Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 7th, 2007

Engineering, Medical Professional courses Entrance Exams – Analysis, Options

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

இன்னொரு கோரிக்கை உண்டு

தொழிற்கல்வி படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்று குழம்பிக் கொண்டிருந்த மேனிலைப் பள்ளி மாணவர்களை, குறிப்பாக பெற்றோர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒப்புதல்.

பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏறக்குறைய இரு மாதங்கள் ஆன பின்பே ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த ஒப்புதல் இன்னும்கூட சற்று முன்னதாகவே கிடைத்திருந்தால் தேவையற்ற மன உளைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இப்போது, நுழைவுத் தேர்வு முறை கிடையாது என்பது சட்டப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. இனி பொதுப் போட்டியில் வாய்ப்பு இழந்த கிராமப்புற மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை மலரும் நேரத்தில், சில நெருடலான நிகழ்வுகளும் நடக்கவே செய்கின்றன.

பொது நுழைவுத் தேர்வு முறையை அரசு ரத்து செய்துவிட்டாலும் தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 15 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பாடப் பிரிவுகளில் 30 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க முடியும்.

ஒரு மாணவன் எத்தனை தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத் தேர்வு எழுத முடியும்? ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கு அல்லது விண்ணப்பத்துக்கு குறைந்தது ரூ.500 செலவிட்டாக வேண்டும் என்றால், ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்?

இந்த தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழக அரசு வலியுறுத்தும் ஒற்றைச் சாளர முறைக்கு உடன்பட வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில், 2001-ம் ஆண்டு இதே போன்ற பிரச்சினையின்போது, தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு முறை ரத்துக்கு ஒப்புக்கொண்டாலும் நிர்வாக ஒதுக்கீட்டில் தங்களை அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) நோக்கமே மேலும் மேலும் தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்களை உருவாக்குவதுதான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இத்தகைய தனியார் பல்கலைக்கழகங்கள் பெருகியுள்ளன.

நுழைவுத் தேர்வு முறை அமல் செய்யப்பட்ட காலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. எனவே, மாணவர்களை வடிகட்டுவதற்கு ஓர் வழிமுறையாக நுழைவுத் தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 250 ஆகிவிட்டது. போதிய அளவு மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகிறது. எனவே, நுழைவுத் தேர்வு முறை தேவையில்லை என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத் தக்கது.

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே ஐஐடி, என்ஐடி-யில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 50 சதவீதம் அந்த மாநிலத்து மாணவர்களுக்கும் மீதி 50 சதவீதம் வெளிமாநில மாணவர்களுக்கும் என ஒதுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் இந்தியா முழுவதும் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர வாய்ப்பு உள்ளது.

இதே போன்று தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்கள் ஒரே அமைப்பாக, இந்தியா முழுமைக்கும் ஒரேயொரு பொது நுழைவுத் தேர்வை நடத்தினாலும் வரவேற்கக் கூடியதே.

Posted in Abdul Kalam, Analysis, Anna University, APJ, Backgrounder, Education, Engineering, Entrance, Exam, History, IIM, IIT, JEE, Kalam, Law, medical, Options, President, professional, REC, Research, solutions, Suggestions, Tamil, Technology, Tests, UGC, University | Leave a Comment »

BJP raises Nepali MP’s nationality issue in Lok Sabha

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

இந்தியர் அல்லாதவர் எம்.பி. ஆனது எப்படி? மக்களவையில் பாஜக கேள்வி

புதுதில்லி, மார்ச் 8: இந்தியர் அல்லாத ஒருவர் எம்.பி. ஆக எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நாடாளுமன்றத்தில் பாஜக புதன்கிழமை குரல் எழுப்பியது.

அவை கூடியதும் பாஜக வைச் சேர்ந்தவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான மல்ஹோத்ரா, இந்த பிரச்சினையைக் கிளப்பினார்.

அவர் பேசும் போது, அசாம் தேஜ்பூர் தொகுதியில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யான சுப்பா, இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்று பத்திரிகையில் படித்தேன் என்று குறிப்பிட்டார்.

ஆனால், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, “இந்த விவகாரம் தொடர்பாக பேச முன் அனுமதி கோரி நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. அதனால் பேச அனுமதிக்க முடியாது’ என்று கூறினார்.

Posted in Asom, Assam, BJP, Citizen, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Lok Sabha, LokSabha, LS, Moni Kumar Subba, MP, Nationality, Nepal, Nepali, Subba, Tejpur, Tezpur | Leave a Comment »

Andhra MLAs to get software for analysing their Constituency

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

தொகுதி நிலவரத்தை அறிய ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சாப்ட்வேர்

ஹைதராபாத், மார்ச் 7: ஒரு இடத்தில் இருந்து கொண்டே தொகுதி நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவும் வகையில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு ஆந்திர எம்.எல்.ஏ.க்களின் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சாப்ட்வேரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கலாம். கிராமப்புறத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். மக்களின் குறைகள் குறித்தும் கண்காணிக்கவும் இந்த புதிய சாப்ட்வேர் உதவும்.

முதல்கட்டமாக இந்த சாப்ட்வேர் 30 எம்.எல்.ஏ.களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Chandrababu, Chandrababu Naidu, Computer, Congress, Constituency, Deployment, Hyderabad, MLA, Naidu, Software, TDP, Telugu, Y.S. Rajasekhar Reddy, YS Rajasekhara Reddy, YSR | 1 Comment »

Wal-mart entry into Retail business in India – Impact & Globalization

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

வாடப் போகும் வாழ்க்கை ஆதாரம்

மா.பா. குருசாமி

நமது நாட்டில் உலகமயமாக்கலின் விளைவாக மிகப்பெரிய நிறுவனங்கள் தொழில், வாணிபத்தில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

உற்பத்தியிலும், விற்பனையிலும் சிறிய அளவில் நடைபெறும் தொழில்களை ஓரங்கட்டிவிட்டு, கோடிக்கால பூதங்களாக பெரிய நிறுவனங்கள் கோலோச்சப் போகின்றன. இவற்றால் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கை ஆதாரத்தை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவிக்கப் போகின்றனர். இதற்கோர் எடுத்துக்காட்டு சில்லறை வாணிபம்.

வேளாண்மையில் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் சின்னஞ்சிறு அளவில் இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் சாகுபடி செய்யும் உணவு தானியங்களும், காய்கறிகளும், தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருள்களும் நாடு முழுவதும் இருக்கின்ற நுகர்வோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்றன.

இதேபோல பெரிய, சிறிய தொழிற்கூடங்களில் உற்பத்தியாகின்ற எண்ணற்ற ஏராளமான பொருள்கள் கோடிக்கணக்கான நுகர்வோர்களுக்குச் செல்கின்றன. இவை எப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கும். இவை மொத்த வியாபாரிகளிடம் கைமாறி, இடைப்பட்ட வணிகர்களிடம் சென்று, இறுதியில் சில்லறை வியாபாரிகள் கைகளுக்கு வருகின்றன. அவர்களிடமிருந்து நுகர்வோருக்குப் போகின்றன.

சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய கடைகளாக அமைத்து, எல்லா வகைப் பொருள்களும் ஓரிடத்தில் கிடைக்கின்ற வகையில் இருப்பு வைத்து விற்பனை செய்பவர்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட கடைகள் நகரங்களில் இருக்கும். இவர்களிடம் நுகர்வோர் மட்டுமன்றி சிறிய வியாபாரிகளும் பொருள்களை வாங்குவார்கள்.

இரண்டாம் வகையினர் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து சிறுகடைகளாக, பெட்டிக்கடைகளாக அமைத்துக் கொண்டு வாணிபம் செய்பவர்கள்.

மூன்றாம் பிரிவினர் நூற்றுக்கணக்கில் முதலீடு செய்து கூடைகளில், பெட்டிகளில், தள்ளுவண்டிகளில் பொருள்களை வைத்து தெருத்தெருவாக பொருள்களை விற்றுப் பிழைப்பவர்கள்.

மொத்தத்தில் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் பல லட்சம் பேர் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை அறியலாம். இவர்களுக்கு வாணிபம் வாழ்க்கை முறை. விற்றால் சாப்பாடு; இல்லையேல் பட்டினி.

அளவும் விளைவும்: நமது நாட்டில் சில்லறை வாணிபத்தின் அளவு எவ்வளவு இருக்கும்? கருத்தியல் அடிப்படையில் நுகர்பொருள் உற்பத்திக்குச் சமமாக சில்லறை விற்பனை இருக்குமென்று கூறலாம்.

நமது நாட்டில் மிகுதியாக மக்கள் தொகை இருப்பதால் உலகில் நமது நாடு பெரிய சந்தையாகக் கருதப் பெறுகின்றது. இதனால்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளும், மிகுதியாக ஏதாவது ஒன்று அல்லது சில பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் அவர்களது எச்சப் பொருள்களை நமது நாட்டில் வந்து கொட்டத் தயாராக இருக்கின்றன.

நமது மக்களிடம் வளர்ந்து வருகின்ற நுகர்வுக் கலாசாரம் கையில் பணமிருந்தால், கடன் கொடுக்க ஆளிருந்தால் எதனையும் வாங்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்திருக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு “செல்போன்’.

இந்த அங்காடி முறை வளர்ச்சியையும், சில்லறை வாணிபத்தில் வெளியில் தெரியாமல் இலைமறை காயாக இருக்கும் வளத்தையும் வாய்ப்பையும் புரிந்து கொண்டதால் மிகப் பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் முதலீடு செய்ய வரிந்து கட்டிக் கொண்டு முன்வருகின்றன.

வரப்போகும் ஆபத்து: நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெரு நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சில்லறை வாணிபம் பேரங்காடிகள் மூலம் நடைபெறுகிறது. ஓர் அங்காடிக்குள் நுழைந்தால் வேண்டிய எல்லாப் பொருள்களையும் அங்கு வாங்கலாம். அங்குள்ள மக்களுக்கு அது ஏற்ற முறையாக இருக்கிறது. நமது நகர மக்களுக்கு பேரங்காடிப் பழக்கம் வந்து கொண்டிருக்கிறது.

தென் மாநிலங்களில் ஸ்பென்சர்ஸ் டெய்லி, நீல்கிரிஸ், சுபிக்ஷா, திரிநேத்ரா ஆகிய பெரிய நிறுவனங்கள் நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து ஓரளவு வெற்றிகரமாகச் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு, மத்திய மாநிலங்களில் பண்டாலூன் ரீடெய்ல் என்ற நிறுவனம் 60 உணவுப் பொருள் பேரங்காடிகளை அமைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த ரிலையன்ஸ் நிறுவனம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரிய திட்டத்தோடு சில்லறை வாணிபத்தில் நுழைந்திருக்கிறது. 2006 நவம்பர் மத்தியில் ஹைதராபாதில் ஒரே நாளில் அதிரடியாக 11 “ரிலையன்ஸ் பிரஷ் அவுட்லெட்ஸ்’ என்னும் மிகப்பெரும் விற்பனை நிலையங்களை அமைத்ததன் மூலம் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ரிலையன்சின் திட்டம் மிகப் பெரியது. 2010 – 11இல் இந்தியாவில் சில்லறை வாணிபத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயோடு முதலிடத்தில் இருக்க வேண்டுமென்பது நோக்கம். அதன் தொடக்கம் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு.

ரிலையன்சோடு போட்டி போட்டுக் கொண்டு இன்னும் சில பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் பங்கு பெற பெரும் முதலீட்டோடு அங்காடி ஆடுகளத்தில் நுழையப் போகின்றன.

ஆதித்யா பிர்லா குழுமம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறதாம். பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கோப்பர்ஸ் என்ற நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சில்லறை வாணிபத்தில் பெரிய நிறுவனங்கள் 412 பில்லியன் டாலர் முதலீடு செய்யுமென்று மதிப்பிடுகிறது.

இந்த பெரும் பூதங்களான நிறுவனங்கள் ஆயிரங் கோடிகள் என்ற கணக்கில் முதலீடு செய்கின்றபோது சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் இவற்றின் கிளை அங்காடிகள் இருக்கும். குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறுவார்கள். பொருள்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதால் அவர்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும். சிறிய உற்பத்தியாளர்கள், விவசாயிகள் அவர்களிடம் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். வாங்கும் விலையை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். அவர்களோடு சாதாரண வியாபாரிகளால் போட்டி போட முடியாது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 10 அல்லது 15 சதவீதம் தள்ளுபடி தருவார்கள். இது போதாதா நமது மக்களைக் கவர்வதற்கு? நடுத்தர, மேல்மட்ட மக்கள் இத்தகைய முறையால் பல நன்மைகள் கிடைப்பதாக நம்புவார்கள். இதனால் சங்கிலித் தொடராக இருக்கும் பேரங்காடிகள் கொடி கட்டிப் பறக்கும்; சில்லறை வணிகர்கள் செல்லாக் காசுகளாவார்கள்.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நகரங்களோடு நின்றுவிடாது. இவர்கள் முகவர்கள் மூலமாகவோ புதிய விற்பனை முறைகளின் மூலமாகவோ கிராமங்களிலும் ஊடுருவுவார்கள். கைக்கு எட்டிய தூரம்வரை இவர்களது சில்லறை வாணிபம் பரந்து விரியும்.

பொருளாதாரத்தின் ஏகபோக நடவடிக்கைகள் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கும்; ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும். சிந்திக்கக்கூடிய நடுத்தர மக்கள் கிடைக்கும் சில்லறை நலன்களுக்காக நாட்டு நலனை அடகு வைக்க நினைக்கக் கூடாது.

குவிதல் முறைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். காட்டு வெள்ளப் போக்காக வரும் பெரும் முதலீட்டால் சில்லறை வணிகர்களை அழியாமல் காப்பது அரசின் கடமை. வருகிற ஆபத்தை சில்லறை வணிகர்களும் சிறு உற்பத்தியாளர்களும் உணர வேண்டும்; அறிய வேண்டும்; இணைய வேண்டும்; போராட வேண்டும்.

நமது நாட்டில் கடைநிலை மக்களைக் காக்காமல், கவனிக்காமல் வளத்தையும் வளர்ச்சியையும் காண இயலாது.

(கட்டுரையாளர்: இயக்குநர், குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம், தாயன்பகம், திண்டுக்கல்).

==================================================
ஒரு விவசாயியின் எதிர்காலம்?

ச. குப்பன்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி.

அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.

மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.

அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.

சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.

கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப்போட்டுவிட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார்.

அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர். சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார்.

இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார்.

குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.

இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார். இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது?

இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும்.

வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும்.

விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்.

(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு).
==================================================

Posted in Agriculture, Analysis, Backgrounder, Bankruptcy, Banks, Bharti, Birla, Biz, Brinjal, Business, Cane, Capitalism, Collars, Commerce, Consumer, Customer, Diesel, EB, Eggplant, Electricity, Engine, Expenses, Farmer, Finance, Food, Fresh, Fruits, Futures, Globalization, harvest, harvesting, Impact, Income, India, Industry, Inflation, Investment, Irrigation, Lake, Loan, Manufacturing, markets, Motor, Operations, Options, Plants, Power, Premium, Prices, Rain, Recession, Reliance, retail, sales, Small Business, Small scale, SSI, Sugar, Sugarcane, Tap, Trading, Vegetables, Venture, Wal-Mart, Walmart, Water | 1 Comment »

‘Bus fare increased indirectly in Chennai’ – J Jayalalitha

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

எல்லோ லைன், ப்ளூ லைன், “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் மறைமுக பஸ் கட்டண உயர்வு: ஜெ. குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 7: எல்லோ லைன், ப்ளூ லைன், “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அறிவிக்கப்படாத பஸ் கட்டணத்தை திமுக அரசு மறைமுகமாகச் செயல்படுத்தி வருகிறது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

தற்போது சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் “எல்லோ லைன் ப்ளூ லைன்’ என்கிற பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது திணித்து வருகிறது திமுக அரசு. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சாதாரண பஸ்களில் இருக்கும் நடைமுறைக் கட்டணமான குறைந்த அளவு 2 ரூபாய் என்று இருந்ததை 3 ரூபாய் என உயர்த்தி இருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மக்களுக்காக மக்களின் நலனுக்காகதான் ஒரு அரசு செயல்பட வேண்டுமே தவிர மக்களை ஏமாற்றும் அரசு மக்களுக்குத் தேவையில்லை. சாதாரண பஸ்களில் உதாரணமாக 48ஏ என்று இருந்தால் அவற்றுக்கு முன்பாக “எம்’ என்று சேர்த்துவிட்டால் கட்டணம் கூடிவிடுகிறது. எம் என்ற எழுத்தைத் தான் கூடுதலாக சேர்த்து இருக்கிறார்கள் தவிர எந்த விதத்திலும் பஸ்களில் உள்ள வசதிகளை கூட்டவில்லை. பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என்று முறையாக அறிவிக்காமல் – அப்படி அறிவித்தால் கடும் கண்டனத்தை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற அச்சத்தால் மக்களை ஏமாற்றும் நோக்கில் கூடுதல் கட்டண உயர்வை அமல்படுத்தி இருக்கிறது. இச் செயல் திமுக அரசின் கோழைத்தனத்தையே காட்டுகிறது. இக் கூடுதல் கட்டணம் சம்பந்தமாக பொதுமக்களிடமோ எதிர்க்கட்சிகளிடமோ தொழிற்சங்கங்களிடமோ எவ்வித கருத்தும் கோரப்படவில்லை. ஆலோசனையும் செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. இருந்த போதிலும் கூடுதல் கட்டணத்தை திமுக அரசு மக்களிடம் இருந்து வசூலித்து வருகிறது.

எனது ஆட்சிகாலத்தில் இருந்த எல்.எஸ்.எஸ். சேவையை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவற்றை “எல்லோ’ லைன், ப்ளூ லைன் என்று பெயர் மாற்றி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். எல்.எஸ்.எஸ். சேவையில் குறைந்த கட்டணம் ரூ. 2.50 என்றிருந்தது, தற்போது ரூ. 5 என்று உயர்த்தி உள்ளனர். எல்லோ லைன் பஸ் நிற்கும் இடத்தில் ப்ளூ லைன் பஸ் நிற்காதவாறு செய்து இந்த சிறப்பு பஸ்களில்தான் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகிறது திமுக அரசு.

அதிக கட்டணம் வசூலிக்கப்படும் பஸ்களில் எவ்வித சிறப்பு வசதிகளும் இல்லை. “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதும் எல்லோ லைன், ப்ளூ லைன் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதும் மக்களை ஏமாற்றும் செயலாகும். இந்த மறைமுக கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

==========================================

மாநகர பஸ்களில் எளிதில் செல்ல சென்னையில் 25 இடங்களில் “ஆஃப் லைன்’ டிக்கெட் விநியோகம்

சென்னை, மார்ச் 14: மாநகர பஸ்களில் எளிதில் செல்லும் வகையில் மார்ச் 21-ம் தேதி முதல் சென்னையில் 25 இடங்களில் “ஆஃப் லைன்’ டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) நிர்வாக இயக்குநர் ஆர். பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மாநகர பஸ்களில் டிக்கெட் பெறுவதில் பயணிகளுக்கு பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், “ஆஃப் லைன்’ டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

தாங்கள் செல்ல விரும்பும் இடத்துக்கான கட்டணத்தைக் கொடுத்து மூன்கூட்டியே “ஆஃப் லைன்’ டிக்கெட்டைப் பெற்று, அவ் வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் செல்லலாம்.

முதற்கட்டமாக

 • தாம்பரம்,
 • குரோம்பேட்டை,
 • பல்லாவரம்,
 • திருவான்மியூர்,
 • சைதாப்பேட்டை,
 • தியாகராயநகர்,
 • மந்தைவெளி,
 • திருவல்லிக்கேணி,
 • சென்ட்ரல்,
 • பிராட்வே,
 • கோயம்பேடு,
 • அம்பத்தூர்,
 • வில்லிவாக்கம் உள்ளிட்ட 25 இடங்களில் ஆஃப்லைன் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

பணிமனைகளிலேயே (டெப்போக்கள்) இந்த டிக்கெட்டுகளைப் பயணிகள் பெறலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை அலுவலர்களிடம் கேட்டு அறியவும் விசாரணை வசதி செய்யப்படும்.

புறநகர் பகுதிகளுக்கு 150 பஸ்கள்: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் எல்கை வரம்பு 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவடைந்துள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதூர், பாலவாக்கம், மகாபலிபுரம், புழல் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளுக்கும் கூடுதல் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 75 புதிய பஸ்கள் மார்ச் 21-ம் தேதிக்குப் பின் ஓரிரு நாள்களில் இயக்கப்படும். இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்துக்குள் மேலும் 75 பஸ்கள் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக தற்போது நடத்துனர்களிடேமே சீசன் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வரைபடம் வெளியீடு: சென்னைக்கு வரும் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் புதிய வரைபடம் விரைவில் வெளியிடப்படும்.

இதில் மாநகர பஸ்களின் எண்கள், இயக்கப்படும் வழித்தடங்கள், முக்கிய இடங்கள் மற்றும் இதர விவரங்கள் இடம் பெறும். இந்த வரைபடம் ரூ. 5-க்கு விற்கப்படும். சென்னை எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களுக்கு விரைவில் நேரடி பஸ் வசதி செய்யப்படும்.

இதே போல கோடை விடுமுறையில் வண்டலூர் விலங்குகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார் பாலசுப்பிரமணியன்.
==========================================
மாநகர பஸ்களின் வருவாய் 13% அதிகரிப்பு

மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) பஸ்களின் தினசரி வருவாய் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 2,554 பஸ்கள் உள்ளன. இதில் 2,290 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் தினமும் இயக்கப்படுகின்றன.

பஸ்கள் மூலம் கடந்த ஆண்டு தினமும் சராசரியாக ரூ. 95 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்து தற்போது இந்த பஸ்களின் தினசரி வருவாய் ரூ.1.10 கோடியாக அதிகரித்துள்ளது.

விபத்துக்கான இழப்பீடு, கடன் சுமை ஆகியவற்றால் நிதி நெருக்கடி முன்பு இருந்தது. ஆனால், தற்போது வளர்ச்சிப் பாதையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செல்லத் தொடங்கியுள்ளது.

கடந்த 2006-07-ம் ஆண்டில் மட்டும் ரூ. 120 கோடி இழப்பு ஏற்பட்டது. வரும் 2008-க்குள் இழப்பை ஈடுகட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
==========================================
மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 100 “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள்: சென்னையில் 21-ல் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, மார்ச் 14: சென்னையில் முதன்முறையாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 100 புதிய “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்த பஸ்களை மார்ச் 21-ல் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

மாநகர போக்குவரத்துக் கழகம் கடந்த 6 மாதங்களில் 400 புதிய பஸ்களை அறிமுகப்படுத்தியது.

இதில் “எல்லோ லைன்’ என்ற மஞ்சள் வண்ண பஸ்களும், “ப்ளூ லைன்’ என்ற நீல நிற பஸ்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் இருக்கைகளுடன் கூடிய இந்த பஸ்கள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும்.

தற்போது இந்த வரிசையில், “ஆரஞ்ச் லைன்’ என்ற பெயரில் 100 புதிய பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.

“ஏர் சஸ்பென்ஷன்’ வசதியுடன் கூடிய இந்த பஸ்கள் நவீன முறையில் தலா ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தானியங்கிக் கதவுகள்

இதில் பெரும்பாலான பஸ்களில் “தானியங்கி கதவுகள்’ பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கதவுகளை இயக்கும் விசை, பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பஸ் விபத்துகளில் 80 சதவீதம் பேர் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். தற்போது தானியங்கிக் கதவுகளை பஸ்களில் பொருத்துவதன் மூலம் இதுபோன்ற உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இந்த பஸ்கள் இயங்கும். சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில், “பாரத் 3′ திறனுள்ள மோட்டார் பொருத்தப்பட்டுள்ள இந்த பஸ்கள் அதிக இரைச்சலின்றி இயங்கும்.

பழைய பஸ்களுக்குப் பதிலாகவும், புதிய வழித்தடங்களிலும் இந்த “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு இந்த ஆண்டு 150 பஸ்களை வாங்க அரசு ரூ.40 கோடி அனுமதித்துள்ளது. இந்த பஸ்கள் அனைத்தும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கூண்டு கட்டும் பணிமனைகளில் உருவாக்கப்படும்.

இதில் முதற்கட்டமாக 100 ஆரஞ்ச் லைன் பஸ்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ்களை அறிமுகம் செய்யும் விழா, சென்னை தரமணியில் மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி இந்த பஸ்களின் சாவிகளை, ஓட்டுநர்களுக்கு வழங்க உள்ளார்.

இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

ஓட்டுநர்களுக்கு புதிய பயிற்சி தடம்

இதுதவிர தரமணியில் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் பயிற்சித் தடத்தையும் (டிரெய்னிங் டிராக்) முதல்வர் திறந்து வைக்கிறார்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு 50 சொகுசு பஸ் சேவை

சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த முறையில் 50 சொகுசு பஸ்களை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை, தரமணி, ஸ்ரீபெரும்புதூர், புழல், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்லும் வகையில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக கிலோ மீட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கட்டணமாக வழங்க இந்நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

காலை, மாலை இருவேளைகளிலும் முக்கிய நேரத்தில் மட்டுமே இந்த பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும்.

இதன்பின் மற்ற நேரங்களில் இந்த பஸ்கள் சாதாரண கட்டணத்தில் பொதுமக்களின் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இந்த பஸ்களில் சொகுசு இருக்கைகள், அகலமான கண்ணாடி ஜன்னல்கள், தானியங்கிக் கதவுகளும் பொருத்தப்படும்.

=============================================

“சென்னையில் ஷேர் ஆட்டோக்களுக்கு இனி பர்மிட் கிடையாது’

சென்னை, மார்ச். 15: சென்னை நகரில் இனி ஷேர் ஆட்டோக்களுக்கு மேலும் பர்மிட் வழங்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

ஷேர் ஆட்டோக்களுக்கு புதிய பகுதிகளில் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதால் மாநகர பஸ்களின் வருமானம் குறைகிறது. இதைத் தவிர்க்க ஷேர் ஆட்டோக்களுக்கு இனி புதிய வழித்தடங்களில் பர்மிட் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை: திருத்திய ஆட்டோ மீட்டர் பொருத்தாத ஆட்டோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேசிய பிறகு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கேற்ப திருத்திய மீட்டர் பொருத்துவதற்குத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கெடு முடிவடைந்துள்ளதால், இனி திருத்திய மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் காஸ் மூலம் ஆட்டோக்களை இயக்கும்போது, அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தாழ்தள சொகுசு பேருந்து: சென்னை நகரில் இம்மாதம் 21-ம் தேதி முதல் தாழ்தள சொகுசு பேருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அத்துடன் நெரிசல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கென 20 ஒப்பந்த ஊர்திகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கத் திட்டமிட்டுள்ளது.

பணி நியமனம்: அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட 2017 ஊழியர்களை முழுமையாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிபதி மொகோபாத்யாய குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் அவர்களை பணியில் நியமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் நேரு.

=======================================================

சென்னையில் இருந்து 18 வழித்தடங்களில் 44 புதிய பஸ்கள்: மு.க.ஸ்டாலின் 21-ந் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, மார்ச்.19-

சென்னையில் மேலும் 100 பஸ்கள் புதிதாக விடப் படுகின்றன. வயதானவர்கள் எளிதாக ஏறும் வகையில் தாழ்தள சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

உள்ளாட்சிதுறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் கே.என் நேரு, தா.மோ.அன்பரசன், ஆகியோர் கலந்து கொள் கிறார்கள். புதிய பஸ் தொடக்க விழா ஐ.ஆர்.டி வளாகத்தில் 21-ந் தேதி மாலை 5-மணிக்கு நடைபெறுகிறது.

புதிதாக விடப்படும் பஸ்களில் பெரும்பாலானவை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. 18புதிய வழித்தடங்களில் 44 பஸ்கள் விடப்படுகின்றன. இது தவிர தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

புதிய பஸ்கள் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் நின்று செல்லும். நிறுத்தங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் வேகமாக சென்றடையும் வகையில் பயணநடை வகுக்கப் பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையத்துக்கு 5 புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்படுகின்றன. சென்னை புறநகர் பஸ்நிலையம், ஆவடி, வள்ளலார் நகர் ஆகிய இடங்களில் இருந்து பெரிய பாளையத்துக்கு 12 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதே போல அடையாரில் இருந்து மாமல்லபுரத்துக்கு கிழக்கு கடற்சாலை வழியாக 4 பஸ்களும் பழைய மாமல்ல புரம் சாலை வழியாக 4 பஸ்களும் விடப்படுகின்றன. சைதாப்பேட்டையில் இருந்து வல்லக்கோட்டைக்கு கிண்டி, போரூர், பூந்தமல்லி, செம்பரபாக்கம், இருங்காட்டு கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வல்லம் வழியாக இயக்கப்பட உள்ளன.

பிராட்வேயில் இருந்து படப்பை, திருப்போரூருக்கு தலா 4 பஸ்களும், குன்றத் தூருக்கு 2பஸ்களும் விடப்படுகின்றன. அஸ்தினாபுரம்-ஆவடி, அடை யார்-கேளம்பாக்கம் இடையேயும் புதிய வழித்த டங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தாம்பரத்தில் இருந்து சோமங்கலம், மாடம் பாக்கத் துக்கு தலா ஒருபஸ் களும், மின்ட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு 4பஸ்களும் விடப்படுகின்றன. மூலக்கடை, புழல், செங்குன்றம், காரனோடை, தச்சூர் கூட்டுச்சாலை, புதுவயல், கவரபேட்டை வழியாக கும்மிடிபூண்டிக்கு சென்று வரும். செம்மஞ்சேரியில் இருந்து பிராட்வேக்கு புதிய வழித்தடத்தில் பஸ் விடப் படுகிறது.

=================================================================================
மாநகர பஸ்ஸில் இயந்திரம் மூலம் டிக்கெட் தாம்பரம்}பிராட்வே வழித்தடத்தில் சோதனை முறையில் அறிமுகம்

சென்னை, மார்ச் 22: சென்னை மாநகர பஸ்களில் இயந்திரம் மூலம் பயணச்சீட்டு (டிக்கெட்) வழங்கும் முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு உள்ளது.

தாம்பரம் – பிராட்வே (21 ஜி) வழித்தடத்தில் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் பஸ் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு, பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை நகர பஸ்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அவர்களுக்கு டிக்கெட் வழங்குவதற்குள் நடத்துனர்களுக்கு போதும் போதும் என்றாகி விடும்.

டிக்கெட் வழங்குவதற்காக, சில பஸ்கள் ஸ்டேஜ் வருவதற்கு முன்பு வெகு நேரம் சாலையோரம் நிறுத்தப்படுவதும் அப்போது அலுவலகம் செல்வோர் முணுமுணுப்பதும் பயணிகள்-நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று.

மேலும், டிக்கெட்டுகளை நடத்துனர்கள் எச்சில் தொட்டுத் தருவதாக பயணிகள் பலரும் புகார் கூறுவது வாடிக்கை.

இந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்படுவது போல, இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன் ஒருபகுதியாக, இந்தத் திட்டம் தாம்பரம் – பிராட்வே (21 ஜி) வழித்தடத்தில் இயங்கும் 5 பஸ்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இயந்திரத்தில் என்ன வசதி: டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் 500 வழித்தடங்கள் வரை சேமித்து வைக்க வழி உண்டு. முதலில், இயந்திரத்தை இயக்கும் நடத்துனர், பயணிகள் குறிப்பிடும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும். இதன் பின்பு, எந்த பஸ் ஸ்டாப் என்பதற்கான பொத்தானை அழுத்த வேண்டும். பின், “என்டர்’ பொத்தானை அழுத்தினால் டிக்கெட் அச்சாகி வெளியே வரும். கையடக்கக் கருவி என்பதால் நடத்துனர்கள் அதனை எளிதாக எடுத்துச் செல்லலாம். எந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அதிகம் ஏறி, இறங்குகின்றனர் என்பது போன்ற தகவல்களை இந்த இயந்திரத்தின் மூலம் எளிதில் அறிய முடியும்.

ஒரே நேரத்தில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் டிக்கெட் வழங்க முடியும் என்பது இயந்திரத்தின் கூடுதல் சிறப்பு.

பிற வழித்தடங்களில் எப்போது?: சோதனை அடிப்படையில் தாம்பரம் – பிராட்வே வழித்தடத்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற வழித்தடங்களுக்கும் இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் முறை விரிவுபடுத்தப்படும் என்றார் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

=================================================================================

தமிழகத்தில் மேலும் 1,000 மினி பஸ்கள்: நாளை பட்ஜெட்டில் அறிவிப்பு

பா. ஜெகதீசன்

சென்னை, மார்ச் 22: மக்களுக்குக் கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழகத்தில் மேலும் 1,000 தனியார் மினி பஸ்களை இயக்கும் திட்டம் மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த ஆயிரம் பஸ்களில் 500 பஸ்களை சென்னைப் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான அறிவிப்பும், மொத்தம் எத்தனை மினி பஸ்கள் இயக்கப்படும் என்கிற விவரமும் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கலாகும் அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

க்ஷமினி பஸ் வந்த பாதை:/க்ஷ போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி அளிப்பதற்காக 1998-ல் மினி பஸ்களை இயக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆய்வை மேற்கொண்டது. 3,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க வாய்ப்பு உள்ளது என்பது அப்போது தெரிய வந்தது.

தமிழகத்தில் 1,100 மினி பஸ்களை இயக்குவது தொடர்பாக 1.6.2005-ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசின் ஆணைக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. பின்னர் அத்தடையை நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.

அதைத் தொடர்ந்து, மினி பஸ்களை எந்தெந்த வழித் தடங்களில் இயக்குவது, அவற்றுக்கான கட்டண விகிதங்கள் உள்ளிட்டவை குறித்து அரசு ஆலோசனை நடத்தியது.

க்ஷஅரசின் நிலை:/க்ஷ இந்நிலையில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, மினி பஸ்கள் தொடர்பான தனது நிலையை ஆளுநர் உரையில் அப்போதே தெளிவுபடுத்தியது. “இந்த அரசால் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மினி பஸ் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்’ என அதில் தெரிவித்திருந்தது.

க்ஷசென்னையில்…:/க்ஷ சென்னையில் 3 வழித்தடங்களில் 500 மினி பஸ்களை இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

(1) கோயம்பேடு -பூந்தமல்லி நெடுஞ்சாலை, (2) கிழக்குக் கடற்கரைச் சாலை -திருவான்மியூர் தெற்கு, (3) பழைய மாமல்லபுரம் சாலை -திருவான்மியூர் பஸ் நிலையம் என 3 முக்கிய வழித்தடங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மினி பஸ்கள் இயங்கும்.

க்ஷமாவட்டங்களில்…:/க்ஷ மினி பஸ் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக தலா 100 மினி பஸ்கள் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலாக மினி பஸ்கள் விட திட்டமிடப்பட்டுள்ளது.

இதர 19 மாவட்டங்களில் இயக்கப்படும் மினி பஸ்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்குமா என்பது நிதிநிலை அறிக்கையில் தெரியும்.
=================================================================================

Posted in ADMK, Anbarasan, Automatic, Blue Line, Bus, Chennai, Depot, Diesel, DMK, Expenses, Express, fare, Fuel, Gas, Government, Inflation, InfoTech, IT, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, KN Nehru, Luxury, M Service, Madras, Map, Ministry, MK, MK Stalin, MTC, Nehru, Offline, Orange Line, Pallavan, Petrol, PP, Price, PTC, Rise, service, SEZ, Ticketing, Tickets, Training, Tranportation, Transport, Yellow Line | Leave a Comment »

Income Tax Introduction series in Dinamani : NV Balaji

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

வருமான வரி

என்.வி. பாலாஜி

வருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (பகுதி-2)

அடுத்ததாக லாபத்தைக் கணக்கிடுவதற்காக அனுமதிக்கப்படும் கழிவுகளை பற்றி காணலாம்.

1. வணிகம், தொழிலுக்காக பயன்படுத்தப்படும் இடத்திற்கான வாடகை, பராமரிப்புச் செலவுகள், வரிகள் மற்றும் இதர செலவுகள்.

2. தொழில் செய்யும் இடம், அதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள், வணிகப் பொருட்கள், இதர பொருட்களுக்கான காப்பீட்டுத் தொகை.

3. தேய்மானம் – கருவியையோ, கட்டடத்தையோ உபயோகிப்பதால் அதன் மதிப்பு குறைகிறது. அதற்காகவே தேய்மானம் அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்படும் தேய்மானத்தின் அளவு, சொத்துக்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாக கணக்கிடப்படுகிறது. இந்த சதவிகிதம் வருமான வரி துறையினரால் கொடுக்கப்படும். ஒரு சொத்தின் உரிமையாளரே தேய்மான செலவை கோர முடியும்.

ஒரு இயந்திரத்தை வருடத்தில் 180 நாட்களுக்கு குறைவாக பயன்படுத்தி இருந்தால், 50 சதவீத தேய்மானம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரு வருடத்தில் ஒரு சொத்தை விற்றிருந்தால் அந்த வருடத்திற்கான அந்த சொத்திற்கான தேய்மானத்தை கோர இயலாது.

4. ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஊக்கத் தொகை மற்றும் இதர வேலையாட்களுக்கான செலவுகள்.

5. தொழில் நடத்துவதற்காக வாங்கப்பட்ட கடனுக்குண்டான வட்டித்தொகை. (கவனிக்க:) கடன் வங்கியிலிருந்தோ, இதர நிதி நிறுவனங்களிலிருந்தோ வாங்கப்பட்டிருக்கும் நிலையில், வட்டி ஐப தங்ற்ன்ழ்ய் தாக்கல் செய்யும் முன்னரே கட்டப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

6. வாராக் கடன் (இந்த கழிவு பின் வரும் காலங்களில் வசூலிக்கப்பட அந்த ஆண்டிற்கான வருமானமாகக் கருதப்படும்).

7. முழுமையாக வணிகம், தொழில் நடத்துவதற்காக செலவிடப்படும் இதர தொகைகள், அந்த செலவு மூலதன செலவாகவோ, தொழில் நடத்துபவரின் தனிப்பட்ட செலவாகவோ இருக்கக் கூடாது.

ஒரு கட்டடத்தில் ஒரு பகுதி தொழிலுக்காகவும், மற்றொரு பகுதி சொந்த பயனுக்காவும் உபயோகிக்கப்பட்டிருந்தால், தொழில் நடத்தப்படும் இடத்திற்கான சதவிகிதத்திற்கு மட்டும் கழிவு அனுமதிக்கப்படும்.

வட்டி, ஒப்பந்ததாரருக்கான பணம், தொழிலில் செய்பவருக்காக செலுத்தப்பட வேண்டிய பணம், தரகு ஆகியவற்றிற்கு வரி பிடிப்பிற்கு பிறகே (பஈந) கொடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த செலவு அனுமதிக்கப்படும் செலவாக கருதப்படாது. அதே போல் பிடிக்கப்படும் வரி, அதற்குரிய காலத்திற்குள் வங்கியில் கட்டப்பட வேண்டும். இல்லை எனில் அந்த செலவு அனுமதிக்கப்படாது.

இத்தகைய அனுமதிக்கப்படாத செலவுகளுக்கு, பின்வரும் காலங்களில் வரி பிடித்துக் கட்டினால், அந்த வருடத்தில் வணிக செலவாக அனுமதிக்கப்படும்.

வரி பிடிக்கவேண்டிய செலவுகள், பிடிப்பு சதவிகிதம், பிடித்த வரியை செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகியவற்றை பின்வரும் நாட்களில் காணலாம்.

வருமான வரி, சொத்து வரி, இதர வரிகள் மற்றும் வரிகளை உரிய நேரத்தில் கட்ட தவறியதற்காக கட்டிய வட்டி ஆகியவை வணிக செலவாக கருதப்படமாட்டாது.

வணிகரின் சொந்தக்காரர்களிடமிருந்து பொருட்களை வாங்குவதற்கோ, இதர சேவைகளுக்காகவோ, அளவுக்கு அதிகமாக செலவிட்டிருந்தால் வருமான வரி ஆய்வாளரின் உரிமையைப் பயன்படுத்தி அதிகபட்சமாக 20% வரை கழிவு அனுமதிக்கப்படமாட்டாது. இந்த சதவிகிதம் தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் 100% சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எந்த ஒரு வணிக, தொழில் செலவிற்காகவும் ரூ.20,000-த்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தப்பட கூடாது. அவை ‘அ/இ டஹஹ்ங்ங்’ காசோலை அல்லது ‘அ/இ டஹஹ்ங்ங்’ வரைவோலை மூலமாகவோ மட்டுமே செலுத்தப்படவேண்டும். அப்படி செய்யத் தவறினால், 20 சதவீதச் செலவு வணிகச் செலவாகக் கருதப்பட மாட்டாது.

அடுத்த ஆண்டில் இருந்து இந்த 20 சதவீதம் மாற்றப்பட்டு, மொத்தச் செலவும் வணிகச் செலவாகக் கருதாமல் இருக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வருமான வரி ஏனைய வருமானங்கள்

“சம்பள வருமானம்’, “வீட்டு வருமானம்’, “வியாபாரம், தொழில் வருமானம்’, “மூலதன லாபம்’ ஆகிய தலைப்புகளில் விடுபட்ட வருமானங்கள் “ஏனைய வருமானங்கள்’ என்கிற தலைப்பில் கணக்கிடப்படும்.

இதில் முக்கியமாக கருதப்படுவதான சில:

1. லாப பங்கு ( Dividend), வங்கியிலிருந்து பெறும் வட்டி.

2. குலுக்கல், குறுக்கெழுத்து, குதிரை பந்தயம் போன்றவற்றால் ஈட்டும் வருமானம்.

3. “வியாபாரம், தொழில் வருமானம்’ என்ற தலைப்பில் வரிக்கு உட்படாதவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (எ.கா.)

(ண்) பங்கு வட்டி,

(ண்ண்) சொத்துக்களை, குத்தகைக்கு, வாடகைக்கு கொடுப்பதால் பெறும் வருமானம்.

(ண்ண்ண்) ரூ.50,000-க்கு மேல் பணமாக பெறும் அன்பளிப்பு. உறவினர்களிடம் இருந்தோ, கல்யாணத்தின் பொழுது, உயில் மூலமாகவோ பெறும் பணம் வரிக்கு உகந்தவை. உறவினர் – தம்பதி, அண்ணன், தங்கை, தம்பதியின் அண்ணன், தங்கை, பெற்றோரின் அண்ணன், தங்கை மற்றும் சிலர்.

(ண்ஸ்) Keyman Insurance Policy எனும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெறப்படும் இழப்பீடு.

“ஏனைய வருமானங்கள்’ என்ற தலைப்பில் கணக்கிடும் வருமானம், கீழ்க்காணும் செலவுகளை கழித்தபின் வருபவை ஆகும்.

1. லாபப் பங்கு பெறுவதற்குண்டான தரகுச் செலவு.

2. தொழிலாளர் நலத் திட்டங்களுக்காக, தொழிலாளர்களின் பங்கு.

3. இயந்திரச் சாதனம், கட்டடம் போன்ற சொத்துக்களை வாடகை, குத்தகையில் விடும்போது, அதன் பழுதுபார்க்கும் செலவு, மதிப்புக் கழிவீடு, தேய்மானம், காப்பீட்டு உபரித் தொகை.

4. குடும்ப ஓய்வூதியம் – ரூ.15,000 (அல்லது) அந்த வருமானத்தில் 1/3 பங்கு (இவ்விரண்டில் குறைந்த செலவு).

5. வருமானம் ஈட்ட வேறெந்த செலவும், பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* வருவாய் ஈட்டுவதற்காகவே செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* மூலதன செலவாக இருத்தல் கூடாது.

* வரி செலுத்துபவரின் சொந்த செலவாக இருத்தல் கூடாது.

* நடப்பாண்டில் செலவிட்டு இருத்தல் வேண்டும்.

வருமான வரிச் சட்டத்தில், “ஏனைய வருமானங்கள்’ என்ற தலைப்பில் கீழ்வரும் செலவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.

(ண்) வட்டி, சம்பளம் முதலியன இந்திய நாட்டிற்கு வெளியே செலவு செய்யும் போது, வருமான வரியை பிடிக்காமல் செலவு செய்தல்.

(ண்ண்) சொத்து வரி.

(ண்ண்ண்) குலுக்கல், குறுக்கெழுத்து, சூதாட்டம் போன்றவற்றிற்குண்டான செலவுகள்.

(ண்ஸ்) வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்பக் கட்டணம், உற்பத்தி உரிமம் ஈட்டுவதற்கு செய்யும் செலவுகள்.

என்.வி. பாலாஜி ( nvbalaji@karra.in)

வருமான வரி நஷ்டம்

இந்திய வருமான வரி சட்டத்தின் கீழ் லாபத்திற்கு வரியுண்டு. நஷ்டம் வந்தால் வரி கிடையாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நஷ்டத்தை லாபத்தில் இருந்து கழித்து பெறும் தொகைக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும். இவற்றை இன்று காண்போம்.

வருமான வரி சட்டத்தின் 5 பிரிவுகளில் சம்பளத்தை தவிர மற்ற பிரிவுகளில் இருந்து நஷ்டம் பெற அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நஷ்டத்தை அடுத்த வருடத்திற்கு எடுத்து செல்ல வாய்ப்புள்ளது.

நஷ்டத்தை கீழ்வருமாறு லாபத்திலிருந்து கழிக்கலாம்.

1. இந்த வருடம் ஒரு பிரிவில் வரும் நஷ்டத்தை இந்த வருடமே கழிக்கலாம்.

2. அப்படி அந்த வருடம் கழிக்க இயலாவிடில் அதை அடுத்த வருடங்களுக்கு எடுத்து சென்று லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

சம்பளம்:

இதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதேபோல் எந்த ஒரு நஷ்டத்தையும் இதற்கு எதிராக கழிக்க இயலாது.

வீட்டு வாடகை வருமானம்:

இந்த தலைப்பின் கீழ் வரும் நஷ்டத்தை அதே வருடத்தில் எந்த ஒரு வருமான பிரிவிலும் உள்ள லாபத்திலிருந்தும் கழிக்கலாம். இப்படி கழிக்க இயலாவிடில் அதனை அடுத்த 8 வருடங்களுக்கு எடுத்து சென்று அந்த வருடங்களில் வரும் வீட்டு வாடகை லாபத்திலிருந்து கழிக்கலாம்.

தொழில், வணிகம்:

இந்தப் பிரிவின் கீழ் வரும் நஷ்டத்தை சம்பளத்தை தவிர அந்த வருடத்தில் எந்த ஒரு வருமான பிரிவிலும் உள்ள லாபத்திலிருந்து கழிக்கலாம். இவ்வாறு கழிக்க இயலவில்லையெனில் அதை அடுத்த 8 வருடங்களுக்குள் இதே பிரிவின் கீழ் வரும் லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்த பிரிவின் தேய்மான நஷ்டத்தை எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லாம். இந்த நஷ்டத்தை எந்தப் பிரிவின் லாபத்திலும் கழிக்கலாம்.

குறுகிய கால மூலதன நஷ்டம்:

இதனை குறுகிய, நீண்ட கால மூலதன லாபத்தில் கழித்துக் கொள்ளலாம் (அதே ஆண்டோ, இயலாவிட்டால் 8 ஆண்டுக்குள்ளோ).

குறிப்பு:

மேற்கூறிய நஷ்டங்களை, அடுத்த வருடங்களுக்கு எடுத்துச் சென்று கழிக்க வேண்டுமெனில், நஷ்டம் ஏற்பட்ட வருடத்திற்கான வருமான வரி படிவத்தை குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும்.

என்.வி. பாலாஜி

=====================================================

வருமான வரி – வருமானத்தில் கழிவுகள்

கடந்த சில நாள்களாக எந்த வருமானம் எந்த பிரிவின் கீழ் வரிக்கு உட்படுத்தப்படும் என பார்த்தோம். அத்துடன் பிறர்க்கு கிடைக்கும் வருமானம் எப்போது மற்றவரின் வருமானத்தோடு இணைக்கப்படும் என்பதனையும் பார்த்தோம். மேற்கூறிய அனைத்தையும் கூட்டினால் ஒருவருடைய மொத்த ஆண்டு வருமானம் ( எழ்ர்ள்ள் பர்ற்ஹப் ஐய்ஸ்ரீர்ம்ங்) கிடைக்கும். இந்த மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கிடைக்கும் சில கழிவுகளை இன்று பார்ப்போம்.

ஒரு தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்பம் ஒரு நிதியாண்டில் செய்யும் கீழ்க்கண்ட முதலீடுகள் கழிவாக கிடைக்கும்.

-ஆயுள் காப்பீட்டு சந்தா

– டழ்ர்ஸ்ண்க்ங்ய்ற் ஊன்ய்க்

-ஓய்வூதியம் பெறுவதற்காக செலுத்தும் தொகை

– எழ்ஹற்ன்ண்ற்ஹ் ஊன்ய்க்

– அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஙன்ற்ன்ஹப் ஊன்ய்க்

-வீட்டுக்கடன் மீது திருப்பி செலுத்திய முதல்

-தன் குழந்தைகள் (அதிகபட்சமாக 2) மற்றும் தன்னை சார்ந்துள்ளவர்களுக்காக செலுத்திய கல்வி கட்டணம்

-குறிப்பிட்ட சில பங்குகளில் முதலீடு

-அரசு வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்யும் நிரந்தர வைப்புத்தொகை மற்றும் சில முதலீடுகள்

(காப்பீட்டு நிறுவனத்தால் நிறுவப்பட்ட ஓய்வூதிய நிதிக்கு செலுத்தும் ஆண்டு தொகைக்கு, இந்து கூட்டு குடும்பத்திற்கு கழிவு கிடையாது. தனிநபர் ஓய்வூதிய நிதிக்காக செலுத்தும் தொகைக்கு கழிவு உண்டு.)

மேற்கூறிய கழிவுகள் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை மட்டுமே அளிக்கப்படும்.

-ஒரு தனிநபர் (அல்லது) இந்து கூட்டுக் குடும்பம் செலுத்தும் மருத்துவ காப்பீட்டு தொகை, ரூ.10,000 வரை (அடுத்த நிதியாண்டில் இருந்து ரூ.15,000 வரை) கழிவாக கிடைக்கும்.

முதியோருக்காக செலுத்தும் பட்சத்தில் ரூ.15,000 வரை (அடுத்த நிதியாண்டு முதல் ரூ.20,000 வரை) கழிவாக கிடைக்கும்.

-ஒரு தனிநபர் (அல்லது) இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் அவரை சார்ந்தவர் சில குறிப்பிட்ட உடல் ஊனம் உள்ளவராயின் அவர் மருத்துவ செலவு அல்லது காப்பீட்டு தொகை செலுத்தும் பட்சத்தில் ரூ.50,000 கழிவாக கிடைக்கும்.

-மேலும் 2006 – 07-ம் நிதியாண்டில் தனக்காக வாங்கிய கல்விக்கடன், 2007 – 08-ம் நிதியாண்டு முதல் தனக்காக, தன் துணைவருக்காக, துணைவியருக்காக மற்றும் பிள்ளைகள் கல்விக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் பணம், கழிவாக ரூ.40,000 வரை கிடைக்கும்.

வரி செலுத்துபவர் (நிறுவனம் உள்பட) கொடுக்கும் நன்கொடைக்கு கீழ்கண்டபடி கழிவு கிடைக்கும்.

-மத்திய, மாநில அரசு நிறுவிய மக்கள் உதவிக்கான நிதி – 100%

-மத்திய, மாநில அரசு நிறுவிய ஏனைய நிதிகள் – 50%

-பிற தொண்டு நிறுவனங்கள் – 50% (நிபந்தனைக்குட்பட்டு)

சம்பளம் பெறாத மற்ற தனிநபர் வரி செலுத்துவோராயின் வீட்டு வாடகை செலுத்துபவரானால் அவ்வாடகை சில நிபந்தனைக்கு உட்பட்டு கழிவுகள் கிடைக்கும்.

தொழில், வணிகத்தில் இருந்து வருமானம் இல்லாதவராயின் அறிவியல் ஆய்வு நிறுவனம், பல்கலைக்கழகம் முதலியவற்றிற்கு நிதியாண்டில் கொடுக்கும் நன்கொடைக்கு கழிவு உண்டு.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடைக்கு கழிவு கிடைக்கும்.

ஒரு தனிநபர் ஊனமுற்றவராயிருப்பின் அல்லது மன வளம் குன்றியவராக இருந்தால் சில நிபந்தனைக்குள்பட்டு ரூ.50,000 கழிவு பெறலாம். அதுவே தீவிரமாக இருப்பின் ரூ.75,000 கழிவு பெறலாம். இக்கழிவு பெற அரசு மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழ் வருமான வரி படிவத்துடன் சமர்பிக்கப்பட வேண்டும்.

என்.வி. பாலாஜி

========================================================

வருமான வரி – அறக்கட்டளையின் வருமானம்

என்.வி. பாலாஜி

அறக்கட்டளை என்பது ஒருவரது நம்பிக்கையால் உருவாவது ஆகும். அதன் நோக்கம் பலருக்கும் நன்மை பயக்குவதாக அமைய வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைத்து அல்லது நம்பிக்கையை பிரகடனப்படுத்தி, அறக்கட்டளையை துவக்குபவரே “நிறுவனர்’ எனவும்; அந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்பவரே “தர்மகர்த்தா’ எனவும்; பயனடைவோர் “மானியம் பெறுவோர்’ எனவும் கருதப்படுவர்.

அறக்கட்டளையின் வருமானம், வருமான வரிச் சட்டத்தில் கூறப்பட்ட நிபந்தனையை பூர்த்தி செய்தால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். அவை பின்வருமாறு:

1. வருமானத்தை ஈட்ட உதவும் “உடைமை’ நம்பிக்கையில் அல்லது சட்டத்தின் கட்டாயத்தில் இருக்க வேண்டும்.

2. “உடைமை’ தர்மச் செயல்களுக்காகவோ (அல்லது) மதங்களின் தொண்டுச் செயல்களுக்காகவோ இருத்தல் வேண்டும்.

3. ஒரு அறக்கட்டளை, குறிப்பிட்ட மதத்திற்கோ, இனத்திற்கோ பயனளிக்கும் வகையில் உருவாக்கப்படக் கூடாது.

4. அறக்கட்டளையின் வருமானத்தில், ஒரு பங்கு கூட நிறுவனரையோ (அல்லது) அவரைச் சார்ந்த சிலரையோ சென்றடையக் கூடாது.

5. அறக்கட்டளையை துவக்க வருமானவரி ஆணையரிடம், நிறுவனர் விண்ணப்பிக்க வேண்டும்.

6. வருமானம் ரூ.50,000-க்கு மேல் சென்றால், அறக்கட்டளை கணக்குகள் “ஆய்வுக்கு’ ( அன்க்ண்ற்) உட்படுத்தப்படவேண்டும்.

7. அறக்கட்டளையின் தர்ம ரீதியான அல்லது மத ரீதியாகச் செய்யப்பட்ட செலவுகளுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும். ஒரு ஆண்டில் ஈட்டிய வருமானத்தில், குறைந்தது 85% மேற்கூறிய செயல்களுக்குச் செலவிட்டிருக்க வேண்டும்.

8. அப்படி செலவிடாத பட்சத்தில், 85%-க்கு குறைவாக இருக்கும் தொகையினை 5 ஆண்டுக்குள் செலவிட வேண்டும்.

9. அறக்கட்டளையின் நிதிகளை, குறிப்பிட்டச் சில முறைகளில் மட்டுமே முதலீடு செய்தல் வேண்டும்.

வருமான வரி ஆணையரிடம் பதிவு:

படிவம் 10 அ, என்ற படிவத்தில், அறக்கட்டளை, அதன் பெயர், முகவரி, குறிக்கோள் போன்றவற்றை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை அறக்கட்டளை தொடங்கிய ஒரு வருடத்திற்குள் சமர்பிக்க வேண்டும். இது செய்யாத பட்சத்தில் வரி விலக்கு நிராகரிக்கப்படும். எனினும், விண்ணப்பத்தின் தாமதத்திற்கு கூறப்படும் காரணங்கள் ஆணையத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்து இருந்தால், ஆணையர் தாமதத்தை மன்னிக்கலாம். தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் இதில் சில மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருமான வரி ஆணையரால் தாமதத்தை மன்னிக்க இயலாது. மற்றும் அறக்கட்டளையின் பதிவை விண்ணப்பித்த ஆண்டின் முதல் தேதியிலிருந்து வழங்க முடியும். (1.7.2007 முதல் அமலுக்கு வரும்).

ஒரு வருமான வரித்துறை ஆணையர் அறக்கட்டளையின் விண்ணப்பத்தை ரத்து செய்தால் இதுவரை அதனை மேல் முறையீடு செய்ய முடியாது. ஆனால் 1.7.2007 முதல் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும்.

ஆணையர், ஒரு அறக்கட்டளையின் நோக்கம், கோட்பாடு ஆகியவற்றை ஆராய்ந்தபின், அவை சரியாக இருக்கும்பட்சத்தில், “பதிவுச் சான்றிதழ்’ வழங்குவார். விண்ணப்பத்தை நிராகரித்தாரேயானால், அதன் காரணத்தை ஆறு மாதத்திற்குள் கூற வேண்டும். இல்லையேல், பதிவு ஆகிவிட்டதாகக் கொள்ளலாம்.

ஒரு வேளை, அறக்கட்டளையின் பணிகள், அறக்கட்டளை உருவாக்கிய நோக்கங்களுக்கு மாறாக இருக்கிறது என ஆணையர் நம்பினால், பதிவை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தையோ அல்லது பதிவையோ ரத்து செய்வதற்கு முன், விண்ணப்பதாரர், தான் நினைப்பதை வெளிப்படுத்த, ஆணையர் வாய்ப்பளிக்க வேண்டும்.

======================================

வருமான வரி – வரி பிடித்தம்

எந்த வகை வருமானமாக இருப்பினும் அதில் 1%-ஐ செலுத்துபவர் வரியாக பிடித்த பின்னரே செலுத்த வேண்டும் என்பது சட்டம். இதனால் வருமான வரி ஏய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகின்றது. இந்த சட்டம் எவருக்கெல்லாம் பொருந்தும், ஒவ்வொரு வகை வருமானத்துக்கும் பிடிப்பு சதவிகிதம் என்ன என்பதை காண்போம்.

சம்பளம்:

ஒருவரின் சம்பளம் குறைந்தபட்ச வரிக்கு உட்படாத அளவை தாண்டினால், அவர் செலுத்த வேண்டிய வரியை பணியில் அமர்த்தியவர் சம்பளத்திலிருந்து பிடித்து அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்.

வட்டி:

ஒருவருக்கு வங்கிகள், நிறுவனங்களிலுள்ள சேமிப்பிலிருந்து வரும் வட்டி ரூ.5,000-க்கு மேல் இருந்தால் வரிபிடித்தம் செய்யப்படும். இந்த வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி பிடிப்பு விகிதம்:

தனிநபர் – 10%

நிறுவனம் – 20%

ஒப்பந்தம்:

இந்து கூட்டு குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் – 40 லட்சம்) தவிர மற்றவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்தினால் வரி பிடிக்கவேண்டும். குறைந்தபட்ச வரம்பு ரூ.20,000.

வரி பிடிப்பு விழுக்காடு:

விளம்பர ஒப்பந்தங்கள் – 1%

மற்றவை – 2%

தரகு:

இந்து கூட்டு குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் எவருக்காவது தரகு செலுத்தினால் (வருடத்திற்கு ரூ.2,500-க்கு மேல்) அதிலிருந்து 5% வரி பிடித்தம் செய்ய வேண்டும்.

வாடகை:

இதனை 2 ஆக பிரிக்கலாம். 1. வீட்டு வாடகை, 2. வணிகத்தில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான வாடகை.

இந்து கூட்டுக் குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் வாடகை செலுத்துகையில் (வருடத்திற்கு ரூ.1,20,000 மேல்) வரி பிடிக்க வேண்டும்.

வரி பிடிப்பு சதவிகிதம் கீழ்வருமாறு:

1. தனிநபர், இந்து கூட்டு குடும்பம், கூட்டாண்மை முதலியவற்றிற்கு 15% ஆகும்.

2. மற்றவைகளுக்கு 20% ஆகும்.

தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் வணிகத்தில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான வாடகை வரி பிடிப்பு விகிதம் 15% மற்றும் 20%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Professional Services:

இந்து கூட்டு குடும்பம், தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் இதற்கான பணம் செலுத்துகையில் (வருடத்திற்கு ரூ.20,000 மேல்) 5% வரியாக பிடிக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் இது 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக பிடிக்கப்பட்ட வரிகள் அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் (மே மாதம் பிடித்ததில் இருந்து ஜூன் 7-க்குள்) வங்கியில் அரசாங்க கணக்கில் செலுத்த வேண்டும். இவ்வாறு பிடித்த வரிக்கான படிவத்தை ஒவ்வொரு காலாண்டும் அரசாங்கத்திடம் மின் அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும்.

உரிய வரி பிடித்தம் செய்யாவிடின் மேற்கூறிய அனைத்திற்கும் வியாபார செலவாக கழிக்க இயலாது.

பிடித்த வரியை செலுத்த தாமதம் ஏற்படின் மாதத்திற்கு 1% வட்டி செலுத்த வேண்டும். இதை தவிர வருமான வரித்துறை அதிகாரிக்கு வரி பணத்திற்கு மிகாமல் Penalty்ங்ய்ஹப்ற்ஹ் செலுத்தவைக்க அதிகாரம் உண்டு.

என்.வி. பாலாஜி

===========================================================

வருமான வரி – சம்மன் மற்றும் சர்வே

என்.வி. பாலாஜி

வரி செலுத்துபவரை நேரில் அழைத்து விசாரணை நடத்துவது அல்லது அவர்கள் தொழில் நடத்தும் இடத்திற்கு சென்று சர்வே நடத்துவது போன்றவற்றை வருமான வரித்துறையால் செய்ய இயலும். ஒருவருக்கு சம்மன் கொடுத்து குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்திற்கு நேரில் ஆஜராக சொல்லி, அவரிடம் இருந்து தேவையான விவரங்களை வருமான வரித்துறை பெறலாம். அவ்வாறு நேரில் வருபவரிடம் பிரமாணத்தை கொண்டு வாக்குமூலம் பெறலாம்.

இந்த தகவல் பெறும் உரிமையின் மூலம் வருமான வரித்துறை ஒரு கூட்டாண்மை நிறுவனத்திடமிருந்து பங்குதாரர்களின் விவரங்கள், இந்து கூட்டு குடும்பத்திடம் இருந்து அதன் உறுப்பினர்களின் விவரங்கள், ஒரு டிரஸ்டி அல்லது ஏஜெண்ட் என்று வருமான வரித்துறையால் நம்பப்படும் நபரிடமிருந்து அவர் யாருக்கான ஏஜெண்ட் என்ற தகவல், ரூ.1,000 மேல் வாடகை வட்டி, தரகு, ராயல்டி போன்றவற்றை வரி செலுத்துபவரிடமிருந்து பெற்ற விவரம், பங்குதாரர்களிடமிருந்து அவர்களுடைய வாடிக்கையாளர் விவரம் போன்றவற்றை வருமான வரித்துறையால் பெற முடியும். இதே போல் ஒரு வங்கி அல்லது அதன் அதிகாரிகளிடமிருந்தும் எந்த விசாரணைக்கும் தேவையான அல்லது உபயோகமுள்ள தகவலை பெற வருமான வரித்துறைக்கு அதிகாரமுண்டு. தகவல் கோரப்பட்ட நபர் அதை கொடுப்பவருக்கு கடமைப்பட்டவர் ஆவார்.

வருமான வரித்துறையால் தன்னுடைய அதிகாரிக்குட்பட்ட எல்லையில் தொழில் செய்து வரும் நபரின் இடத்திற்குச் சென்றும் விசாரணை நடத்த முடியும். அப்படி துறை அதிகாரிகள் தொழில் செய்வோர் இடத்திற்கு நேரில் வரும் போது, தொழில் அதிபர் அல்லது அவருடைய தொழிலாளி அல்லது அந்நேரத்தில் அத்தொழிலை கவனித்துக் கொண்டிருக்கும் நபர் துறை அதிகாரிகளுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர் ஆவார்.

அதிகாரிகளுக்கு தேவைப்பட்ட கணக்கு புத்தகங்கள், பதிவேடுகள் போன்றவற்றை பார்வையிட எடுத்துக் கொடுத்தல், பணம் மற்றும் சரக்கு முதலியவற்றை சரிபார்க்க தேவையானவை அல்லது அதிகாரி கோரும் எந்த ஒரு தகவலையும் மேற்கூறிய நபர்கள் செய்ய வேண்டும். இக்குறிப்பிட்ட தகவல்களை, தொழில் நடத்துபவர் வேறொரு இடத்தில் இருப்பினும் அளித்தல் அவசியம்.

அதிகாரிகள் ஒரு வணிகரின் இடத்திற்கு சாதாரணமாக அவர் வியாபாரம் நடத்தும் நேரத்திற்குள்ளாகவே செல்ல இயலும். வேறொரு இடமாயின் சூரிய உதயத்திற்கு முன் மற்றும் பின் செல்ல இயலும். மற்ற நேரங்களில் செல்ல இயலாது. அதிகாரிகள் தான் பார்வையிட்ட புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளில் சான்றாக ஒப்பமிடுதலையோ அல்லது சிறுகுறிப்பையோ நகலாக எடுத்து செல்ல முடியும். அதிகபட்சமாக 10 நாட்களுக்கு (விடுமுறை நாள்கள் தவிர) தான் பார்வையிட்ட கணக்கு புத்தகங்களை மற்றும் பதிவேடுகளை தன் வசம் வைத்துக் கொள்ளும் அதிகாரம் உண்டு. தான் பார்வையிட்ட சரக்கு மற்றும் ரொக்கம் முதலியவற்றின் விவரங்களை எழுதிக் கொள்ளவும், அங்குள்ள எந்த நபரிடமும் வாக்குமூலம் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் சரக்கு மற்றும் விலையுயர்ந்த பொருள்களை அங்கிருந்து எடுத்துச் செல்ல அதிகாரம் கிடையாது.

சர்வேயின் போது மேற்கூறிய தகவல்களை ஒரு நபர் அளிக்க தவறினால் அவரை தன்னுடைய அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக கோரி தகவல்களை பெறவும் முடியும்.

இதில் கூறப்பட்ட விதிமுறைகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக தவறினால் நபருக்கு ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.

இதேபோல் திருமணம் மற்றும் விசேஷங்களில், திருமணம், விசேஷம் முடிந்த பிறகு, அந்த விசேஷத்திற்கு செலவு செய்த ஒருவரிடமிருந்தோ, செலவு சம்பந்தமான தகவல் தெரிந்த ஒருவரிடமிருந்தோ தேவைப்பட்ட தகவல்களை பெற அதிகாரியால் பெற முடியும். அந்நபரிடமிருந்து வாக்குமூலத்தையும் பெற முடியும்.

இப்படி பலவகைகளில் பெறப்பட்ட தகவல்களை சான்றுகளாக கொண்டு வரி செலுத்துபவரின் வருமானம் அவரால் சரியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதை துறை நிர்ணயம் செய்ய இயலும். இப்படி பெறப்பட்ட தகவல்கள் பொதுவாக ரகசியம் காக்கப்பட்ட ஆவணமானாலும் வருமான வரி சட்டத்திற்குள்பட்ட வருமான வரித்துறை வேறு துறைகளிடம் பகிர்ந்து கொள்ள இயலும். இத்தகவல் வரி செலுத்துபவருக்கு எதிராக பயன்படுத்தபடுமாயின், வரி செலுத்துவோருக்கு அதை மறுப்பதற்கான வாய்ப்பும், வரி நிர்ணயிக்கும் முன் அளிக்கப்படும்.

வருமான வரி -இறுதி தேதி

கடந்த சில நாள்களாக வருமான வரி பற்றிய அடிப்படைச் செய்திகள், வருமான வரிச் சட்டம் உருவான விதம், எந்த வருமானம் எந்த பிரிவின் கீழ் வரிக்கு உட்படுத்தப்படும், மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கிடைக்கும் சில கழிவுகள், அறக்கட்டளை வருமானம் மற்றும் அதற்குரிய வரி விலக்கு, வருமான வரி பிடித்தம், வருமான வரி சம்மன் மற்றும் சர்வே, தகவல் பெற வருமான வரித்துறை அதிகாரிக்குள்ள உரிமைகள் பற்றி பார்த்தோம். வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி மார்ச் 31-ம் தேதி. அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள், நலத் திட்டங்களாக மீண்டும் மக்களையே வந்தடைகின்றன. மேலும் அரசு எந்திரம் இயங்குவதற்கு வரி வருவாய் முதுகெலும்பு போன்றதாகும். எனவே அனைவரும் தவறாது வரி செலுத்துவது ஒரு வகையில் நாட்டு நலனுக்கு நாம் செய்யும் பங்களிப்பாகும்.

Posted in Amortization, AMT, Analysis, Assets, Backgrounder, Budget, Business, Capital, Defaltion, Deflation, Depreciation, Dividend, Economics, Education, Expenses, Explanation, Finance, Income Tax, Inflation, Inspection, Introduction, IT, Liabilities, Loans, Long term, Loss, markets, Mortgage, Primer, Profits, Recession, Revenues, Shares, Short term gains, Statements, Stocks, Tax | Leave a Comment »