Actors Activism – Is it for selfish purposes? (Dinakaran Survey)
Posted by Snapjudge மேல் மே 10, 2007
நடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை…
சினிமா மீது தமிழர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. நடிகர்களுக்காக எதையும் செய்ய பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு நடிகர்கள்…?
ஆம்… அதை பற்றித்தான் தமிழக மக்களிடம் கேட்கப்பட்டது. நடிகர்களுக்கு, நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை எப்படி என்பதுதான் கேள்வி.
மக்களிடம் நடிகர்கள் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்குத்தான் என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சரியாக பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.
- நடிகர்களின் அக் கறையில், தங்கள் படம் ஓட வேண்டும் என்ற சுயநலம் கலந்து இருக்கிறது என்கின்றனர் மக¢கள்.
- Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்Õ மக்கள் மீது நடிகர்கள் அக்கறையை கொட்டுகின்றனர் என்பது 31 சதவீதம் பேரின் கருத்து.
- நடிகர்களின் அக்கறை `உண்மையானது‘ என்று முழுமையாக நம்புபவர்கள் 14 சதவீதம் பேர் மட்டும்தான்.
- இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காதவர்கள¢ 5 சதவீதம் பேர்.
நடிகர்களின் அக்கறையை விளாசித் தள்ளியவர்களில் நாகர்கோவில் மக்களுக்குத்தான் முதலிடம். அங்கு 65 சதவீதம் பேர், படம் ஓடுவதற்காகத்தான் நடிகர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என அதிரடியாக கூறி உள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக சென்னைவாசிகள் நடிகர்களை காய்ச¢சி எடுக்கிறார்கள். 58 சதவீத சென்னைவாசிகளுக்கு நடிகர்கள் அக்கறையின் பின்னணி புரிந்திருக்கிறதாம்.
வேலூர் (55 சதவீதம்), சேலம் (52), கோவை (48), திருச்சி (52), மதுரை (51), நெல்லை (43) பகுதிகளிலும் இந்த கருத்துதான் அதிகம் நிலவுகிறது.
புதுவை மக்களில் 30 சதவீதம் பேர் படம் ஓட வேண்டும் என்பதுதான் நடிகர்களின் அக்கறைக்கு காரணம் என கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர், அவர்களின் அரசியல் ஆசையை காரணம் காட்டுகின்றனர்.
நடிகர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறை Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்‘ என ஒரே போடாக போடுபவர்கள் கொங்கு மண்டலத்தினர்தான். கோவைவாசிகளில் 42 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். சென்னையில் இப்படிச் சொன்னவர்கள் 30 சதவீதம் பேர். வேலூர் (37 சதவீதம்), சேலம் (27), திருச்சி (26), மதுரை (30), நெல்லை (30), நாகர்கோவில் (21 சதவீதம்).
நடிகர்கள் அக்கறை நிஜமானதுதான் என அதிகம் நினைப்பவர்கள் நெல்லை சீமையினர்தான். அங்கு 26 சதவீதம் பேர் நடிகர்களின் அக்கறையை பார்த்து நெகிழ்கின்றனர். அதற்கு அடுத்து திருச்சி மக்களில் 18 சதவீதம் பேர் இம்மாதிரி உருகுகின்றனர். நடிகர்கள் அக்கறை உண்மையானது என¢பதில் நம¢பிக்கையில்லாதவர்களாக வேலூர், கோவைவாசிகள் உள்ளனர். இப் பகுதிகளில், 8 சதவீதம் பேர்தான் நடிகர்களின் அக்கறையை நம்புகின்றனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்