Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கருப்பை கவலை தீருமா?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் வயது 34. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. 7 வயதில் ஒரு பையனும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. (சுகப்பிரசவம்.) கடந்த 3 மாதங்களுக்கு முன் கர்ப்பப்பை நழுவியது போன்ற உணர்வு தெரிந்தது. டாக்டர் மாத்திரை, டானிக் எழுதிக் கொடுத்தார். அவற்றைச் சாப்பிட்ட பிறகும் சரியாகவில்லை. லேசாக வெள்ளைபடுகிறது. தரையில் உட்காரும்போதும், குழந்தைகளைத் தூக்கும்போதும், உட்கார்ந்து மலம் கழிக்கும்போதும் கருப்பை வெளியில் வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வு என்ன?

-பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

கருப்பை தன் நிலையிலிருந்து நழுவாதிருக்க BROAD LIGAMENTS, UTERO SACRAL LIGAMENTS, CARDINAL LIGAMENTS, ROUND LIGAMENTS போன்ற தசைநார்கள் உதவுகின்றன. குழந்தை வெளியே வருவதற்கான காலதாமதம், குழந்தை பிறந்தபிறகு அதிக ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலையில் வேலைகளைச் செய்தல், பிரசவித்த பிறகு கருப்பையை வலுப்படுத்தும் உணவுகளைச் சாப்பிடாதிருத்தல், அடிக்கடி அபார்ஷன் செய்துகொள்ளுதல், நின்ற நிலையிலிருந்து திடீரெனக் குனிந்து பளுவான பொருள்களைத் தூக்குதல், மாதவிடாய்க் காலங்களில் ஓய்வின்றி உழைத்தல், குளிர்ந்த நீரில் நீராடுதல், சத்தில்லாத உலர்ந்துபோன கறிகாய்களைச் சாப்பிடுதல், உணவை மறுபடியும் சுடவைத்துச் சாப்பிடுதல் போன்ற சில காரணங்களால் வயிற்றின் கீழ்ப் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அபான வாயு சீற்றமடைந்து தன் குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, அசைவு போன்றவற்றால் மேற்குறிப்பிட்ட தசைநார்களினுள்ளே ஊடுருவி அவற்றின் இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறது. இதனால் கருப்பை தன் நிலையிலிருந்து நழுவி அடிவயிறு எப்போதும் நிரம்பியிருப்பது போன்ற உணர்வு, அடிவயிற்றில் கீழ்நோக்கி இருப்பது போன்று தோன்றுதல், இடுப்பு வலி, மாதவிடாய் அதிக அளவில் வெளிப்படுதல், வெள்ளைபடுதல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு, முழுமையாக வெளியேற்ற முடியாமை போன்றவை காணும்.

* கருப்பையை வலுப்படுத்த உணவில் பீட்ரூட், கறுப்பு எள்ளு, கறுப்பு மற்றும் மஞ்சள் வகை சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், அத்திப்பழம், திராட்சை, கொய்யாப்பழம், தேன், பீன்ஸ், பால், பட்டாணி, வெந்த உருளைக்கிழங்கு, பூசணிக்காய், சிவப்பு முள்ளங்கி, குங்குமப்பூ, சூரியகாந்தி விதை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சுரைக்காய் போன்றவை சாப்பிட நல்லது.

* ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து பழங்களை மட்டுமே உணவாகச் சாப்பிடுதல் மூலமாகவும் கருப்பையைத் தாங்கும் தசைநார்களை வலுப்படுத்தலாம். மூன்று உணவு வேளைகளாகிய காலை, மதியம் மற்றும் இரவு நேரத்தில் ஆரஞ்சுப் பழம், ஆப்பிள், பைனாப்பிள் மற்றும் திராட்சை ஆகியவற்றை 6 மணி நேர இடைவேளையில் சாப்பிட உகந்தது. ஐந்து நாட்களுக்குப் பிறகு உணவில் தானியங்கள், பாதாம் பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், விதைகள், கறிகாய், பழங்கள் போன்றவற்றை சமச் சீரான அளவில் சேர்க்க வேண்டும்.

* கேரட்டை தோலுடன் வேகவைத்து மசித்து சுத்தமான மெல்லிய துணியில் வைத்து 12 மணி நேரத்துக்கு ஒருமுறை, உதிரப் போக்கு வரும் பாதையினுள்ளே செருகிவைப்பதால் கருப்பை நழுவல் உபாதை நீங்க நல்ல வாய்ப்பிருக்கிறது.

* எப்சம் உப்பை சூடான தண்ணீரில் கரைத்து வாரம் இருமுறை இடுப்பு மூழ்குமளவு 15 நிமிடம் உட்காருதல் நல்லது.

* பூசணிக்காயை அல்வா செய்வது போன்று சுரைக்காயை அல்வாவாகத் தயார் செய்து காலை, இரவு உணவுக்கு முன்பாக தினமும் சாப்பிடலாம். இதன் சாறை ஸிரப் போன்று தயார் செய்தும் சாப்பிடலாம். கருப்பையின் பலவீனம், நழுவுதல் போன்ற நோய்கள் விலகும்.

* வாயுவின் சீற்றத்தால் பலவீனமடைந்துள்ள கருப்பையின் தசைநார்களைச் சீர்ப்படுத்த ஆமணக்கெண்ணெய் என்னும் விளக்கெண்ணெய் சிறந்தது. சிறிது எண்ணெய்யைச் சூடாக்கி, தொப்புள், அடிவயிற்றுப் பகுதிகளில் உருட்டித் தேய்த்து அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்து வெந்நீரில் குளிப்பது அபானவாயுவின் சீற்றத்தைத் தணிக்கும்.

* ஆயுர்வேத மருந்துகளில் தான்வந்திரம் கஷாயம் 15 மிலி, 60 மிலி வெதுவெதுப்பான பசும்பால், 1 தான்வந்திரம் குளிகையுடன் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

பலசர்ப்பிஸ் எனும் நெய்யை லேசாக உருக்கி காலை, இரவு 5 மிலி, உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிட நல்லது.

சதாவரீகுலம் எனும் லேகியம் 5 கிராம் மதிய உணவுக்கு 1 மணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிட நல்லது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: