Kreedam – Ajith hurts his back: Shooting gets affected
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007
முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை
சென்னை, பிப். 6-
நடிகர் அஜீத்குமார் “கிரீடம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.
காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.
இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.
பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.
அதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்’ போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்’ வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.
அஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.
Balasubramanian said
Hello Sir
Send current information about thala Ajith and his release date of Kreedam
vidyaraninadar said
Thier is no need to give 3crore or more then that to ajith he is good for nothing I request tamil film industries to drop out ajith frm tamil cinema and his wife shalini also
vidyaraninadar said
shalini and ajith both are criminal and tapories bad person they are not only acting in film but also in real life so plz don’t give any chance to ajith plz this is my kindly request give life to new heroes like vishal, jayem ravi, etc
Vijay incites Kreedam movie clashes? - Ajith fan club vs Trisha admirers « Tamil News said
[…] Kreedam – Ajith hurts his back: Shooting gets affected « Tamil News: முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்- தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த கிரீடம் படம் இன்று ரிலீசானது. இதற்காக திரிஷா ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்தனர். கொடி தோரணங்களும் கட்டினர்.அஜீத், ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் கட் அவுட் வைத்தார்கள். சில இடங்களில் திரிஷா, பேனர்கள் கிழிக்கப்பட்டன.திருவான்மிïரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் 15 அடி உயர கட் அவுட் நிறுவினர். திரிஷா ரசிகர்களும் லாரியில் பேனர்களை கொண்டு வந்து இறக்கி தியேட்டரை சுற்றி வைத்தனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அஜீத் பேனர் வைக்க இடம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். திரிஷா பேனர்கள் கிழிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். ரசிகர் களை சமரசம் செய்தார்கள். […]