S Gurumurthy – Why only Hindu Gods are subjected to vulgarity in Arts?
Posted by Snapjudge மேல் மே 28, 2007
ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசகலைக்கு இலக்காவது ஏன்?
எஸ். குருமூர்த்தி
பிள்ளையார் சுழி போடுவதுபோல தொடக்கத்திலேயே எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கை.
எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரிகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள் அடித்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரை.
இங்கு சித்திரிக்கப்பட்டிருக்கும் ஆபாசத்துக்கு மன்னிப்புக் கோரி… பிரச்னையின் மையம் இதோ. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சியை ஓர் ஓவியர் வரைந்தால் அது எப்படி இருக்கும்? அவருடைய கைகள் சிலுவையின் இருபக்கமும், கால்கள் சிலுவையின் அடிபாகத்திலும் வைத்து ஆணி அடிக்கப்பட்டு அவரது உடலிலிருந்து ரத்தம் சிந்துவதும்தானே அந்தச் சித்திரத்தின் மையம்.
ஆனால் இப்போதைய நவீன ஓவியர்கள் இந்த மையக் காட்சியை அரைகுறை ஓவியமாகவே கருதுகிறார்கள். மேலும் தங்களுடைய கற்பனையினால் எப்படி ஏசுவை சிலுவையில் அறைந்து சித்திரத்தை முழுமையான கலைச்சின்னமாக்குகிறார்கள் பாருங்கள்.
சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் துயிலுரியப்பட்டு – ஆம் நம்புங்கள்! முழு நிர்வாணமாகச் சித்திரிக்கப்பட்டு – அவருடைய ஆண்குறியிலிருந்து விந்துகள் சிந்தி ஆச்சரியப்படாதீர்கள், அதோடு மட்டும் நிற்கவில்லை – அந்த விந்து துளிகள் அந்தச் சிலுவைக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் மேற்கத்திய பாணி டாய்லெட் ஓட்டையில் விழுவதுபோலவும், அந்த டாய்லெட் அடியில் மீன்கள் இருப்பதுபோலவும், அந்த மீன்கள் அந்த விந்துகளை விழுங்குவதுபோலவும்… வக்கிரமான கற்பனையின் உச்சாணிக்குச் சென்று ஆபாசத்தைக் கலையாக்கிச் சித்திரித்து சிலுவையில் ஏசுநாதர் அறையப்பட்ட “அரைகுறை’ ஓவியத்தை முழுமையாக்குவதுதான் நவீன ஓவியம் (ம்ர்க்ங்ழ்ய் ஹழ்ற்). நம்புங்கள்; இது கற்பனையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த விஷயம். இது நடந்தது குஜராத்தில். ஆனால் செய்தது நரேந்திர மோடி அல்ல. அவர் இந்தக் கேவலத்தைத் தடுக்கத்தான் செய்தார். ஆனால் இதைத்தான் அற்புதமான ஓவியம்; அந்த ஓவியரின் சுதந்திரம் புனிதமானது என்று கூறுகிறார்கள் மதச்சார்பற்ற அறிவு ஜீவிகளில் சிலரும், பத்திரிகையாளர்களில் பலரும்.
இத்தோடு முடியவில்லை இந்த வக்கிரம்; இது ஓர் ஆரம்பம்தான். மேலும் பாருங்கள்; ஒரு பெரிய ஓவியத்தில் முழு நிர்வாணமான ஒரு பெண்.
இது அந்த ஓவியத்தின் முன்னுரை, முடிவல்ல. அந்தப் பெண்ணின் கர்ப்பப் பையிலிருந்து ஒரு சிசு துடித்து வெளியில் வர முயற்சி செய்வதுபோல அமைகிறது அந்த ஓவியத்தின் அருவருப்பான அடுத்தகட்டம். இப்போதும் முழுமையடையவில்லை அந்த ஓவியரின் அந்தப் படைப்பு. கடைசியில நிர்வாணமாக எல்லோரும் பார்க்கும்படி குழந்தை பெறும் அந்தப் பெண் “துர்க்கை அம்மன்’ என்று எழுதி அந்த ஓவியத்தை முடிக்கிறார் அந்த ஓவியர். அப்படி அநாகரிகமாக சித்திரிக்கப்பட்ட பெண்தான் துர்க்கை!
இந்த இரண்டு கீழ்த்தரமான ஓவியங்கள் மட்டுமல்ல; சிவ பெருமான் மற்றும் விஷ்ணுபகவான் போன்று ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் இதுபோலவே வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்டு அந்த ஓவியங்கள் குஜராத்தில் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த அநாகரிகமான ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் ஆட்சேபித்தனர்; ஆர்ப்பாட்டமும் செய்தனர்; போலீஸôரிடம் புகார் செய்தனர்; அதன்மேல் போலீஸôர் நடவடிக்கையும் எடுத்து அந்த ஓவியரைக் கைதும் செய்தனர்.
போலீஸ் நடவடிக்கை எடுத்த அடுத்த நிமிஷம் நாடு முழுதும் மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் மற்றவர்களும் ஒட்டுமொத்தமாக ஆங்கிலப் பத்திரிகைகளும் குஜராத் முதல்வர் நரேந்தி மோடியைக் குறி வைத்து தாக்க ஆரம்பித்தனர். அவர் சட்டாம்பிள்ளையாக நடந்து கொள்வதாகவும் கலைஞர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
“சுதந்திரமில்லையென்றால், கலைக்கு உயிரில்லை’ என்றெல்லாம் கோஷம் எழுப்பினார்கள் மும்பையிலும் தில்லியிலும்.
ஆனால் அப்படி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தாங்கள் எந்தவிதமான ஓவியக்கலையையும், எந்த ரகமான ஓவியங்களையும் பாதுகாக்க போராடுகிறோம் என்பதைக் கூறவும் இல்லை; அவர்களை யாரும் எதற்காகப் போராடுகிறீர்கள் என்று கேட்கவும் இல்லை. தைரியமிருந்தால் அவர்கள் எந்தவிதமான சித்திரங்களை வரையும் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்க வேண்டும்.
வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்ட ஏசுநாதர் ஓவியத்தையும், பெண்ணை கீழ்த்தரமாக்கி துர்க்கை என்று எழுதப்பட்ட அந்த ஓவியத்தையும் மக்கள் முன்னால் வைத்து “”இந்த ஓவியங்களை வரைந்து காட்சிக்கு வைத்தால் என்ன தவறு?” என்று நாணயமாக மக்களைக் கேட்டிருக்க வேண்டும் அவர்கள்.
ஆனால் அப்படிச் செய்ய அவர்களுக்குத் துணிவு கிடையாது. அவர்கள் அப்படிச் செய்தால், பரோடாவில் நியாயமாகத்தான் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர் என்கிற “குட்டு’ வெளியாகிவிடுமே! என்ன கலை என்பதை மறைத்து எல்லா பத்திரிகைகளும் “கலை சுதந்திரம் பறிபோகிறது’ என்று ஒப்பாரி வைத்தன.
ஆனால் எந்த மாதிரி கலை, எந்த மாதிரி படங்கள் பரோடாவில் காட்சிக்கு வைக்கப்பட்டன என்பதை எந்தப் பத்திரிகையும் நாணயமாக வெளியிடவில்லை. காரணம் ஆபாசத்தை எப்படி வெளியிடுவது என்பதுதான். பின் எப்படி ஆபாசம் கலையாக முடியும்? அதுமட்டுமல்ல; பரோடாவில் ஓவியக் கண்காட்சி நடத்துபவர்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தது ஏசுநாதரை அப்படி கீழ்த்தரமாகச் சித்திரித்ததால் மனம் புண்பட்ட ஒரு கிறிஸ்தவர். இந்த உண்மைகளைக் கூட வெளியிடாமல், ஹிந்து வெறியர்கள் கண்காட்சியை எதிர்க்கின்றனர் என்று கூசாமல் பொய் கூறின பத்திரிகைகள்! இன்று வரை உண்மையை எழுதவில்லை எந்தப் பத்திரிகையும்.
ஹிந்துக்கள் வழிபடும் ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் ஆபாசமாகச் சித்திரிப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்ட ஓவியர்கள் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இவர்களில் தலைசிறந்து விளங்குபவர், பலராலும் பாராட்டப்படுகிற எம்.எஃப். உசேன்தான்.
ஹிந்துக்களின் எல்லா தெய்வங்களை – ஏன் எல்லோருக்கும் பொதுவான, பாரதியார் போற்றிய பாரத அன்னையையும்கூட துயிலுரிந்து, நிர்வாணமாகச் சித்திரித்த அற்புதமான கலைஞர் அவர். பதிவிரதையான சீதை நிர்வாணமாக பிரம்மசாரியான அனுமனின் வாலின் நுனியில் அமர்ந்திருப்பதுபோல ஓவியம் தீட்டினார் இந்த பிருகஸ்பதி!
“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பதுபோல ஏன் இப்படி ஹிந்து தெய்வங்களை மட்டும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் சித்திரித்து ஓவியம் தீட்டுகிறார்கள் இவர்கள்? இந்தக் கேள்விக்குப் பதில் எல்லோருக்கும் புரிந்ததே.
ஹிந்து தெய்வங்களை எப்படிக் கேவலமாகச் சித்திரித்தாலும் அதைத் தட்டிக் கேட்கவோ, அதற்காகக் கோபப்பட்டு வெகுண்டு எழுந்து பஸ்களைக் கொளுத்துவோர் அப்படிச் செய்கிறவர்களை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டு மதக்கட்டளை பிறப்பிக்கவோ ஹிந்து மதத்தில் வழியில்லை. வேறுமத நம்பிக்கையை இப்படி ஆபாசமாக்க முடியுமா? மற்ற மதத்தினரிடம் இப்படி விளையாடிப் பாருங்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தோ அல்லது சங்கராச்சாரியர்களோ சவால் விடவில்லை. இப்படிக் கூறியது தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கபூர்.
2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆபாசமான படங்களை வரைந்ததற்காக ஓவியர் உசேனுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்தது, உசேன் மனுவைத் தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பில் கூறுகிறார் நீதிபதி கபூர்.
கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களைக் கேவலப்படுத்தினால் அதனால் அந்த மக்களுடைய மதஉணர்வுகள் புண்படுகின்றன. அதுமட்டுமல்ல; மதங்களுக்கிடையே நிலவி வரும் நல்லுறவுகளையும் அது பாதிக்கிறது. அதுபோன்ற சித்திரங்களை கலையென்று சிலர் கூறினாலும் வழிபடப்படும் தெய்வங்களை நிர்வாணமாக்கிச் சித்திரிப்பதால், அது மதநம்பிக்கை உள்ள மக்களின் மனத்தை வேண்டுமென்றே புண்படுத்தும் செயல் என்பதை மறக்க முடியாது. கலை சுதந்திரம் என்கிற போர்வையில் மதஉணர்வுகளை நோக அடிக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது. இது வேற்றுமதத்தைச் சேர்ந்த மனுதாரராருக்கு (உசேன்) இன்னும் நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும்.
தெய்வங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்பதை (உசேன்) மனுதாரர் சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால், அவர் சார்ந்த மதக் கடவுளையோ அல்லது வேறு மதத் தெய்வங்களையோ இதுபோன்ற கலைக்கண்ணோட்டத்தோடு வரைந்து தன் கைவரிசையை காட்டிப் பார்க்கட்டும்”. இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
நீதிபதி கபூர் கூறியுள்ளதுபோல, மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் உசேன் போன்றவர்கள் ஹிந்து அல்லாத மற்ற மததெய்வங்களிடத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்ட வேண்டும் என்று கூறுவார்களா? அவர்கள் ஏன் கூறுவார்கள்? நீதிபதி கபூர் கொடுத்த தீர்ப்பையை அவர்கள் பிரசுரிக்கவில்லையே!
RaayarKaapiKlub : Message: cultural policing – nagarajan63இன்றைய திணமணி நாளிதழில் திரு எஸ்.குருமூர்த்தியின் “ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசக் கலைக்கு இலக்காவது ஏன்?” என்னும் தலைப்பில் வந்துள்ள கட்டுரையை படிக்க நேர்ந்தது. அண்மையில் குஜராத் மாகாணத்தில் வதோதரா நகரில் அமைந்திருக்கும் ஓவியக் கல்லூரியில் நிகழ்ந்தவற்றையும் அதன் தொடர்பான சலசலப்பையும் அது பற்றி ஊடகங்களிலும், ஆங்கில தினசரிகளிலும் விவரமான விவாதங்களை பாராதவரோ படிக்காதவரோ இருக்க மாட்டார்கள்.அக்கட்டுரை சார்ந்த பல செய்திகள் அவர் நிலைகொண்டுள்ள இயக்கத்தின் சார்புடையதாக உள்ளது. ஒரு நாணயத்துக்கு இருபக்கங்கள் உண்டு. அதன் ஒரு பக்கம் அவர் கட்டுரை. படிப்பவருக்கு ஒரு எச்சரிக்கையுடன் தமது நீண்ட கட்டுரையை “எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரீகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ, அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்பவர்கள் அடித்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக் கிறது” என்று துவக்கியுள்ளார்.கட்டுரையை பலமுறை படித்தபின் அது சார்ந்த என் எதிர் வினைகளை பதிவு செய்கிறேன் ஒரு ஓவியனாக.கட்டுரையாளர் தாம் ஆபாசம் என்று கருதும் ஓவியங்கள் பற்றி நுணுக்கம் மிகுந்த விவரங்களுடன் அதன் பிரச்சனையை அணுகுகிறார். நிகழ்ந்தவற்றை நான் இங்கு திரும்பக் கூற விழையவில்லை. அந்த ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டவையல்ல. அந்த ஓவிய மாணவரின் செயல்முறை தேர்வுக்கானவை. கல்லூரி வளாகத்தில் அத்துமீறி ஒரு கும்பல் நுழைந்து வன் முறையில் ஈடுபட்டது. காவல்துறையில் அந்த மாணவரை கைது செய்வதும் நடந்தது. அதை நியாயப்படுத்துவதும் தொடர்கிறது.அவர் ஆபாசம் என்று விவரிக்கும் ஓவியங்களின் வரிசையில் மாமல்ல புரத்தில் வீற்றிருக்கும் இலட்சுமி (ஆடையின்றி), க்ருஷ்ணர் கோபியர்களின் சீலைகளை திருடும் காட்சி ஓவியமாக்கப்பட்ட விதம், ஜெயதேவரின் ‘கீதகோவிந்தம்’ கவிதை ஓவியங்கள், குஜராத் மாநிலத்தில் இன்றளவும் பரவலாகப் பின்பற்றப்படும் வழிபாட்டில்
“லஜ்ஜா தேவி” சிலை அமைக்கப் பட்டிருக்கும் விதம், தாந்திரிக வழிபாட்டில் சிவன் மேல் காளி அமைந்திருக்கும் கோலம், தாண்டவமாடும் நடராஜரின் சிலை (உருவத்தில் குறி சிதைக்கப் பட்டிருக்கும்) போன்ற சிலவற்றையும் நான் சேர்க்க விரும்புகிறேன். அவையெல்லாமும் ஹிந்து கடவுளர், தேவியர்கள்தான். இது போன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கும். அவையும் ஆபாசம்தானா? வக்கர மனத்தின் வெளிப்படுதானா? “ஆபாசம் எப்படி கலையாகமுடியும்” என்னும் கேள்வி எழுப்பும் கட்டுரையாளர் அவற்றை மீண்டும் ஒருமுறை பார்க்கட்டும்.
இந்த வகையில் ஓவியர் ஹுசைன்தான் இந்த வகை சிந்தனையாளர்களுக்கு ‘மெல்லக் கிடைத்த அவல்.’ மாமல்லபுரத்தில் உள்ள பெரும்பாலான சிற்பங்கள் உடையின்றித்தான் உள்ளன. இந்தியாவின் எண்ணற்ற கோயில்களிலும் உடையில்லாத கடவுளர் சிலைகளும் ஓவியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம் ஆபாசத்துடன் சேர்த்துவிடலாமா? அவற்றுக் கெல்லாம் உடை உடுத்திவிடலாமா? அல்லது தீயிட்டுக் கொளுத்திவிடலாமா?
ஜெர்மனி, ருஷ்யா போன்ற மேலை நாடுகளில் யதேச்சாதிகாரம் கோலோச்சிய போது அரசு, ஒரு கலைஞன் எதை படைப்புக்கருவாக கொள்ள வேண்டும் என்னும் திட்டத்தையும் செயற்படுத்தியது என்பது வரலாறு கூறும் உண்மை. அதன் காரணமாக, ஓவியர்கள் வேறு நாடுகளுக்கு ஓடியதும் உண்மை. கட்டுரை ஆசிரியர் இங்கும் -அதாவது பாரதத்திலும்- அதை நடைமுறைபடுத்த விரும்புகிறாரா?
ஊடகங்களின் மூலம் வீட்டினுள் வன்முறையும், ஆபாசமும், தங்கு தடையின்றி நுழைந்து அவர் குறிப்பிடும் கலாசாரத்தையும் சமுதாயக் கட்டுப் பாட்டையும் நாசமாக்கிக் கொண்டுள்ளனவே! அங்கெல்லாம் அவர்கள் கண்கள் மூடிக்கொண்டு விடுமா?
படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரம் என்பது சுய கட்டுப்பாடுகளுடன் தான் இயங்குகிறது. படைப்பை விமர்சிப்பது படைப்பளியின் வளர்ச்சிக்கு உதவும். படைப்பாளியை வன்முறையாக விமர்சிப்பது என்பது நாகரீகமான வழியல்ல. எல்லாவற்றையும் அரசியலுக்குள் இழுத்துச்செல்வது ஆபத்தான எதிர் காலத்திற்கு இட்டுச்செல்லும். ஆனால் விதிவசமாக அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அந்தக்கல்லூரியில் பல ஆண்டுகளாக குழுச்சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதையும், இந்த சலசலப்பும் அதன் விளைவுதான் என்பதையும் ஒரு செய்தியாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
nagarajan63
————————————————————————————————
Some Blogger Feedbacks (if anything is missing, please leave a comment)
சந்திப்பு:
குருமூர்த்தியின் கவலை இந்துக்களின் கவலையா?
அரவிந்தன் நீலகண்டன்:
அகப்பயணம்: இந்துத்துவமும் கலை சுதந்திரமும்
————————————————————————————————-
நிர்வாணமாக சீதை நிர்வாண ராவணன் மடியில்
Naked Lord Hanuman and Goddess Sita
This picture shows a naked Lord Hanuman attacking a naked demon king Ravana while Goddess Sita is sitting naked on Lord Ravana’s thigh. Goddess Sita is the epitome of chastity and is role model for women the world over.
நிர்வாண சீதை அனுமானின் வாலை தன் கால்கள் இரண்டின் நடுவில் வைத்திருக்கும் காட்சி
Naked Goddess Sita sitting on the tail of Naked Lord Hanuman
According to the Indian History, Goddess Sita or Lord Hanuman has never been shown in the Naked form. Goddess Sita has never been rescued by Lord Hanuman. Over here Husain is interfering with the cultural principles. Not only this, he is trying to devise new imaginative indecent pictures of the manifest forms of God who are respected by millions of Hindus. Showing the use of the tail of Lord Hanuman for such an act has crossed all the limitations of indecency.
நிர்வாண அனுமான் முன் நிர்வாண பெண்
சிவன் பார்த்திருக்க பார்வதியை பின்புறமாக புணரும் நந்தி முன்புறமாக பார்வதியின் பிறப்புறுப்பை நக்கும் குழந்தை
A bull having sexual intercourse with Goddess Parvati and Lord Shiva watching on the auspicious day of Shivratri
Lord Shiva is the Principle of Absolute Knowledge and the principle of Destruction in the Universe.
நிர்வாண சரஸ்வதி : பிறப்புறுப்பை மறைக்கும் வீணை
அதே நேரம் ஹுசைன் தன் அன்னை, மகள் மற்றும் முகமது நபியின் மகள் பாத்திமா ஆகியோரை வரைந்துள்ள ஓவியங்கள்:
சாத்தான் said
பாகவதம் படித்திருக்கிறீர்களா? ரொம்ப கிளுகிளுப்பாக இருக்கும். கலாச்சார அதிர்ச்சிகளும் நிறைய கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது ஒரு லிங்க் போட்டு விடுகிறேன்.
bsubra said
IndianExpress.com :: Diversity is the art of the matter:
The image of the artist as an isolated person, who should remain aloof from the conflict or politics of the society of which he or she is a part, is a highly romantic one. Freedom of expression implies the artist’s right to express views on developments within society through his artistic vocabulary. In the recent controversy that broke out at the Faculty of Fine Arts, Vadodara, the potency of artistic vocabulary has been overshadowed by morality issues. This only reflects the insecurities of certain political groups about their version of ‘religion’.
First, what is superficially perceived in a work of art need not necessarily conform to the meanings that the artist intended to convey by creating it. For instance, the work described as a ‘Hindu goddess Durga’, showing a nude form of a woman with a full-grown human male emerging out of her womb in a sexually explicit manner, can be read as representing the rage of the Devi against the practice of female foeticide. After all, female foeticide is driven by patriarchy. I am not suggesting my reading is the only possible one, I only want to say works of art, by virtue of their special character, allow multiple interpretations, which are themselves a matter for discussion. One should not forget that in the case of Chandramohan, neither the ‘protesters’ nor the police nor even the media thought of consulting the student himself to understand what he wanted to convey.
Second, and more important, pitting blasphemy against freedom of expression — as Arun Jaitley does in ‘Anyone for blasphemy? (IE, May 19) — doesn’t work in the Indian context. For one, the Hindu religion is not a singular religious faith but multiple faiths woven into a structure. The representations of deities have always differed over castes and regions. It is difficult to sustain the notion of blasphemy in a culture as diverse and plural as ours, with its complex visual/textual vocabulary, unless one opts for a simplified and sanitised notion of Hinduism.
Since the ‘real’ issue here involves the sensitive matter of ‘religion’, it may be useful to consider how various deities have been represented in Indian art. Clearly, from time immemorial, the depiction of deities in nude or semi-nude postures was the norm. Besides there were contextual differences in deities installed for worship in a temple and their depiction in, say, a manuscript. The function of an idol of Durgaparameshwari in a temple was different from that of an illustration of it in a manuscript. The point to note is that even when a deity was regarded in a ‘sanctified’ manner within the temple, the artists of an earlier era had the freedom to be creative about depicting it in a work of art.
These visual/textual references of the past have always been part of a modern artist’s idiom. So why is it that now, when an artist uses religious icons in work not meant for a religious purposes, it is found objectionable and blasphemous? Are people becoming narrower in their understanding of culture? Or is it the result of a skewed view of religion by politicians with vested interests? It’s time our political leaders (and followers) educated themselves about their own cultural heritage before it’s too late. It is crucial that they, and we, privilege our cultural diversity rather than espouse simplified notions of art. In fact, if one uses blasphemy as a framework to judge art, much of Indian art/iconography would need to be attacked, not just Chandramohan’s work.
The objections to the art displayed at the Faculty of Fine Arts are not limited to its content, said to ‘hurt religious sentiments’. They are linked to a political process seeking to propagate an elite, upper-caste Hinduism. In this sanitised version, certain deities are elevated to represent a pan-’Hindu’ ethos, being uniformly depicted as bejewelled and clad in rich fabrics. Yet the reality is that in a diverse country like India, with its innumerable customs, rituals, deities, belief systems, on what basis does one decide which deity or custom represents Hinduism?
As a researcher of religious practices, I’ve witnessed many rituals that are sexually explicit. In one ceremony, for instance, the priest of the deity Chamundi/Durga enacts her sexual union with a male devotee; followed by her pregnancy and premature delivery of a baby, which she takes out of her own body. If I were to depict this in one of my paintings, in what way am I insulting Hinduism? Whose sentiments would I be hurting? Or should this ancient ritual itself be considered obscene? Should we allow our moral brigade to set guidelines for our rituals too?
The writer is a research student, Faculty of Fine Arts, Maharaja Sayajirao University, Vadodara
bsubra said
எவ்வளவு தூரம் authentic/உண்மை என்று தெரியாது… தொடர்பான சில தொடுப்பு படங்கள்
சாத்தான் said
ஹுசேனின் படங்களை அவ்வளவாகப் பார்த்ததில்லை. உங்கள் பதிவில்தான் பார்க்க முடிந்தது. படங்களுக்கு நன்றி. அவர் நிஜமாகவே ஒரு நல்ல கலைஞர்தான்.
சாத்தான் said
செக் திஸ் அவுற்: கண்ணனும் கோபிகைகளும்.
சாரி ஃபோர் த ரிலே.
bsubra said
நன்றி சாத்தான்!
bsubra said
From Diwakar Ranganathan in Kaalachuvadu:
பத்தி: சங்க பரிவாரின் கலைத் தேடல் | காலச்சுவடு | – திவாகர் ரங்கநாதன்
சாத்தான் said
சூப்பரு!
Jithu said
vannakam