TN Govt announces cash award to Santhi Soundarajan – 800 Meters Race Silver Medalist
Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006
ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் பரிசு: முதல்வர்
சென்னை, டிச. 11: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி, புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளி.
போட்டியின் போது சாந்தி
தற்போது தோஹாவில் நடைபெற்றுவரும் 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தடகளத்தில் இந்தியா தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. அத்துடன் தமிழகத்திலிருந்து பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் சாந்தி ஏற்படுத்தியுள்ளார்.
இத்தகைய சாதனை படைத்துள்ள சாந்தியின் பெற்றோர்கள் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிய அளவில் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ள விளையாட்டு வீராங்கனை சாந்தியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
சாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்இப்போட்டியில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 3.16 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதமியில் பயிற்சி பெற்றவர்.
வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து சாந்தி கூறுகையில், “”தகுதிச் சுற்றில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். இருப்பினும் இறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்றேன். பயிற்சியாளர் நாகராஜனின் ஆலோசனைப்படி புதிய உத்திகளைப் பயன்படுத்தினேன். இதனால் வெள்ளிப் பதக்கம் வசமானது,” என்றார் சாந்தி.
25 வயதான சாந்தி இதற்கு முன்னர் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதேபோல 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தி விவகாரம் குறித்து விளையாட்டுத் துறையினரின் கருத்துகள்
![]() |
சாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை |
இந்த சர்ச்சை குறித்து இது வரை இந்திய தடகள சங்கத்திற்கோ அல்லது தமிழ்நாடு தடகள சங்கத்திற்கோ எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என அகில இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் வால்டர் தேவாரம் கூறுகிறார்.
அவ்வாறு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைக்க பெற்றால் பிறகு அவரால் மகளிர் பிரிவில் பங்குபெற முடியாது எனவும் அவர் கூறுகிறார். மேல் முறையீடு செய்வது தனிப்பட்ட வீரர் வீராங்கனையின் பொறுப்பு எனவும், சங்கத்திற்கு அதில் எந்த பொறுப்பும் கிடையாது என்றும் கூறினார் தேவாரம்.
இந்த வருடம் கொரியாவிலும், இலங்கையிலும் இரண்டு சர்வதேச போட்டிகளில் அவர் பங்கு பெற்றிருந்தாலும், இவ்வாறான பிரச்சினை ஏதும் எழவில்லை எனவும் கூறும் தேவாரம், ஒரு போட்டியில் பங்குபெற ஒரு வீராங்கனை வரும் போது அவர் ஆணா அல்லது பெண்ணா என்று பார்ப்பது ஒழுங்கற்ற செயல் எனவும் அவர் மேலும் கூறினார்.
![]() |
சாந்தியின் செம்மண் வீடு |
1986 வரை பாலியல் தொடர்பான சோதனை நடத்தப்பட்டன எனவும், அது பெண்மைக்கு இழுக்கு எனக் கருதப்பட்டதால், அதன் பிறகு அந்தச் சோதனை நடத்தப்படுவதில்லை எனக் கூறுகிறார் தோஹா போட்டிகளுக்கு தொழிற்நுட்ப நடுவராக சென்றிருந்த சி.கே.வல்சன். போட்டியில் பங்கு பெற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பெண்மை குறித்த இந்த பாலியல் சோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். ஆனால் சாந்தி விடயத்தில் அவ்வாறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தம்மால் உறுதியாக் கூறமுடியும் எனவும் மேலும் கூறினார் வல்சன்.
அறிவியல் ரீதியாக ஹார்மோன்களின் அளவின் அடிப்படையிலேயே ஆணா பெண்ணா எனத் தீர்மானிக்கப்படும் எனக் கூறுகிறார் விளையாட்டு மருத்துவ வல்லுநர் டாகடர். கண்ணன் புகழேந்தி.
சாதாரணமாக சிறுநீர் தான் பரிசோதிக்கப்படும் எனவும் இது போன்ற சிக்கலான சூழலில் ரத்தப் பரிசோதனை அவசியம் எனவும், அதில் தான் ஹார்மோன்களின் அளவு தெரியவரும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இவ்வாறான சோதனைகளுக்கு அப்பாற்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டால் அதன் மூலம் ஒருவரது பாலியல் தன்மை உறுதியாக தெரிந்துவிடும் எனவும் அவர் கூறினார்.
சாந்தியின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
![]() |
![]() |
சாந்திக்கு ஏற்பட்ட சரிவு |
அண்மையில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி சவுந்திரராஜனின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் கடிதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூலம் தமக்கு கிடைத்திருப்பதாக இந்திய தடகள சங்கத்தின் செயலர் லலித் பானோட் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் யாரும் தனிப்பட்ட பொறுப்பேற்க முடியாது எனக் கூறும் அவர், சாந்தியின் பிறப்புச் சான்றிதழில் அவர் பெண் என்று குறிபிடப்பட்டுள்ளது எனவும், அவரது கடவுச்சீட்டிலும் அவ்வாறே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபருக்கும், சங்கத்திற்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதனால் நாட்டிற்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
போட்டியாளரின் பாலியல் குறித்து கண்டறிய சர்வதேச சங்கம் தடைவிதித்துள்ள காரணத்தால், இது குறித்து போட்டிக்கு முன்னர் சோதிக்க இயலாது எனவும் கூறுகிறார் பானோட். ஒரு ஆணிடம், அவர் ஆடவர் தானா எனக் கேட்க முடியாத போது எப்படி ஒரு பெண்ணிடம் அப்படி கேட்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் இனிவரும் காலங்களில் இது போன்ற அசாதாராண விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ.15 லட்சம்- டெலிவிஷன் பரிசு கருணாநிதி வழங்கினார்
சென்னை, டிச. 18-
கத்தார் நாட்டில் நடந்த 15-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ் நாட்டை சேர்ந்த 4 பேர் பதக்கம் வென்றனர்.
அதில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்று உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பாராட்டும், பரிசும் குவிந்த நிலையில் சாந்தி பாலின சோதனையில் தோல்வி அடைந்ததாக திடீர் சர்ச்சை எழுந்தது. அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் திரும்ப பெறப்படக்கூடும் என்று தகவல் வெளியானது.
இதனால் அவருக்கு தமிழக அரசின் ரூ.15 லட்சம் பரிசு கிடைக்குமா என்ற கேள்விக் குறி எழுந்தது. ஆனால் தங்களுக்கு இது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என்று அறிவித்த தமிழக அரசு, இன்று திட்டமிடப்படி சாந்திக்கு ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தோஹாவில் நடைபெற்று முடிந்துள்ள பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றுத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்த வீரர்களில், தடகளப் பிரிவில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட் டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்திக்கு 15 லட்சம் ரூபாயும், சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த வீரர் சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயும், வீராங்கனை அஞ்சு பி. ஜார்ஜ் நீளம் தாண்டுதல் போட் டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மைக்கு 15 லட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் ஒற்றையர் போட் டியில் வெண்கலப் பதக் கம் வென்ற வீரர் சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யும் பரிசுத் தொகையாக வழங் கப்படும் எனத் தமிழக அரசினால் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது.
அந்த அறிவிப்பின்படி இன்று தலைமைச் செயலகத்தில், தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த தமிழக விளையாட்டு வீரர்களான சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயையும், அஞ்சு பி. ஜார்ஜ×க்கு 15 லட்சம் ரூபாயையும், சாந்திக்கு 15 லட்ச ரூபாயையும், சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தியின் பெற்றோர்கள் தம்வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் தமது மகள் தோஹாவில் நிகழ்த்திய சாதனையைக் காண முடியாமல் போனது எனக்கூறியதன் அடிப்படையில், வீராங்கனை சாந்திக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் முதல்-அமைச்சர் கருணாநிதி பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வின் போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், விளையாட் டுத் துறை செயலாளர் அம் பேத்கர் ராஜ்குமார், தமிழ் நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் -செயலர் அபூர்வா ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.
சாந்திக்கு பரிசு வழங்கியது பற்றி அமைச்சர் மொய்தீன் கான் நிருபர்களிடம் கூறியதாவது:-
வீராங்கனை சாந்தி குறித்து வேறுவிதமான செய்திகள் வந்துள்ளன. என்றாலும் ஆசிய விளையாட்டு போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.
சாந்திக்கு மனிதாபிமான அடிப்படையில் முதல்-அமைச்சர் அறிவித்த பரிசை கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் ஆசிய அளவில் பரிசு பெற்று வந்து இருப்பதை நாம் பாராட்டி, வாழ்த்தி, ஊக்குவிக்க வேண்டும். இதை விடுத்து எதற்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கக்கூடாது.
இவ்வாறு அமைச்சர் மொய்தீன்கான் கூறினார்.
வெள்ளிப்பதக்கம் என்னிடம்தான் உள்ளது: வீராங்கனை சாந்தி பேட்டி
முதல் அமைச்சர் கருணாநிதியிடம் பரிசு பெற்று திரும்பியதும் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி:- முதல் அமைச்சரை சந்தித்து இருக்கிறீர்களே…?
பதில்:- முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவர் தந்த பரிசையும் பெற்றுக் கொண்டேன்.
கேள்வி:- ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்ததாக நேற்று வரை செய்திகள் வந்தன. இன்று உங்கள் பதக்கத்தை திரும்ப பெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே?
பதில்:- தோகாவில் நான் வெள்ளிப்பதக்கம் பெற்றது பெருமையாக இருந்தது. அந்த வெள்ளிப்பதக்கம் இப்போதும் கூட என்னிடம்தான் இருக்கிறது. பத்திரிகைகளில் இன்று வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் எனக்கு வரவில்லை.
இவ்வாறு சாந்தி கூறினார்.
தோகாவில் நடந்த பாலின சோதனை குறித்து சாந்தியிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.
இது தொடர்பாக இப்போது நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். முன்னதாக பரிசு பெற வந்த சாந்தியிடம் கருணாநிதி அக்கறையுடன் விசாரித்தார். டிவி பெட்டி கொடுத்து இருப்பதாக கூறி உற்சாகப்படுத்தினார். அவருக்கு சாந்தியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
VS Niranjan said
As per latest news Shanthi Soundararajan failed in Gender Test
and has allegedly brought shame to the Country
Makbo Kahbo said
This is not very good. He “she” should leave this country for good!!
bsubra said
SK said…
//I want this quoestion to be answered on an emergency basis.
“WHAT IS A GENDER TEST AND WHAT EXACTLY WENT WRONG WITH SHANTHI?”//
“ஓகை” அவர்கள் எழுப்பியுள்ள வினாவிற்கு, கிழே காணும் ஆங்கில விளக்கத்தைப் படிக்கவும்.
இது பொதுவாக ஒப்புக்கொள்ளாத, 100% சந்தேகத்து இடமின்றி எனச் சொல்ல முடியாத ஒன்றுதான் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
விளையாட்டுப் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடும் சில பெண்களுக்கு, சில ஆண்தன்மைகள் வர வாய்ப்புகள் அதிகம்!
இதனை மட்டும் வைத்தே, முடிவு கட்டுதல் சரியில்லை எனவே படுகிறது!
குறைந்த பட்சம், தமிழக அரசாவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல், இக்கட்டுரையில் கூறியிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், முறையாகப் போராட வேண்டும், சாந்திக்காக, என நினைக்கிறேன்.
அந்த 15 லட்சத்தையும் திருப்பி எடுத்துக் கொள்ளக் கூடாது!
அவருக்கு ஏதவது சிகிச்சை தேவையெனின், அதையும் செய்து தருவது, “இது மக்கள் அரசு” எனச் சொல்லிக் கொள்வோரின் கடமை!
இனி, கட்டுரையைப் படியுங்கள்!
மேல்விளக்கம் வேண்டுமெனின், கேட்கவும்!
Gender verification
Gender verification emerged as an issue in sporting competition 30 years ago when the International Olympic Committee (IOC) first began testing the ‘sex’ of athletes in the Olympic games. The IOC was responding to concerns that some athletes from then Communist countries of Eastern Europe were actually men masquerading as women.
The very first tests, which were invasive and controversial gynaecological examinations, were conducted in 1966. Then came the sex chromotin test at the Mexico Olympic Games which relied on the biological fact that all the cells of most female mammals contain two X chromosomes, while cells from males have one X and one Y chromosome.
Officials who test athletes take a sample of cells from the inside of the cheek, in a process known as the buccal smear test, then examine them under a microscope for the presence of these chromosomes. Until 1991, each woman competing internationally needed a gender verification card which contained a photograph and statement that she had passed the chromosome sex test used by the IOC.
While the notion of a sex test to find men disguised as women may seem a reasonable idea, the trouble is that it misses some hereditary disorders whereby women may have chromosomal abnormalities that cause them to ‘fail’ a test, while men with chromosomal abnormalities could theoretically ‘pass’ the test.
If a female athlete ‘fails’ a test, she undergoes a physiological examination. A negative test can cause incredible distress to women whose gender is suddenly called into question and there are many documented cases where women’s lives have undergone massive change because of sudden public scrutiny.
One such woman was Polish sprinter Eva Klobukowska who, at the European Championships in Budapest in 1966, passed a gynaecological examination. One year later, after the introduction of sex chromatin testing, she was found to have one chromosome too many to be declared a woman for the purposes of athletic competition. Despite having a rare XXY condition that gave her no advantage over other athletes, she was forced to return her Olympic and other medals and retired from competition surrounded by controversy.
Until 1990, the International Amateur Athletic Federation had relied on the buccal smear test, but following repeated discrepancies in test results, the federation abandoned the process and returned to physical examinations. These examinations became general health checks of both male and female athletes, a component of which for females was a physical examination for gender. They were to be conducted by national federations and any athletes holding an International Amateur Athletic Federation femininity certificate would not be exempt from further examinations (although no athlete would be tested more than once a year). Athletics Australia and other federations chose to advise their athletes that tests would be conducted by a doctor of the athlete’s choice should a random test be needed.
This new approach created problems including disquiet about the need for an intrusive examination, questions about those selected to conduct the examination and the difficulty for individuals who have attributes of both sexes. In 1992, the IOC decided to introduce more sophisticated tests which looked even more closely at the genetic make-up of the Y chromosome. Called the polymerase chain reaction test, this still did not eliminate all the issues surrounding the accuracy of the test. At the 1996 Atlanta Olympic Games, officials again reverted to the buccal smear test. About one in 400 females in Atlanta tested male, but all were cleared by subsequent physical examinations.
In late 1999, the IOC Medical Commission reviewed its medical code and agreed to change the requirement for gender verification tests from mandatory for all female athletes, to random.
December 18, 2006 8:03 PM (விக்கி பசங்க: RTP என்றால் என்ன?)
bsubra said
ஆசியப் போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை பாலியல் சோதனையில் தோல்வி
தோஹாவில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஒருவர், ஆணா, பெண்ணா என்று அறிவதற்கான பாலியல் சோதனையில் தோல்வியடைந்ததால், அவரது பதக்கம் மீளப்பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
800 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய சாந்தி சௌந்திரராஜன் எனப்படும் தமிழகத்தைச் சேர்ந்த இந்த வீராங்கனையின் திறன் குறித்து, ஏனைய போட்டியாளர்களும், விளையாட்டு அதிகாரிகளும் கேள்வியெழுப்பியதை அடுத்து, அவர் மருத்துவர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
சாந்தி, ஒரு பெண்ணுக்கான பாலியல் நடத்தைகளைக் கொண்டிருக்கவில்லை என்று சோதனை முடிவுகள் கூறுகின்றன.
சாந்தியிடம் செய்யப்பட்ட பாலின சோதனையில், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹார்மோன் அளவு சாந்தியிடம் இல்லை என்று தெரியவந்திருப்பதாகவும், இதனால் அவரிடமிருந்து பதக்கத்தைத் திரும்பப் பெற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய பின்னணியில், தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த பரிசுப்பணம் அவருக்கு அளிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்தது.
ஆனால் அவருக்கு அறிவித்திருந்த பரிசுத்தொகை திட்டமிட்டபடி வழங்கப்பட்டதாக அறிவித்தார் தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான்.
சாந்தியிடம் செய்யப்பட்ட பாலின சோதனை முடிவுகள் பற்றி தமிழக அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கையிலிருந்து சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த குடும்பத்தில் பிறந்த மூத்த பெண்ணான சாந்தி, செங்கல் சூளையில் வேலை செய்யும் தினக்கூலி பெற்றோரின் வறுமைசூழலில் ஒருவேளை கஞ்சி குடித்து, விடாமுயற்சியால் ஓடி, சர்வதேச சாதனை படைத்ததாக, அவரை கடந்த ஒரு வாரமாக தமிழக, இந்திய ஊடகங்கள் பாராட்டி மகிழ்ந்தன. ஆனால் அவர் தமிழ்நாட்டுக்கு திரும்பிய வேளை, அந்த சந்தோஷம் மறைந்து சர்ச்சைக்கு பதில்சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.
kums said
Shanthi should be appreciated for her Silver medal and I share Bsubra’s point of view.
bsubra said
சாந்தியின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்படும் நிலை: உள்நோக்கம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை, டிச. 18-
கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் இந்திய வீராங்கனை சாந்தி வெள்ளிப்பதக்கம் வென்றார். இவரது சொந்தஊர் புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமம் ஆகும். சாந்தியின் வெற்றியை பாராட்டி தமிழக அரசு ரூ. 15 லட்சம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போட்டி நிறைவு நாளின்போது நடத்தப்பட்ட பல்வேறு சோதனையின்போது சாந்திக்கு பெண்மைத்தன்மை இல்லை என்று தெரியவந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெள்ளி பதக்கம் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றிய தகவல் பரவியதும் தமிழக மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். சாந்தியின் சொந்த ஊரான கத்தக்குறிச்சி கிராமம் மிகவும் சோகத்தில் மூழ்கி உள்ளது. சாந்தியின் பெற்றோர் தற்போது சென்னையில் உள்ளனர்.
இதுகுறித்து சாந்தியின் மாமா துரை, அத்தை லதா ஆகியோர் கூறியதாவது:-
சிறுவயதில் இருந்தே நாங்கள் சாந்தியை பார்த்து வருகிறோம். அவர் பெண்ணுக்குரிய தன்மையுடன்தான் இருந்தார். அதிகாரிகள் ஏன் இப்படி கூறுகின்றனர் என்று தெரியவில்லை என்றனர்.
சாந்தி குறித்து அவருடன் பயிற்சியில் ஈடுபட்ட மாணவி ஒருவர் கூறியதாவது:-
சாந்தி பள்ளி பருவம் முதல் மகளிர் பள்ளியில்தான் தங்கி படித்தார். பயிற்சியின்போது என்னுடன்தான் தங்கி இருந்தார். நான் பழகிய வகையிலும் பயிற்சியின் போதும் அவரது பெண்மையில் எனக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என்றார்.
சாந்தியின் பயிற்சியாளர் புதுக்கோட்டையை சேர்ந்த லோகநாதன் கூறுகையில் சாந்தி ஏற்கனவே இலங்கை, தென்கொரியா நாடுகளில் நடந்த தடகள போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று உள்ளார். அப்போது அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. தோகா அதிகாரிகளின் இந்த அறிவிப்பு புரியாத புதிராக உள்ளது.
சாந்தியின் பதக்கத்தை பறிக்க முயல்வதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என்றார்.
புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் மன்ற செயலாளர் ஜஹாங்கீர் கூறும்போது:- சாந்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிளப்பில் பயிற்சி பெற்றார். அப்போது அவரது பெண்மை பற்றி எந்த சந்தேகமும் ஏற்பட வில்லை என்றார். வெள்ளிப்பதக்கம் வென்று பெருமை சேர்த்த புதுகை வீராங்கனை சாந்தியால் அவரது சொந்த கிராமமான கந்தக்குறிச்சி மட்டுமின்றி தமிழகமே மகிழ்ச்சியில் இருந்தது.
ஆனால் வீராங்கனை சாந்தியின் பதக்கம் பறிக்கப்படும் நிலை உள்ளதாக அறிவிப்பு வெளியானது. சாந்தியின் உறவினர்கள் மட்டுமின்றி அந்த கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
எத்தனையோ சோதனைகளை கடந்து வந்து வெள்ளி மங்கை என அழைக்கப்பட்ட வீராங்கனை சாந்திக்கு தற்போது உள்ள இந்த சோதனை குறித்த இறுதி தகவல் சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் வருமா? அல்லது சோதனையின் ஒரு பகுதியாக அமையுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
bsubra said
கண்ணோட்டம்- KANNOTTAM: சாந்தி, பாலினம், பால்
bsubra said
பொட்”டீ” கடை: சாந்திக்காக…
bsubra said
சிந்தாநதி : சாந்தியின் பதக்கம் பறிபோகுமா?
