The modalities of an Official Bandh, Strike – Organized Laziness by the Government
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007
செய்தி வெளியீடு எண்.187 நாள் 30.3.2007
செய்தி வெளியீடு
31.3.2007(சனிக்கிழமை) அன்று பொது வேலை நிறுத்த நாளாக தமிழகத்தில் அனுசரிப்பதையொட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு கீடிநடிநடிநடிநக்கண்ட உத்தரவுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
• பொது வேலை நிறுத்த நாளான 31.3.2007 (சனிக்கிழமை) அன்று, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாள் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
• மாநில போக்குவரத்துக் கழகங்கள், நாட்டில் செயல்பட்டுவரும் இதர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் 31.3.2007ம் நாளன்று பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
• பொது வேலை நிறுத்தத்திலிருந்து,
- தொலைபேசி,
- தொலைத் தொடர்பு,
- குடிநீர் விநியோகம்,
- பால் விநியோகம்,
- மின் விநியோகம்,
- தீயணைப்பு சேவை,
- செய்தித் தாள்கள்,
- மருத்துவமனைகள்,
- கருவூலங்கள்,
- பட்டியல் இன வங்கிகள் ஆகிய அத்தியவசியப் பணிகளுக்கு விலக்களிக்கப்படுகிறது,
• 31.3.2007 அன்று காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை , பேருந்துகளும், இரயில்களும், தமிழகத்தில் ஓடாது. 30.3.2007-அன்று புறப்படும் பேருந்துகள் அனைத்தும், 31.3.2007 அன்று அதிகாலை 5.00 மணிக்கு முன்பாக பாதுகாப்பான இடத்தை சென்றடைந்து நிறுத்தப்பட வேண்டும்.
• 31.3.2007 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விமானம் மற்றும் இரயில்களின் இயக்கம் இல்லாதவாறு நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
• மதுபானக் கடைகளும், வெடிமருந்து கிடங்குகளும், திரையரங்கங்களும், 31..3.2007 அன்று மூடப்பட்டிருக்கும்.
• பொது வேலை நிறுத்தம் முடிவுற்றதும், 31.3.2007-அன்று மாலை 6.00 மணிக்கு மேல் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
+++++
வெளியீடு இயக்குநர், செய்ய்ய்ய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை – 9
bsubra said
“பந்த்’ நாளில் முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு திருப்பி வழங்கிய கட்டணம் ரூ.7.80 லட்சம்
சென்னை, ஏப். 4: தமிழகத்தில் “பந்த்’ நடைபெற்ற மார்ச் 31-ம் தேதி மட்டும் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணத் தொகையாக ரூ. 7 லட்சத்து 80 ஆயிரத்து 260 திருப்பி வழங்கப்பட்டது.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி தமிழகத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டது. ரயில்களும் ரத்துச் செய்யப்பட்டன.
இதையடுத்து ரயில்களில் முன்பதிவு செய்திருந்த அனைத்துப் பயணிகளுக்கும் டிக்கெட் கட்டணம் முழுமையாகத் திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதன்படி தங்களது பயண முன்பதிவு ரத்து செய்த 3,905 பயணிகளுக்கு ரூ. 7 லட்சத்து 80 ஆயிரத்து 260 திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
பந்த் நாளுக்கு முந்தைய நாளான மார்ச் 30-ம் தேதி மட்டும் முன்பதிவு ரத்து செய்த 3,148 பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத் தொகையாக ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 628 திருப்பி வழங்கப்பட்டது.
இந்த இருநாள்களில் மட்டும் தெற்கு ரயில்வேக்கு பயணிகள் கட்டண வசூலில் ரூ. 13 லட்சத்து 62 ஆயிரத்து 888 இழப்பு ஏற்பட்டது.
எனினும் பந்த் நாளான மார்ச் 31-ம் தேதி மட்டும் முன்பதிவு கட்டணமாக ரூ. 23 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோடைகால சிறப்பு ரயில்களில் நெரிசல் இல்லை: சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கோடை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்களில் ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் மட்டும் முன்பதிவு முடிவுக்கு வந்துள்ளது. இதர பெரும்பாலான நாள்களில் கோடை கால சிறப்பு ரயில்களில் நெரிசல் ஏதும் இல்லை.
எனினும், தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதால், இன்னும் ஓரிருநாள்களில் முன்பதிவு செய்வோரின் நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
bsubra said
“தமிழ்ப் புத்தாண்டில் வெளிவரும் படங்களை 4 மாவட்டங்களில் திரையிடுவதில்லை’: திரையரங்க உரிமையாளர் சங்கம் முடிவு
தருமபுரி, ஏப். 7: வரும் தமிழ்ப் புத்தாண்டில் வெளிவரும் புதிய திரைப்படங்களை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட திரையரங்குகளில் திரையிடுவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சேலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தொழில் நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டிருந்த திரையரங்கத் தொழிலுக்கு புதுவாழ்வு அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி. சேலம் திரைப்பட விநியோகஸ்தர்கள் கவுன்சில் தருமபுரி நகர திரையரங்குகளுக்கு புதிய படங்களை வழங்க மறுத்து வருகிறது. அதனால் சேலம் திரைப்பட விநியோகஸ்தர்கள் கவுன்சிலின் சர்வதிகாரப் போக்கை கண்டித்து வரும் தமிழ்ப் புத்தாண்டில் வெளிவரும் புதிய திரைப்படங்களை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளில் திரையிடுவதில்லை என முடிவு செய்கிறோம்.