதில் போலீஸ் கமிஷனராக இருந்த சிதம்பரசாமி, போலீஸ் உதவி கமிஷனர்கள் குமாரவேல், ராஜேந்திரன் ஆகியோர் அடங்குவர்.
மத்திய தொகுதியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடராமல் மேற்கு தொகுதியில் மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் ஆரம்பத்தில் இருந்தே தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
முதற்கட்டமாக மேற்கு தொகுதிக்குட்பட்ட 7 போலீஸ் நிலையங்களிலும் பணிபுரிந்து வந்த 15 இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் போலீஸ் உதவி கமிஷனர்கள் குமாரவேல், ராஜேந்திரன், சுந்தரேசன் ஆகிய 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் மதுரை மாவட்டத்திலேயே சி.பி.சி.ஐ.டி.யில் பணிமாற்றம் செய்யப்பட்டனர். இதனை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் உடனடியாக பணியில் சேர்ந்து கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டது.
இதுதவிர மேற்கு தொகுதியில் உள்ள போலீஸ் நிலையங் களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீசார்- ஏட்டுக்கள் 340 பேரை இடமாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதற்கு போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் ஆட்சேபம் தெரிவித்தார்.
ஒட்டு மொத்தமாக மாற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே சப்- இன்ஸ்பெக்டருக்கு மேல் அந்தஸ்துள்ள அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்தால் போதுமானது என்று தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
இதனை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் தலைமை காவலர்கள் 163 பேரை மாற்றி உத்தரவிட்டது.
மேலும் வேட்பு மனுத்தாக்கலின்போது காங்கிரஸ்- அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு போலீசார் சலுகைகள் அளித்ததாகவும், பாரதீய ஜனதா வேட்பாளர் உள்ளே செல்லக்கூட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பாரதீய ஜனதா சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா தேர்தல் பார்வையாளர் அஜய் தியாஜியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். இந்த மனுவில் மேற்கு தொகுதியில் ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆரவாக அதிகாரிகள், வருவாய்த்துறை ஊழியர்கள் செயல்படுகிறார்கள்.
மு.க.அழகிரி `சைரன்’ காரில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மேயர் தேன்மொழி, மகளிர் சுய உதவிக்குழுக்களை மிரட்டுகிறார். எனவே தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பு இல்லை. மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த முறைகேடுகளை தடுத்து நிறுத்தி அமைதியாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் உதயகுமார் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் விதிமுறைகளை மீறி அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்கள் மற்றும் விளம்பர பேனர்களை புகைப்பட ஆதாரத்துடன் தேர்தல் பார்வையாளரிடம் புகார் மனு அளித்தார்.
இதுதவிர தேர்தல் பார்வையாளர்கள் அஜய் தியாஜி, கணேஷ்ராம் ஆகியோர் தினமும் தொகுதிக்குள் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். சில இடங்களில் அரசியல் கட்சியினர் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடமும் அவர்கள் கருத்து கேட்டறிந்தனர்.
அப்போது தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருவது தெரிய வந்தது. இதனை உடனுக்குடன் தேர்தல் பார்வையாளர் அஜய் தியாஜி மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து வருகிறார்.
மகளிர் குழுக்கள் செயல்பாடு மற்றும் போலீசாரின் அனுசரணைகள் தேர்தல் ஆணையத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொடக்கத்திலேயே மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்தும் அவர்கள் அதனை செயல்படுத்த தவறி விட்டதாக தேர்தல் கமிஷன் அதிருப்தியடைந்து இந்த இடமாற்றம் நடவடிக்கைÛ எடுத்து உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் `திடீர்’ நடவடிக்கை அரசியல் கட்சிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.
bsubra said
மதுரை ஆட்சியர் சுந்தரமூர்த்தி
மதுரை, ஜூன் 16: மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக கோ.சுந்தரமூர்த்தி (56) (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சனிக்கிழமை (இன்று) பொறுப்பேற்கிறார்.
இதுவரை மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த எஸ்.எஸ்.ஜவஹருக்கு பணியிடம் ஏதும் வழங்கப்படவில்லை.
மாற்றம் ஏன்? மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான மனு தாக்கல் நடைபெற்றபோது அரசியல் கட்சியினரால் தேர்தல் ஆணைய விதிகள் மீறப்பட்டன. இது ஆணையத்தின் கவனத்துக்குச் சென்றது.
இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ்.ஜவஹர், காவல் ஆணையர் ஏ.சுப்பிரமணியன், தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய்க் கோட்டாட்சியர் அ.நாராயணமூர்த்தி உள்ளிட்ட 6 உயர் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தால் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவந்த கோ.சுந்தரமூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இவர் எம்.ஏ. வரலாறு, எம்.ஏ. பொருளாதாரம் படித்தவர். சட்டப் படிப்பும் முடித்தவர்.
பொள்ளாச்சி சார்-ஆட்சியர், தொழிலாளர் துறை இணை ஆணையர், சென்னை மாநகராட்சி இணை ஆணையர், திரூவாரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், கடந்த ஆண்டு மே 26-ம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.
இவரது மனைவி வாசுகி இசை ஆர்வலர், மகன் இன்பசேகரன் ஐஎப்எஸ் தேர்ச்சி பெற்று வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
bsubra said
விலைபோகும் வாக்குகள்!
வீர. ஜீவா பிரபாகரன்
மதுரை, ஜூன் 19: பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியே மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் சில வேட்பாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மதுரை மத்திய தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது சர்வசாதாரணமாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டும் தடுக்க இயலவில்லை.
