Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

LTTE air power threat to entire South Asian region

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

வானில் எழுந்த புதிய கவலை

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.

இதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.

இலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

விமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

விடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.

புலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.

விமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.

=====================================================

மிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது?

பாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

================================================
கேட்டுப் பெற முடியும்

இலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.

கொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா?

விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா?

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.

கடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும்? அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்?

12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.

ஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.

Advertisements

5 பதில்கள் to “LTTE air power threat to entire South Asian region”

  1. bsubra said

    கொழும்பு விமானபடை தளம் மீது விடுதலைப்புலிகள் விமானம் மூலம் குண்டுவீச்சு- 3 பேர் பலி, ஹெலிகாப்டர்கள் நாசம்

    கொழும்பு, மார்ச். 26-

    இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்து வரும் உள்நாட்டு சண்டையில் கடந்த ஆண்டு வரை இரு தரப்பினரும் தரைவழி மோதல்களிலும் கடலிலும் தான் கவனம் செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிங்களராணுவம் விமானப்படையை பயன் படுத்தி தமிழர்களின் கிரா மங்கள் மீது குண்டுகளை வீசி வருகிறது. இதில் பல கிரா மங்கள் அழிந்து விட்டன.

    பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் சொந்த கிராமங்களை காலி செய்து வேறு இடங்களுக்கு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி சிங்கள ராணுவம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் முன்னேறி வருகிறது. குறிப்பாக கிபீர் வகை குட்டி விமானம் மூலம் சிங் களர்கள் நடத்தும் தாக்குதல் கொடூரமாக உள்ளது.

    சிங்களர்களின் விமானப் படை தாக்குதல் அத்துமீறி போய் கொண்டிருப்பதால் விடுதலைப்புலிகள் மிகப் பெரிய பதிலடி கொடுப் பார் கள் என்று உளவுத்துறையி னர் கூறி வந்தனர். அதை உறு திப்படுத்துவது போல இன்று அதிகாலை விடுதலைப்புலி கள் முதன்முதலாக தங்கள் விமானப்படையைப் பயன் படுத்தி அதிரடி தாக்கு தலை நடத்தினார்கள். கொழும்பு அருகே காட்டுநாயக்காவில் உள்ள சிங்கள விமானப்படை தலைமை தளம் மீது இந்த தாக்குதல் நடந்தது.

    நள்ளிரவு 12.45 மணிக்கு விடுதலைப்புலிகளின் 2 இலகு ரக விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தின. அந்த 2 விமானங்களும் இலங்கை விமானப்படை தளத்தை குறி வைத்து குண்டு மழை பொழிந்தன. பிறகு அந்த 2விமானங்களும் சக்தி வாய்ந்த 4 குண்டுகளை வீசி அதிரடி தாக்குதலை மேற்கொண்டன.

    தாக்குதலுகுள்ளான விமா னப்படை தளத்தில் தான் ரஷிய தயாரிப்பான `மிக்’ரக சண்டை விமானங்களும் இஸ்ரேல் தயாரிப்பான கிபிர் ரக விமானங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஈழத்தமி ழர்கள் மீது குண்டு வீச இந்த விமானங்களைத்தான் இலங்கை பயன்படுத்தி வரு கிறது. அந்த விமானங்களை குறி வைத்து விடுதலைப்புலிகள் விமானங்களில் இருந்து குண் டுகளை வீசினார்கள்.

    இதில் மிக், கிபிர் சண்டை விமானங்கள் கடும் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலின் போது விமானப்படை வீரர்கள் 3பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நீர்கொழும்பு மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

    வான்புலிகளின் எதிர் பாராத தாக்குதலால் இலங்கை விமானப்படை வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மற்றொரு பகுதி யில்தான் கொழும்பு சர்வதேச விமான நிலையம் உள்ளது. வான்புலிகள் மீண்டும் தாக் கக்கூடும் என்ற பயத்தில் உட னடியாக கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டது.

    இன்று காலை 8.30 மணி வரை விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. இதனால் கொழும்புக்கு வந்த 3 வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப் பட்டன. 8.30 மணிக்கு பிறகு கொழும்பு விமானநிலையம் திறக்கப்பட்டாலும் அதிகாரிகளும், ஊழியர்களும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

    வான்புலிகளின் அதிரடி தாக்குதல் காரணமாககாட்டு நாயக்க ப குதி முழுவதும் இன்றுகாலை வரை புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் கொழும்பில் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கும் இது கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வான்புலிகள் தாக்குதல் நடத்தியதை சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச்செல் வன் உறுதிப்படுத்தினார். காட்டு நாயக்க விமானப்படை தளத்தில் பார்க்கிங் பகுதியில் 4 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்தார்.

    விடுதலைப்புலி தளபதிகளில் ஒருவரான ராசையா இளந்திரையன் கூறியதாவது:-

    வான்புலிகளின் 2 விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. காட்டு நாயக்க தலைமை முகாமை அழித்து விட்டு 2 விமானங்களும் பாதுகாப்பாக வன்னிபடை தளத்துக்கு திரும்பி வந்து விட்டன.

    வான்புலிகள் தாக்குதலில் கிபிர், மிக் ரக விமானங்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்திலும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும். வான்புலிகள் முதன் முதலாக இன்றுதான் தாக்குதலை தொடங்கி உள்ளனர். எமது மக்களை காப்பாற்றுவதற்காக, இலங்கை விமானப்படையை அழிக்கவே இன்றைய வான்தாக்குதல் நடத்தப்பட்டது.

    இவ்வாறு ராசையா இளந்திரையன் கூறினார்.

    வான்புலிகள் தாக்குதலை ராணுவ செய்தித் தொடர்பாளர் அஜந்தாசில்வா ஒத்துக்கொண்டார்.

    அவர் கூறியதாவது:-

    வான்புலிகள் தாக்குதல் நடத்தியதும் வான் எதிர்ப்பு சாதனங்கள் இயங்கின. உடனே புலிகளின் 2 விமானங்களும் தப்பிச் சென்று விட்டன. எங்களது வான்படை மூலம் புலிகளின் விமானங்களை தேடி வருகிறோம்.

    அவர்கள் நடத்திய குண்டு வீச்சு குறி தப்பி விட்டது. எனவே எங்களுக்கு அதிக சேதம் இல்லை. விமானப்படை தளத்துக்குள் எரிந்த தீயை உடனே அணைத்து விட்டோம். அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

    வான்தாக்குதல் நடத் தப்பட்டதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வான் தாக்குதல்கள் தொடரும் என விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கொழும் பின் அனைத்துப் பகுதிகளிலும் இரவுநேரங்களில் மின் விளக்குகளை எரிய விட வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருக் கிறோம்.

    இவ்வாறு அஜந்தாசில்வா கூறினார்.

  2. bsubra said

    வளவு: தமிழீழ வான்படையால் இந்தியாவுக்கு ஒருபோதும் அச்சுறுத்தல் இல்லை!!!

  3. bsubra said

    வளவு: விடுதலைப் புலிகளின் வான்படை: இந்தியா விலகி நிற்க முடிவு!!!

  4. bsubra said

    எங்கள் விமானப்படை இந்தியாவுக்கு எதிரானது அல்ல: விடுதலைப்புலிகள் அறிவிப்பு

    கொழும்பு, மார்ச். 31- விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    இலங்கை அரசும் சிங் கள பேரினவாதமும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு இன அழிப்பு நடவடிக் கையை தொடர்ந்து மேற்கொண்ட தால் தான் ஈழ விடுதலை போராட்டம் தீவிரம் அடைந் தது. எங்கள் ஆயுத போராட் டம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று ஒரு அரசை இயக்குகிற அளவுக்கு வலுப்பெற்று உள்ளது.

    இந்த வகையில் எங்கள் படையின் கட்டுமான வளர்ச்சியின் தொடர்ச்சியே விமானப்படை தோற்றமாக மாறி இருக்கிறது. இலங்கை விமானப்படை எங்கள் மண் ணில் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அதற்கு பதில் நடவடிக்கை ஒன்றை நாங்கள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பட்டது. இதனால்தான் எங்கள் விமானப்படையை பயன் படுத்தி இந்த தாக்குதலை நடத்தினோம்.

    எங்கள் விமானப்படை இந்தியாவுக்கோ மற்ற நாடு களுக்கோ அச்சுறுத்தலாக இருக்காது. தமிழ் மக்களை காப்பதற்காகவும், எங்கள் தாயகத்தை விடுவிப்பதற் காகவும்தான் நாங்கள் படை களை உருவாக்கி உள்ளோம். அவை இனப் படுகொலையை நடத்த வரும் சிங்கள அரசு படைகளுக்கு எதிராக மட்டுமே செயல்படும் தமிழ் மக்களுடைய சுதந்திரம் அவர் களுடைய விடுதலை இந்திய தேசத்துக்கும் மிகுந்த நன்மை யையும், நல்லுறவையும் ஏற் படுத்தும்.

    ஒரு போதும் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் எதிரான போக்கை ஈழ விடுதலை போராட்டமோ விடுதலைப்புலிகளோ கடைப்பிடிக்க மாட்டார்கள். தமிழர்கள் படைபலம் பெருகுவதால் எந்த அரசுமே கவலைப்பட தலையில்லை. எங்கள் படை பலம் பெருகி சுதந்திரம் அடைந்தால் அது இந்து மகா கடல் பிராந் தியத்தில் பூரண அமைதியை ஏற்படுத்தும்.

    எங்களிடம் விமானங்கள் உள்ளது என்பதை எப்போதுமே நாங்கள் மறுக்கவில்லை. 1998-ம் அண்டில் இருந்தே விமானப்படை வளர்ச்சி ஆரம்பித்து விட்டது. இன்று அது நல்ல நிலையில் இருக் கிறது. எங்கள் விமானப் படையை பற்றி இலங்கை அரசு சாதாரணமாக சொல்லி இருப்பது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இருக்கிறது.

    சிங்கள விமானப்படையின் மனித தாக்குதல் அவலங்களை தடுத்து நிறுத்தவே அவர்கள் தளத்துக்குள் சென்றே தாக்கி அழித்தது இருக்கிறோம். தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை பலவீனப்படுத்தி இருக்கிறோம். இதே போல இன்னும் பெரிய இழப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை இதன் மூலம் உணர்த்தி இருக்கிறோம். அந்த தந்திரங் களை இப்போது கூற விரும்பவில்லை.

    தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழ் நாட்டு மக்களும் ஈழத் தமிழ் மக்களும் எப்போதும் தொப்புள் கொடி உறவாக வாழ்ந்து இருக்கிறார்கள். இந்த உறவை சீர்கெடுக்கும் நோக்கத்தோடு சிங்கள படை தமிழக மீனவர் களை சுட்டு கொன்று விட்டு அந்த பழியை எங்கள் மீது சுமத்தி ஈழத்தமிழ் மக்கள்-தமிழ் மக்கள் இடையே உள்ள உறவை இல்லாமல் செய்ய முயற்சிக்கிறார்கள்.

    இந்த சதி செயலை தமிழக உறவுகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இவ் வளவு காலமும் சிங்கள படை ஈழ தமிழ் மக்களை தாக்கினார்கள். இப்போது தமிழக மக்களை நோக்கியும் தங்கள் துப்பாக்கியை திருப்பி இருக்கிறார்கள். தமிழக தலை வர்களும் நன்கு உணர்ந் திருக்கிறார்கள். அவர்கள் பிரசார உத்தியை யாரும் நம்ப போவதில்லை.

    இந்தியா-இலங்கை படை கூட்டு ரோந்து என்ற பெயரில் எங்களுக்கும் இந்திய படைக் கும் இடையே மோதல் நிலையை உருவாக்கி அதன் மூலம் நன் மையடைய இலங்கை அரசு சதி செய்கிறது. இந்த சதிக்குள் இந்திய அரசு விழுந்து விடாது என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

  5. bsubra said

    Sri Lanka | Tigers with wings | Economist.com:

    The Tamil Tigers’ fledgling air force is puny but menacing

    With over 500,000 arrivals a year, yielding an income of $410 million, tourism was Sri Lanka’s third-biggest dollar earner last year.

    With the air raids exposing serious weaknesses in the country’s defences, the government is likely to increase this year’s military spending from the expected 139 billion rupees ($1.25 billion) to 200 billion rupees, predicts Harry Gunatilleke, a former air-force commander.

    Despite annual economic growth of 7.5%, its budget deficit is 8.4% of GDP, reckons Fitch, a credit-rating agency, and government debt is an alarming 93% of GDP.

    Sri Lankans are already suffering: inflation is a crushing 17%, while real wages have fallen in the private sector—by 10% in agriculture and 12% in service industries—over the past year, says Harsha de Silva, an economist.

    The 20-year war between the Tigers and government forces has claimed more than 65,000 lives.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: