Japan’s Sex Mela – Kumudam Reporter
Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007
21.01.07 ஹாட் டாபிக்
தொழில்நுட்பத்தில் அசுர முன்னேற்றம் பெற்ற நாடான ஜப்பான், இப்போது செக்ஸ் தொடர்பான விஷயங்களிலும் தனக்கு ஈடு இல்லை என்று சொல்லுமளவுக்கு அதிவேகமாக முன்னேறி விட்டது. உலகைத் தன்பக்கம் திரும்ப வைக்கக்கூடிய அளவிலான, ஒருங்கிணைந்த உடலுறவுக் காட்சி நிகழ்ச்சி ஒன்று அண்மையில் ஜப்பானில் நடந்துள்ளது. கணவன், மனைவிக்குள்_நான்கு சுவருக்குள் மட்டும் நிகழ வேண்டிய புனிதமான தாம்பத்ய உறவினை, நூற்றுக்கணக்கான பேர் பங்கேற்று, அப்பட்டமாக நாடே பார்க்குமளவுக்கு, மிகப்பெரிய அளவில் அண்மையில் திருவிழாவாக நடத்திக் காட்டி ஜப்பானியர்கள் பெரும் ‘சாதனை’ புரிந்திருக்கிறார்கள்.
அரங்கத்திற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி, வீடியோ படமாக்கப்பட்டு இணையதளத்திலும் வெளியிடப்பட்டு விட்டதால், அது உலகெங்கிலும் உள்ளவர்களின் கவனத்தை ஒரு சேர இழுத்திருக்கிறது. சாதிப்பதற்கு வேறு சங்கதியே இல்லையா என பலரையும் முகம் சுளிக்க வைத்த இந்த நிகழ்ச்சி, உலக அளவிலான சர்ச்சைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள பிரசித்தி பெற்ற மிகப்பெரிய உள்விளையாட்டரங்கமான மிட்சுயி என்ற இடத்தில்தான் சில வாரங்களுக்கு முன்பாக இந்தக் காமக்கூத்து நடைபெற்றிருக்கிறது. ஜப்பானின் மிகப்பெரிய இணையதளமான ஜெசெக்ஸ் நெட்வொர்க் என்னும் நிறுவனத்தின் ஐடியாவில் தயாரான நிகழ்ச்சி இது. தன்னுடைய இணையதளத்தில் ஆசியாவின் புகழ்பெற்ற பெண் மாடல்களின் நிர்வாணப் படங்களையும், வீடியோ ஆல்பங்களையும் வெளியிட்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டிய நிறுவனம்தான் ஜெசெக்ஸ் நெட்வொர்க். வழக்கமான செக்ஸ் ஆல்பங்களைப் போல இல்லாமல், தன்னுடைய நேயர்களுக்குப் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று அதன் நிர்வாகிகள் யோசித்த போதுதான், இப்படியரு ஐடியா அவர்களுக்கு உதித்திருக்கிறது.
இந்த மெகா செக்ஸ் மேளாவில் கலந்து கொள்வதற்கான ஆட்களைத் திரட்டுவதில் முதலில் தடுமாறிப் போயிருக்கிறது ஜெசெக்ஸ் நெட்வொர்க். அமெச்சூர் முகங்களாக இதில் பங்கேற்க வைக்கவேண்டும் என்ற அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. அதனால் தங்களின் இணையதளத்தில் நிர்வாண மாடல்களாகப் பங்கேற்றவர்களையே அழைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அந்த மாடல்களுடன் இணைந்து நடிக்க (!) முன் வந்த இளைஞர்களுக்குக் கூலியும் தரப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சி நடக்குமிடத்துக்கு நான்கு தனித்தனி பஸ்களில் அழைத்து வரப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு, அதில் பங்கேற்பது குறித்தான ஒத்திகைகள் தொடர்ந்து ஒரு வாரம் நடத்தப்பட்டிருக்கிறது! அந்த உள்விளையாட்டரங்கத்தின் தளம் முழுவதிலும் திண்டுகளுடன் படுக்கை விரிக்கப்பட்டு இருந்தது. அரங்கத்தின் நீள அகலத்தைப் பொறுத்து, நீள்வரிசையில் ஜோடிகளுக்கு நான்கடி இடைவெளி விட்டு தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
முதலில் உள்விளையாட்டரங்கத்தின் உள்ளே 250 பெண்களும் வரிசையாக நிறுத்தப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களின் உடைகளைக் களைந்து நிர்வாணக்கோலத்துக்கு மாறுகின்றனர். சற்று நேரத்தில் அந்த அரங்கத்தினுள் அழைத்து வரப்படும் ஆண்கள், அவர்களுடைய இணைகளுக்கு அருகே ஜோடியாக நிறுத்தப்படுகின்றனர். முதலில் முத்தப் பரிமாற்றத்துடன் ஆரம்பிக்கும் நிகழ்ச்சி பல்வேறு கட்டங்களைக் கடந்த பின்னர் உடலுறவில் நிறைவடைவதாக அமைக்கப்பட்டிருந்தது. சாரி, அந்தப் படங்களைப் பிரசுரிக்க இயலாது!)
மொத்தம் ஐந்து கேமிராக்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, எடிட் செய்யப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஓடும் வீடியோவாக ஜெசெக்ஸ் நெட்வொர்க்கின் ஆன் டிமாண்ட் என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆண், பெண் இருபாலரின் பிறப்புறுப்புகளை மட்டும் மாஃபிங் செய்து மறைத்திருப்பது மட்டுமே இதில் ஆறுதலான ஒரே விஷயம்.
‘500 றிமீக்ஷீsஷீஸீ ஷிமீஜ் ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவைப் பணம் செலுத்தி மட்டுமே டவுன்லோடு செய்து பார்க்க முடியும். இருந்த போதிலும் இதை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம். இதன்மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பார்த்துவிட்டது ஜெசெக்ஸ் நெட்வொர்க். மனிதகுலத்தையே அச்சுறுத்தும் பேராபத்தான எய்ட்ஸ் பரவும் முக்கியமான காரணிகளில் ஃப்ரீ செக்ஸ், க்ரூப் செக்ஸ் போன்றவை பிரதான பங்கை வகிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். தற்போது வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இதைப்போன்ற வக்கிரமான நிகழ்வுகள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்திவிடும். இந்த மாதிரியான நிகழ்வுகள் உடனடியாகத் தடை செய்யப்படவேண்டிய ஒன்று என்று, உலகில் உள்ள பெரும்பான்மையான சமூக நல இயக்கங்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கின்றன என்பதும் இன்னொரு ஆறுதலான செய்தி! ஸீ
வை. கதிரவன்
மறுமொழியொன்றை இடுங்கள்