Karnataka cities to change their names to be in Kannada
Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007
கர்நாடகாவில் மேலும் 11 நகரங்களின் பெயர்கள் மாறுகிறது
பெங்களூர், ஜன. 24-
பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ராஸ் சென்னை என்றும், பம்பாய் மும்பை என்றும், கல்கத்தா கொல்கத்தா என்றும், பாண்டிச்சேரி புதுச்சேரி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதே போல கர்நாடக தலைநகர் பெங்களூர் என் பதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்தது. கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பெயர் மாற்றத்திற்காக கடிதம் எழுதி இருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் பல அமைச்சகம், அமைப்புகளிடம் பெயர் மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதே போல ரெயில்வே துறை, விமான போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திடமும் கருத்து கேட்கப்பட்டது.
பெங்களூர் பெயர் மாற்றுவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ கழித்துதான் பெயர் மாற்றத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
இதே போல மேலும் 11 நகரங்களின் பெயர்களை மாற்றவும் கர்நாடக அரசு கோரிக்கை வைத்து உள்ளது.
- மைசூர் என்பதை மைசூரு என்றும்,
- மங்களூரை மங்களூரு என்றும்,
- பெல்காம் என்பதை பெல்காவி என்றும்,
- பெல்லாரி என்பதை பல்லாÖì என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்