Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Human trafficking, quota to cast shadow on Parliament session

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

புதுதில்லி, ஏப். 26: பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் (இன்று) வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட விஷயங்களை எதிர்க்கட்சிகளும், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளும் எழுப்ப உள்ளன.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்றம் கூடுவதால் இந்தக் கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. உள்நாட்டு பாதுகாப்பு, காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும்.

முதல் நாள் கூட்டத்தில் ஆள்கடத்தல் வழக்கில் பாஜக எம்.பி. கடாரா கைதான விவகாரம் மக்களவையில் முக்கியமாக இடம்பெறும்.

கடாரா விவகாரம் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பேசப்பட்டது. பாஜக எம்.பி. மீதான நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று சட்டர்ஜி தெரிவித்துள்ளார். ஆள்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தங்கள் கட்சி எம்.பி.யான பாபுபாய் கடாரா மட்டும் அல்லாமல் பிறகட்சிகளில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள உறுப்பினர்கள் பற்றியும் விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

2007-08-ம் ஆண்டுக்கான நிதிமசோதாவுக்கு ஒப்புதல் பெறும் விவகாரமும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று தெரிகிறது. இந்த மசோதாவை முன்கூட்டியே அதாவது மே மாதம் 3-ம் தேதியே தாக்கல் செய்து ஒப்புதல் பெற அரசு திட்டமிட்டுள்ளது.

நிதியமைச்சர் ப.சிதம்பரம் மே 6-ம் தேதி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். நிதிமசோதா மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் அவர் வெளிநாடு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விஷயமும் அவையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும். உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரமும் முக்கிய விவாதமாக அவையில் இடம்பெறும். இது விஷயத்தில் நீதித்துறையின் பங்கு பற்றி பல்வேறு கட்சிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் உறுதியான கொள்கை இல்லாதது, போஃபர்ஸ் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவருவது, ரூ.2 நாணயத்தில் சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவற்றையும் பாஜக எழுப்பும் எனத் தெரிகிறது.

ஒரு பதில் -க்கு “Human trafficking, quota to cast shadow on Parliament session”

  1. bsubra said

    ஆள் கடத்தல் விவகாரம்: மேலும் ஒரு எம்.பி.யிடம் விசாரணை

    புது தில்லி, மே 18: வெளிநாடுகளுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் ஆட்களைத் கடத்துவது தொடர்பான விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. முகம்மது தாஹிர் கானிடம் தில்லி போலீஸôர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். குற்றப் புலனாய்வு போலீசார் அவருக்கு அனுப்பிய சம்மனை அடுத்து தானாகவே அவர் நேரில் ஆஜர் ஆனார்.

    இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தரகர் சுந்தர்லால் யாதவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கு உள்ள தொடர்பு குறித்து போலீஸில் தெரிவித்துள்ளார். இதையடுத்து முகம்மது தாஹிருக்கு போலீஸôர் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை. ஆள் கடத்தல் வழக்கில் குஜராத் எம்.பி. பாபுலால் கடாரா கைது செய்யப்பட்டபிறகு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் மூன்றாவது எம்.பி. முகம்மது தாஹிர் கான்.

    இதே விவகாரம் தொடர்பாக தற்போது பாஜக எம்.பி. ராம்ஸ்வரூப் கோலிக்கு போலீஸôர் வியாழக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த திங்கள்கிழமை அசோக் குமார் ரவாத் மற்றும் மித்ரசென் யாதவ் ஆகிய இரு எம்.பி.க்களிடம் போலீஸôர் விசாரணை நடத்தினர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: