Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Haniya cuts short Arab tour amid Hamas-Fatah tension

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா

மத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.

அந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.

காசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.

————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி

காசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன

காசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.

அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.

காசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


சண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை

 

காசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் காரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

பத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.

காசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


இஸ்ரேலிய அதிபரானார் ஷிமொன் பெரஸ்

பெரஸ்
பெரஸ்

இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.

7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி

பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்

மேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.

அந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.

அந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்றும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.


ஒரு பதில் -க்கு “Haniya cuts short Arab tour amid Hamas-Fatah tension”

  1. bsubra said

    மேற்கு கரையோரத்தில் ஃப்த்தா அமைப்பிற்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் மோதல்

    பாலஸ்தீனத்தின் இரண்டு பெரிய ஆயுதக்குழுக்களான ஃபத்தா அமைப்புக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மேற்குக் கரை நகரான ரமல்லாவிலும், காசாவிலும் மோதல்கள் நடந்துள்ளன.

    ரமல்லாவில், வீதிகளின் ஊடாக ஊர்வலத்தில் ஈடுபட்ட ஹமாஸ் ஆதரவாளர்களை, பாலஸ்தீன அதிபர் மஹமுது அப்பாஸுக்கு விசுவாசமான பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி பின் தள்ளியதை அடுத்து ஏற்பட்ட மோதலில், குறைந்தது 30 பேர் காயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

    தற்போது பாலஸ்தீன அரசாங்கத்துக்கு தலைமை தாங்கும் ஹமாஸ் அமைப்பினர், காசாவில் பெரும் ஆயுதங்களைத் ஏந்திய நூற்றுக்கணக்கான ஆட்களை வீதிகளில் நிறுத்தியுள்ளனர்.

    எல்லைக் கடவையை இஸ்ரேலியர்கள் மூடியதை ஹமாஸ் அமைப்பினர் வியாழனன்று தகர்த்தமை, ஆக்கிரமிப்புக்கு எதிராக இறையான்மையும், கௌரவத்தையும் காப்பதற்கான ஒரு கிளர்ச்சிக்கு வழி செய்தது என்று ஹமாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் இஸ்மாயில் ஹனியா கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: