Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மே 4th, 2007

Cash-rich BCCI has not paid cricketers for last 7 months

Posted by Snapjudge மேல் மே 4, 2007

7 மாதமாக சம்பளம் வாங்காத கிரிக்கெட் வீரர்கள்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரப்படவில்லையாம். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக தோற்றுத் திரும்பியதால், சம்பளப் பாக்கியைக் கேட்க முடியாமல் கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகிறார்களாம்.

உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியம்தான். இந்திய கிரிக்கெட் வீரர்கள்தான் உலகிலேயே அதிக அளவில் சம்பளம் பெறுகிறவர்கள். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கும் உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு சம்பளத்தை அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் கூட இந்தியர்களின் எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் சரி, வீரர்களும் சரி நடந்து கொள்வதில்லை (நடந்து கொள்ளப் போவதும் இல்லை).

இந்த நிலையில், இந்திய வீரர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் தரவில்லையாம். கடந்த அக்டோபரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபிப் போட்டியிலிருந்து உலகக் கோப்பைப் போட்டி வரை இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சம்பளம் தரப்படாமல் உள்ளதாம்.

இடைப்பட்ட காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்று திரும்பியது. இந்தியாவில் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் தொடர்களில் ஆடியுள்ளது.

சம்பளப் பாக்கி குறித்து வாரியத்தின் பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், சம்பளத்தை நிறுத்தியெல்லாம் வைக்கவில்லை. வீரர்களின் காண்டிராக்ட் கையெழுத்தானதும் நிலுவையில் உள்ள சம்பளம் கொடுக்கப்பட்டு விடும்.

ஒப்பந்தம் இன்னும் தயாராகாததால்தான் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இது ஒரு பிரச்சினையே அல்ல என்றார்.
சம்பளப் பாக்கி குறித்து வீரர்களிடையே அதிருப்தி நிலவினாலும் கூட உலகக் கோப்பைப் போட்டியில் கேவலமாக ஆடி விட்டுத் திரும்பியுள்ளால் சத்தம் போட்டு கேட்க தயங்கிக் கொண்டிருக்கின்றனராம்.

இதற்கிடையே, வங்கதேச டூருக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்பு வரை வீரர்களை தர வாரியாகப் பிரித்து ஆளுக்கு ஒரு சம்பளத்தைக் கொடுத்து வந்தது வாரியம்.

அதன்படி சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், ஷேவாக் போன்றோருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக தரப்பட்டது. மற்ற வீரர்களுக்கு ரூ. 35, ரூ. 29 லட்சம் என சம்பளம் தரப்பட்டது.

இப்போது அதை அப்படியே மாற்றி விட்டு புதிதாக ஒரு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் தயாரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இன்னும் இந்திய வீரர்கள் கையெழுத்திடவில்லை. வங்கதேச சுற்றுப்பயணத்துக்குப் பின்னரே இது கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

எனவே வங்கதேச டூரில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 5 லட்சம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இதுதவிர போனஸ், போட்டிக்கான கட்டணம் தனியாம். போட்டியில் வெற்றி பெற்றால் போனஸ் தரப்படும். தொடரை வென்றால் இன்னொரு போனஸ் உண்டாம்.

Posted in 2007, Bangladesh, BCCI, Cash, Champions, Cricket, cricketer, cricketers, Dravid, Ganguly, months, Sachin, South Africa, Sri lanka, Srilanka, Tendulkar, Trophy, WC, West Indies | Leave a Comment »

Explosions destroy 20 music shops in Pakistan

Posted by Snapjudge மேல் மே 4, 2007

பாகிஸ்தானின் வடமேற்கில் தொடர் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் வரைப்படம்
பாகிஸ்தான் வரைப்படம்

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் இசை குறுந்தகடுகள், திரைப்படங்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு டஜனுக்கும் அதிகமான கடைகள் சேதமடைந்துள்ளன.

இஸ்லாத்திற்கு எதிரான விடயங்கள் என்று தாங்கள் கருதுபவைகளுக்கு, விடயங்களுக்கு எதிராக தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று போலத் தோன்றுகிறது.

தாங்கி, மற்றும் சார்சட்டா ஆகிய இடங்களில் உள்ள கடைகள் சேதமடையக் காரணமான இந்தக் குண்டுகளை யார் வைத்திருக்கக் கூடும் என்பது குறித்து தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிசார் கூறுகின்றனர்.

சார்சட்டாவில் சென்ற வாரம் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருபத்து எட்டு பேர் கொல்லப்பட்டனர், இதில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 

Posted in Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Audio, Blasts, Bomb, Charsadda, Commerce, DVD, Economy, Explosions, Home, Interior, Islam, markets, Minister, music, Muslim, North West Frontier Province, NorthWest, Pakistan, Peshawar, Shops, Taleban, Taliban, Tehrik, Tehrik Taliban, Tungi, VCD, VCDs, video | Leave a Comment »

MGR Film University to spend Rs. 2.2 cr on Infrastructure Improvements

Posted by Snapjudge மேல் மே 4, 2007

எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள்

சென்னை, மே 4: சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று செய்தித் துறை செயலர் து. ராசேந்திரன் தெரிவித்தார்.

இந் நிறுவனத்தின் 47-வது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நவீன தொழில்நுட்ப சாதனங்கள், கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ. 1.50 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் டி.டி.எஸ். மற்றும் டால்பி டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கூடம் ரூ. 72 லட்சத்தில் அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும்.

இதே போல ரூ. 36 லட்சத்தில் ரி-ரெக்கார்டிங் தியேட்டர் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர நடப்பு ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அதிநவீன கேமிராக்கள்: ஒளிப்பதிவுத் துறை மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் கேமிராக்களில் அதிநவீன சினிமாஸ்கோப் லென்ஸ்கள் விரைவில் பொருத்தப்படும்.

இதுதவிர 6 ஸ்டில் கேமிராக்கள் மற்றும் ஒரு விடியோ கேமிரா வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் ராஜேந்திரன்.

முன்னதாக விழா சிறப்பு மலரை வெளியிட்டு, சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு விருதுகளை செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வழங்கினார்.

  • செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி. கோசலராமன்,
  • தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன்,
  • கல்லூரியின் முன்னாள் இயக்குநர் அமிர்தம்,
  • கல்லூரி முதல்வர் ந. ரமேஷ்,
  • மாணவர் பேரவைத் தலைவர் பா. நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Posted in 70MM, AC, Advanced, Amirtham, Awards, Camera, Cinema, Cinemascope, College, Courses, Digital, Dolby, DTS, Editing, Editor, Education, Gadgets, infrastructure, Instruments, iRaama Narayanan, MGR, Movies, Photography, Plans, Prizes, Raama Narayanan, Re-recording, Study, Technology, Television, Tharamani, TV, University, Varsity, video | Leave a Comment »

New meter not yet installed in 8,000 Auto Rikshaws in Chennai

Posted by Snapjudge மேல் மே 4, 2007

காலக்கெடு முடிந்த பின்பும் மீட்டர் திருத்தப்படாத 8,000 ஆட்டோக்கள்

சென்னை, மே 4: சென்னை நகரில் காலக்கெடு முடிந்த பின்பும், புதிய கட்டண விகிதப்படி, 8,000 ஆட்டோக்களில் மீட்டர் திருத்தப்படவில்லை என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் 45,000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில், 30,666 ஆட்டோக்கள் டிஜிட்டல் மீட்டரிலும், 14,775 ஆட்டோக்கள் மெக்கானிக்கல் மீட்டரிலும் இயங்குகின்றன. புதிய ஆட்டோ கட்டண விகிதப்படி, இந்த மீட்டர்களைத் திருத்த காலக்கெடு விதிக்கப்பட்டது.

அதன்படி, டிஜிட்டல் மீட்டர்களைத் திருத்த கடந்த மார்ச்சும், மெக்கானிக்கல் மீட்டர்களைத் திருத்த ஏப்ரல் 25-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இரண்டு வகையான மீட்டர்களைத் திருத்தவும் காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், 7,944 ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர்கள் திருத்தப்படவில்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தாமதம் ஏன்?ஏப்ரல் 25-ம் தேதியுடன் காலக்கெடு முடிந்த போதும், எத்தனை மீட்டர்கள் திருத்தப்பட்டுள்ளது என்ற தகவலை ஒருவாரம் ஆகியும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அளிக்கவில்லை.

“”இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், புதிய ஆட்டோ கட்டண விகிதத்தை அமல்படுத்துவதில் அதிகாரிகளே போதிய அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது. மீட்டர் திருத்தம் குறித்த தகவல்களையே உடனடியாகத் தெரிவிக்காதவர்கள், புதிய கட்டண விகித அமலாக்கத்தில் எவ்வாறு அக்கறை காட்டுவார்கள்” என்று ஆட்டோ பயணிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Posted in Airports, Auto, Autorikshaws, Autos, Chennai, Diesel, Economy, Gas, Govt, Inflation, Madras, meter, metre, Metropolitan, Petrol, Prices, Transport, Transportation | Leave a Comment »

Thinking Loud Authors – Celebrations & Book Release Function

Posted by Snapjudge மேல் மே 4, 2007

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்க முப்பெரும் விழா

சென்னை, மே 4: உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் “திரை’ என்ற தலைப்பில் கவிஞர் பூவை அமுதன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராதைமணாளன் எழுதிய என் வாழக்கைப் பாதையிலே, கவிஞர் துருவன் எழுதிய தொலைதூரக் கடிதங்கள் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன. நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் இரு நூல்களையும் வெளியிட்டார்.

குத்தம்பாக்கம் கிராம இளைஞர் மன்றத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை கார்முகிலன் வழங்கினார். 81வது பிறந்தநாள் கண்ட சீனி.திருநாவுக்கரசு, திலகம் திருநாவுக்கரசு தம்பதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

  • எழுத்தாளர் பாலதிரிபுரசுந்தரி,
  • உரத்த சிந்தனை நிறுவன தலைவர் எஸ்.வி.ராஜசேகர்,
  • செயலாளர் உதயம்ராம்,
  • ஒருங்கிணைப்பாளர்கள் சீ.மோகன்,
  • கே.ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Posted in Poet, Poovai Amudhan, Poovai Amuthan, Radha Manalan, Radhai Manaalan, Radhai Manalan, Thirai | Leave a Comment »

Stem Cells Research – Current Developments in Medicine, Science

Posted by Snapjudge மேல் மே 4, 2007

ஸ்டெம் செல் புரட்சி!

கு. கணேசன்

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயனாக அலோபதி மருத்துவம் அவ்வப்போது புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை, மூட்டுமாற்று அறுவைச் சிகிச்சை, லேசர் சிகிச்சை என்று தொடரும் இவ்வரிசையில் இப்போது “ஸ்டெம் செல் சிகிச்சை’ புதிதாகச் சேர்ந்துள்ளது.

“ஸ்டெம் செல்கள்’ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் “செல்கள்’ பற்றிய முன்னுரை தேவைப்படுகிறது. செங்கல் செங்கல்லாக அடுக்கிக் கட்டப்பட்ட கட்டடம்போல் கோடிக்கணக்கான செல்களால் அடுக்கப்பட்டது, நம் உடல்.

ஆனால் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு விதம். உதாரணமாக, மூளையின் செல்லுக்கும் முடியின் செல்லுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவற்றின் அமைப்பு வேறு, அளவு வேறு, நிறம் வேறு, குணம் வேறு, செயல் வேறு. தாயின் கருவில் ஒற்றை செல்லில் உருவாகத் தொடங்கும் நம் உடலுக்கு எப்படி இது சாத்தியம்? காரணம், “ஸ்டெம் செல்’கள்.

“ஸ்டெம் செல்’கள் என்பவை நம் உடலின் ஆரம்ப செல்கள். ஆதார செல்கள். விதை செல்கள். தாயின் கருப்பையில் கரு உருவாகும் போது உண்டாகும் முதல் செல்கள். இந்தச் செல்களுக்குக் குறிப்பிட்ட “முகம்’ கிடையாது. உடலின் தேவைக்கேற்ப இவை தங்களுடைய அமைப்பை மாற்றிக் கொள்ளும்.

இவ்விதம் மாற்றமடைந்து முகம், முடி, மூளை, கை, கால், கண், காது, இதயம், நுரையீரல், கல்லீரல் என்று தனித்தனி உறுப்பாக மாறி நம் உடலுக்கு முழு உருவத்தைத் தருகின்றன.

இந்த ஸ்டெம் செல்கள் இரு வகைப்படும். குழந்தை கருவாக இருக்கும்போது அக்கருவில் காணப்படும் ஸ்டெம் செல்கள், முதல் வகையைச் சேர்ந்தவை. இரண்டாம் வகை ஸ்டெம் செல்கள் ரத்தம், எலும்பு மஜ்ஜை, இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல் போன்ற பல உறுப்புகளில் உள்ளன. இவற்றில் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்கள்தான் நம் கவனத்திற்கு உரியவை. காரணம், இப்போது ஸ்டெம் செல் சிகிச்சைக்கு இவையே நன்கு பயன்படுகின்றன.

பொதுவாக, தொற்றுக்கிருமிகள் மூலமோ, விபத்தின் மூலமோ, ரத்தம் இழப்பதாலோ அல்லது பரம்பரையாகவோ நம் உடலில் எங்காவது பாதிப்பு ஏற்படுமானால் அந்த இடத்தில் உள்ள செல்கள் இறந்துவிடும். அப்போது அந்த உறுப்பின் திசுக்கள் செயலிழந்துவிடும். இறந்த செல்களை ஈடுகட்ட உடலின் பிற பகுதிகளிலிருந்து புதிய செல்கள் இடம் பெயர்ந்து, பாதிப்படைந்த இடத்துக்குச் சென்று, சமன் செய்யும்.

செல்களின் பாதிப்பு சிறிய அளவில் இருந்தால் இவ்வாறு உடல் தானே சரிசெய்து கொள்ளும். வெளிச்சிகிச்சை எதுவுமின்றி அந்த உறுப்பு மீண்டும் செயல்படத் தொடங்கும். மாறாக, செல்களின் பாதிப்பு அதிக அளவில் இருக்குமானால் அந்த உறுப்பின் செயல்பாடு நின்றுவிடும். இம்மாதிரி நேரங்களில் மருந்து, மாத்திரை, ஊசி, அறுவைச் சிகிச்சை போன்றவற்றால் சரி செய்வது மருத்துவர்களின் வழக்கம்.

ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. நோயாளியின் உடலில் பாதிப்படைந்த உறுப்புக்கு “ஸ்டெம் செல்’களைச் செலுத்துவதன் மூலம் அவ்வுறுப்பு செயலிழப்பதைத் தவிர்க்கலாம் என்பதும் அந்த நோயாளிக்கு வந்திருந்த நோயைக் குணமாக்கலாம் என்பதும் உறுதியாகியுள்ளது. நம் உடலில் பழுதான பாகத்தில் ஸ்டெம் செல்களை விட்டால் அப்பாகம் தன்னைத்தானே சரிசெய்து கொண்டு செயல்படத் தொடங்குகிறது. இதுதான் “ஸ்டெம் செல் சிகிச்சை’யின் அடிப்படை சூத்திரம்.

“ஸ்டெம் செல் சிகிச்சை’ சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். வைரஸ் தொற்றுகளால் கணையம் பாதிக்கப்படும்போது, இன்சுலின் சுரக்கின்ற பீட்டா செல்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் இவர்களுக்கு இன்சுலின் சுரப்பது குறைந்து சர்க்கரை நோய் வருகிறது. இந்த மாதிரி நேரங்களில் சர்க்கரை நோயாளியின் உடலிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அல்லது நோயாளிக்குப் பொருந்தக்கூடிய மற்றொருவரின் உடலிலிருந்து ஸ்டெம் செல்களைப் பெற்று நோயாளியின் கணையத்தில் செலுத்தினோமானால் பாதிக்கப்பட்ட பீட்டா செல்கள் மீண்டும் செயல்பட்டு இன்சுலினைச் சுரக்கத் தொடங்கும். இதனால் சர்க்கரைநோய் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்குக் காலுக்குச் செல்லும் ரத்தநாளத்தில் பாதிப்பு ஏற்படும்போது காலில் புண் வந்து நீண்ட நாள்களுக்கு ஆறாமல் தொல்லை கொடுக்கும். அப்போது அறுவைச் சிகிச்சை செய்து காலையே எடுத்துவிடுவது இதுவரை இருந்த வழக்கம். இதற்குப் பதிலாக இப்போது நோயாளியின் இடுப்பு எலும்பிலிருந்து ரத்தத்தை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை மட்டும் பிரித்தெடுத்து, சர்க்கரை நோயாளியின் காலுக்குச் செல்லும் ரத்தநாளத்தில் ஊசி மூலம் செலுத்த, இரண்டு மாதங்களில் கால் புண் நன்றாக ஆறிவிடுகிறது.

அடுத்து, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இதயநோயாளிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை ஓர் உயிர்காக்கும் சிகிச்சையாக விளங்குகிறது. பைபாஸ் அறுவைச்சிகிச்சை செய்யாமல், நோயாளியின் ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்து, ஊசி மூலம் இதயத்தமனி நாளங்களுக்குச் செலுத்தினால் சில வாரங்களில் அங்கு புதிய ரத்தநாளங்கள் உருவாகி இதயத்திற்குத் தேவையான ரத்தத்தை விநியோகித்து விடுகின்றன. இதனால் அந்த நோயாளிக்கு மாரடைப்பு மீண்டும் வருவது தடுக்கப்படுகிறது.

