Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Tamil Nadu supplementary Budget for Rs. 1,158 Crores – Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

சட்டசபையில் தாக்கல்: ரூ. 1,158 கோடிக்கு துணை பட்ஜெட்

சென்னை, டிச. 6- தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ. 1157.95 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க இதில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், மற்றும் அடுப்பு கள் வழங்குவதற்காக ரூ. 60 கோடி அனுமதித்துள்ளது.

* மீன்பிடி தொழில் அதிகம் இல்லாத மாதங்களில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 993 மீனவ மகளிருக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ரூ. 12 கோடியே 36 லட்சம் அனுமதித்து உள்ளது.

* தமிழில் பெயர் சூட்டப் படும் தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 30 கோடி ஒதுக் கீடு செய்யப்படுகிறது.

* விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற் காக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு கடனாக ரூ. 200 கோடி வழங்க அரசு அனுமதித்துள்ளது.

* தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பங்கு மூலதன உதவி வழங்குவதற்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கரும்புக்கான உயர்த்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரை விலையை விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 89 கோடியே 2 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

* மாணவர்களுக்கான பயண அனுமதிக்குரிய பஸ் கட்டணத்தை மாநில போக்குவரத்து நிறுவனங் களுக்கு அளிக்க ரூ. 100 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமண உதவி நிதிக்காக ரூ. 10 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

* அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக கலெக்டர் களுக்கு தன் விருப்ப மானிய மாக அரசு ரூ. 56 கோடியே 51 லட்சம் அனுமதி அளித் துள்ளது.

* சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கான ஒதுக்கீடு ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 1 கோடியே 20 லட்சம் என அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ. 103 கோடியே 51 லட்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பதில் -க்கு “Tamil Nadu supplementary Budget for Rs. 1,158 Crores – Details”

  1. bsubra said

    தமிழகத்தில் 10 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள்

    ராமநாதபுரம்,மே 18: தமிழகத்தில் 10 இடங்களில் கடலில் செயற்கை பவளப் பாறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மீனளத் துறை இயக்குநர் எஸ். விஜயகுமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:

    தமிழகத்தில் தூத்துக்குடி, கோடியக்கரை, சென்னை உள்பட 10 இடங்களில் கடல் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர், கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் விரைவில் வைக்கப்படும்.

    மீனவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு ரூ. 110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மீன்வலை, உயிர் காக்கும் ஜாக்கெட்டுகள் ஆகியன வாங்கிக் கொடுக்க இந் நிதி செலவிடப்பட்டு வருகிறது.

    மீனவர்கள் வயர்லெஸ் கருவி எல்காட் நிறுவனம் மூலம் வாங்கித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ. 50 கோடி வரை செலவாகும். அனைத்து மீனவர்களின் படகுகளுக்கும் அரசின் மூலம் பதிவு செய்து பதிவெண் வழங்கப்படும் என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: