Georgina – Earn money from Home: Translate Tamil to English
Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007
இது புதுசு: டாலரில் சம்பாதிக்கலாம் வாங்க!
ரவிக்குமார்
ஜார்ஜினா
“”நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக எழுதும் திறனுள்ள இல்லத்தரசியா? இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் உங்களிடம் இருந்தால் போதும், டாலரில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை பல இணைய தளங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றன” என்கிறார், தனது செல்ல நாய்க்குட்டியான டிரிக்ஸியைக் கொஞ்சியபடி ஜார்ஜினா!
ஜார்ஜினா- ஆங்கில மொழியில் பாடல் எழுதும் பாடலாசிரியர். குழந்தைகளுக்காக இவர் ஆறு கம்ப்யூட்டர் சி.டி. ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். ஒவ்வொருவரின் மனத்திலும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் “மெட்டி ஒலி’யின் ஆறு எபிசோட்களின் ஸ்கிரிப்ட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து சுமதி ராம் என்னும் பெண் இயக்குனர் எடுத்த “விஷ்வதுளசி’ படத்தில் வரும் “கண்ணம்மா..’ என்று தொடங்கும் பாடலை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
“”தமிழில் எனக்குப் பெரிய புலமை எல்லாம் கிடையாது. ஆனாலும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அந்த வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளை எழுதுவதற்குத் தெரியும்…” என்ற ஜார்ஜினாவுடன் பேசியதிலிருந்து…
இணையத்தைப் பயன்படுத்தி இல்லத்தரசிகள் டாலரில் பணம் சம்பாதிக்கலாம் என்கிறீர்களே…எப்படி?
உண்மைதான். ஆங்கிலத்தில் பரவலாக எல்லாத் துறைகளுக்கும் இணையதளங்கள் உள்ளன. இதில் சில இணையதளங்களில் உயர்தரமான ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு, வீட்டிலிருந்தபடியே பணி செய்வதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. நண்பர் ஒருவரால் எனக்கு அப்படி அறிமுகமான ஓர் இணையதளம்தான், http://www.proz.com இந்த இணையதளம், பல மொழிகளில் இருந்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகளை நாடுபவர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஒரு பாலமாக இருக்கின்றது. இதில் மொழி பெயர்ப்புகளைச் செய்ய விரும்புபவர்கள், அவர்களின் கல்வித் தகுதி, மொழிபெயர்ப்புப் பணியில் அவர்கள் இதுநாள் வரை செய்திருக்கும் விஷயங்கள், அவர்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து இணைத்துக் கொள்ளலாம். அப்படி இணைத்துக் கொள்பவர்கள், இணையதளத்தில் சென்று பார்த்தால், வெவ்வேறு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யக்கோரி பலரின் ஆர்டர்கள் இருக்கும். பணியின் விவரம், செய்துமுடிப்பதற்கான கடைசி நாள், பணிக்குக் கிடைக்கும் ஊதியம் போன்ற விவரங்கள் இருக்கும். இந்த விவரங்களைப் பின்பற்றி எவரும் இந்தப் பணியைச் செய்யலாம்.
ஆங்கிலப் புலமைக்குப் பிரத்யேகப் பயிற்சி ஏதாவது எடுத்துக் கொண்டீர்களா?
சென்னை, ஹோலி ஏஞ்சலீஸ் பள்ளியில் 17 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்கள் வட்டத்திலேயே என்னை “நடமாடும் அகராதி’ என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்கு சின்ன சின்ன வார்த்தையாக இருந்தாலும் அதன் பொருளை, அதற்கான எளிய வார்த்தையை எழுதிவைத்துக் கொள்வேன். இந்த ஆர்வம்தான் மொழிபெயர்ப்பிலாகட்டும், ஆங்கிலத்தில் பாடல்களை எழுதுவதிலாகட்டும் எனக்கு அடிப்படையாக அமைந்தது.
சம்பாதிப்பதற்கு இந்த ஓர் இணையதளம் மட்டும்தானா?
தேடிப்பார்த்தால் இன்னும் எவ்வளவோ இணையதளங்கள் கிடைக்கக் கூடும். நான் மொழிபெயர்ப்புக்கான இணையதளமான பிராக்ஸ் டாட் காம்-ல் தான் முதலில் என்னைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்திருந்தேன். இதற்குப் பின்தான் எனக்கு “அகாடமியா ரிசர்ச்’ Academia_Research. com என்னும் இணையதளத்திலிருந்து பகுதி நேரமாகப் பணிபுரிய விருப்பமா? என்று கேட்டு எனக்கு ஈ-மெயில் வந்தது. இதற்கு நான் விருப்பம் தெரிவித்தவுடன், எனக்கு தலைப்பைக் கொடுத்து ஒரு கட்டுரையை அனுப்பச் சொன்னார்கள். இது ஆங்கிலமொழிப் புலமை அதிகம் இல்லாத பல நாடுகளில் பல மொழி பேசும் மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆய்வுக் கட்டுரைகளையும், அவர்களுக்கான தீஸிஸ்களையும் பெற்றுத் தருவதற்காக நடத்தப்படும் இணையதளம். இதில் கட்டுரைகள் நம்முடைய சொந்த வார்த்தைகளில் இருக்கவேண்டும் என்பது கடுமையான விதி. கட்டுரையில் இந்தந்த விஷயங்கள் இருக்கவேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். அந்த விஷயங்கள் குறித்த தேடுதல் வேட்டையை இணையதளத்தில் நாம் நடத்தி, அதைத் தொகுத்து, முறைப்படி அதை நம்முடைய வார்த்தைகளில் அலங்காரமாக வடித்துத் தரவேண்டும்.
ஒரு மாணவன் தேர்வுக்காக செய்யவேண்டிய ஆய்வுகளை அவனுக்கு மாற்றாகச் செய்கிறோமே…என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு இல்லையா?
இதில் குற்ற உணர்ச்சிக்கு இடமே இல்லை. கல்விக்காக இன்றைக்கு மாணவர்கள் நாடுகளை விட்டும், கண்டங்களை விட்டும் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல மொழி பேசுபவர்களாக இருந்து, ஆங்கில மொழியில் போதிய புலமை இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில்தான் இந்த இணையத்தளத்தை அவர்கள் நாடுகிறார்கள். அவர்களுக்காக நான் தேர்வு எழுதினால்தான் தவறு. அவர்களுக்காக கட்டுரைகளை எழுதுவது தவறல்ல.
இணையத்தில் செய்யப்படும் இந்தப் பணியில் இருக்கும் முக்கியமான வசதி என்ன?
நம்மால் செய்ய முடிந்த வேலையை நாம் யோசனை செய்து நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி இதில் இருக்கிறது. உதாரணத்துக்கு, உலக அளவில் கணிதம் பாடத்திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களைக் குறித்து ஒருவர் ஒரு கட்டுரையைக் கேட்டிருந்தால், நான் “எஸ்கேப்’ ஆகிவிடுவேன். ஏனென்றால் நான் கணிதத்தில் பூஜ்யம். இதுபோல் நம்மால் செய்யமுடிந்த பணியை நாமே தேர்ந்தெடுத்து, அதைக் குறிப்பிட்ட அவகாசத்தில் செய்து கொடுத்துவிட வேண்டும். அது மிகவும் முக்கியம்.
அப்படி என்னென்ன துறைகளில் நீங்கள் கட்டுரையை அனுப்பியிருக்கிறீர்கள்?
அறிவியல், சட்டம் தொடர்பான கட்டுரைகளைக் கூட நான் எழுதி அனுப்பியிருக்கிறேன். உலக அளவில் இசை மற்றும் இசை தொடர்பான விஷயங்களில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களைக் குறித்து கூட கட்டுரை எழுதியிருக்கிறேன். இசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. கட்டுரைக்காக தேடும்போது, உலகத்தின் மிகப் பெரிய இசைப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனமான உ.ங.ஐ. மிகச் சமீபத்தில், ஒருபக்கம் ஆடியோ சி.டியாகவும், இன்னொரு பக்கம் டி.வி.டி.யாகவும் இரட்டைப் பயன் தரும் டிஸ்க்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ள விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.
லண்டனையே ஸ்தம்பிக்க வைத்த, தீயணைப்பு வீரர்களின் புரட்சிகரமான வேலை நிறுத்தம் பற்றி கூட, லண்டனின் வரலாறு என்னும் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். இன்னொரு கட்டுரை, கரு முட்டைகளை அளிக்கும் பெண்களைப் பற்றி, அவர்களின் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது சரியா? தவறா? என்ற அலசல் கட்டுரை..இப்படி நிறைய எழுதியிருக்கிறேன். இது போன்ற பணியில் ஆர்வமிருப்பவர்கள் என்னை அணுகினால் அவர்களுக்கு என்னால் இயன்ற ஆலோசனைகளைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன்.
ஆங்கிலத்தில் பாட்டு எழுதும் நீங்கள், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்க்கும் நீங்கள் தமிழில் எப்போது எழுதப் போகிறீர்கள்?
தமிழில் எழுதும் அளவுக்கு எனக்குப் புலமை இல்லை. அதனால் என்ன? தமிழ்ப் படத்தில் ஆங்கிலப் பாடல் எழுதும் வாய்ப்புதான் எனக்கு நிறைய வந்து கொண்டிருக்கிறதே…! சமீபத்தில் கூட, கமல்ஹாசனின் “தசாவதாரம்’ படத்தில் பின்னணி பாடுவதற்காக என்னுடைய மகள் சென்றிருந்தாள். அதில் தமிழ் பாடல்களுக்கு இடையில் ஆங்கிலத்திலும் ஒரு பாடல் வருகிறதாம். அதற்காக ஏற்கனவே வேறொருவரிடமிருந்து எழுதி வாங்கிய பாடல் சரியாகப் பொருந்த வில்லையாம். அப்போது அங்கிருந்த என்னுடைய மகள், “என் அம்மாவும் இங்கிலீஷ் பொயட்தான்’ என்று சொல்ல, வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது மேலும் இரண்டு தமிழ்ப் படத்தில் ஆங்கிலத்தில் பாடல் எழுத இருக்கிறேன்.
– “எல்லாம் சரி…கடைசி வரையில் அவரின் மகள் யாரென்று சொல்லவே இல்லையே?’ என்று மறக்காமல் கடிதம் எழுதும் வாசக நக்கீரர்களின் கவனத்திற்கு…ஜார்ஜினாவின் செல்ல மகள்தான் பாப் ஷாலினி!
bala said
குடாநாட்டிற்குக் கப்பல்கள் மூலம் எடுத்துவரப்பட்ட
136 பொருள்களுக்கு செயலகம் விலை நிர்ணயம் 15 ம் திகதி சனிக்கிழமை டிசம்பர் மாதம் 2007, 7:00:00 மணி
குடாநாட்டுக்கு தனியார் வர்த்தகர் களால் “யுனி குளோரி’, “வின்ரன்’ ஆகிய கப்பல்களில் எடுத்துவரப்பட்டுள்ள 136 பொருள்களின் விற்பனை விலை விவரங் கள் யாழ்.செயலகத்தால் அறிவிக்கப்பட் டுள்ளன.[விரிவு]
குடாநாட்டுக்கு தனியார் வர்த்தகர் களால் “யுனி குளோரி’, “வின்ரன்’ ஆகிய கப்பல்களில் எடுத்துவரப்பட்டுள்ள 136 பொருள்களின் விற்பனை விலை விவரங் கள் யாழ்.செயலகத்தால் அறிவிக்கப்பட் டுள்ளன.
“யுனி குளோரி’ கப்பல் மூலம் எடுத்து வரப்பட்டுள்ள 50 பொருள்களுக்கும்
“வின்ரன்’ கப்பல் மூலம் எடுத்துவரப் பட்டுள்ள 86 பொருள்களுக்கும் அத்தியா வசிய சேவைகள் ஆணையாளரினால் விலை நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.
இந்த விலை விவரங்கள் யாழ்.அரச அதிபரால் வெளியிடப்பட்டுள்ளன.
“யுனி குளோரி’ கப்பலில்
கொண்டுவரப்பட்ட பொருள்களுக்கான விலைகள்
சிமெந்துபைக்கற் 1 ரூபா 1,100, சாரா யம்போத்தல் ரூபா 490, பீடி தூள் கி.கி ரூபா 885, பீடி புகையிலை கி. கி ரூபா 202, ரயர் தனி ரூபா 500, ரியூப் தனி ரூபா 200, பிஸ்கெற் கி.கி ரூபா 192, தும் புத் தடி தனி ரூபா 152, பல்ப்ஸ் தனி ரூபா 36, 60, மெழுகுவர்த்தி தனி ரூபா 16
செத்தல் மிளகாய்கி.கிரூபா 165, சிமினி தனி ரூபா 80, சொக்லேட் பெட்டி ரூபா 150, துணி யார் ரூபா 70, கோப்பி கி.கி ரூபா 360, கணனி தனிரூபா 35,000, குக்கர்தனி ரூபா 1,000, மல்லிகி.கி ரூபா 260, கால்நடை தீவனம் பைக்கற் ரூபா750, பருப்புகி.கி ரூபா 110,
பயறு கி.கி ரூபா 145, மாஜரின் பைக்கற் ரூபா 200, பாய்தனிரூபா 150, பால்மா பைக்கற்ரூபா 255, நுளம்புத்திரி பைக்கற் ரூபா 40, உழுந்துகி.கிரூபா 145, உழுத்தம் குருனல்கி.கி ரூபா 48, பெயின்ரின்ரூபா 750, பப்படம்கி.கி ரூபா 75, கச்சான் பருப்புகி.கிரூபா 190,
பிளாஸ்ரிக் கப் தனி ரூபா 10, புண் ணாக்கு கி.கி ரூபா40, விதை உருளைக் கிழங்கு கி.கிரூபா 1,250, உருளைக் கிழங்குகி.கி ரூபா 90, பேப்பர்றீம்ரூபா 450, அரிசி வகைகி.கி ரூபா 50, 65, சாம் பிராணிகி.கிரூபா 1,200, தையல்மெசின் தனிரூபா 4,000, சம்போபோத்தல் ரூபா 75, சில்வர் கப்தனிரூபா50,
சோடாதனி ரூபா 185, சீனிகி.கி ரூபா 62, சூரியகாந்தி எண்ணெய் லீற்றர் ரூபா 225, புளிகி.கி ரூபா 70, தேயிலை கி.கி245, ஓடுதனி ரூபா 85, ரின் மீன் தனிரூபா 105, நெய்கி.கிரூபா750, மரக் கறி எண்ணெய்லீற்றர்ரூபா230, ஈஸ்ட் பெட்டிரூபா 300,
“வின்ரன்’ கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருள்களுக்கானவிலைகள்
அலுமினிய பட்டம்தனிரூபா 600, அமோக்சிலின்பெட்டி ரூபா 2,820, பாக்கு கி.கிரூபா 110, பாத்×ம் இணைப்புப் பெட்டி ரூபா 1,250, பெனாடில் சிறப் போத்தல்ரூபா 118, சைக்கிள் ரியூப்தனி ரூபா200, பிஸ்கெற்பெட்டிரூபா 68, தும் புத்தடி தனி ரூபா 80, பிறவுண் பேப்பர் தனிரூபா 7,10, கயூகி.கிரூபா850,
கல்சியம் பவுடர்கி.கி ரூபா 130, மெழுகுவர்த்திபெட்டிரூபா60, காப்பெற் தனிரூபா68, சீமெந்துபைக்கற்ரூபா 1,100, கோழிக்குஞ்சு தீவனம்கி.கிரூபா 25, செத்தல் மிளகாய்கி.கி. ரூபா 180, தேங்காய் எண்ணெய்லீற்றர்ரூபா210, கயித்து காப்பெற்தனிரூபா 100, கயிறு கி.கிரூபா 200, கொலோன்போத்தல் ரூபா 65,
கணனிதனிரூபா 40,000, குக்கர் தனி ரூபா3,650, கோண் பிளவர்கி.கி ரூபா 85, மல்லிகி.கிரூபா 280, நற்சீரகம் கி.கிரூபா230, பேரீச்சம்பழம்பி.பிரூபா 85, பருப்புகி.கி100, எசன்ஸ்றம் ரூபா 19.000, கோப்பிதனி ரூபா 8, 28, மின் விசிறிதனிரூபா 4,600.
போமிக்காதனிரூபா1,200, குளிர்சாத னப்பெட்டிதனிரூபா 39,000, உள்ளி கி.கிரூபா 95, ஜெலற்றேசர்தனிரூபா 50, எள்ளுகி.கிரூபா 280, கிறைண்டர் தனிரூபா 38,500, காட்போட் சீற்தனி ரூபா 650, கொட்பிளேட்தனிரூபா 650, சாம்பிராணி குச்சிபெட்டிரூபா 20, அயன் பெட்டிதனிரூபா 700,
சர்க்கரைகி.கிரூபா 85, ஜாம்போத் தல்ரூபா 120, லாப் எண்ணெய்கான் ரூபா 450, சாப்பாட்டுப் பெட்டிதனி ரூபா 60, 70, மாஜரின்பைக்கற்ரூபா 200, பாய் தனிரூபா 150, மைக்கிறோ அவன்தனி ரூபா 15,400, நுளம்புத்திரிபைக்கற்ரூபா 40, நூடில்ஸ்கி.கிரூபா 45, ஒயில் பேப் பர்தனிரூபா 8, 10,
ஒப்ரோன்பெட்டிரூபா 85, மரக்கறி எண்ணெய்கான்ரூபா 475, பனடோல் காட் ரூபா 160, பென்சில்தனிரூபா 8, 10, மிளகுகி.கிரூபா 165, பிளம்ஸ் கி.கிரூபா 100, பிளைவூட் சீற்தனிரூபா 1,500, கால்நடை தீவனம்பைக்கற் ரூபா1,300, புண்ணாக்குகி.கிரூபா 48, உருளைக்கிழங்குகி.கிரூபா 100.
அரிசகி.கிரூபா 65, தவிடுகி.கிரூபா 48, அடிமட்டம்தனிரூபா 10,1 5, சவ் வரிசிகி.கிரூபா 90, உப்புகி.கிரூபா 30, சமகன்பைக்கற்6, சமபோசாகி.கிரூபா 40, பாடசாலைப் பைதனிரூபா 300, சொக்ஸ்சோடிரூபா 50, சிலிப்பர்சோடி ரூபா 100.
சப்பாத்துசோடிரூபா 480 சவற் காரம்தனி Mச்ணூடுஞுஞீ ணீணூடிஞிஞு + 1, சோடா தனி ரூபா 185, சோயா மீற்கி.கிரூபா 90, தார்றம்ரூபா 20,000, தேயிலைகி.கி ரூபா 385, ரின் மீன்தனிரூபா 105, ரின் பால்தனி325, ரொபிபைக்கற்ரூபா 100, பற்றரிதனிரூபா 40,
ரீயூப் பல்புதனிரூபா 60, மஞ்சள் கி.கி ரூபா 120, உஜாலா நீலம்தனிரூபா 60, மரக்கறி எண்ணெய்லீற்றர்ரூபா 190, வாகன ரயர்தனிரூபா 6,000, ஈஸ்ற் பெட்டிரூபா 290.
—————————————————————————————————————————————————————-
யாழ். லயன்ஸ் கழகம், யு.என். ஹப்பிற்றாட் நிறுவத்தின் அனுசர ணையுடன் நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு பாஷயூர் ஜே/64, ஜே/65, கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கென பாசையூர் புனித அந்தோனியார் றோ.கா.மகளீர் வித்தி யாலயத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தவுள்ளது. இதில் பல், கண், இரத்த அழுத்தம், நீரிழிவு, பொதுமருத் துவம் ஆகிய பரிசோதனைகளும் விழிப் புனர்வு கருத்தரங்கும் நடதத்தப் படவுள்ளன. (202)
—————————————————————————————————————————————————————-
மதுவரித் திணைக்கள அத்தியட்சகர், கியூடெக் கரித்தாஸ் நிறுவனப் பணிப்பாளர் அருட்தந்தை எஸ்.ஜெயக்குமார் அடி களார.
—————————————————————————————————————————————————————