Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Fake encounter: Modi may use case to polarise gujarat voters – The Moral Highs of India’s “Cultural Nationalists”

Posted by Snapjudge மேல் மே 3, 2007

வேலியே பயிரை மேய்ந்தால்…

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இப்போது மீண்டும் அனைவராலும் பேசப்படக் காரணம் – போலி என்கவுன்ட்டர்.

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதீன் மனைவி கசூர் பீவி “எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்’ என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

99 சதவீத என்கவுன்ட்டர்கள் போலியானவை என்பது “சூரியன் உதிக்கும் திசை கிழக்கு’ என்பதைப்போல அனைவருக்கும் தெரிந்த உண்மை. சில சம்பவங்களில் மனித உரிமை அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலும்- போலி என்கவுன்ட்டர் என்பது நிரூபிக்கப்பட்டதில்லை. கொல்லப்பட்டவர் பலராலும் அறியப்பட்ட ரெüடி என்பதும், அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்ற உண்மையும் காவல்துறைக்குச் சாதகமானவையாக அமைந்துவிடுகின்றன.

இப்போதும்கூட, போலி என்கவுன்ட்டரில் சோராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்டது பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் மனைவி கசூர் பீவி கொலைதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சோராபுதீன் மீது பல குற்றவழக்குகள் உள்ளன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் பெரும்பணக்காரர்களிடம் மிரட்டிப் பணம் பெற்றதாக இவர் மீது ஆதாரங்களுடன் வழக்குகள் உள்ளன. ஆனால், அவர் ரெüடி என்பதற்காக சுட்டுக் கொல்லப்படவில்லை. குஜராத் முதல்வரை கொலை செய்யும் திட்டம் வைத்திருந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி என்று 2005 நவம்பரில் கைது செய்யப்பட்டு, பிறகு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

அவருடன் பயணம் செய்துகொண்டிருந்த மனைவி கசூர் பீவியைக் காணவில்லை என்று தொடுக்கப்பட்ட வழக்கில், தற்போது அவர் கொல்லப்பட்டிருப்பதாக குஜராத் அரசு சொல்கிறது.

இந்த போலி என்கவுன்ட்டர் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் கசூர் பீவி கொல்லப்பட்டது நிரூபிக்கப்படலாம் அல்லது முடியாமலும் போகலாம். ஆனால் சோராபுதீனை என்கவுன்ட்டரில் கொல்லக் காரணம் என்ன? எந்த உண்மையை மூடி மறைக்க இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றியும் தீர விசாரித்தால், பல உண்மைகள் தெரியவரும்.

கசூர் பீவி போலி என்கவுன்ட்டருக்கு சாட்சியாக இருந்ததால் அவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற வாதம் மேம்போக்கானது. என்கவுன்ட்டர் தொடர்பான எதிர்வழக்குகளில் யாருமே வெற்றி பெறவில்லை என்பதால், கசூர் பீவியின் சாட்சி காவல்துறைக்குப் பெரிய விஷயமே இல்லை. எந்த ரகசியங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக என்கவுன்ட்டரில் சோராபுதீன் கொல்லப்பட்டாரோ அந்த ரகசியங்கள் கசூர் பீவிக்கும் தெரிந்திருக்கக் கூடும்.

போலி என்கவுன்ட்டர்களுக்கு காரணம், பிடிபடும் நபர் வாயைத் திறந்தால் வேறு சில “தேவையில்லாத’ உண்மைகள் வெளியே வரும்; அந்த உண்மையின் வெளிச்சத்தில் பல முக்கியப் பிரமுகர்களின் மெய்த்தோற்றம் தெரியவரும் என்பதால் நிரந்தரமாக வாயடைக்கும் வேலைதான் என்கவுன்ட்டர்.

கொல்லப்படுபவர் ஒரு சமூக விரோதியாக இருப்பதால், என்கவுன்ட்டர் ஒரு சூரசம்ஹாரம் என்பதுபோல மாறிவிடுகிறது. போலீஸ் அதிகாரி நாயகனாகி விடுகிறார். அவருக்கு விருதுகள்கூட கிடைக்கின்றன.

மும்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் என்பவர் 83 ரவுடிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர். வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்ததாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இவரது வாழ்க்கை, பல திரைப்படங்களாக பல மொழிகளில் வந்துள்ளது.

காக்கிச் சட்டையில் போலீஸôகவும், அதைக் கழற்றினால் ரெüடியாகவும் மாறுவது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். நிஜ வாழ்க்கையில் நிலை மாறக்கூடாது.

2 பதில்கள் -க்கு “Fake encounter: Modi may use case to polarise gujarat voters – The Moral Highs of India’s “Cultural Nationalists””

  1. From Bihar said

    there is little words to say about modi

  2. bsubra said

    “போலி என்கவுன்டர்’ வழக்கில் சிக்கிய தினேஷ்குமாரை காப்பாற்றத் துடிக்கும் ஐ.பி.எஸ். மாமனார் கெம்பய்யா

    ஆமதாபாத், மே 10: குஜராத்தின் சோரபுதீன் ஷேக்கை “”போலி என்கவுன்டரில்” சுட்டுக் கொன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரியும் தனது மாப்பிள்ளையுமான எம்.என். தினேஷ் குமாரை (33) தண்டனை பெறாமல் காப்பாற்றத் துடிக்கிறார் ஐ.பி.எஸ். அதிகாரியான மாமனார் கெம்பய்யா.

    கெம்பய்யா என்றாலே கர்நாடக மாநிலம் முழுக்கத் தெரியும் அளவுக்கு பணியிலே பல்வேறு சாகசங்கள் புரிந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஸ்ரீ பெரும்பூதூரில் படுகொலை செய்த விடுதலைப் புலி ஆதரவாளர்களை கர்நாடகத்தின் குக்கிராமத்திலிருந்து பிடித்துவந்தார்.

    சந்தன மரக் கடத்தல் வீரப்பனை கர்நாடக மலைப் பகுதியில் விரட்டிச் சென்றார். இப்போது பெங்களூரில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவி வகிக்கிறார்.

    ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு கெம்பய்யா என்றே கன்னடத்தில் பெயர் சூட்டியிருந்தனர். அவருடைய மகளைத் திருமணம் செய்து கொண்ட ஐ.பி.எஸ். அதிகாரியான தினேஷ் குமார் இப்போது போலி என்கவுன்டர் வழக்கில் குற்றவாளியாகச் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    இந்த வழக்கிலிருந்து தமது மருமகனை மீட்க வேண்டும் என்பதற்காக, நல்ல வழக்கறிஞரைத் தேர்வு செய்ய உதவி செய்கிறார். அத்துடன், தனக்கிருக்கும் பதவி, செல்வாக்கு காரணமாக தன்னுடன் நட்புடன் பழகும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனையும் கேட்டுவருகிறார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, எதையும் கூற மறுத்துவிட்டார்.

    பெங்களூர்காரர்: ஐ.பி.எஸ். முடித்து 1995-ல் பணிக்குச் சேர்ந்த தினேஷ் குமார் பெங்களூரைச் சேர்ந்தவர். ராஜஸ்தானில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பதவிப் பொறுப்பேற்றார். மாமனார் சந்தனக் கடத்தல் வீரப்பனை விரட்டிச் சென்றதைப்போல, சவாய் மாதோபூர் பகுதியில் சம்பல் கொள்ளைக்காரர்களை விரட்டிச் சென்று அவர்களை ஒடுக்கினார். அதற்காக அவருக்கு 2002 ஜனவரி 26-ல் ராஜஸ்தான் அரசு பிஸ்டலைப் பரிசாக வழங்கியது.

    அரவிந்த் பாண்டயா: போலி என்கவுன்டர் வழக்கில் கைதான டி.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் இருவரும் அமர்த்திக் கொண்ட வழக்கறிஞரை விடுத்து, அரவிந்த் பாண்டயா என்பவரை தினேஷ் குமார் அமர்த்திக் கொண்டுள்ளார்.

    சிறந்த வழக்கறிஞரான அரவிந்த் பாண்டயா, நானாவதி-ஷா கமிஷன் முன்னிலையில் குஜராத் அரசு சார்பில் ஆஜர் ஆகிறார். இந்த கமிஷன் கோத்ரா ரயில் நிலையத்தில் நடந்த கரசேவகர்கள் எரிப்பு சம்பவத்தையும் பிறகு நடந்த வகுப்புக் கலவரங்களையும் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: