Arms haul related to Marad violence in Kerala – Palacot
Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007
பாலக்காட்டில் ரகசிய ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு
பாலக்காடு, ஜன. 18: பாலக்காடு அருகே சட்ட விரோதமாக நடந்த ஆயுதத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.
பாலக்காடு அருகே புதுப்பரியாசத்தைச் சேர்ந்தவர் தாஸ்குமார் (52). இவர் தனது வீடு அருகே உரிமம் பெறாமல் தொழிற்சாலை வைத்து, ஆயுதங்களை தயாரித்து வந்தார்.
கோட்டயம் மாவட்டத்தில் சில நாள்களுக்கு முன் ஆயுத சோதனை நடந்தது. அப்போது, பாலக்காட்டில் இருந்து சட்ட விரோதமாக ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சிஐபி வாஹித் தலைமையில் போலீஸôர் சோதனையில் ஈடுபட்டனர். தாஸ்குமார் வீட்டில் நடந்த சோதனையின்போது, வீடு அருகே சட்டவிரோதமாக ஆயுதத் தொழிற்சாலை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
தொழிற்சாலையில் இருந்து 250-க்கும் மேற்பட்ட ஆயுதங்களை போலீஸôர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாஸ்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில்
- கோட்டயம் ரஹீம்,
- சங்கனாசேரி ஷாஜி,
- எருமேலி, ஷாஜகான் ஆகியோருக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்தது தெரியவந்தது.
- தாஸ்குமாரின் சகோதரர் மோகன்குமார் மாராடு கலவரத்தின்போது ஆயுத சப்ளை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமொழியொன்றை இடுங்கள்