Pakistan Govt agrees to hardline demands of madrasa
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007
சர்ச்சைக்குரிய மதக் கல்வி நிறுவனங்களை மூட பாக். அரசுக்கு கோரிக்கை
இஸ்லாமாபாத், ஏப். 25: இஸ்லாமிய சட்டத்தை வலியுறுத்தும் மதக் கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தானில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இத்தகைய கல்வி நிறுவனங்கள் ஷிரியா சட்டம் (முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய மதச்சட்டங்கள்) என்ற போர்வையில் பயங்கரவாதத்தை பரப்பி வருவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.
இது தொடர்பாக மகளிர் உரிமை அமைப்புகள், சிவில் சமூக அமைப்பு ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை நடந்த பேரணியில் பங்கேற்றனர். மகளிருக்கான ஜமியா ஹப்சா மதறஸô தீவிரவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும அதை மூடவேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தியதாக டான் பத்திரிகை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
ஜமியா ஹப்சா மதறஸô மாணவர்கள் சில வாரங்களுக்கு முன் 3 பெண்களை கடத்தியதுடன் விடியோ கடை ஒன்றுக்கும் தீவைத்துள்ளனர். இந்த மாணவர்கள் பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்துகின்றனர்.
பொது நூலகம் ஒன்றையும் இந்த மதறஸôவைச் சேர்ந்த மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்றும் பேரணியில் பங்கேற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
bsubra said
ஷரியத் சட்டங்களை அமல்படுத்த ஒப்புதல் மதறஸôவின் கோரிக்கைகளை ஏற்றது பாகிஸ்தான் அரசு
இஸ்லாமாபாத், ஏப். 26: தலைநகரில் ஷரியத் சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனத்தின் (மதறஸô) கோரிக்கைகளை ஏற்றது பாகிஸ்தான் அரசு.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் அமைந்துள்ள “லால் மஸ்ஜித்’ பள்ளிவாசல் நிர்வாகம் ஆண், பெண் இருபாலருக்கும் மதறஸô நடத்தி வருகிறது. இந்த மதறஸô தலைமை பீடத்தில் உள்ள மதகுருக்கள், “தலைநகரில் ஷரியத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும், விபசாரத்தை ஒழிக்க வேண்டும், சூதாட்ட விடுதிகளை மூடவேண்டும், தொலைக்காட்சிகளில் ஆபாசத்தை தடுக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். தலிபான் பாணியில் “கலாசாரக் காவலர்களாக’ மதறஸô மாணவர்கள் செயல்படத் தொடங்கினர். அரசுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்தி வந்த இந்த விவகாரத்தை தீர்க்க, ஆளுங் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ பிரிவு) தலைவர் ஹுசைன், மதறஸô மதகுருக்களுடன் பேச்சு நடத்தி வந்தார்.
இந் நிலையில், “”அரசுக்கும், லால் மஸ்ஜித் பள்ளிவாசலுக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன” என செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்துள்ளார் ஹுசைன். இரண்டாவது சுற்று பேச்சுகளுக்குப் பின்னர் இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இஸ்லாமிய நெறிகளைச் செயல்படுத்துவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் என்று கூறிய ஹுசைன், அது தொடர்பாக விரிவாகப் பேச மறுத்து விட்டார்.
bsubra said
மசூதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் பதிலடி: மதகுருக்கள் மிரட்டல்
இஸ்லாமாபாத், மே 22: இரு போலீஸôரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள மசூதிக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தால், பதிலடி கொடுப்போம் என மதகுருக்கள் எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது லால் மஸ்ஜித் பள்ளிவாசல். இப் பள்ளிவாசல் நிர்வாகம், ஆண், பெண் இருபாலார்க்கும், மதக் கல்வி கற்றுத் தரும் மதறஸôக்களை நடத்தி வருகிறது. இதன் தலைமைப் பீடத்தைச் சேர்ந்த 2 மதகுருக்கள், தலைநகரில் மதநெறிகளின் அடிப்படையிலான “ஷரியத் சட்டங்களை’ அமல்படுத்த வேண்டும் எனக் கோரி அரசுக்கு பல்வேறு வகைகளில் நெருக்குதலை ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகளில் மதறஸô மாணவர்களை இறக்கி விடுகின்றனர்.
இதற்கிடையே, 11 மதறஸô மாணவர்களை போலீஸôர் தடுப்புக் காவலில் அடைத்ததைத் தொடர்ந்து, அவர்களை விடுவிக்கக் கோரி 2 போலீஸôரை மதறஸôவில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதையடுத்து 10 ஆயிரம் பாதுகாப்புப் படையினரை பள்ளிவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு.