Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Battle royale in Tamil Nadu – Kodanadu estate: Jayalalitha vs Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

இன்ஸ்பெக்டர் உயிரோடு எரிப்பு: வானூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு- கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்

புதுச்சேரி, ஜுன். 8-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பற்றி தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி விமர்சனம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. வினர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணபதி தலைமையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது கருணாநிதியின் உருவ பொம்மையை அ.தி.மு.க. வினர் தீவைத்து எரித்தனர்.

தீயை அணைக்க போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள். இதனால் ஆவேசம் அடைந்த அ.தி.மு.க.வினர் பெட்ரோல் ஊற்றினார்கள். இந்த பெட்ரோல் ஆரோவில் இன்ஸ்பெக்டர் ஜவகர்லால் மீது பட்டு உடலில் தீப்பிடித்தது. படுகாயம் அடைந்த அவர், புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா உத்தரவின் பேரில் கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேரை ஆரோவில் போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவர். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் மீதும்

  • 307(கொலை முயற்சி),
  • 143 (கலவரத்தில் ஈடுபட கும்பலாக கூடுதல்),
  • 147(கையில் ஆயுதங்கள் வைத்திருத்தல்),
  • 188(அரசு பேச்சை மீறுதல்),
  • 285 (தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு வருதல்),
  • 427(பொருட்களை சேதப்படுத்துதல்) மற்றும்
  • 332 (பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

———————————————————————————————

இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 28 பேர் தவிர அ.தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜுன். 9-

கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் தி.மு.க. வினருக்கும், அ.தி.மு.க. வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டசுமார் 12 ஆயிரம் அ.தி. மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அ.தி.மு.க.வினர் தங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று ஜெயில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி, சேலம் மத்திய சிறைகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சிறையில் உள்ள அ.தி.மு.க.வினரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வானூர் இன்ஸ்பெக்டர் ஜவகரை உயிரோடு தீ வைத்து எரித்து கொல்ல முயன்றதாக கைதான 28 அ.தி.மு.க.வினர் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

அரசுக்கு எதிராக அ.தி. மு.க.வினர் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் உரிய முன் அனுமதியும் பெறாமல் மாநிலம் முழுவதும் நடத்திய திடீர் போராட்டத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆரோவில் காவல் நிலைய குற்ற எண் 207-07-ல் இந்திய காவல் சட்டத்தின் பிரிவுகள் 143, 147, 188, 332, 426 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள 28 பேரை தவிர்த்து மீதமுள்ள அனைவரையும் இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடுதலை செய்ய நட வடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு அரசு ஆணை யிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்படாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ள கணபதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 28 அ.தி.மு.க.வினரும் வானூர் இன்ஸ்பெக்டரை எரித்து கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. மனோகரன்,

2. கணபதி எம்.எல்.ஏ.,

3. ஒன்றிய செயலாளர் விசுவநாதன்,

4. முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்,

5. கோட்டக்குப்பம் நகர செயலாளர் அம்ருதீன்,

6. இக்பால் பாஷா,

7. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சக்கரபாணி,

8. முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன்,

9. ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் முருகையன்,

10. எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் அறிவழ கன்

11. ஆகாசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன்,

12. மாவட்ட துணை செயலா ளர் நாகம்மாள்,

13. சிவக் குமார்,

14. ராமச்சந்திரன்,

15. முருகையன்,

16. ராஜி,

17. கண்ணன்,

18. அப்துல் ரசித்,

19. இப்ராகிம்,

20. பிரத்திவி ராஜ்,

21. ஜெயவேல்,

22. சுப்பு ராயன்,

23. அய்யப்பன்,

24. மற் றொரு கண்ணன்,

25, சந்திரன்,

26.வெங்கடேசன்,

27. பரசு ராமன்,

28. சிவமணி.

————————————————————————————-

Sunday, June 10, 2007

சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.

சேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.

சுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.

தினமணி

————————————————————————————-

Saturday, June 9, 2007

சிறையில் இருக்கும் 38 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. வினர் நேற்று நடத்திய மறியல், கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. பி.கே.சேகர்பாபு (ஆர்.கே.நகர்)
2. கு.சீனிவாசன் (பூங்கா நகர்)
3. கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி)
4. பி.பல ராமன் (பொன்னேரி)
5. கோ.அரி (திருத்தணி)
6. கு.பாண்டு ரங்கன் (அணைக் கட்டு)
7. சி.வி.சண்முகம் (திண்டிவனம்)
8. இரா.குமரகுரு (திருநாவலூர்)
9. செல்வி ராமஜெயம் (புவனகிரி)
10. அருண்மொழித்தேவன் (சிதம்பரம்).

11. கணபதி (வானூர்)
12. சி.சண்முகவேலு (உடுமலைபேட்டை)
13. எஸ்.தாமோதரன் (கிணத்துகடவு)
14. ஏ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்)
15. ஆர்.பிரேமா (அவினாசி)
16. சி.பொன்னுதுரை (பெருந்துறை)
17. எல்.ரவிச் சந்திரன் (சேலம்-1)
18. பி.தங்க மணி (திருச்செங்கோடு)
19. கே.பி.அன்பழகன் (பாலக்கோடு)
20. ஆர்.டி.கணேசன் (தேனி)

21. ம.குணசேகரன் (மானாமதுரை)
22. மு.சந் திரா (ராஜபாளையம்)
23. அனிதா ஆர்.ராதா கிருஷ் ணன் (திருச்செந்தூர்)
24. எல்.ராதாகிருஷ்ணன் (கோவில் பட்டி)
25. பெ. மோகன் (ஓட்டப்பிடாரம்)
26. போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்)
27. மு.பரஞ்ஜோதி (ஸ்ரீரங்கம்)
28. செ.சின்னச்சாமி (மருங்காபுரி)
29. ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)
30. துரைக்கண்ணு (பாப நாசம்)

31. எஸ்.இளமதி சுப்பிர மணியன் (வலங்கைமான்)
32. ஆர்.கே.பாரதிமோகன் (திருவிடைமருதூர்)
33. வீர கபிலன் (பேராவூரணி)
34. ஆர்.நெடுஞ்செழியன் (புதுக் கோட்டை)
35. ந.சுப்பிர மணியன் (குளத்தூர்)
36. செந்தில் பாலாஜி (கரூர்)
37. மா.சந்திரகாசி (வரகூர்)
38. க.ராஜேந்திரன் (ஜெயங் கொண்டம்)

எம்.பி.க்கள்

  1. பெருமாள்,
  2. சையதுகான் தங்க தமிழ்ச் செல்வன்,
  3. காம ராஜ்,
  4. நாராயணன் கோவிந்த ராஜன்

மாலைமலர்

ஒரு பதில் -க்கு “Battle royale in Tamil Nadu – Kodanadu estate: Jayalalitha vs Karunanidhi”

  1. bsubra said

    தமிழ்நாடு முழுவதும்போராட்டத்தில் கலந்து கொள்ளாத அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை

    சென்னை, ஜுன். 12-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விமர் சித்தது மற்றும் தலைமை கழககட்டிடத்தை இடிக்க நோட்டீசு அனுப்பியதை கண்டித்து கட்சி சார்பில் திடீர் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    கடந்த 7-ந்தேதி தொகுதி வாரியாக மறியல் போராட்டம் நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்படி தமிழ் நாடு முழுவதும் ஏராளமான அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 43 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள் உள்பட 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் 550 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கட்சி மேலிடம் சார்பில் திடீரென்று அறிவிக்கப்பட்டாலும் முக்கியமான போராட்டம் என்பதால் எல்லா நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டது.

    இருப்பினும் பல நிர்வாகிகள் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் என்று நினைத்து கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது. பதவி பொறுப்புகளில் இல்லாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆர்வத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    எனவே போராட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகள் பெயர் விவரங்களை சேகரிக் கும்படி உத்தரவிடப்பட் டுள்ளது. ஒன்றியம், நகரம், பகுதி, மாவட்ட அளவில் பொறுப்பில் இருப்பவர்கள் யார்-யார்? கலந்து கொள்ளவில்லை என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட செயலாளர்கள் இந்த பெயர் பட்டியலை கட்சி தலைமையிடம் கொடுக்கிறார்கள்.

    போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களிடம் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் கேட்கப்படலாம் அல்லது எச்சரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதோ? என்று போராட்டத்தில் கலந்து கொள்ளாத நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: