Rs 50 crore rental arrears for unauthorised occupation of government bungalows
Posted by Snapjudge மேல் மே 2, 2007
அரசு பங்களாக்களை ஆக்கிரமித்து குடியிருப்பு அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாடகை பாக்கி ரூ.50 கோடி
புதுதில்லி, மே 2: அரசு பங்களாக்களை அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துத் தங்கியுள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 400 பேர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.50 கோடி என உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதில் பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.16.83 லட்சம் மற்றும் ரூ.18.97 லட்சமாகும். அங்கீகாரம் இல்லாமல் அரசு பங்களாக்களில் குடியிருப்பவர்களிடம் இருந்து வாடகை வசூலிப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜனவரி 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் அது தொடர்பான பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மறைந்த காங்கிரஸ் எம்.பி. சுனில் தத் ஆகியோரின் குடும்பத்தினர், பிகார் முன்னாள் ஆளுநர் புட்டா சிங் வாடகை பாக்கியை செலுத்தத் தவறி விட்டனர். காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், தில்லியில் அங்கீகாரம் இல்லாமல் ஆக்கிரமித்துள்ள பங்களாக்களுக்கு செலுத்த வேண்டிய வாடைகை பாக்கி முறையே ரூ.13.45 லட்சம், ரூ.9.60 லட்சம் மற்றும் ரூ.13.19 லட்சத்தை செலுத்தவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்கள் 3 பேர், உரிமக் கட்டணம் / சேதங்களுக்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.1.10 கோடி. காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் தில்லி மாநில பிரிவுகள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி முறையே ரூ.50.15 லட்சம் மற்றும் ரூ.19.31 லட்சம். நிலுவையில் உள்ள வாடகைத் தொகையை வசூலிக்க அரசு தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
bsubra said
அமைச்சர்களுக்குரிய பங்களாக்களை காலி செய்ய பாஜக எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்
புது தில்லி, மே 4: அமைச்சர்களாக இருந்தபோது குடியிருக்க அரசு ஒதுக்கிய பங்களாக்களை காலி செய்து தாருங்கள் என்று தில்லி நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்த 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தன்பேரில் அமைச்சகம் இந்த நோட்டீûஸ அளித்தது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், ராம் ஜேட்மலானி மற்றும் மாநிலங்களவையின் முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் உள்பட பலருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இவர்களில் ராம் ஜேட்மலானி பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் அல்ல என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தவர்.
மத்திய அமைச்சர்களுக்கு “”டைப்-8” வகை பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன. இவை விசாலமானவை, மையப்பகுதியில் அமைந்தவை, நாடாளுமன்றத்துக்கும், மத்திய அரசின் செயலகத்துக்கும் எளிதில் சென்றுவர எளிதானவை. எல்லாவற்றையும்விட அமைச்சர்களின் அந்தஸ்தைக் கூட்டுபவை. எனவே இதைப் பெறுவதிலும், காலி செய்யாமல் இருப்பதிலும் “”மெüன யுத்தமே” நடைபெறுகிறது.
“”டைப்-8” வகை பங்களாக்களுக்கு அடுத்த அந்தஸ்தில் இருப்பவை “”டைப்-7” பங்களாக்கள்தான். முன்னாள் அமைச்சர்களை இந்த பங்களாக்களுக்கு மாறுமாறு ஓரளவுக்குச் சம்மதிக்க வைக்க முடியும் என்றாலும், இந்த வகை பங்களாக்கள் போதிய எண்ணிக்கையில் இப்போது காலியாக இல்லை.
மாநிலங்களவை துணைத் தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்த நஜ்மா ஹெப்துல்லா, “”டைப்-8” பங்களாவிலிருந்து “”டைப்-7” வகை பங்களாவுக்குக் குடியேறிவிட்டார்.
“”டைப்-8” பங்களாக்களைக் காலி செய்யாத முன்னாள் அமைச்சர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருப்பதால், இப் பிரச்சினை மாநிலங்களவையின் வீட்டுவசதிக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. “”டைப்-8” பங்களாக்களுக்குப் பதிலாக “”டைப்-7” வகை பங்களாக்களை இந்த முன்னாள் அமைச்சர்களுக்குக் கொடுத்து, எங்களுக்குள்ள நெருக்கடியைத் தீர்க்கக் கூடாதா என்று நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் வீட்டுவசதிக் குழுவின் தலைவர் ஜெய்பிரகாஷ் அகர்வாலைக் கேட்டனர்.
“”இது அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலான பிரச்சினை; நாங்கள் ஏன் இதில் தலையிட வேண்டும்?” என்று கூறி, உதவிக்கு வர மறுத்துவிட்டார் அகர்வால். எனவே வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது அமைச்சகம்.
ஜஸ்வந்த் சிங்கின் தயக்கம்: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இப்போது இருக்கும் ஜஸ்வந்த் சிங், “”டைப்-7” வகை வீட்டில்தான் குடியிருந்தார். அமைச்சர் பதவி கிடைத்ததும் “”டைப்-8” பங்களாவுக்குச் செல்லாமல், கூடுதலாக இன்னொரு “”டைப்-7” பங்களாவை ஒதுக்கச்சொல்லி ஒன்றில் குடியிருந்து கொண்டு, மற்றொன்றில் அலுவலகத்தை வைத்துக் கொண்டார். அந்த கூடுதல் வீட்டை காலி செய்யத் தயக்கம் காட்டினார். பங்களாக்கள் பற்றாக்குறையாக இருப்பதைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் கெஞ்சிய பிறகு, கூடுதலாகப் பெற்ற பங்களாவை விட்டுக்கொடுத்தார் ஜஸ்வந்த் சிங்.
பெர்னாண்டஸ், சரத் யாதவ்: ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோரும் தங்களுடைய பங்களாக்களைக் காலி செய்யாமல் இருக்கின்றனர்.
அருண் ஜேட்லிக்கு, அசோகா சாலை 9-ம் எண்ணில் அரசு ஒதுக்கிய பங்களாவில் அவர் குடியில்லை. ஆனால் அதை அதே சாலையில் 11-ம் எண்ணில் உள்ள தங்களுடைய கட்சித் தலைமை அலுவலகத்தின் இணைப்பு அலுவலகமாக கட்சிக்காரர்கள் பயன்படுத்திக் கொள்ள விட்டுவிட்டார். கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் குடும்பம் இல்லாமல் பிரம்மச்சாரிகளாகவே வாழ்பவர்களுமான ஜே.பி. மாத்துர், கைலாசபதி மிஸ்ரா போன்றவர்கள் அங்கு வசிக்கின்றனர். அதை “”முதியோர் இல்லம்” என்றே அரசியல் பார்வையாளர்கள் கிண்டலாக அழைக்கின்றனர்.