China considering property protection: Tax Issues
Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007
சீனாவில் சொத்து குறித்து புதிய சட்டம் கொண்டு வர அரசு ஆலோசனை
![]() |
![]() |
சீன நாடாளுமன்றம் |
சீனாவில், அரசிடமிருந்து நிலத்தை தனியார்கள் குத்தகைக்கு பெறவேண்டிய நிலை உள்ளது பற்றிய கோபம் அதிகரித்து வருவதால், ஒரு புதிய தனியார் சொத்து சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது குறித்து சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.
கிராமப்புறங்களில், தங்களது நிலங்களை, புதிய வீடுகள் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களைக் கட்டுவோருக்குப் பறிகொடுத்த மக்களின் பிரச்சினைகள் காரணமாக, அங்கு பரவலான சமூக அதிருப்தி நிலவுகிறது.
கம்யூனிஸ்ட் சீனா, ஒரு அதிகரித்து வரும் அளவில், முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய சட்டம், சொத்து பறிமுதல் செய்யப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு எதிராக பாதுகாப்பளிக்கும். இந்த சட்டத்திற்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
—————————————————————————-
சீனாவில் வறட்சி: உணவு உற்பத்தி பாதிப்பு
பெய்ஜிங், ஜூன் 13: சீனாவில் 6 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் 3 கோடி டன் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது.
சீன வேளாண்மைத் துறை துணை அமைச்சர் வீ சோ கூறியது: நாட்டின் மொத்த தண்ணீர் உபயோகத்தில் விவசாயத்திற்கு 64 சதவீதம் செலவிடப்படுகிறது. நீரை சேமிப்பது சமுதாயத்திற்கு அவசியமானது.
வேளாண்மைத் துறையில் நீர் சேமிப்பு உத்திகளை கையாளுவதும், நீர் சேமிப்பை சிறந்த முறையில் செயல்படுத்துவதும் கடினமான பணி.
மேலும் சீனாவில் 30 கோடி ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாத அளவுக்கு 3000 கோடி கனஅளவு மீட்டர் நீர் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சீன அரசு தற்போது ரூ. 364 கோடிக்கும் அதிகமான செலவில் 16 லட்சத்து 47 ஆயிரத்து 415 ஏக்கர் நிலத்தில் நீர் சேமிப்பு உத்திகளை செயல்படுத்தியுள்ளது.
இதனால் ஆண்டுக்கு 270 கோடி கனஅளவு மீட்டர் மழை நீரும், ஏக்கருக்கு 1260 கனஅளவு மீட்டர் நீரும் சேமிக்கப்படுகிறது.
bsubra said
எரிபொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை
பெய்ஜிங், ஏப். 7: டீசல் உள்பட பல்வேறு எரிபொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்ட பொருள்களின் பட்டியலை சீனா தயாரித்துள்ளது. இது அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம், சுங்கவரித் துறை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிர்வாகத் துறை ஆகியவற்றால் இணைந்து தயாரித்து வெளியிடப்பட்டது.
இந்த தடை இம்மாதம் 26-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. தடைப் பட்டியலில் டீசல் உள்பட பல்வேறு எரிபொருளும் இடம் பெற்றிருப்பதால் அவற்றை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய இனிமேல் அந்நாட்டு சுத்திகரிப்பு நிறுவனங்களால் இயலாது. சர்வதேச அளவில் அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக அதிக எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடாக சீனா திகழ்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 36 லட்சம் டன் சுத்திரிகரிக்கப்பட்ட எரிபொருள்கள்களை இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.