AIADMK encouraging dynasty politics by appointing personalities in the hierarchy
Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007
காளிமுத்து- தமிழ்குடிமகன் மகன்களுக்கு அ.தி.மு.க.வில் பதவி: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜன. 14-
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
- முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை மதுரை மாநகர் மாவட்ட ஜெயலதா பேரவை செயலாளராகவும்,
- முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன் மகன் பாரிதமிழ்க்குடி மகன் மாவட்ட இலக்கிய அணி செயலாளராகவும் நியமிக்கப் பட்டு உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தலைமை கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாள ராக ராஜன் செல்லப்பா மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார். அவைத்தலை வராக கே.துரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. பி.தனம்(சமயநல்லூர் தொகுதி), 2.ஜெ.அனிதா (திருப்பரங்குன்றம் தொகுதி), 3. பிச்சைமணி (சேடப்பட்டி தொகுதி), 4. கே.நாகராஜன் (சோழவந்தான் தொகுதி), 5. பி.ஜாபர் (மேலூர் தொகுதி), 6. வி.குணசேகரன் (உசிலம்பட்டி தொகுதி), 7. பெருமாள் (திருமங்கலம் தொகுதி) இவர்களை அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்