வாக்காளர்களும் அரசியல் கட்சிகள் தங்களது ஊழல் பணத்தை மக்களுக்கு விநியோகிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சண்முகம் மறைந்த தினத்திலிருந்தே, மதுரை மக்கள் பொதுஇடங்களில் சந்திக்கும்போது, “நீ மதுரை மேற்குத் தொகுதியா? விரைவில் ரூ. 1,500 நிச்சயம்’ என்ற பேச்சு பரவலாக இருந்தது.
சில கட்சிகளால் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
விடுபட்டவர்களுக்கும் பட்டுவாடா: தேர்தல் விதிமீறல்களை தடுக்க இயலாமைக்காக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 6 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த தேர்தல் ஆணையத்தால், இந்தப் பணப் பட்டுவாடாவைத் தடுக்க இயலவில்லை.
மதுரை மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட பொன்னகரம், பிராட்வே, ஆரப்பாளையம், மேலப் பொன்னகரம், செல்லூர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்கள் பலரது வீடுகளுக்குத் தலா ரூ. 1500 வழங்கப்பட்டுள்ளது.
சின்னம் அச்சிட்ட நோட்டீûஸ பணத்துடன் கூடிய கவரில் வைத்து வாக்காளர்களுக்கு சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய விடிய வழங்கியுள்ளனர்.
டி.ஆர்.ஓ. காலனி, ஆத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விடுபட்ட வாக்காளர்களுக்குத் திங்கள்கிழமை இரண்டாவது நாளாகவும் பணம் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக திமுக-அதிமுக இரு கூட்டணியினரும் தேர்தல் பார்வையாளர் அஜய் தியாகியிடம் புகார் அளித்துள்ளனர்.
எங்கும் இதே பேச்சு: இருதரப்பினரும் மாறி மாறிப் புகார் கூறினாலும் பணம் வழங்கப்பட்டதைப் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். அனைத்துப் பொது இடங்களிலும் பணப்பட்டுவாடா பற்றியே பேச்சே பிரதானமாக இருந்து வருகிறது.
சட்டம் என்ன சொல்கிறது?: தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறை மற்றும் தேர்தல் விதிகள் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பதை குற்றம் என்று கூறுகின்றன.
இந்திய தண்டனைச் சட்டம் 171 ஏ (பி), 171 பி, 171 இ, ஆகியவற்றிலும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது குற்றம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123 (1), வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது தேர்தல் முறைகேடு நடவடிக்கை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், இந்தச் சட்டங்கள் தேர்தல் களத்தில் அமலாக்கப்படவில்லை என்பதையே மதுரை மேற்கு இடைத்தேர்தலில் நடப்பவை சுட்டிக்காட்டுகின்றன.
நியாயமான தேர்தல் சாத்தியமா ?: வேறு எங்கும் இல்லாதவகையில் மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அதிக பணம் வழங்கப்பட்டது.
இப்போது அதேபோல மதுரை மேற்குத் தொகுதியில் வீடு வீடாக, விடிய விடிய வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், நியாயமான தேர்தல் என்பது சாத்தியமா? என்பதைத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
bsubra said
Kumudam Reporter
—————————-
அழகிரிக்கும் அதிமுக வேட்பாளருக்கும் தொடர்பு?
——————————————————————
மதுரை மேற்குத் தொகுதி தேர்தல்களம் அனலாய் தகிக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. கட்சித் தொண்டர்கள் தங்கள் கட்சியின் கொள்கைகள், சாதனைகளைச் சொல்வதை விட, சாவுகளைத்தான் பிரதானப்படுத்தி பிரசாரம் செய்து வருகிறார்கள். தினகரன் நாளிதழ் தீ வைப்புச் சம்பவத்தில் மூன்று பேர் இறந்ததை அ.தி.மு.க. தரப்பு விடாமல் சொல்லி வருகிறது.
அதற்கு, தாங்களும் சளைத்தவர்களல்ல என்கிற தொனியில், பால்பாண்டி கொலையில் அ.தி.மு.க. வேட்பாளரைச் சம்பந்தப்படுத்தி சொல்லத் தொடங்கியிருக்கிறது தி.மு.க. தரப்பு. அதுமட்டுமல்லாமல், அழகிரிக்கும் செல்லூர் ராஜுவுக்கும் ரகசியத் தொடர்பு இருக்கிறது என்ற செய்தியும் பரவி, மதுரை மேற்குத் தொகுதி அரசியல் களத்தை அநியாயத்துக்குச் சூடேற்றியிருக்கிறது.
மதுரை திடீர்நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. அ.தி.மு.க. வார்டு செயலாளராக இருந்தவர். அப்போது மதுரை நகரச் செயலாளராக இருந்தவர் செல்லூர் ராஜு. 2003_ம் ஆண்டு டிசம்பர் மாதம் பால்பாண்டி படுகொலை செய்யப்பட்டார்.
உள்கட்சித் தேர்தல் காரணமாகத்தான் பால்பாண்டி கொலை செய்யப்பட்டார் என்பதோடு, அந்தக் கொலையில் செல்லூர் ராஜுவையும் தொடர்புபடுத்திப் பேசினர் பால்பாண்டி குடும்பத்தினர். இன்னும் அந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை. அப்போது குற்றம் சாட்டப்பட்ட செல்லூர் ராஜு தான் இன்றைக்கு மதுரை மேற்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்.
– ப. திருமலை