Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Tamil Tigers leader declares Sri Lanka cease-fire “defunct”

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

தமிழருக்கு தனி நாடே வழி என்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று விடுதலைப் புலிகளுடைய வருடாந்திர மாவீரர் நாள் உரையில் கடந்த ஓராண்டாக வடக்கு கிழக்கில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், சமாதான வழிமுறையில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு, தங்கள் இயக்கம் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி விளக்கிக் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கம் கடந்த ஓராண்டாக எடுத்து வந்த நடவடிக்கைகள் தங்களுக்குத் திருப்தியைத் தரவில்லை, இவர்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவவில்லை எனவும் இது குறித்து தங்களுடைய நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட பிரபாகரன் அவர்கள்,

“சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டி நிற்கின்றோம்,” என்றார்.

பிப்ரவரி மாதம் 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையே கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எப்படி செயலிழந்து போனது என்பதைக் குறிப்பிட்ட பிரபாகரன்

“தனது படைபலத்தினைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கலாம் என ராஜபக்ச அரசு எண்ணுகின்றது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து, அரைகுறைத் தீர்வை தமிழர்மீது திணிப்பதற்கு அது விரும்புகின்றது. ராஜபக்ச அரசின் இந்தத் தந்திரோபாயத்தினால்தான், யுத்தநிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துபோய்க் கிடக்கின்றது. எமது நிலைகள் மீது தாக்குதல்களை நடாத்துவோம் என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு, நடாத்திவரும் ராஜபக்ச அரசு இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்குரிய ஈமக்கிரிகைகளை செம்மையாகச் செய்திருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்

உலக தமிழினத்திடம் இருந்து தொடர்ச்சியாக ஆதரவினையும் உதவினையும் எதிர்பார்த்துள்ளோம் – விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்

 


விடுதலைப் புலிகள் தலைவரின் அனைத்து கருத்துக்களிலும் ஏமாற்று தன்மை தெரிகிறது – இலங்கை அரசு

கெஹெலிய ரம்புக்வெல்ல
கெஹெலிய ரம்புக்வெல்ல

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேசவல்லவராக கெஹலிய ரம்புக்வெல்ல,

பிரபாகரன் அவர்களின் இன்றைய கருத்துக்களை கடந்த காலங்களில் பலமுறை கேட்டு விட்டோம் என்றும், கடந்த ஆண்டு , விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில், மஹிந்த ராஜபக்சவை ஒரு யதார்த்தமான அரசியல் தலைவர் என்று அறிமுகப்படுத்தி , அவருக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு ஆண்டு கால் அவகாசம் கொடுப்பதாகக் கூறினார். ஆனால், கடந்த ஆண்டு மாவீரர் தின உரை நிகழ்த்திய இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அவர் வன்முறையை அதிகரிக்க ஆரம்பித்து விட்டார். இது அவரது ஏமாற்றும் தன்மை மற்றும் பயங்கரவாதத்தன்மையின் ஒரு தெளிவான அடையாளம் என்று கூறினார்.

மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர், திம்புவிலிருந்து ஜெனீவா வரை அமைதிப்பேச்சுவார்த்தைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். திம்புவிலிருந்து ஜெனீவா வரையிலான காலகட்டத்தில்தான், உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் வழிபடும் தலதா மாளிகை தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில்தான, முஸ்லீம் பள்ளிவாசல் தாக்குதலில், அப்பாவி முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனவே, அவரது இந்த அனைத்துக் கருத்துகளிலும் இந்த ஏமாற்றும் தன்மை நன்றாக வெளிப்படுகிறது என்றும் கூறினார் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேசவல்ல கெஹலிய ரம்புக்வெல்ல.

இதற்கிடையே, இந்த உரை தற்போதைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது எனக் கோடிட்டு காட்டுகிறது எனக் கூறும் இலங்கை பகுபாய்வாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், தனி அரசு தான் ஒரே தீர்வு என்கிற கருத்து, சர்வதேச சமூகத்தை பொறுத்த வரையில் அவர்கள் இலங்கையில் ஒரு சமாதான முயற்சியை மேற்கொண்ட முயற்சிகளை பார்க்கின்ற போது அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது எனவும் கூறுகிறார்.

மேலும், வெளிநாட்டிலுள்ள தமிழீழ ஆதரவாளர்கள் போரை விரும்பினாலும், இலங்கை தீவில் போரின் உக்கிரத்தை நேரடியாக எதிர்கொள்ளும் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

ஒரு பதில் -க்கு “Tamil Tigers leader declares Sri Lanka cease-fire “defunct””

  1. bsubra said

    BBCTamil.com:

    இந்த உரை தற்போதைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது எனக் கோடிட்டு காட்டுகிறது எனக் கூறும் இலங்கை பகுப்பாய்வாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், தனி அரசு தான் ஒரே தீர்வு என்கிற கருத்து, சர்வதேச சமூகத்தை பொறுத்த வரையில் அவர்கள் இலங்கையில் மேற்கொண்ட ஒரு சமாதான முயற்சிகளைப் பார்க்கின்ற போது அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் அளிக்கும் எனவும் கூறுகிறார்.

    குறிப்பாக ஆஸ்லோவில் எடுக்கப்பட்ட சமஷ்டி தீர்வை ஆராய்வோம் எனும் அவர்களின் முடிவிலிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியுள்ளார்கள் எனவும், தற்போதுள்ள நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் செயல்படுகிறார்கள் எனவும், திட்டவட்டமாக போரை முன்னெடுத்து செல்லப் போவதில்லை எனக் கூறாவிட்டாலும், அதில் தொக்கி நிற்பது போர் தீவிரப்படுத்தப்படும் என்பது தான் எனவும் ஜெயராஜ் அவர்கள் மேலும் தெரிவிக்கிறார்.

    வெளிநாட்டிலுள்ள தமிழீழ ஆதரவாளர்கள் போரை விரும்பினாலும், இலங்கை தீவில் போரின் உக்கிரத்தை நேரடியாக எதிர்கொள்ளும் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: