Karunanidhi: ‘I opened jails during Rahu Kaalam’ – Superstition?
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
“மஞ்சள் துண்டு யார் அணியலாம்’ கருணாநிதி விளக்கம்
சென்னை, நவ. 27: முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மஞ்சள் துண்டு அணிவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சள் ஆடை அணிவது பொருந்தாது என்றும், தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதாக “ஓஷோ’ வின் “தம்மபதம்’ எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நான் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்’ என்று கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
ராகு காலத்தில் திறப்பு: தாம் திரை மறைவில் கடவுளை வணங்குவதாக ஒரு பேட்டியில் வந்துள்ளதை சுட்டிக்காட்டி, தாம் பகுத்தறிவுவாதி என்பதற்கு யாரும் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்று கடுமையாக கூறியுள்ளதோடு, பலர் வேண்டாம் என்று கூறிய பிறகும் புழல் மத்திய சிறையை ராகு காலத்தில் திறந்து வைத்ததாக கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மாயவரத்தான்... said
அட வெளக்கெண்ணைகளா.. ஜெயிலை நல்ல நேரத்திலே எவனாவது தொறந்து வைப்பானா? அது என்ன பப்ளிக் ‘பார்க்’கா? அடிக்கடி வந்து போறதுக்காக நல்ல நேரத்திலே தொறந்து வைக்க? அதிலயும் ‘உள்குத்து’ வெச்சு தான் தொறந்து வெச்சிருக்காரு ஐயா.