Tamil Actor Srikanth’s Wedding imbroglio – Engagement canceled?
Posted by Snapjudge மேல் மே 20, 2007
நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ல் திருமணம்
சென்னை, மே 13: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ரோஜாக் கூட்டம் என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த், அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், பார்த்தீபன் கனவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சசி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கும் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் குடியேறிய, சாரங்கபாணி மற்றும் ஷாலினி ஆகியோரது மகள் வந்தனா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது.
வந்தனா
- ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படிப்பையும்,
- ஸ்விட்சர்லாந்தில் ஹோட்டல் மேலாண்மைப் படிப்பையும் முடித்துள்ளார்.
———————————————————————————————
நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் ரத்து
சென்னை, மே 20: நடிகர் ஸ்ரீகாந்த் மணமுடிக்கவிருந்த வந்தனாவின் குடும்பத்தினர் மோசடிப் புகாரில் சிக்கியதையடுத்து இந்தத் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்:
“ரோஜாக்கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி “ஏப்ரல் மாதத்தில்’, “பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங்கபாணி என்பவரின் மகள் வந்தனாவுக்கும் வரும் ஜூன் 18-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
கடந்த வாரம் முதல் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன், தந்தை சாரங்கபாணி ஆகியோர் மீது பல மோசடிப் புகார்கள் வெளிவந்துள்ளன.
சென்னையில் உள்ள காலி மனைகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கவும், அந்த சொத்துக்களின் மீது கடன் பெற்று ஏமாற்றியதாகவும் ஹர்ஷவர்தன் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேளச்சேரி, வள்ளுவர் கோட்டம், தி.நகர், கோட்டூர்புரம் போன்ற இடங்களில் நில மோசடி செய்ததற்காக ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஹர்ஷவர்தன்.
மேலும் உதகையில் “மெரிட் இண்டர்நேஷனல் எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் வந்தனா குடும்பத்துக்கு ஒரு கல்லூரி இருக்கிறது. வந்தனாதான் இக்கல்லூரியின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்தக் கல்லூரியை விரிவுபடுத்த சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சுமார் 12 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அதற்கான தவணையும் சில மாதங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவற்றையெல்லாம் மறைத்த வந்தனாவின் குடும்பத்தினர் தங்களுடைய மகளை ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இதுபற்றி தெரிந்தவுடன் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மணமகள் குடும்பத்தாரின் சமரச பேச்சுவார்த்தை எதுவும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதுகுறித்து ஸ்ரீகாந்தின் தந்தையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
திருமண வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்தன. அதையும் நிறுத்த சொல்லிவிட்டோம். என் மகனின் எதிர்காலம்தான் முக்கியம் என தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே ஸ்ரீகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
—————————————————————————————-
ஸ்ரீகாந்தையே மணப்பேன்:வந்தனா சபதம்
சென்னை, மே 21: என் மீதான களங்கத்தைப் போக்கி குற்றமற்றவள் என நிரூபித்து, ஸ்ரீகாந்தை மணம் முடிப்பேன் என்று வந்தனா நம்பிக்கையுடன் கூறினார்.
இந்நிலையில் நிருபர்களிடம் வந்தனா ஞாயிற்றுக்கிழமை கூறியது:
கடந்த சில நாள்களாக, என் குடும்பத்தினர் பற்றி வெளிவரும் செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மணப்பெண் என்ற முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னிடம் போலீஸôர் விசாரணை நடத்தவில்லை.
நான் எந்தவொரு வங்கியிலும் கடன் பெறவில்லை. யார் வாங்கிய கடனுக்கு ஒப்புதலோ, உத்தரவாதமோ கொடுக்கவில்லை. கடன் பத்திரத்தில் கையெழுத்து கூட போடவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி என் மீது வழக்குத் தொடர முடியும்.
எனக்கும், ஸ்ரீகாந்துக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த யாரோ திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள் என நினைக்கின்றேன்.
சகோதரருடன் தொடர்பில்லை: எனது சகோதரர் ஹர்ஷவர்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறார். எனது நிச்சயதார்த்தத்துக்குகூட அவர் வரவில்லை. அவரோடு எனக்கோ, எங்கள் குடும்பத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரது செயல்பாடுகளை எங்களோடு இணைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
எனது குடும்பமும், ஸ்ரீகாந்த் குடும்பமும் ஒன்றாக உட்கார்ந்து பேசித்தான் திருமணத்தை முடிவு செய்தோம். அதேபோன்று இப்போது புதிதாக தோன்றியுள்ள பிரச்சினைகளையும் இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்.
என் மீது இப்போது ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கி, குற்றமற்றவள் என்பதை நிரூபித்து, ஸ்ரீகாந்த்தை மணப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஸ்ரீகாந்த் புத்தி கூர்மை உள்ளவர். இப்போதுள்ள சூழ்நிலையை அவர் நன்கு புரிந்து கொண்டு, என்னையும் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் வந்தனா.
———————————————————————————————
நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும்: போலீஸ் அதிகாரி தகவல்
சென்னை, ஜுன். 15-
நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.
அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.
இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.
ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.
இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.
காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந் தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார்.
“இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.
அப்போது அவர், “ஸ்ரீகாந் துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.
இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.
அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
———————————————————————————————
பேசி தீர்க்க வேண்டியதை தெருவுக்கு இழுத்து விட்டனர்: ஸ்ரீகாந்த் சித்தப்பா பேட்டி
சென்னை, ஜுன். 15-
வந்தனாவின் அதிரடி வருகையால் ஸ்ரீகாந்தும் அவர் பெற்றொரும் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். தற்போது அங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா நரசிம்மன் மட்டுமே உள்ளார்.
அவர் கூறியதாவது:-
எங்களது சொந்த ஊர் திருப்பதி. நாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் கூட திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான மரியாதையுடன் தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பம் ஆச்சாரமானது.
ஸ்ரீகாந்த் வந்தனாவை மிகவும் விரும்பினான். எனவேதான் நாங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். பிறகுதான் வந்தனா குடும்பத்தினர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வந்தனாவிடம் கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறைத்து விட்டார். திருமணத்துக்கு முன்பே இப்படி உண்மைகளை மறைப்பவர் திருமணத்துக்குப் பிறகு எப்படி இருப்பாரோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவேதான் திருமணத்தை தடை செய்தோம்.
நேற்று முன்தினம் வந்தனா திடீரென்று எங்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார். நாங்கள் அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறோம்.
இவ்வாறு நரசிம்மன் வேதனையுடன் கூறினார்.
மனித உரிமைகள் கழக மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா கூறியதாவது:-
வந்தனா எங்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே புகார் கூறி இருந்தார். திடீரென அவர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்றதை இன்று காலை பத்திரிகைகளில் பார்த்து அறிந்தோம். இன்று காலை அவரை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறினார். ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்துக்கு ஆதாரம் உள்ளது.
எனவே நாங்கள் ஸ்ரீகாந்துடன் வந்தனாவை சேர்த்து வைப்போம். போலீஸ் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிய காத்து இருக்கிறோம்.
இவ்வாறு கல்பனா கூறினார்.
——————————————————————————————-
கோவிலில் தாலி கட்டினார்: நடிகர் ஸ்ரீகாந்த் திருமண படங்கள் வந்தனா வெளியிட்டார்- பரபரப்பு பேட்டி
சென்னை, ஜுன். 15-
ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.
இவர் வடபழனி குமரன் காலனியில் தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அண்ணாநகர் `கே’ பிளாக்கில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனா (வயது24)-வை காதலித்து வந்தார். முதலில் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு சமரசம் ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது சி.பி.ஐ. போலீசில் மோசடி வழக்குகள் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடக்காது என்று ஸ்ரீகாந்த் பெற்றோர் அறிவித்தனர்.
திருமண முறிவு ஏற்பட்டதால் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்தார். காதலி வந்தனாவுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். வந்தனா எவ்வளவோ முயன்றும் ஸ்ரீகாந்த் பேசவில்லை. என்றாலும் மனம் தளராத வந்தனா “ஸ்ரீகாந்தை திருமணம் செய்தே தீருவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று சபதம் செய்தார்.
கடந்த சில தினங்களாக அவர் நிறுபூத்த நெருப்பு போல மனம் குமுறியபடி இருந்தார். நேற்று முன்தினம் பெட்டி படுக்கைகளுடன் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து விட்டார்.
ஸ்ரீகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறிய அவர் இனி இந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார். ஸ்ரீகாந்த் மனைவி போல அந்த வீட்டில் சுற்றி வந்தார். அதோடு ஸ்ரீகாந்த் பெற்றோரையும் மிரட்டும் வகையில் பேசினார்.
வந்தனா இந்த ரகளையில் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி அவர் பெற்றோரும் ஆடி போய் விட்டனர். இது தொடர்பாக அவர்கள் வடபழனி போலீசில் நேற்று புகார் செய்தனர்.
பெண் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்தார். நேற்றிரவு நேரமாகி விட்டதால் இன்று காலை அவர்கள் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.
வந்தனாவிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து வெளியேற வந்தனா மறுத்து விட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக ஒரு போலீஸ் உயர்அதிகாரி கூறியதாவது:-
நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.
அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத் துள்ளார்.
இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.
ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.
இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.
காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார். “இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.
அப்போது அவர், “ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.
இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.
அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
இந்நிலையில் வந்தனாவின் தாய் ஷாலினி வடபழனி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகளை ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், வந்தனாவின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த புகார் மனு மீது இன்று மதியம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் விசாரணை நடத்தினார். ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தங்கிருந்த வந்தனாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்டனர் என்று கூறியிருப்பதால் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் வந்தனா தாயார் பேட்டி
ஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் என்று வந்தனாவின் தாய் கூறினார்.
ஸ்ரீகாந்தின் வீட்டில் வைத்து வந்தனாவின் தாய் ஷாலினி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமணம் முடிந்த பிறகு ஸ்ரீகாந்த் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்படி தங்கும் நாட்களில் ஸ்ரீகாந்தும், வந்தனாவும் கணவன்- மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.
எங்களை பொறுத்தவரை ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் முடிந்து விட்டது. எனவே இதில் நாங்கள் மறுப்பு எதுவும் சொல்ல முடியாது. எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்த், அக்கா என்று அழைக்கும் கீதாவின் மீதும் வழக்கு உள்ளது.
எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது எனது மகளிடம் இருந்து ஸ்ரீகாந்தை பிரித்து விவாகரத்து வாங்கும் முயற்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
———————————————————————————————-
bsubra said
திருமணம் நடந்தது உண்மைதான்: ஸ்ரீகாந்த்
எனக்கும், வந்தனாவுக்கும் திருமணம் நடந்தது உண்மைதான் என நடிகர் ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எனக்கும், வந்தனாவுக்கும் திருமணம் நடந்தது உண்மைதான். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளும், நிர்பந்தங்களுமே அந்தத் திருமணத்துக்குக் காரணம். ஆனால் நாங்கள் ஒருபோதும் கணவன்-மனைவியாக வாழவில்லை.
எங்களுடைய திருமணத்தை ஊர் அறிய நடத்த வேண்டும் என்று விரும்பியே திருமண தேதியை முடிவு செய்தோம். ஆனால் அந்த சமயத்தில் வந்தனா குடும்பத்தாரைப் பற்றி வெளியான சில தகவல்கள் எங்கள் குடும்பத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பிறகே எங்களுக்கு ஊரறிய நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்தினோம்.
ஆனால் புதன்கிழமை இரவு திடீரென எங்கள் வீட்டுக்கு வந்த வந்தனா இனி இங்குதான் இருப்பேன் என்று கூறினார். எங்களுக்கு மிரட்டல்களும் வந்தன. எங்கள் குடும்பத்தினர் மீது கூறிய புகார்களிலும் உண்மை இல்லை.
எங்கள் குடும்பத்தார் யாரும் அவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தவில்லை. இதுபற்றி காவல்துறையிடம் நாங்களும் புகார் செய்திருக்கிறோம். இந்தப் பிரச்னையையும், திருமணம் சம்பந்தப்பட்ட விஷயத்தையும் நான் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்.
