Kabila, sworn in as president, puts DR Congo to work
Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2006
காங்கோவின் புதிய அதிபராக ஜோசப் கபிலா பதவியேற்றார்
காங்கோ நாட்டில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், ஜனநாயக ரீதியாக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் அதிபராக, ஜோசப் கபிலா பதவியேற்றுள்ளார்.
![]() |
![]() |
ஜோசப் கபிலா |
தலைநகர் கின்ஷாசாவில், நடந்துகொண்டிருக்கும் இந்த பதவியேற்பு வைபவத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
காங்கோவில் நடந்த உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த, மூன்றாண்டுகளுக்கு முன்னர் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை மத்ய்ஸ்தம் செய்து உருவாக்க உதவிய, தென் ஆப்ரிக்க அதிபர் தாபோ இம்பெக்கியும் இந்த பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவர்.
உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததில் இருந்து இடைக்கால அரசு ஒன்றிற்கு கபிலா தலைமை வகித்தாலும், 2001ம் ஆண்டு அவரது தந்தை பதவியிலிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட பின்னர் முதன் முதலாக ஆட்சிக்கு வந்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்