Madurai West Assembly bypolls during May end – Election Commission
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007
மதுரை மேற்கு தொகுதிக்கு மே மாத இறுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் ஏற்பாடு
சென்னை, ஏப். 3- மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.).
கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா 2 முறை மதுரை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை முழுவதுமாக வழங்கி இந்த தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மதுரை மேற்கு தொகுதியில் கடந்த தேர்தலின்போது 1 லட்சத்து 81 ஆயிரத்து 710 பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது.
இதை ஆய்வு செய்து 35 ஆயிரம் போலி பெயர்களை நீக்கி புதிதாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 26-ந்தேதி வெளியிடப்பட்டது. போட்டோவுடன் கூடிய இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், ஆட்சேபனை இருந்தால் தெரி விக்க தற்போது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத கடைசியில் இறுதி வாக் காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதன் பிறகு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த உள்ளனர்.
தேர்தல்எப்போது நடை பெறும் என்று உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
சட்டசபை கூட்டத்தொடர் வருகிற மே 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு தான் தேர்தல் நடத்தப்படும். ஆகஸ்டு மாதம் வரை தேர்தலை நடத்த கால அவகாசம் இருந் தாலும் மே மாதம் தான் தேர்தல் நடத்த உகந்ததாக கருதுகிறோம்.
விடுமுறை காலமாக மே மாதம் இருப்பதால் தேர்தல் நடத்த வசதியாக இருக்கும். அனேகமாக மே மாதம் கடைசி வாரம் ஏதாவதுஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். எந்த தேதி என்பது டெல்லியில் இருந்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
மதுரை மேற்கு தொகுதி முழுக்க முழுக்க நகர் பகுதியில் 20 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் `பூத்’ கமிட்டிகளை அமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளன. காலமான எஸ்.வி. சண்முகம் அ.தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்றாலும் எம்.எல்.ஏ. ஆன பிறகு தி.மு.க. ஆதரவாளராக மாறினார். இதனால் அவருடன் அ.தி.மு.க. வினர் யாரும் தொடர்பு வைக் காமல் இருந்தனர்.
இந்த முறை இந்த தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைக்க கடுமை யாக தேர்தல் வேலையில் ஈடுபடும் என தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்டது. இந்த முறை யும் காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிட உள்ளது. இது தவிர தே.மு.தி.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளும் களத்தில் மோதும் என தெரிகிறது.
ஓட்டு விவரம்:-
கடந்த தேர்தலில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-
- எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) – 57,208
- பெருமாள் (காங்கிரஸ்) – 53,741
- மணிமாறன் (தே.மு.தி.க.) – 14,527
- பகவதி (பா.ஜனதா) -1,851
bsubra said
அடித்து நொறுக்கப்பட்டது அதிமுக எம்.எல்.ஏ. வீடு
தந்தை, தங்கை கணவர் மீது தாக்குதல்; ஓரத்த நாட்டில் பதற்றம்: போலீஸôர் குவிப்பு
ஒரத்தநாடு, ஏப். 7: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டில் அதிமுக பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜனின் வீடு மர்ம கும்பலால் வியாழக்கிழமை நள்ளிரவு அடித்து நொறுக்கப்பட்டது.
அதிமுக தென்சென்னை மாவட்டச் செயலராகவும், தி. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளவர் வி.பி. கலைராஜன். இவரது தந்தை வீடு ஒரத்தநாடு கம்மாளத் தெருவில் உள்ளது. இங்கு இவரது தந்தை பட்டுசாமி (65), தங்கை கலைமதி, அவரது கணவர் குமரவேல் (36), குமரவேலின் மகள்கள் காருண்யா (17), கபி (7) ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு 20 பேர் கொண்ட மர்ம கும்பல் கலைராஜனின் வீட்டுக்கு காரில் வந்தது. அக்கும்பல் அரிவாள், கட்டை மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகியவற்றைக் கொண்டு வீட்டின் முன்புறம் இருந்த ஓடுகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியவற்றைச் சேதப்படுத்தியது.
அப்போது வெளியே வந்த பட்டுசாமியையும் குமரவேலுவையும் இக்கும்பல் கட்டையால் தாக்கியது. இதில் இருவரும் காயமடைந்தனர். சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வந்தவுடன் அக்கும்பல் தப்பியோடியது.
காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
முன்னாள் அமைச்சரும் ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். காமராஜ், அதிமுக விவசாயப் பிரிவு மாநிலச் செயலர் துரை. கோவிந்தராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி. ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை கலைராஜன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்டம் முழுவதிலுமிருந்து அதிமுக உறுப்பினர்கள் ஏராளமானோர் வெள்ளிக்கிழமை ஒரத்தநாட்டில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாவண்ணம் ஒரத்தநாடு நகரில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கலைராஜனின் தந்தை பட்டுசாமி அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 147, 148 (சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் கூடுதல்), 452 (அத்துமீறுதல்), 323 (கையால் தாக்குதல்), 3 (1) (பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஒரத்தநாடு காவல் நிலைய ஆய்வாளர் கணபதி வழக்குப்பதிவு செய்தார்.
வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவையில் அதிமுக எம்.எல்.ஏ. கலைராஜன் செருப்பைத் தூக்கிக் காட்டியதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.