Photoshopped Sonia Gandhi? Surat Cyber crime Investigations
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007
புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?
ஆமதாபாத், பிப். 4: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தில் தில்லுமுல்லு செய்து, அதை சூரத் நகரின் முன்னணி நாளிதழுக்கு யாரோ அனுப்பிவைத்துள்ளனர்.
இது குறித்துப் போலீஸôரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பெரிய அரசியல் விவகாரமாக உருவெடுத்து வருகிறது.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள மாலைப் பத்திரிகை ஒன்று அச்சாகும் அச்சகத்தில் இருந்து அப் படம் அனுப்பப்பட்டிருக்கிறது. உண்மையில் அப்படத்தில் சோனியா காந்தியே இல்லை. அவரைப் போல இருப்பவரைக் கொண்டு, அந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தை அனுப்பிய அச்சகத்துடன் பாபுபாய் ரைகியா என்ற சூரத் காங்கிரஸ் தலைவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே போலீஸôர் அவரையும் விசாரித்தனர். இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, என் பெயரைக் கெடுக்க நினைக்கும் அரசியல் போட்டியாளர்களின் விஷமச் செயலே இது’ என்று அவர் போலீஸôரிடம் தெரிவித்துள்ளார்.
இது “”சைஃபர் கிரைம்” எனப்படும் கணினி-இணையதளம் சார்ந்த குற்றமாகும்; தவறு இழைத்தவர்களுக்குத் தண்டனை வாங்கித் தராமல் ஓயமாட்டோம் என்று குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா எச்சரித்திருக்கிறார்.
மறுமொழியொன்றை இடுங்கள்