Raj TV To Export Content To Singapore’s TV12 For Rs. 3 Cr.
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2007
சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்துடன் ராஜ் டி.வி. புதிய ஒப்பந்தம்
சென்னை, ஏப். 8: ராஜ் டி.வி. நிறுவனம் சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்துடன் புதிய தொழில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ராஜ் டி.வி. சிங்கப்பூர் அரசின் தொலைக்காட்சியான டி.வி.12 நிறுவனத்துடன் இரண்டு வருடங்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தனது பல்வேறு நிகழ்ச்சிகளை டி.வி.12 நிறுவனத்தின் பிரபல தமிழ்ச் சேனலான வசந்தம் சென்ட்ரலில் ஒளிபரப்புகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் தங்களது செய்திகள், திரைப்படங்கள், தொடர்கள், கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. வசந்தம் சென்ட்ரலுடன் பகிர்ந்துகொள்ளும். இதுகுறித்து ராஜ் டி.வி.யின் செயல் இயக்குநர் ரவீந்திரன் கூறியதாவது: சிங்கப்பூரின் பிரபல சேனலான வசந்தம் சென்ட்ரலுக்கு அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பல இந்திய நிகழ்ச்சிகளும், தமிழ் நிகழ்ச்சிகளும் இதில் ஒளிபரப்பாகி வருகின்றன.
கட்டணம் இல்லாமல் தெரியும் வசந்தம் சென்ட்ரல் சேனலை சுமார் 10 லட்சம் நேயர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ராஜ் டி.வி. ஏற்கெனவே இலங்கையின் ரூபவாஹினி, இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழ்ச் சேனல்கள், தீபம் டி.வி. மற்றும் சி.ஐ.இ.இ. சேனல்களுக்கு தனது நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.
இந்த ஒப்பந்தம் மூலம் நேயர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் அறிந்து அதற்கேற்றவாறு நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துவோம். 1500 மணி நேர டி.வி. நிகழ்ச்சிகளை வசந்தம் சென்ட்ரலில் ஒளிபரப்புவதன் மூலம் வருடத்துக்கு சுமார் 3 கோடி ரூபாய் வருவாயை ராஜ் டி.வி. பெறும் என்றார்.
bsubra said
MSN INDIA – 11 புதிய சானல்கள் தொடங்க ராஜ் டிவி திட்டம்
bsubra said
விரைவில் ராஜ் டி.வி.யின் புதிய சேனல்
சென்னை, மே 5 இளைய தலைமுறையினருக்குப் பயனுள்ள வகையில் புதிய சேனல் ஒன்றை ராஜ் டி.வி. விரைவில் தொடங்கவுள்ளது.
இதுகுறித்து ராஜ் டி.வி.யின் கிரியேட்டிவ் தலைவர் மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி ராஜூ ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வரும் மே 7-ம் தேதி முதல் ராஜ் டி.வி.யில் “மகாநதி’, “மீனாட்சி’, “ஆறு மனமே ஆறு’, “கெüரவம்’ போன்ற புதிய மெகா தொடர்களை ஒளிபரப்புகிறோம். இந்த நான்கு தொடர்களும் ஒன்றுக்கொன்று புதுமையாகவும், மற்ற மெகா தொடர்களிலிருந்து வித்தியாசமாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் சுட்டிக் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக “குழந்தைகள் நேரம்’ என்ற நிகழ்ச்சியையும் ஒளிபரப்புகிறோம். இவற்றோடு ப்ரைம் டைம் பகுதியில் பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். இந்நிகழ்ச்சிகள், அனைத்துத் தரப்பு நேயர்களின் ரசனைகளையும் பூர்த்தி செய்யும்.
இவை தவிர இளைய தலைமுறையினருக்காக விரைவில் புதிய சேனல் ஒன்றை தொடங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இதில் செய்தித் தொகுப்புகள், கல்வி தொடர்பான புதிய நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலைகள், தரமான கேளிக்கை நிகழ்ச்சிகள், அறிவுப்பூர்வமான வினாடி-வினா நிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும் என்றார்.
kasi said
new chennal free chennal?