Noida Child Molesters: Details & Mohinder’s Confession
Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007
சிறுமிகளை கற்பழித்து கொன்றது எப்படி? காமவெறியன் பரபரப்பு வாக்குமூலம்
புதுடெல்லி, ஜன. 1-
28 வருடங்களுக்கு முன் தமிழிலில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் சினிமாவில் கதாநாயகன் கமலஹாசன் இளம் பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து அவர்களை கற்பழித்து கொலை செய்வதுடன் தனது பங்களா விலேயே புதைத்துவிடுவார்.
இது போன்ற நிஜ சம்பவம் டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் தொழில்அதிபர் மொகிந்தர்சிங். இவரது வீட்டு வேலைக்காரன் சுரேந்திரா.
இவர்கள் இருவரும் நொய்டா நிதாரி பகுதியில் உள்ள பங்களாவில் ஏராளமான சிறுமிகளை கற்பழித்து கொன்று புதைத் துள்ளான். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.
இவர்களது காமவெறிக்கு 38 சிறுவர்-சிறுமிகள்வரை பலியாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே அந்தப்பகுதியில் சிறுவர்- சிறுமிகள் அடிக்கடி மாயமானார்கள்.
தற்போது சுரேந்திரா கைதான தகவல் கிடைத்ததும் சிறுவர்-சிறுமிகளை பறி கொடுத்த பெற்றோர் ஒவ்வொரு வராக வந்து புகார் செய்த வண்ணம் உள்ளனர். இதுவரை 38 சிறுவர்-சிறுமிகளை காணவில்லை என்று புகார் வந்துள்ளது.
கடைசியாக பாயல் என்ற 20 வயது இளம்பெண் சுரேந்திராவின் காமப்பசிக்கு பலியானார். அவளது செல் போன் சுரேந்திராவிடம் இருந்தது. செல்போனை போலீசார் தேடியபோது சுரேந்திரா சிக்கினான்.
இதையடுத்து மொகிந்தர் சிங்கின் பங்களாவைச் சுற்றிலும் கொன்று புதைக்கப் பட்டுள்ள சிறுவர்-சிறுமிகளின் பிணங்களை போலீசார் புல்டோசர் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து வருகிறார் கள். தோண்டத்தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கிறது.
தொய்டா பகுதி முழுவதும் ஒரே பீதியும் பரபரப்பாகவும் காணப்படுகிறது. பிணங்கள் தோண்டப்படும் மர்ம மாளிகை முன் ஏராளமான பெற்றோர் பரிதவித்தபடி கூடினர். கடுமையான கூட்டம் கூடியதால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தினார்கள். பலத்த பாதுகாப்புக்கு இடையே பிணம் தோண்டி எடுக்கப் படுகிறது.
கடத்திவரப்படும் சிறுமி களை முதலில் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் கற்பழிப்பார். அதன்பிறகு வேலைக்காரன் சுரேந்திரா அனுபவித்து கொன்று புதைத்துவிடுவான். இந்த தொடர் கொலையில் மொகிந்தர்சிங்கும் கைது செய்யப்பட்டு உள்ளார். இருவரிடமும் போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகிறார் கள்.
சிறுமிகளை கற்பழித்து கொன்றது பற்றி சுரேந்திரா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறான். அதில் கூறியிருப்பதாவது:-
நான் தொழில்அதிபர் மொகிந்தர்சிங் வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறேன். மொகிந்தர்சிங் மனைவியைப்பிரிந்து வாழ்ந்து வந்தார். தனிமையில் இருந்த அவர் அழகிகளை அழைத்து வந்து அனுபவிப்பார். அவருக்கு சிறுமிகள் என்றால் பிடிக்கும்.
அவரது எண்ணத்தை புரிந்து கொன்ட நான் முதன்முதலாக ஜோதி என்ற 10 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்குள் அழைத்து வந்தேன். அவரது தந்தை ஜாபுலால். சலவைத்தொழிலாளியான இவரது மகள் வீடு வீடாக சென்று துணிகளை சேகரித்து அதை சலவை செய்து கொடுப்பாள்.
எங்கள் பகுதி வழியாக சிறுமி துடுக்காக நடந்து செல்வாள் ஒருநான் அவளை வீட்டுக்குள் துணிகளை எடுத்துச்செல்ல வருமாறு அழைத்துச்சென்றேன். வீட்டுக்குள் நுழைந்ததும் அவளை ஒரு அறையில் தள்ளினேன். எஜமான் மொகிந்தர்சிங் முதலில் சிறுமியை கற்பழித்தார். அவர் அனுபவித்து சென்ற பின் நானும் சிறுமியை பலாத்காரம் செய்தேன். அவளை வெளியில் விட்டால் விபரீதமாகிவிடும் என்பதால் அவள் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றேன். பிணத்தை வீட்டுகால்வாயில் குழிதோண்டி புதைத்து விட்டேன்.
இதுதான் நான் செய்த முதல் கொலை அதன்பிறகு நிறைய சிறுமிகள் மட்டுமல்லாது சிறுவர்களையும் அழைத்து வந்து `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொன்றோம். எத்தனை பேர் என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.
முதலாளி மொகிந்தர்சிங் அடிக்கடி விபசார அழகிகளை வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசமாக இருப்பார். பாயல் என்ற இளம்பெண் அடிக்கடி வந்து மொகிந்தர்சிங்குடன் உல்லாசமாக இருப்பாள்.
அவளுக்கு நாங்கள் சிறுமிகளிடம் `செக்ஸ்’ இன்பம் அனுபவித்து கொலை செய்த விவரம் தெரிந்து விட்டது. அவள் மொகிந்தர்சிங்கை `பிளாக் மெயில்’ செய்து பணம் பறிக்க திட்டமிட்டாள். இதனால் அவளது கதையை முடித்துவிடு என்று எனக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 7-ந்தேதி வழக்கம் போல் வீட்டுக்கு வந்த பாயலை கொன்று பிணத்தை புதைத்துவிட்டேன்.
ஆனால் அவளது செல்போன் எங்கள் வீட்டில் இருந்ததால் அதை வைத்து போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு சுரேந்தரா கூறினார்.
காணாமல் போன சிறுமிகளின் போட்டோக்களை போலீசார் அவனிடம் காட்டியபோது அவர்களை கற்பழித்து கொன்று விட்டதாக கூறி அடையாளம் காட்டினான்.
சுரேந்திராவின் காமவெறிக்கு பலியான சிறுமி ஜோதியின் தந்தை சலவைத்தொழிலாளி ஜாபுலால் கூறுகையில், “நான் எனது மகளை காணவில்லை என்று 18 முறை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எனது புகாரை கவனிக்கவேயில்லை. அப்போது இதன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் படுகொலைகள் நீடித்து இருக்காது” என்றார்.
கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மொகிந்தர் சிங் ஹரித்வார், பாகப்பட், டேராடூன், நொய்டா ஆகிய இடங்களில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவருக்கு மாதவருமானம் மட்டும் ரூ. 23 லட்சம் முதல் 30 லட்சம் வரை கிடைக்கும். மொகிந்தர்சிங்கின் மனைவி தவிந்தர்கவுர். இவர் கணவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் 2 வருடங்களுக்கும் முன்பே பிரிந்து சென்று விட்டார். அவர் மொகிந்தரின் தம்பி இக்பாலுடன் வசித்து வருகிறார்.
இது போல் மொகிந்தர்சிங்குடன் அவரது சகோதரர்களுக்கு சொத்து பிரச்சினை இருந்தது இதனால் சகோதரர்களும் மொகிந்தரை விலக்கி வைத்தனர்.
அவரது தம்பி இக்பால் சிங் கூறுகையில் “மொகிந்தர்சிங் எப்போதும் பிரச்சினை செய்து கொண்டே இருப்பான். கடந்த 6 வருடமாக அவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை அவன் என்ன செய்து வந்தான் என்று தெரியாது” என்றார்.
மொகிந்தரின் பள்ளி தோழர்கள் கூறுகையில் “அவன் மோசமானவன்” என்றனர். மேலும் சிலர் கூறுகையில் “அவன் ஜாலியானவன். ஆனால் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாக இருக்கிறது” என்றனர்.
மொகிந்தரின் மைத்துனர் இக்பால்சிங், பஞ்சாப் காங்கிரசில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவரிடம் கேட்டபோது, “தனது தங்கையுடன் சரியாக வாழாததால் 2 வருடங்களுக்கு முன் பிரிந்து சென்று விட்டதாக” தெரிவித்தார்.
bsubra said
நிதாரி படுகொலையும் நெஞ்சை சுடும் கேள்விகளும்
நீரஜா செüத்ரி
நிதாரி படுகொலைகள் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டன.
“இவையெல்லாம் மிகச் சிறிய, வழக்கமாக நடைபெறக்கூடிய சம்பவங்கள்தான்; இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடந்துகொண்டுதான் இருக்கின்றன’ என்று உத்தரப் பிரதேச அமைச்சர் சிவபால் யாதவ் கூறியது, அதைவிட பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டது.
முலாயம் சிங் யாதவின் சகோதரர்தான் அந்த சிவபால் யாதவ்; நிதாரி படுகொலைகளில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறவும் கூடுதலாக அறிவிக்கப்பட்ட தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை அவர்களிடம் வழங்கவும் முதல்வரின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர் அவர்.
சிவபால் யாதவ் மிகக் கொடூரமான உண்மையை, மக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் கூறிவிட்டார். உண்மையில், இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன; அரசியல்வாதிகளும் “வழக்கமான’ ஒன்றாகவே அவற்றைக் கருதுகின்றனர். நிதாரி கிராமம் 38 குழந்தைகளை இழந்து பரிதவித்து நிற்கிறது. ஆனால், தில்லியில் இருந்த முலாயம் சிங்குக்கோ அந்தக் கிராம மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது முக்கியமான விஷயமாகப் படவில்லை.
போலீஸôரின் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயமாக அத்தகைய கொடூரச் சம்பவம் நடந்திருக்க முடியாது. அது வெளிச்சத்துக்கு வந்து 5 நாள்கள் ஆன பிறகு, 6 போலீஸôரைப் பணியிலிருந்து நீக்கியுள்ளார் முலாயம் சிங்; மேலும் 3 அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்துள்ளார். 5 நாள்களுக்குள் முக்கியமான எத்தனையோ ஆதாரங்களை அவர்களால் அழித்திருக்க முடியும். அதற்குப் பிறகு, மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) அந்த வழக்கை ஒப்படைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் முதல்வர். அந்த வழக்கு தொடர்பான விவரங்களையெல்லாம் திரட்டி, சிபிஐ நடவடிக்கையில் இறங்குவதற்குள் தேர்தலே நடந்து முடிந்துவிடும்; அதற்குள் வேறு ஏதாவது ஊழல் வெளியாகி, அதில் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் மூழ்கிவிடும் என்று அவர் கணக்கிட்டிருக்கக்கூடும்.
ஒன்றும் அறியாத குழந்தைகள் அதில் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், தில்லிக்கு அருகில் நொய்டா போன்றதொரு இடத்தில் நடந்திருப்பதாலும்தான் நிதாரி படுகொலைச் சம்பவம் மக்கள் மத்தியில் இவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.
சாதாரணமாக, தம்மைப் போன்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால்தான் நடுத்தர வர்க்கத்தினர் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்; கடந்த ஆண்டு, மகாராஷ்டிரத்தின் கைர்லாஞ்சியில் ஒரு தலித் தாயும் மகளும் மானபங்கப்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இக் கொடூரச் சம்பபவம், நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
இது வழக்கமாக நடக்கும் சம்பவம்தான் என்று சிவபால் யாதவ் கூறியிருப்பது ஒருவகையில் சரிதான். ஏனென்றால், நம் நாட்டில் ஒவ்வோராண்டும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகிறார்கள்; நிச்சயமாக இது மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கணக்கே ஆகும். ஏனென்றால், காணாமல் போனது தொடர்பான புகார்களில் போலீஸôரால் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே இக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன. மொத்தக் கணக்கில் இது ஒரு துளிதான்.
நிதாரியில் நடந்திருப்பதுபோல, பெரும்பாலான புகார்கள் போலீஸôரால் பதிவு செய்யப்படுவதே கிடையாது. “உங்கள் குழந்தை வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கும்’ என்று கூறியோ அல்லது வேறு ஏதாவது காரணத்தைக் கூறியோ பெற்றோரைத் திருப்பி அனுப்புவதைத்தான் போலீஸôர் செய்கின்றனர். நொய்டாவில் ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகியின் மகனான ஆனந்த் காணாமல் போனபோது உ.பி. அரசு எப்படி நடந்துகொண்டது என்பதைப் பார்த்தாலே இந்த வேறுபாடு புரியும்.
குழந்தைகள் எவ்வாறு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், குழந்தைத் தொழிலாளர்களாகச் சுரண்டப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். நிதாரி படுகொலைச் சம்பவத்தை போலீஸôர் துப்பு துலக்கிவிட்டார்கள் என்றும் சிவபால் யாதவ் கூறியிருக்கிறார். அத் தொடர் படுகொலைகள், நடத்தை கெட்டவர்களின் செயலாகத்தான் இருக்கும் என்றும், மனித உறவுகளை ஒழுங்காகப் பேணத் தெரியாதவர்களின் செயலாக இருக்கும் என்றும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இப் படுகொலைகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மணீந்தர் சிங்கின் குடும்பம் உடைந்து கிடப்பதையே மறைமுகமாக இதன் மூலம் குறிப்பிடுகின்றனர்.
பாலியல் பலாத்காரம் செய்யவோ, உடல் உறுப்புகளுக்காகவோ எதற்காகக் குழந்தைகளைக் கொலை செய்பவராக இருந்தாலும் அவர் குரூர புத்திக்காரர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பதில் கிடைக்க பல்வேறு தர்மசங்கடமான கேள்விகளை நிதாரி படுகொலைகள் எழுப்பியிருக்கின்றன; அக் குழந்தைகளின் உடல் உறுப்புகள் என்னவாயின, எப்படி நுட்பமாக அவர்களால் எலும்புகளைத் துண்டிக்க முடிந்தது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
மணிந்தர் சிங்கும் அவரது வீட்டு வேலைக்காரரும் எலும்புகளை வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்ததற்குக் காரணம் என்ன?
கொலை செய்யப்படுபவரின் உடலை கூடுமான வரை கண்காணாத இடத்தில் கொண்டு போய் போடுவதுதான் சாதாரணமாக கொலையாளிகளின் வழக்கம். ஆனால், கொல்லப்பட்ட உடல்களில் இருந்து வரக்கூடிய துர்நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமே, போலீஸôர் கண்டுபிடித்துவிடுவார்களே என்றெல்லாம் இவர்கள் பயந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி அவற்றைப் பதப்படுத்தி இருந்தார்களா? அதனால் துர்நாற்றத்தைப் பற்றி அச்சப்படாமல் இருந்தார்களா? அதில் டாக்டர்கள் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
ஒருவேளை பலர் சந்தேகிப்பதுபோல, உடல் உறுப்பு வர்த்தகம்தான் இதற்குப் பின்னணியாக இருக்கும் என்றால், 38 குழந்தைகளுக்காக மட்டுமே இந்த ஏற்பாட்டைச் செய்திருந்திருக்க மாட்டார்கள். அதாவது, நிதாரியைப் போல, ஏராளமான குழந்தைகள் காணாமல் போயிருக்கக்கூடிய இன்னும் பல கிராமங்கள் இருக்கக்கூடும். அங்கும் காணாமல் போன குழந்தைகள் பற்றிய புகார்களை போலீஸôர் பதிவு செய்யாமல் விட்டிருக்கக் கூடும். நிதாரியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களெல்லாம் மேற்கு வங்கத்திலும் பிகாரிலும் இருந்து இங்கு வந்து குடியேறியவை; அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு ஏதும் கிடையாது. இதுவே, பாதிக்கப்பட்டவர்கள் ஜாட் சமுதாயத்தினராக இருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கும்.
உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ~ ஒழுங்கு நிலவரம் நன்றாக இருக்கிறது என்பதைக் காட்ட எத்தனையோ புள்ளிவிவரங்களை முலாயம் சிங் அள்ளி வீசக்கூடும். ஆனால், அங்கு நடக்கும் கடத்தல் சம்பவங்களையும் பணம் பறிக்கும் செயல்களையும் மெஹர் பார்கவா படுகொலையையும் பார்க்கும் பொழுது, அவரது ஆட்சியின் கீழ் மக்களுக்குப் பாதுகாப்பு உணர்வு இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
பணத்துக்காகவும் ஈனசுகத்துக்காகவும் குழந்தைகளைக்கூட கொலை செய்யக்கூடிய குரூரமான, காட்டுமிராண்டித்தனமான, சமூகத்தின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது நிதாரி.
தமிழில்: லியோ ரொட்ரிகோ