Indian Army tests enhanced version of Indian-Russian supersonic cruise BrahMos Missile
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007
பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாகச் சேர்ந்து வடிவமைத்துள்ள தரையில் இருந்து சென்று இலக்குகளைத் தாக்கவல்ல பிரம்மோஸ் அதிநவீன (சூப்பர்சானிக்) ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து முற்பகல் 11.21 மணியளவில் இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏவுகணை செலுத்தப்பட்டதும் வானில் வெண்புகையை கிளப்பியவாறு சீறிப்பாய்ந்ததாகவும், இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
இந்த சோதனை குறித்த மதிப்பீடு பின்னர் தெரிய வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவுகணையை செலுத்திய பின், தரையில் உள்ள கருவிகள் மற்றும் ராடார் மூலமாக அதன் செயல்பாட்டை சோதித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய சோதனைக்கு முன்பாக இதுவரை 13 முறை பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றியடைந்திருப்பதாகவும், கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி முதல் முறையாக இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டதாகவும், கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி சோதனை நடத்தப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
மறுமொழியொன்றை இடுங்கள்