An Exit Strategy For Wolfowitz?
Posted by Snapjudge மேல் மே 8, 2007
உலக வங்கி தலைவரின் நெருங்கிய சகா இராஜினாமா
![]() |
![]() |
உலக வங்கி தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார் |
உலக வங்கியின் தலைவரான பால் வூல்போவிட்ஸ் அவர்களின் நெருங்கிய சகா ஒருவர் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார்.
உலக வங்கியின் தலைமையச் சூழ்ந்துள்ள தற்போதைய நிலவரம், உலக வங்கி தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதை சிரமமாக்கியுள்ளதாக, கெவின் கீலம்ஸ் என்னும் அந்த சகா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தனது சினேகிதிக்கு பணியுயர்வை ஏற்பாடு செய்தார் என்ற சர்ச்சை தொடர்பில் வூல்போவிட்ஸ் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற அழைப்பை எதிர்கொண்டு வருகிறார்.
===============================================
காதலிக்கு பதவி உயர்வு: உலக வங்கியின் விதிகளை தலைவர் மீறியது கண்டுபிடிப்பு
வாஷிங்டன், மே 9: உலக வங்கியின் தலைவர் பால் உல்ஃபோவிட்ஸ், தனது காதலிக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கொடுத்ததன் மூலம் வங்கியின் விதிகளை மீறியிருப்பதை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.
2005-ம் ஆண்டில் உலக வங்கியின் ஊழியரும் காதலியுமான ஷாஹா ரைஸô என்பவருக்கு வங்கியின் விதிகளுக்கு புறம்பாக பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் உல்ஃபோவிட்ஸ் பதவி விலகுமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறார்.
உல்ஃபோவிட்ஸின் உயர் ஆலோசகர் கெவின் கெல்லம்ஸ் பதவி விலகப்போவதாக திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த நிலையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
“வங்கியை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்வது என்பது தற்போதைய சூழ்நிலையில் கடினமானதாக இருக்கும். எனவே வேறு வாய்ப்புகளுக்காக வெளியேற முடிவு செய்து விட்டேன்’ என்று கெல்லம்ஸ் கூறினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்