பாலின பிரச்னையில் சாந்தி!* ஆசிய விளையாட்டு பதக்கம் பறிப்பு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புதுடில்லி: சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தி பாலினம் தொடர்பான பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளார். இவரிடம் பாலின ரீதியாக பெண்ணுக்கான குணாதிசயங்கள் இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் இவர் வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய இந்தியாவின் சாந்தி 2 நிமிடம் 3.16 வினாடிகளில் கடந்து வெள்ளி வன்றார். பதக்கம் வென்ற பிறகு இவர் பெண் தானா…? என்ற சந்தேகத்தை ஒரு வீராங்கனை கிளப்பியுள்ளார். இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப் பட்டுள்ளது. ஊக்க மருந்து சோதனை போல் அல்லாமல் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தப்படும். இதில் பெண்களுக்கான குணயியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சாந்தி வென்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரூ.15 லட்சம்: மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் சாந்தி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர்கள் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்கள். இப் படி வறுமையை வென்று சாதித்ததால் பாராட்டு மழையில் நனைந்தார் சாந்தி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றதும் தமிழக அரசு கூட ரூ. 15 லட்சத்தை பரிசுத் தொகையாக அளித்தது. இந்திய தடகளத்துக்கு இன்னொரு நட்சத்திரம் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் இருந்தவர்களுக்கு சாந்தி சோதனையில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஊக்க மருந்து: இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியின் துவக்கத்தில் வட்டு எறிதல் வீராங்கனை சீமாஅன்டில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். பின்னர் இந்திய விளையாட்டு ஆணையம் விசாரணை நடத்தியதில் இவர் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என தெரிவித்தது. இதையடுத்து பெரும் சிக்கலில் இருந்து தப்பினார். ஆனாலும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறி போட்டியில் இருந்து விலகுவதாக சீமா அறிவித்தார். இந்த பிரச்னை ஓய்வதற்குள் சாந்தி சர்ச்சை மிகப் பெரும் புயலை இந்திய விளையாட்டு அரங்கில் கிளப்பியுள்ளது. சர்வதேச போட்டிகளுக்கு வீராங்கனைகளை அனுப்பும் போது இனி அனைத்து வகையான சோதனைகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் பிரச்னைகளுக்கு விமோசனம் பிறக்கும்.
சாந்தி சர்ச்சையின் பின்னணி!: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. புகழின் உச்சியில் இருந்த இவர், பாலின சோதனையில் சிக்கிக் கொள்ள பதக்கம் பறிக்கப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சாந்தி வெள்ளி வென்றார். அப்போது இவர் பெண் தானா என்ற சந்தேகம் மற்ற வீராங்கனைகள் உள்ளிட்ட போட்டி அதிகாரிகளின் மனதில் எழுந்துள்ளது. இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெண்களுக்கான குணவியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இந்த விபரம் ஏற்கனவே இந்திய விளையாட்டு அதிகாரிகளுக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் அஷ்வின் குமார் கூறுகையில்,””எங்களது காலத்தில் இது போன்ற சோதனைகள் எல்லாம் இல்லை. தற்போது பரிசுத் தொகை அதிகம் என்பதால் தடகள வீரர், வீராங்கனைகள் குறுக்கு வழியில் பதக்கம் வெல்ல முயல்கின்றனர். இதற்காக சிலர் ஊக்க சக்தியை அதிகப்படுத்த பல்வேறு மருந்து பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது ஹார்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. தற்போது பாலினத்தை வேறுபடுத்தி காட்டும் சோதனைகள் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது,” என்றார். எந்த அடிப்படை: பாலினம் தொடர்பான சோதனையில் பிறப்பில் பிரச்னை, குரோமோசோம் மாற்றம், ஹார்மோன்களில் குழப்பம் போன்ற வகைகளில் ஆய்வு செய்யப்படும். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீராங்கனை சில நேரங்களில் தப்பலாம்.
சாந்தி மீது எந்த விதமான சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை. திருச்சியில் இருந்து: சாந்தியின் கிராமம் திருச்சியிலிருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ளது. வறுமையை கடந்து சாதித்த இவர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லுõரியில் வணிக நிர்வாகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லுõரியில் எம்.சி.ஏ., முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். கல்லுõரியில் படித்த காலத்திலும் தடகளம், ஹாக்கி, ஈட்டி எறிதல் முதலான விளையாட்டுகளில் ஜொலித்தார். 200506ல் நடந்த தமிழக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று நம்பிக்கை அளித்த இவர், இப்போது மிகப் பெரும் சோதனையில் சிக்கியுள்ளார். இதில் இருந்து மீள்வாரா சாந்தி…? பயிற்சியாளர் நழுவல் : சாந்தியின் பயிற்சியாளர் நாகராஜ் பிரச்னையில் இருந்து நழுவ பார்த்தார். பிரபல “டிவி’க்கு பேட்டி அளித்த இவர்,””கடந்த இரண்டு வருடங்களாக தான் சாந்தியின் பயிற்சியாளராக இருக்கிறேன். இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுள்ளார். அப்போது எல்லாம் இது போன்ற பிரச்னை எழவில்லை. பாலின சோதனையில் மாட்டிக் கொண்ட விபரம் எதுவும் தெரியாது,”என்றார்.
செய்தி: தினமலர்
Bala said
What’s the Tamil equivalent of Victor / Victoria?