Military men abuse train passengers in Patna get arrested by Railway Police
Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007
ரயில் பயணிகளிடம் தவறாக நடந்ததாக 4 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கைது
பாட்னா(பிகார்), ஜன. 26: ரயில் பயணிகளை அடித்ததாகவும், அவர்களின் உடமைகளை தூக்கி வீசியதாகவும், பெண் பயணிகளிடம் தவறாக நடந்ததாகவும் 4 ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 9 பேரை பாட்னா ரயில்வே போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து பிகார் ரயில்வே டிஜஜி அஜய் வர்மா கூறியதாவது: புது தில்லியிலிருந்து குவாஹாட்டிக்கு செல்லும் வடகிழக்கு மாநிலங்களுக்கான விரைவு ரயில் புதன்கிழமை இரவு புறப்பட்டது. இதில் பொதுப்பெட்டியில் ஒரு குழுவாக ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படை வீரர்களும் பயணம் செய்தனர். முகல்சராய் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது ரிசர்வ் பெட்டிக்குள் நுழைந்த அவர்கள் அந்த பெட்டி தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் பயணிகளை வெளியேறுமாறும் கூறினர்.
அவர்கள் “பொய்’ சொல்கிறார்கள் என்பதை உணர்ந்த பயணிகள் பெட்டியை விட்டு இறங்க மறுத்தனர். இந்நிலையில் ரயில், அந்ந நிலையத்தை விட்டு புறப்பட்டது. ராணுவ வீரர்கள் பயணிகளிடம் தகராறு செய்து வந்தனர். தினா ரயில் நிலையம் அருகே ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படைவீரர்களும் பயணிகளை அடித்தனர். மேலும் அவர்களது உடமைகளை தூக்கி வெளியே வீசினர். பெண் பயணிகளிடம் தவறாக நடந்தனர்.
ரயிலை விட்டு இறங்கிய பயணிகள் சிலர் இது குறித்து தினா ரயில்வே போலீஸôரிடம் புகார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 4 ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்