வந்தனா எங்கள் வீட்டில் இருக்கும்வரை எங்கள் குடும்பத்தினர் யாரும் அந்த வீட்டுக்கு செல்ல மாட்டோம் என்றார்.
bsubra said
வந்தனா தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை தந்தை மறுப்பு
சென்னை, ஜுன்.17-
ஸ்ரீகாந்தை கைப்பிடித்தே தீருவேன் என்று கூறி கடந்த புதன்கிழமை முதல் ஸ்ரீகாந்தின் வீட்டிலேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் வந்தனா. நேற்று முன்தினம் ஸ்ரீகாந்தை பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும் பர பரப்பாக பேட்டியளித்த அவர் நேற்று நிருபர்களை சந்திப் பதையே தவிர்த்தார்.
இந்நிலையில் அவர் தற் கொலைக்கு முயற்சி செய்த தாக கூறப்பட்டது.
இது தொடர்பாக வந்தனா வின் தந்தை சாரங்கபாணி கூறியதாவது:-
எங்களது மகள் வந்தனா தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை. ஸ்ரீகாந்தை கைப்பிடித்தே தீருவேன் என்பதில் உறுதியாக இருக்கும் அவர் எந்த சூழ்நிலையிலும் அப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டார்.
எனவே வந்தனா தற் கொலைக்கு முயன்றார் என்று கூறுவதில் உண்மையில்லை. எங்களுக்கு எதிராக யாரோ கிளப்பி விடப்பட்ட வதந்திஇது. இவ்வாறு அவர் கூறினார்.
bsubra said
வந்தனாவை பிரிய விவாகரத்து வழக்கு: ஸ்ரீகாந்த் நாளை ஐகோர்ட்டில் மனு
சென்னை, ஜுன். 17
ஸ்ரீகாந்த்-வந்தனா இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. வந்தனாவை விட்டு கோர்ட்டு மூலம் முறைப்படி பிரியப் போவதாக ஸ்ரீகாந்த் அறிவித்து உள்ள நிலையிலும் வந்தனாவோ ஸ்ரீகாந்த்தின் வீட்டிலேயே கடந்த 5 நாட்களாக முடங்கி கிடக்கிறார்.
அவர் எப்படியும் ஸ்ரீகாந்தை, கைப்பிடித்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். வடபழனி போலீசில் வந்தனாவின் தாயார் ஷாலினி, ஸ்ரீகாந்துடன் எனது மகளை சேர்த்து வைத்தால் போதும் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த புகார் மனு மீது தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று மாலை வடபழனி உதவி கமிஷனர் சேதுவின் அலுவலகத்துக்கு ஸ்ரீகாந்த் விசாரணைக்காக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஏராளமான பத்திரி கையாளர்களும் அங்கு குவிந் திருந்தனர். ஆனால் ஸ்ரீகாந்த் நேற்று வர வில்லை.
நாளை அவர் விசார ணைக்காக போலீசார் முன்பு ஆஜராகிறார். அப்போது அவரிடம் வந்தனாவுடன் ஏற்பட் டுள்ள விரிசல் தொடர் பாக வடபழனி உதவி கமிஷனர் சேது விசாரணை நடத்துகிறார். மேலும் ஸ்ரீகாந்த் அக்கா என்று அழைக்கும் கீதா குறித்தும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்து கிறார்கள்.
இதற்கிடையே வந்தனாவை விட்டு சட்டப்படி பிரிவதற்காக ஸ்ரீகாந்த் ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் முறைப் படி விவாகரத்து வழக்கு தொடர்கிறார். காலையில் கோர்ட்டில் விவாகரத்து வழக்கை தொடரும் அவர் அதன் பிறகு போலீசார் முன்பு ஆஜராகிறார்.
நாளை நடை பெறும் விசாரணை குறித்து வடபழனி உதவி கமிஷனர் சேதுவிடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:-
வந்தனாவின் தாய் கொடுத் துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீகாந்தை அழைத்திருந்தோம். நேற்று மாலை அவர் விசாரணைக்காக வருவாëர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வரவில்லை. நாளை விசாரணைக்காக ஸ்ரீகாந்த் வருவார் என்று அவரது வக்கீல் கூறியுள் ளார்.
ஸ்ரீகாந்திடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகுதான் இந்த விவகாரத்தில் மேற் கொண்டு என்ன செய்வது என்று முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
bsubra said
“மனைவியாக ஏற்கும் வரை வெளியேற மாட்டேன்: ஸ்ரீகாந்த் வீட்டில் 5-வது நாளாக போராடும் வந்தனா
சென்னை,ஜுன். 17-
தமிழ் திரையுலகில் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் ஸ்ரீகாந்த் ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்டபடங்களில் நடித்துள்ள இவருக்கும், சென்னை அண்ணாநகரை சேர்ந்த தொழில் அதிபர் சாரங்கபாணியின் மகள் வந்தனாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த மாதம் 18-ந்தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வந்தனாவின் குடும்பத்தினர் மீது மோசடி வழக்குகள் இருப்பதாகவும், இது தொடர் பாக சிபிஐ விசாரணை நடை பெற்று வருகிறது என்றும்தகவல் வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீகாந்த்குடும்பத்தினர் வந்தனாவுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறாது என்று அறிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டு களை மறுத்த வந்தனா மற்றும் அவரது பெற்றோர் ஸ்ரீகாந்த் குடும்பத்தினருடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
இதன் பிறகும் இருதரப்பினருக்கும் அடையே சமாதான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக கடந்த 13-ந்தேதி வந்தனா திடீரென ஸ்ரீகாந்தின் வீட்டில் அதிரடியாக குடிபுகுந்தார். இதனை சற்றும் எதிர் பாராத ஸ்ரீகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வந் தானாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இப்போது வீட்டை விட்டு வெளியில் போ, எல்லாவற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என் றனர்.
ஆனால் அவர்களின் பேச்சை கேட்காத வந்தனா பெட்டி படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டின்வரவேற்பு அறையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்தின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி வடபழனி உதவி கமிஷனர் சேதுவிடம் புகார் தெரிவித்தனர்.
இப்புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தனா செயல்பட்டார்.
ஸ்ரீகாந்தின் வீட்டிலேயே நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்று கூறி திருமண போட்டோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற் படுத்தினார். மேலும் வீட்டக்குள்ளேயே அமர்ந்து தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார்.
வந்தனா தங்களது வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டை விட்டு வெளியில் சென்ற ஸ்ரீகாந்தும் அவரது பெற்றோரும் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர் கள் சென்னையிலேயே வெளியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
வந்தனாவின் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் பேட்டியளித்த ஸ்ரீகாந்த்க்கும் வந்தனாவுக்கும் திருமணம் நடந்தது உண்மைதான் என் பெற்றோரையே வரதட்சணை வழக்கில் சிக்க வைக்க நினைக்கும் வந்தனாவை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றும் கோர்ட்டு மூலம் விவாகரத்து பெற்று வந்தனாவை பிரியபோகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வந்தனா ஸ்ரீகாந்த் வீட்டிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று 5-வது நாளாக ஸ்ரீகாந்தை கைப்பிடிப்பதற்காக அவர் போராடி வருகிறார்.
கடந்த 13-ந்தேதி ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்த வந்தனா அதன் பிறகு வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிகிடக்கிறார்.
ஸ்ரீகாந்துடன் தன்னால் இணைந்து வாழ முடியுமா என்ற ஏக்கத்தில் அவர் சரியாக சாப்பிடவில்லை. உண்ணாமல் உறங்காமல் ஸ்ரீகாந்துக்காக காத்தக் கிடக்கிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போதும் கூட ஸ்ரீகாந்த் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்னை அவருடன் சேர்த்து வைத்தால் போதும் என்று தான் கூறுகிறார். இதனை ஏற்றுக்கொண்ட வடபழனி மகளிர் போலீசாரும் இருவரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே ஸ்ரீகாந்த் வீட்டில் வந்தனாதூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அதை அவரது தாயார் தடுத்ததாகவும் புரளி கிளப்ப பட்டது. இதை அவரது தந்தை சாரங்கபாணி மறுத்தார்.
“வந்தனா தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை. ஸ்ரீகாந்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காத்தான் அவர் அங்கே தங்கி உள்ளார். எங்களுக்கு எதிராக யாரோ இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்” என்றார்.
bsubra said
கணவன்-மனைவியாக வாழ்ந்தோம்; ஸ்ரீகாந்த்துக்கும் எனக்கும் தாம்பத்ய உறவு இருந்தது, `மருத்துவ சோதனைக்கு தயார்’ என்கிறார் வந்தனா
ஸ்ரீகாந்த்துக்கும், எனக்கும் தாம்பத்ய உறவு இருந்தது. அதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என்று வந்தனா கூறினார். நடிகர் ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்ட வந்தனா, அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்று கூறி ஸ்ரீகாந்த் வீட்டில் 15 நாட்களுக்கும் மேலாக தங்கியிருக்கிறார்.
நடிகர் ஸ்ரீகாந்த்தோ, வந்தனாவை விவாகரத்து செய்ய திட்டமிட்டு குடும்ப நலக் கோர்ட்டு படி ஏறியிருக்கிறார். இந்த நிலையில், வாரப் பத்திரிகை ஒன்றுக்கு வந்தனா பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி வருமாறு:-
கேள்வி: நீங்களும், ஸ்ரீகாந்த்தும் ஜாலியாக வெளியில் ஊர் சுற்றியதுண்டா?…
பதில்: ஸ்ரீகாந்த் ஒரு நடிகர் என்பதால் மற்றவர்களைப் போல் சாதாரணமாக வெளியில் போக முடியாது. எங்காவது போகவேண்டும் என்றால், காரில் போய் காரிலேயே உட்கார்ந்து பேசிவிட்டு வந்துவிடுவோம். எங்களுக்கு மே மாதம் நடக்கவிருந்த திருமணத்திற்காக ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க, நானும், ஸ்ரீகாந்த்தும் மற்றும் சில நண்பர்களும் விமானத்தில் வெளிநாட்டுக்குப் போய் வந்தோம்.
கேள்வி: உங்களுக்கும் ஸ்ரீகாந்த்துக்குமான உறவு எப்படி இருந்தது?
பதில்: நாங்கள் இரண்டு வருடம் காதலர்களாக இருந்தோம். காதலர்களாக இருந்தவரை ஜாலியாகப் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்போமே தவிர, எங்களுக்குள் எந்தத் தவறும் நடக்கவில்லை.
தாம்பத்திய உறவு
பிப்ரவரி 7-ந் தேதி எங்களுக்குத் திருமணம் நடந்தது. அதன் பிறகு நாங்கள் ஏறக்குறைய கணவன் மனைவியாகவே வாழத் தொடங்கினோம். எங்களுக்குள் தாம்பத்திய உறவு உள்பட எல்லாமும் இருந்தது. அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதும் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதும் சகஜமாகி விட்டது. ஆனால் எல்லாவற்றையும் அவர் மறந்து விட்டு இப்போது விவாகரத்துக் கேட்டு கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.
எங்களின் திருமணம் வெறும் நிச்சயதார்த்தத்துடன் நின்று விட்டிருந்தால் கூட, நான் வேறு ஒரு ஆணையும், அவர் வேறு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு பிரிந்திருக்கலாம். ஆனால் எங்களுக்குள் கல்யாணம் நடந்து, எல்லாமும் முடிந்த பிறகு, இப்படி அவர் என்னை விட்டு விட நினைப்பதில் கொஞ்சம் கூட நியாயமே இல்லை.
மருத்துவ சோதனைக்கு தயார்
ஒருவேளை, எங்களின் உறவை சட்டப்படி நிரூபிக்க வேண்டும் என்றாலும் நான் எந்தவிதமான மருத்துவ பரிசோதனைக்கும் உட்படத் தயாராக இருக்கிறேன். மொத்தத்தில் நான் என் கணவருடன் சேர்ந்து வாழவேண்டும். இதுதான் என் ஒரே குறிக்கோள். மேற்கண்டவாறு அந்தப் பேட்டியில் வந்தனா கூறியுள்ளார்.
simbu said
More informations about Actor Simbu