மலேரியா, சிக்குன்குனியா, மஞ்சள்காமாலை போன்ற தொற்றுநோய்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும்போது நோயாளியின் பெற்றோரின் உடலிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து, நோயாளிக்குச் செலுத்தி, சிறுநீரகப் பாதிப்பைச் சரி செய்யும் சிகிச்சை முறை அண்மைக்காலமாக சென்னையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

கண்ணில் “பூ’ விழுதல் கோளாறினால் “கார்னியா’ பாதிக்கப்படும்போது பார்வை இழப்பு ஏற்படுவது உண்டு. இதற்கு “கார்னியா மாற்று அறுவைச் சிகிச்சை’ செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக, கண்ணின் ஓரத்தில் “லிம்பஸ்’ என்னுமிடத்தில் உள்ள ஸ்டெம் செல்களை எடுத்து பாதிக்கப்பட்ட கார்னியாவில் பொருத்தினால், அந்த நோயாளிக்குக் கார்னியா செல்கள் வளர்ச்சி பெற்று பார்வை கிடைத்து விடுகிறது. இதனால் அறுவைச் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது.

பக்கவாதம், பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சிமர் எனும் மறதிநோய் போன்றவற்றுக்கு “நியூரல் ஸ்டெம் செல்களை’ச் செலுத்திக் குணமாக்கலாம். ரத்தப்புற்றுநோய், தலசீமியா, ரத்தம் உறைதல் கோளாறு போன்றவற்றுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது.

மேலும், விபத்தின் மூலம் முதுகுத்தண்டுவடப் பாதிப்பு, நரம்பு பாதிப்பு போன்றவை ஏற்படும்போது அந்த இடங்களில் ஸ்டெம் செல்களைச் செலுத்தினால், நாளடைவில் புதிய செல்கள் தோன்றி, அந்த உறுப்பு வளர்ச்சியடைந்து, செயலூட்டம் பெற்றுவிடுவதால் படுத்த படுக்கையாக இருப்பவர்கள்கூட இச்சிகிச்சைக்குப் பிறகு எழுந்து நடமாட முடிகிறது என்றால் இதன் மகிமையைப் புரிந்து கொள்ளுங்கள்.

பிறக்கும் குழந்தையின் தொப்புள்கொடியில் உள்ள ரத்தத்தைச் சேமித்து வைத்தால், அதில் உள்ள “ஸ்டெம் செல்கள்’ பிற்காலத்தில் அக்குழந்தைக்கு ஏற்படும் ரத்தசோகை, ரத்தப்புற்றுநோய், சர்க்கரைநோய் மற்றும் பரம்பரை நோய்களுக்குச் சிகிச்சை செய்யப் பயன்படும் என்று அண்மையில் பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. ஆகவே இதுவரை பிரசவத்தின்போது “தேவையில்லை’ என்று கழித்துப் போடப்படும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்துப் பாதுகாக்க இப்போது இந்தியாவில் பல நகரங்களில் “தொப்புள்கொடி ரத்த வங்கிகள்’ உதயமாகியுள்ளன.

மேல்நாடுகளில் ஆண், பெண் இணையாமல், “குளோனிங்’ முறையில், பெண்ணின் கருப்பையிலிருந்து ஸ்டெம் செல்லை எடுத்து, அதை அந்தப் பெண்ணின் கருப்பையிலேயே பதியம் செய்து, கருவை வளர்த்து ஒரு முழுமனிதனையே உருவாக்கியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி பலர் தங்கள் முக அமைப்பையே மாற்றிக் கொண்டுள்ளனர். வரும் காலங்களில் மருத்துவத் துறையில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி என்னவெல்லாம் புரட்சிகள் நடக்க இருக்கிறதோ, அவை அந்த ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்!

(கட்டுரையாளர்: ராஜபாளையம் கணேஷ் மருத்துவமனையின் பொது மருத்துவர்.)

Posted in alzheimer, alzheimer's, Analysis, Backgrounder, Biotech, Blood, Cells, Clone, Cloning, cure, Developments, Disease, Doctor, Medicine, Neural, parkinson, parkinson's, Prescription, Procedure, Research, Science, Stem, Stem Cell, Stem Cells, surgery | 1 Comment »